Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிர்தாபாபு அவர்களின் ரோஜாவும் மின்னொளியும் ஒரு ஒப்பீடல்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
@Amirthababu அமிர்தாக்கா அவர்களின் மின்னொளி ரோஜா என்ற இரு கதாப்பாத்திரங்களின் ஒப்பீடல்

தன்னைத்தானே செதுக்கும் ஒரு பெண் சிற்பி போல் இருந்தது அந்த சிலை. அந்த சிலையில் இருந்த பெண் தன்னைத்தானே செதுக்கினாள். அவள் கண்களில் கர்வம் இருந்தது. அந்தச் சிலையில், உளியைத் தாங்கிய அழுத்தமான கைகளில் நரம்புகள்கூடத் தெரிந்தது. நன்றி- bala sundar.

அடிமட்டத்தில் இருந்து தன்னை தானே செதுக்கிக் கொண்ட சிற்பிகள் ஓளியும், ரோஜாவும். ஆதரவாக எந்த சொந்தமும் இல்லாத போதும் தாங்களே தங்களை மெருகேற்றி கொண்டவர்கள். .

ஓளிக்கு தாய் மட்டுமே பற்றுகோல். தாய்க்குப் பின் தன் கையே தனக்கு உதவி. ஆனால் இவள் வாழ்க்கையில் வில்லிகள் இல்லை. கிராமத்திற்கே உண்டான புரணி பேசும் கூட்டம். அதனை தன் சிடுசிடு பேச்சினால் அலட்சியமாக கடக்கும் பாங்கு.

ரோஜாவிற்கும் அறியாத வயதில் பாட்டியின் ஆதரவு, பாட்டியின் மறைவிற்கு பின்??. இன்னொரு தாயாக இருந்து வழிகாட்ட வேண்டிய சகோதரியே வில்லியான கொடுரம்.அவளின் பேச்சை கேட்டு ஆடும் பெற்றோர்கள். இவர்களை சமாளிக்கும் ரோஜா.

வேறு ஒரு தளத்தின் கதையில் வரும் வரிகள் ரோஜாவிற்கும் பொருந்தும். " அவள் செய்த பாவம் இந்த பெற்றோருக்கு பெண்ணாக பிறந்தது. செய்த புண்ணியமோ மலையளவு, அதனால் விதுரன் அங்கிள் அவளுக்கு கிடைத்தது "

வழிகாட்டுதல் வேண்டிய வயதில் அது கிடைக்கவில்லை இருவருக்கும். தங்களை தாங்களே பட்டை தீட்டி கொண்டனர்.

தனிமரம் தோப்பாகாது. குடும்பம் எனும்தோப்பில் தனிமரமாக நின்றவர்கள் இருவரும். ஆனால் அந்த தனிமரத்துக்குள் தோப்பளவு எண்ணங்கள். இலைகள் உதிர்ந்த நிலையில், காய்ந்த கிளசிகளுடன் துணிவோடு நின்றன அந்த தனிமரங்கள்.

அந்த நிலையிலும் மனம் எனும் மரம் மட்டும் உயிர் கொண்டு நின்றது அதன் வசந்த காலத்தை தேடி.

அந்த வசந்தங்களும் வந்தது அருள், விதுரன் என்ற வடிவில் ஒளிக்கும், ரோஜாவிற்க்கும்.

அவர்களும் அந்த தனிமரத்தை சுற்றி குடும்பம் எனும் தோப்பை அமைத்து கொண்டார்கள்..

இருவரும் மறக்க முடியாதவர்கள். மின்னொளியின் சொலவடையும், ரோஜாவின் அங்கிள் என்ற விளிப்பும்.

வாழ்க வளமுடன் சரண்யா.
 
Wow.... Superb review Amirthababu Mam...?????
அருமையான ஒப்பீடல் ????. இருவருமே தங்களை தாங்களே செதுக்கிக் கொண்ட சிற்பிகள் ??

இத்தனை அருமையான பாத்திரங்களான மின்னொளி மற்றும் ரோஜாவை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி சரண்யா ஜி?????
 
அருமை ?. மின்னு கிராம மக்களின் தனது கடுமையால் செதுக்கிக் கொண்டாள் பயமில்லாதவள். என்றால் ரோஜா தன் தோழிகளின் மீது செலுத்தும் அன்பாலும் சுட்டித்தனத்தாலும் செதுக்கிக் கொண்டாள் என்றாலும் பயம் எச்சமாக உள்ளது.
 
சரண் சகோ நான் இதேபோல் சிந்தித்தேன்...‌ஒரு‌ சிறு வித்தியாசம் ஒளி பொறுப்புடன் மௌனமாக தன் நிலையை கடக்க ரோஜா கலகலப்பாக கடந்து வந்தாள்... இருவரின் காதல் ஆழமானது அழகானது.... இரு பெண்கள், அவர்கள் மனப்போராட்டங்கள், உறவுகள், உணர்வுகள் அனைத்தும் அருமை...‌
 
சூப்பர்ப், அமிர்தாபாபு டியர்
ஆரவ்வின் மனைவி நிலாவைப் போல
கௌதம்மின் மனைவி ஹர்ஷிவ்தாவர்ஷினியைப் போல
கட்ட மரம் ரிஷியின் மனைவி தக்காளி நேத்ராவைப் போல
உதய பிரபாவின் மனைவி நந்தினியைப் போல
அதிரூபனின் மனைவி துவாரகாவைப் போல
கார்த்திக்கின் மனைவி கண்மணியைப் போல
எல்லோருக்கும் மேல பிரசாத்தின் வெள்ளெலி அஷ்மிதாவைப் போல
இந்த மின்னொளி, ரோஜா இருவரையும் ரொம்பவே பிடிக்குது, சரண்யா டியர்
 
Last edited:
சூப்பர்ப், அமிர்தாபாபு டியர்
ஆரவ்வின் மனைவி நிலாவைப் போல
கௌதம்மின் மனைவி ஹர்ஷிதாவர்ஷினியைப் போல
கட்ட மரம் ரிஷியின் மனைவி தக்காளி நேத்ராவைப் போல
உதய பிரபாவின் மனைவி நந்தினியைப் போல
அதிரூபனின் மனைவி துவாரகாவைப் போல
கார்த்திக்கின் மனைவி கண்மணியைப் போல
எல்லோருக்கு மேல பிரசாத்தின் வெள்ளெலி அஷ்மிதாவைப் போல
இந்த மின்னொளி, ரோஜா இருவரையும் ரொம்பவே பிடிக்குது, சரண்யா டியர்
உண்மையோ உண்மை ... (y) (y) (y)
 
Top