Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?12?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அவனை வழி மறித்து நின்ற ஏஞ்சல்,

" ஆமா, நீ யாரு? உண்மைய சொல்லு?? " என்றதும் அதிர்ந்து போய்
அவளைப் பார்த்தான் வித்தார்த்.

" என்ன... நா... நான்... என்ன உண்மைய சொல்லனும்... ந.. நான் யாருனா... ஐ அம் சித்தார்த்.. " என்றவனை மேலும் முறைத்தாள் அவள்...

" நான் கேட்டது உண்மைய மட்டும் தான்... " என அழுத்தமாக கூற பேசத் திறந்த வாயிலிருந்து வெறும் காற்று தான் வந்தது.

" கார்த்தி அண்ணாவோட சர்ட்ஸ்ல கூட இதே பேட்ஜ் இருக்கும்... உன்கிட்டையும் இருக்கே..." அவன் சட்டையின் இடது பக்கத்தில் இருந்த பேட்ஜைக் காட்டினாள்.

" ஹப்பா.. இதுவா.... " என பெருமூச்சு விட்டவன் மேலும் இழுக்க... அவனைக் கடுப்பாக பார்த்தவள்,

" சரி சரி... சொல்றேன்... இது எங்க ஃபிரண்ட்ஸ் பேட்ஜ். நீ சொன்ன கார்த்தி என் ஃபிரண்ட் தான்..." என்றதும் சற்று குழப்பமாகவே மாறியது அவளது முகம்.

" கார்த்தி அண்ணா உன் ஃபிரண்டா...?" அவனின் முகத்தை ஆராய்ந்த படி கேட்டாள் அவள்.

" ம்ம்... " என்று தலையாட்ட
அதன் பின்னரே கார்த்தி நேற்று இரவு வீட்டிற்கு வராதது நினைவிற்கு வந்தது.

" இல்ல.. கார்த்தி அண்ணாவ காலைல பாக்கல.. வீட்டுக்கு போய் பேசனும். என்னவோ சட்டுனு ஒரு மாதிரி இருக்கு... நான் போறேன்... பாய்.... " என்றவளை சற்று அதிர்ச்சியாக பார்த்தான்.

ஏனெனில், வித்துவிற்கும் கார்த்தியைப் பற்றி அவள் கூறியதுமே அவனை ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் என தோன்றியது.

சிறிது தூரம் சென்றவள் மீண்டும் வந்து அவனிடம்,

" அப்பறம்... எங்க ல்வ மேட்டர வெளிய பத்தி வச்சிராத டா தம்பி பையா... இங்க எதுவுமே நடக்கலையாம்... ஓகே... உனக்கு அப்ப தான் சாக்கி (சாக்லேட்) வாங்கி தருவேன்..." என்றவளைப் பார்த்து,

" ஓ... அப்ப அந்த வித்தார்தும் உங்கள லவ் பண்றானா" என்க ஆடு தானாக தலையை நீட்டும் போது நமக்கென்ன வெட்டி யோசனை என்று
தீர்மானித்து,

" அதுல என்னடா சந்தேகம் உனக்கு? வந்ததுல இருந்து போலீஸ்காரன் மாதிரி கேள்வி கேக்குற... அக்கா பாவம்ல... " என்று செல்ல எத்தனிக்கும் வேளை,

" எனக்கு தெரியாம இது எப்போ? வித்தார்த் என்கிட்ட சொல்லலையே"

அவன் கூறியதில் சட்டென நகர மறுத்தன கால்கள்.

" இ.. இப்ப என்ன சொன்ன..? " என்றவளிடம் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு,

" வித்தார்த் என்கிட்ட சொன்னதே இல்ல... அவன் என் பெஸ்ட் ஃபிரண்ட் தான்... நான், கார்த்தி அப்பறம் அவன் எல்லாரும் ஃபிரண்ட்ஸ் தான் " என்றதும் அவள் ஒரு ஆள் உள்நுழையும் அளவுக்கு வாயை பிளக்க.. அவள் தாடையை பிடித்து வாயை முடியவன் நடக்க துவங்கினான்...

" ஹிஹி... அது... லவ் மேட்டர்ல அதான் சொல்லிருக்க மாட்டான்... ஹிஹி.. இப்ப நான் போறேன்... பை...... " என ஒரே மூச்சாக ஒடி வந்து ஓரித்தில் நின்றவள்...

" அப்பப்பா... இவன் என்ன ஊரு ஃபுல்லா ஃபிரண்டு புடிச்சி வச்சிருக்கான்... சந்தர் மாமா,கார்த்தி, வித்தார்த் இன்னும் எத்தன பேரு... " என்று புலம்பியபடி நடையைக் கட்ட, ஒரு முறை திரும்பி அவளைப் பார்த்தவன் ஏனோ தானாக வந்து ஒட்டிக் கொண்ட சிரிப்போடு சென்றான்.
***

வீட்டிற்குள் நுழையும் போதே புன்சிரிப்புடன் வந்தவனை ஏற இறங்க பார்த்தது ஸ்கூபி.

" ஹிஹி... என்ன ஸ்கூபி அப்டி பார்க்கிற... " என்க அவனின் விழியே சரியில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு கடிக்க வருவது போல குரைக்க...

" ஏய்... அடி வாங்குவ ஸ்கூபி... நோ... சரி... சொல்றேன்... சொல்றேன்... " என்றவன்
ஸ்கூபியிடம் எதனையும் மறைக்கும் குணம் இல்லாததால் ஏஞ்சலை பற்றி கூறினான். ஸ்கூபியோ லேசான நமட்டு சிரிப்புடன் பார்ப்பது போல தோன்ற,

" பாரு... இதுக்கு தான் ஒன்னும் இல்லனு சொன்னேன்... அந்த பொண்ணு கொஞ்சம் டிஃபிரன்ட் தான். எல்லார் மாதிரியும் கடந்து போக முடியல... ஒத்துகுறேன்.. ஆனா நீ நினைக்கிற மாதிரிலா இல்ல..." என்றவனின் கதைகளை நம்பும்படி இல்லை என்பதை ஸ்கூபி உணர்ந்து கொண்டது போலும்..

" ஸ்கூபி.. நெஜமாதான்... நம்பினா நம்பு. நம்பாட்டி போ... எனக்கு வேலை இருக்கு பை ஸ்கூபி.... " என்றவன் மேலும் தாமதிக்காமல் காவல் நிலையத்தை அடைந்தான்.

அங்கு சென்றவனது விழிகளால் கண்ட காட்சியை அவனாலேயே நம்ப முடியாததாக இருந்தது.

அருகில் இருந்த ஒரு உடைந்து போய் மோசமான நிலையில் இருந்த கல் மேசையில் அதனைப் போலவே உடைந்து போய் அமர்ந்திருந்தான் கார்த்தி.

அவன் அத்தனை உடைந்து போய் பார்த்திராதவன் அவனின் அருகில் சென்று தோளில் கை வைக்க... கார்த்தியோ சுரத்தே இல்லாமல் அமர்ந்திருந்தான்.

" கார்த்தி.... எ... என்னாச்சு டா... " என பலவாறாக கேட்டுப் பார்த்தும் பதில் வராததால் உண்மையில் அவனின் மனமும் வலித்தது. வித்தார்த்தை தனியாக அழைத்து வந்த ராம்குமார்...

" அது வந்து... கார்த்திக்கு ட்ரான்ஸ்ஃபர் குடுத்துட்டாங்க தம்பி... எல்லாம் அந்த தக்ஷன் வேலையாக தான்
இருக்கும்..." என்று தன் ஆதங்கத்தை தெரிவிக்க...
கண்களிலில் இருந்து கண்ணீர் விழுந்து விடுவேன் என மிரட்டியதைப் பொருட்படுத்தாது கூறத் துவங்கினான் வித்தார்த்,

" இல்ல ராம் அங்கிள். நான் தான் பேசி அவனுக்கு ட்ரான்ஸ்ஃபர் குடுக்க சொன்னேன்... "
என்க வித்தார்த்தை குழப்பம் மேலோங்க நோக்கினார் ராம்குமார்.

" கார்த்தி இங்க இருக்குறது எனக்கு சேஃப்னு தோணல அங்கிள். அதான் அப்டி பண்ணே... ஆனா அவன் இத்தன உடைஞ்சு போய் உட்காருவான்னு
நினைக்கல... "

உண்மையில் கார்த்திக்கு வித்தார்தின் வாழ்வில் நடந்தது முழுவதுமாக தெரியாது. அவன் எ.சி.பியாக இருந்த சமயம் அதிகபடியான போதை பொருள் கடத்தல் பற்றியே கேள்வி பட்டு அதைத் தீவிரமாக ஆராய்ந்த போது தான் தெரிந்தது. இதற்கு பின்னால் இருப்பவன் தக்ஷன் என்பது.

அது சாதாரண போதை பொருள் அல்ல...

டைலெனால் என்னும் அசிடமினோபன்....

ஒரு ஆய்வில், அசெட்டமினோபன் காலப்போக்கில் அதிக அளவுகளில் NSAID தொடர்பான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது.

கல்லூரி மாணவர்கள், மாத ஊழியர்கள், நடுத்தர வயதினர் என எவரையும் விட்டு வைக்காமல் அந்த நகரத்தில் இருந்தவர்களின் இரத்தத்தை பணமாக குடித்து கொண்டிருந்தான்.
அந்த போதை பொருளை அளவுக்கு மீறி உபயோகிப்பவர்கள், அவர்களின் மூளையின் செயல் திறனை இழந்து உடல் வலியால் துடித்து போய், மாரடைப்பு
போன்ற பலவிதான வகையில் இறந்து போயினர்.

இதற்கிடையில் தான் தக்ஷன் மற்றும் வித்தார்தின் பகை வளர... அதில் ரோஷினியை பணயம் வைக்க சற்றும் மனம் ஒவ்வாமல் அடிபணிந்து செல்ல முடிவு எடுத்திருந்தான்.

இத்தனைக்கும், தக்ஷன் இப்போது அரசியலில் பிரவேசம் செய்ய போவதால் அவனுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகமானது. அவன் மேல் உள்ள பயத்தாலேயே மக்கள் அவன் என்ன செய்தாலும் அடங்கி போயினர். அவர்களுள் ஒருவனாக வித்தார்த்தும் அடிபணிய நேரிட்டது.

கார்த்தியை பத்திரமாக அனுப்பி வைத்தால் தான் தனக்கு நிம்மதி என எண்ணிக் கொண்ட வித்தார்த் அதன் படியே அவனுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி தருவது என முடிவு செய்தான்.

கார்த்தி இப்போது மெதுவாக எழுந்து வந்து வித்தார்தின் முன் நின்றான்.

" நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை... எனக்காக ஒன்று செய்வியா... " அவனின் இந்த ஆசையாவது தான் நிறைவேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டவன்...

" ம்ம்.. சொல்லு டா... "

" என்ன செஞ்சாவது அந்த தக்ஷனுக்கு அவன் பண்ண தப்புக்கான தண்டனை கிடைக்கனும்.
இது நடந்தா தான் நான் ரோஷினிய
ஏத்துப்பேன்... " என்றவன் அவனை ஒரு முறை அணைத்துக் கொண்டான். பாவம்... வித்தார்த்தை இனி தன் வாழ்வில் காண முடியாது என கார்த்திக்கு தெரிந்து இருக்கவில்லை.

அவன் சென்ற திசையையே வெறித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் வித்தார்த்.

வீட்டிற்கு வந்த ஏஞ்சலோ இது வரை பத்து பதினைந்து முறை கார்த்திக்கு அழைப்பு விடுத்து பார்த்து, ஓய்ந்து போயிருந்தாள்.

" அண்ணா இப்டி பண்ற ஆள் இல்லையே... " என்றவாறே யோசனையில் இருக்க... அவளின் முன் வந்து நின்றிருந்தான் கார்த்தி.

" அண்ணா... உனக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணே... என்னாச்சு டல்லா இருக்க... "

அவளின் எந்த ஒரு வார்த்தையும் அவனை பாதிக்காமல் இருந்ததால் கார்த்தி தன் மேலறைக்கு சென்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க துவங்க...

" டேய் லூசு... என்னடா பண்ற... முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... " என்க

" இல்ல ஏஞ்சல்... எனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருக்கு... அந்த ஊர் இங்கிருந்து ரொம்ப தூரம்... " என்றதும் ஒரு நிமிடம் ஏஞ்சலுக்கு கண்களே கலங்கிவிட்டது.

ஏனெனில் அவளுக்கென்று தனியாக நேரம் செலவிட்டு அவளுக்கு தேவையானவற்றை செய்து அதிகமாக பாசம் வைத்தவன் என்றால் அது கார்த்தி மட்டுமே.

அவன் தன் கூடப் பிறந்தவர்கள் அல்ல என்ற சிந்தனை ஒரு நொடி கூட தோன்றியதில்லை ஏஞ்சலிற்கு.

அவனை தூரமாக செல்கிறான் என்றாலும் சிரித்த முகமாக வழியனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவன் அறியாதவாறு கண்களைத் துடைத்தாள் ஏஞ்சல்.

" டேய்... அதுக்கு எதுக்கு ஃபீல் பண்ற... நல்லா என்ஜாய் பண்ணு... அந்த ஊர் செம்மயா இருக்குமாம்.. நான் கேள்விப்பட்ருக்கேன்... " என்று அவனின் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் பேப்பரை எடுத்து நோண்டியவாறே கூற....

" பக்கி... கிழிச்சிறாத... குடு... " என இயல்பு நிலைக்கு திரும்பினான் கார்த்தி.

மேரி, ஜோசஃப் இருவரிடமும் கூறிவிட்டு கிளம்பியவனை ஓடி வந்து தடுத்தாள் ஏஞ்சல்.

" டேய்... நல்லா கேட்டுக்கோ.. வரும் போது இதுல இருக்க எல்லா சாப்பாட்டு ஐட்டமும் வாங்கிட்டு வந்திரனும்...." என அவளை விட உயரமாக இருந்த அந்த தாளை நீட்ட...

" ஆத்தாடி... என்னடி இது...லென்த்தா போய்டே இல்ல இருக்கு... இதுக்கு நான் என் இரண்டு கிட்னியையும் வித்தாலும் காசு தேறாது
போல... " என்றவனை செல்லமாக அடித்தவள்... பின்...

" டேய்.. அண்ணா... கொஞ்சம் பக்கத்துல வா..." என்க

அவனும் என்னவோ ராஜ ரகசியம் போல என காதை கொடுக்க...

" ஊஊஊஊஊஊ... " என
காதிலிருந்து ஜவ்வு வெளியே வராத குறையாக அவள் கத்த...

" பிசாசு... பிசாசு.... " என இரண்டு அடிகளைப் பரிசாகக் கொடுத்தான்.

" அங்... சரி... சரி... ஒன்னு கேட்கனும்னு இருந்தே... ஆமா.. வித்தார்த் உன் ஃபிரண்டா அண்ணா... " என்றவளின் உயரத்தை அளவிட்டான் போலும்... மேலும் கீழுமாக பார்க்க...

" என் ஹைட் 5 இன்ச்டா பக்கி... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... " என மிரட்ட...

" ஆமா டி... இப்ப அதுக்கு என்ன? " என்றவனின் தாடையை பிடித்து வலதும் இடதுமாக ஆட்டியவள் குனிய வைத்து முதுகிலேயே ஓங்கி அடித்தாள்...

" ஏய்ய்ய்... எத்தனை தடவை சொல்றது... நடு ரோடுனு கூட பாக்காம அடிக்கிறா பாரு...
பிசாசு குட்டி..... "

அவனை ஆசை தீர அடித்தவள் பின் வேகமாக மூச்சிழுத்து,

" ஒரே ஒரு தடவை இண்ட்ரோ பண்ணா குறைஞ்சா டா போய்ருவ... இன்னேரம் அவன கரெக்ட் பண்ணிருப்பேன்ல... "

அவள் கூறியதைக் கேட்டு வாயில் கை வைத்தவன்..

" உன்ன பச்ச குழந்தைனு நினைச்சா... அண்ணனையே மாமா வேலை பாக்க சொல்றியா... பிசாசு... " என்று அவளின் தலையிலேயே நங்கென கொண்டு வைத்தான்...

" நான் இன்னமும் குட்டி குழந்தை தான் டா.. ஸ்டில் சேம் பேபி ஃபேஸ் யு நோ...(Still same baby face you know)..." என்று கண்ணை சிமிட்டி கூற... சிரித்துக் கொண்டே பிரியா விடை பெற்று கிளம்பினான் கார்த்தி...

ராம்குமார், ரூபி, ஸ்கூபி என அனைவரையும் பார்த்தவன் மறந்தும் கூட வித்தார்தின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.

கார்த்திக்கு கோபம் என்று எதுவும் இல்லை. இப்போது அவனைப் பார்த்து பேசினால் எங்கே வித்தார்த் பணிந்து போவதை ஆதரிப்பது போல் ஆகிவிடுமோ என்று தான் அவனாக தன் தவறை உணர்ந்து அதனை சரி செய்யும் வரை பேசப் போவது இல்லை என்றிருந்தான்.

வித்தார்தோ ஒரு புறம் கவலையிலும் குழப்பத்திலும் உளன்றான்... அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெளிவற்ற நிலையில் இருந்தான்.

நேரவிருப்பதை யாரால் தடுக்க முடியும்...???
 
Top