Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 2

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 2

“அடுத்த எவிடென்ஸ் எங்க யா…’’
“அங்க இருக்குயா...’’ இன்னும் சிறிது உள்லே காட்டினார் மணி, அங்கு தரையில் ஒரு வட்டத்தினுள் நரையே முக்கோணங்கள் வரைய பட்டு அந்த வட்டத்தை சுற்றி நிறைய சிறிய வட்டங்கள் வெள்ளை மஞ்சல் சிவப்பு பொடிகளால் வரையப் பட்டு ஒவ்வொரு வட்டத்தினுள்ளும் உண்டிவில்லில் உல்ல கவண் போன்ற அமைப்பினால் ஆன மரம் தரையில் அடிக்க பட்டு அனைத்திலும் பூனையின் தலை சொருவப்பட்டிருப்பதை பார்த்து விட்டு

“என்ன எழவு யா இது... அடுத்து…’’

“அதோ அங்க யா…’’ இன்னும் சிறிது உள்லே இருந்தது அங்கு வண்டிகளை போத்த உதவும் நீள வண்ண தார் பாய்யால் ஏதோ போற்ற பட்டு இருந்தது

“மணி அத தீரயா…’’

மூன்று பிணங்கள்….

“டாக்டர் எதாவது ப்ரெடிக்ட் பண்ண முடியுதா?…’’

“மூணு பேர் ரெண்டு அடல்ட், ஒரு பெண் ஒரு ஆன், ஒரு குழந்தை... பெண் குழந்தை... ஹான் அப்புறம் முக்கியமான விஷயம் அந்த குழந்தையோட தல இல்ல, பக்கத்துல எங்கயாவது இருக்கானு பாத்துகிட்டு இருக்காங்க…’’

மணி குறுக்கிட்டார் “ஐயா காலைல இருந்து தேடி பாத்துட்டு இருக்கோம் இன்னும் கிடைக்கலயா…’’

“டாக்டர்... பாடி எத்தனை நாலா இங்க இருக்குனு ஏதாவது ப்ரெடிக்ட் பண்ண முடியுமா…’’

“ஹ்ம்ம்... தோரயமா 20 இல்ல 22 நாள் இருக்கும் எக்ஸாக்ட் டைம் போஸ்டுமோர்டெம் அப்புறம் தான் சார் சொல்ல முடியும்…’’

“ஓகே டாக்டர் தேங்க்ஸ்…’’

“சார்... அட்ரஸ் கிடைச்சிடுச்சி, ஓனர் பெயர் அலெக்ஸ் அவுர் வீடு இங்க இருந்து 25கிமீ தூரத்துல ராமாபுரம் மெயின் ரோடுலே இருக்கு சார்…’’
“சரி சத்தியா போலாம், எதுக்கும் அந்த ஏரியா சர்க்கிள் இன்ஸ்பெக்டர்... ரவி குமார் தான…’’

“ஹ்ம்ம்…’’

“அவுர்க்கிட்ட இன்போர்ம் பண்ணிடு…’’

“மணி இங்கே இருந்து எனக்கு ஸ்டேட்டஸ் அப்போப்போ அப்டேட் பண்ணிடே இரு…’’

“சரிங்கய்யா…’’

“போச்சி, இன்னைக்கு வீட்டுக்கு போன மாதரி தான்…’’ தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக்கொண்டு தன் தலையெழுத்தை நொந்துக்கொண்டு வேலையை பார்க்க தொடங்கினார்.

20நிமிட பயணத்துக்கு பிறகு அலெக்ஸின் வீட்டை அடைந்தது போலீஸ் ஜீப். நவீன் காரை விட்டு இரங்கி காரின் முன் பக்கம் சாய்ந்து நின்று கொண்டு

“இந்தவீடு தானயா…’’

“ஆமாம் சார்’’

“சத்தியா... வீட்டுல யாராச்சும் இருக்காங்களான்னு பாரு…’’

“குமாரு...(கார் டிரைவர்) போயி அந்த கடையில டீ... ஒரு ப்ளாக் சிகெரெட் வாங்கிட்டு வா…’’

“சரி சார்...’’

இரண்டு போலீஸ் காரர்கள் டூ-வீலரில் வந்து “சார் இன்ஸ்பெக்டர் ரவி குமார் அனுப்புனர் சார் நான் எஸ்.ஐ கமல் அப்புறம் அவரு கான்ஸ்டபிள் பீட்டர்…’’

“சார் வீட்டுல யாரும் இல்ல சார்…’’ என்று வீட்டின் கதவின் அருகில் இருந்து கத்தினார் சத்தியா.

“சத்தியா வீட்டுல ஜன்னல் எதாவது திறந்து இருக்கா, இல்ல வேற எதாவது வழி இருக்கானு பாரு…’’
“கமல் நீங்க அந்த சைடுல இருக்க வீட்டுலலாம் விசாரிங்க இந்த வீட்டுல இருந்தவங்களாம் எங்கன்னு... பீட்டர் நீங்க இந்த சைடுல இருக்க இருக்க வீட்டுல விசாரிங்க…’’

“சார்... டீ... சிகிரெட்…’’

சிகிரெட்டை பத்த வைத்தவாரு அந்த வீட்டையும் அந்த வீட்டின் நேர் எதிரே இருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோரையும் கவனித்தார்.

“சார் வீட்டுக்கு உள்ள போக வேற வழியே இல்ல, ஒரே ஒரு கதவு தான் அதுவும் பூட்டி இருக்கு…’’ என்றார் சத்தியா.

“சார் இந்த வீட்டுல மூனே பேர் தான் இருந்தாங்கலாம் சார், அவுரு பேர் அலெக்ஸ் அவுரு பொண்டாட்டி பெரு எலிசபெத் அப்புறம் அவுங்க பொண்ணு பேர் தெரியல சார்... அவுங்க இந்த வீட்டுக்கு வந்தே ஒரு மாசம் இருக்கும்னு சொல்லுறாங்க சார்…’’ என்றார் பீட்டர்

“கமல்... உங்களுக்கு என்ன இன்போர்மஷன் கிடைச்சது…’’ சிகிரெட்டை போடு அனைத்தவாறு கேட்டார் நவீன்.

“சார் அவுரு இங்க பக்கத்துல இருக்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில தான் அசிஸ்டன்டு மேனேஜரா வேலை பாக்குறாரு, அப்புறம் அவுரு பொண்டாட்டி அவுங்க எந்த வேலையும் செய்யலையாம் சார்…’’

“சத்தியா... அந்த கம்பெனி மேனேஜர், அப்புறம் அலெக்ஸ் பிரேண்ட்ஸ் இருந்தா அவுங்க, எல்லாரும் நாளைக்கு காலைல ஸ்டேஷன்ல இருக்கணும்…’’

“ஓகே சார்…’’

“சரி கமல் நீங்க கிளம்புங்க…’’ சலூட் அடித்து விட்டு பீட்டரும் கமலும் கிளம்பினார்கள்

“சத்தியா என் கூட வா அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர் பொய் பாத்துட்டு வரலாம்... குமார் நீ காரை அந்த சைடு எடுத்துட்டு வா…’’

சத்தியாவும் நவீனும் ஸ்டோரியினுள் நுழைந்தார்கள். “வாங்க சார் வணக்கம்…’’ வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை தலையில் அரை வழுக்கை அவர் தான் அந்த கடையின் முதலாளி என தெரியும் அளவுக்கு கழுத்தில் நகை கை விரல்களில் மோதிரம் என எடுப்பாக இருந்தார்.

“சொல்லுங்க சார்... எதாவது பிரேச்சனாயா…’’
“அதெல்லாம் ஒன்னும் இல்ல கடை வாசல்ல இருக்க சி.சி.டிவி கேமரா காட்சியை (footage) பாக்கணும்…’’ டீ குடிக்கும் போதே இந்த கடையின் வாசலில் இருக்கும் கேமெரா அலெக்ஸ்சின் வீட்டை நோக்கி இருப்பதை பார்த்து விட்டார் நவீன்...

“வாங்க சார்…’’ “ஏலேய் ஐயாக்கு ஏதோ வீடியோ பாக்கணுமாம் அத போடு காட்டுல…’’

“இவன் ஆள பாத்து படிச்சவன்னு நினைச்சன் வீடியோ காட்ட சொல்லுறன்...’’ நவீன் காதுக்கு மட்டும் விழுமாறு கடை முதலாளியை கேலி செய்தார் சத்தியா...

“எந்த கேமரா காட்சியை (footage) பாக்கணும் சார்…’’ கடையில் வேலை பார்க்கும் பையன்.

“வெளியில இருக்க கேமரா…’’

“சரி சார்…’’ சிறிது வினாடிகல் கம்ப்யூட்டரை நோண்டிவிட்டு “சார் அந்த கேமரா ஒர்க் அகத்து சார்…’’ நவீன் கடை முதலாலியை முறைக்க

“ஏல... இத யாம்ல இத்தன நாலா சொல்லல…’’ என்று பொய் கோபம் பட்டர்.

“அண்ணாச்சி உங்க தம்பிகிட்ட சொன்னன் அவுரு தான் அத சரி பன்னுறதுக்கு ஆல வரச்சொல்லுறன்னு சொன்னர் இன்னும் யாரும் வரல…’’

“சார் மன்னிச்சிக்கோங்க சார்…’’

நவீன் பெரும்மூச்சு விட்டபடி “சத்தியா... எது வரிக்கும் காட்சி (footage) இருக்கோ அதுவரைக்கும் சீ.டில காப்பி பண்ணிட்டு வா…’’

காரை நோக்கி நடந்தார் நவீன்,சிறிது நேரத்தில் சத்தியாவும் கையில் சீடீ யுடன் காரை வந்தடைந்தார்... 15நிமிட பயணம் ஸ்டேஷனை அடைந்தார்கள்

“சத்தியா உனக்கு டூட்டி முடிஞ்சிடுச்சில நீ கிளம்பு…’’

“சரி சார்…’’

நவீன் காரை விட்டு இரங்கி ஸ்டேஷனுள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தார்.





இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நவீன் பிரபு தம்பி
 
Last edited:
எப்படி அவர் பேர் அலெஸ் அப்படினு தெரிந்தது.... கார் ஓபன் பண்ணிட்டாங்களா இல்ல அவுங்க கிட்ட id கார்டு எதுவும் இருந்துச்சா .... குழந்தை தலை பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல..... குழந்தை பெரும் யாருக்கும் தெரியல வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆகுதா இல்ல குடி வந்து ஒரு மாசம் ஆகுதா....
 
எப்படி அவர் பேர் அலெஸ் அப்படினு தெரிந்தது.... கார் ஓபன் பண்ணிட்டாங்களா இல்ல அவுங்க கிட்ட id கார்டு எதுவும் இருந்துச்சா .... குழந்தை தலை பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல..... குழந்தை பெரும் யாருக்கும் தெரியல வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆகுதா இல்ல குடி வந்து ஒரு மாசம் ஆகுதா....
Purinju kitte kelvi kekurathu niyama, vittuku vandu than, kudi vanthu illa, enakum padikkum pothu appadithan thonichi, அவர்
Enbathai அவுரு என்று ullathu, 4naala car anga irupathaka then edupavqn sonnan but athu 20naal akuthu
 
எப்படி அவர் பேர் அலெஸ் அப்படினு தெரிந்தது.... கார் ஓபன் பண்ணிட்டாங்களா இல்ல அவுங்க கிட்ட id கார்டு எதுவும் இருந்துச்சா .... குழந்தை தலை பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல..... குழந்தை பெரும் யாருக்கும் தெரியல வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆகுதா இல்ல குடி வந்து ஒரு மாசம் ஆகுதா....
Purinju kitte kelvi kekurathu niyama, vittuku vandu than, kudi vanthu illa, enakum padikkum pothu appadithan thonichi, அவர்
Enbathai அவுரு என்று ullathu, 4naala car anga irupathaka then edupavqn sonnan but athu 20naal akuthu
குடிவந்ததுக்கும், வீட்டுக்கு வந்து ஒரு மாசம் என்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?
 
கொலை நடந்து 20, 22 நாட்கள் இருக்கும்னு சொல்லி இருக்கிறீங்க சோ பிணங்களோட நிலையை விவரிக்கலாமே! and காலநிலை மாற்றங்களால் {மழை} தடயங்கள் அழிந்து கூட இருக்கலாம். {கொஞ்சம் ஓவரா தான் திங்க் பண்ணுறோமோ! பண்ணுவோம் பண்ணுவோம். நாமளும் அறிவ வளத்துக்க வேணாமா?}
 
Purinju kitte kelvi kekurathu niyama, vittuku vandu than, kudi vanthu illa, enakum padikkum pothu appadithan thonichi, அவர்
Enbathai அவுரு என்று ullathu, 4naala car anga irupathaka then edupavqn sonnan but athu 20naal akuthu
sema
 
Top