Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம்-4

Mithrayuktha

Member
Member
சுரபியை அவள் அறைக்கு அனுப்பி விட்டு,

“நீயும் குளிச்சிட்டு வா கண்ணா..சாப்பிடலாம்,” என்றார்.

“இல்ல மா, நீங்க வாங்க.. இங்க உக்காருங்க” என்று சோஃபாவில் அமர வைத்தான்,

“எப்டி மா இருக்கீங்க..? ஏன் சரியாகவே பேச மாட்டேன்குறீங்க…?” வந்ததிலிருந்து தாய் தன்னிடம் அதிகம் பேசாமலிருகிறார் என்று கேட்டான்.

“பேசாம என்ன பா, நான் எங்கேயும் போகல…. போய் குளிச்சிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.

“என் மேல கோவமா? சுரபிய பிடிக்கலையா?”

“உனக்கு பிடிச்சா அவங்கள எனக்கும் பிடிக்கும், அதுவும் இல்லாம வாழ போறவன் நீ தான்.. உனக்கு பிடிச்சா போதும் கண்ணா...போ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.” என்று அனுப்பி வைத்தார்.

“தாங்க்ஸ் மா.. நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்”

“இதோ பத்து நிமிஷத்துல வரேன்” என்று கூறி இரண்டிரண்டு படிகளாக ஏறி தன் அறை நோக்கி செல்லும் மகனை பார்த்து, இன்னும் சின்ன புள்ள மாதிரி எப்படி போறான் பாரு என்றெண்ணி புன் சிரிப்புடன் சமயலறை நோக்கிச் சென்றார்.

சொன்னது போல குளித்து முடித்து, பத்து நிமிடங்களில் கீழே வந்திருந்தான் இளமாறன்.

“அம்மா, எனக்கு ஒரு கப் டீ” என்று தாயிடம் வந்து நின்றான்.

“இதோ கண்ணா , நீ போய் சோஃபால உட்காரு எடுத்துட்டு வரேன்…”

இளமாறன் சோஃபாவில் அமர கையில் டீயுடன் வந்தார் அமுதா, அதை வாங்கிய இளமாறன் உக்காருங்க மா என்று தன் அருகில் அமர்திக்கொண்டான்.

“ஆமா ம்மா சுகன் ஏர்போர்ட்க்கு வரேன்னு சொன்னான் ஏன் வரல?” என்று கேட்க.

“என் கிட்டயும் அப்படித்தான் சொன்னான் டா, என் வரலன்னு தெரியலையே.”

இளமாரனின் தந்தை குணசேகரன் உடன் பிறந்த தம்பி ராஜசேகரன் அவரது மனைவி சாரதா இருவருக்கும் மூன்று பிள்ளைகள் சுகன், வெண்ணிலா மற்றும் இளந்தளிர். வெண்ணிலாவை அவளது தாய் மாமன் மகனுக்கு திருமணம் முடிதிருந்தனர். இளந்தளிர் அருகிலிருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டிருகிறாள்.

சுகனும் இளமாறனும் ஒரு வயதுடயவர்கள், சிறு வயதிலிருந்தே தோழர்கள். இளமாறன் விடுமுறைக்கு புதுப்பாளையம் வந்தால் இருவரும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள். சுகனும் இளமாறனைப் போல படிப்பில் கெட்டி. அதனால் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற இருவருக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. சுகன் இளமாறன் வீட்டிலிருந்து தான் கல்லூரிக்கு சென்று வந்தான்,இதனால் இருவரின் நட்பும் மேலும் இறுகியது. இளமாறன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி பிரபலமான நிறுவனத்தில் சேர, சுகன் தன் தந்தையின் தொழிலை மேலும் விரிவாக்க தன் சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தான். ராஜசேகரன் வைத்திருந்த சிறு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இன்று சுகனால் மூன்று பெரிய கிளைகளாக மாறி இருந்தது. என்னதான் பொறுப்பாக நடந்து கொண்டாலும் சுகனுக்கு குறும்புத்தனம் அதிகம். எப்போதும் கண்களில் சிரிப்புடன் வலய வருவான், அமுதாவிர்க்கு அவன் இன்னொரு மகன் போல.

சுகனும் இளமாறனும் சேர்ந்து தான் தொழில் துவங்க திட்டமிட்டனர், சுகனுக்கு தாய் வழி சொத்துக்கள் அதிகம் அதனால் அவன் பெரிதாக பணம் சேர்க்க தேவை இருக்கவில்லை, சுகனின் நிலங்கள் மட்டும் தங்கள் தொழிலுக்கு போதாது என்று தான் இளமாறன் அமெரிக்கா சென்றது. பார்ட்னர்கள் என்றால் இருவருடயதும் நிலமாக இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி சமமாக இருக்க வேண்டும் என்று இளமாறன் எண்ணினான்.

“ஆனாலும் இந்த பையன் பன்ற சேட்டை தாங்க முடியல ராஜா,” என்று பொறுமினார்.

“என்ன மா ஆச்சி” என்று கேட்டான்.

அதே நேரம் நண்பனை பார்க்க அவசரமாக உள்ளே வந்த சுகன் அமுதா தன்னை பற்றித்தான் பேசுகிறார் என்று அங்கேயே ப்ரேக் அடித்தது போல் நின்றுவிட்டான்.

“என்ன ஆச்சா.. அவன் சின்ன புள்ளையிலயும் கூடில்ல பெரிய புள்ளையிலும் கூட்டில்ல… சாரதா பாவம் டா இவன் பன்றத அவங்க அப்பா கிட்ட இருந்து மறைக்கப் பாடுபடறா”

“அப்படி என்ன தான் மா செய்தான்…”

“ இத்தன நாள விடு டா,நேத்து பாட்டிங்க எல்லாம் உக்காந்து பேசிட்டு இருப்பாங்க இல்ல, கோயில் மண்டபம்…அங்க போய் மறைஞ்சிருந்து அவங்களாம் பேசிட்டு இருக்கும் போது பட்டாசு சரத்தை கொளுத்தி போட்டுட்டு வந்துருக்கான், ஏன்டான்னு கேட்டா அவங்க எதோ வெண்ணிலவுக்கு குழந்தை இன்னும் உண்டகல, அவளுக்கு எதோ பிரச்சனைன்னு எங்கயோ போயிட்டிருந்த இவன கூப்பிட்டு கேட்டங்களாம், இவன் கோவத்துல பட்டாசு வாங்கி கொழுத்தி போட்டுட்டானாம்” இதை கேட்டு இளமாறனுக்கு சிரிப்பு பீறிட்டது...

“ அத்தோட விட்டானா, அந்த பாட்டிங்களுக்கு எல்லாம் பக்கத்து வீட்டு அம்மணி பாட்டி தான் ஹெட்னு நைசா அந்த பாட்டி வெத்தலை இடிக்கிற ஓரலை தூக்கிட்டு வந்து நம்ம வீட்டுல கொண்டு வந்து வச்சிருக்கான், அது ராத்திரி எல்லாம் ஒரல காணோம்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்கு, காலைல சமயல் கட்டுல பாத்தா அங்க ஓரல் இருக்கு, எப்படியும் உன்ன பாக்க வருவான்ல வரட்டும் கால உடைக்கிறேன்.” என்று புலம்பினார் இதை கேட்ட இளமாறன் சிரித்தே விட்டான்.

“அய்யயோ இப்போ சிக்குனோம் அவ்ளோதான். பேசாம போய்ட்டு அப்புறம் வருவோமா? ம்ம்ம்… ஹும் இதுக்கெல்லாம் அஞ்சினா ஆகுமா...எதையும் தாங்கும் இதயம் டா நானு இத தாங்க மாட்டேனா… களத்துல குதிச்சிடு டா கைப்புள்ள.. குதிச்சிடு….”

மக்கும்… என்று உள்ளே வந்தான்

“டேய் மச்சான்…. வாடா வாடா…”என்று உள்ளே அழைத்தான் இளமாறன்.

“மாப்ள.. எப்டிடா இருக்க?” என்று இருவரும் தழுவிக்கொண்டனர்.

“சாரி மச்சான் ஏர்போர்ட்க்கு வரலாம் னு தான் கிளம்பினேன் கடைசி நேரத்துல லோட் ஏற்றும்போது எதோ பிரச்சினைன்னு கூப்பிட்டாங்க டா அதான் வர முடியல…. டிரைவர் போட்டு அனுப்ப வேண்டியதா போய்டுச்சு” என்றான் சுகன்… இதை எல்லாம் பார்த்து மனதில் சந்தோஷ பட்டாலும் அதை முகத்தில் காட்டாமல் சுகனை முறைதுக்கொண்டிருந்தார் அமுதா.

“என்னடா நம்ம பாசத்த பாத்து இங்க யாருக்கோ புகயுது போல..”

“அடிங்க, புகையுறது இருக்கட்டும், அம்மணி பாட்டி ஓரல ஏன்டா எடுத்துட்டு வந்த, எடுத்ததும் தான் எடுத்த அதை ஏன் டா இங்க கொண்டு வந்து வச்ச?”

“அது…..உங்க வீடு தான் பக்கத்துல இருந்தது, அதான் கொண்டு வந்து வச்சேன்.”

இளமாறனிடம் “வெண்ணிலவுக்குக் கல்யாணம் ஆகி எழு மாசம் தான டா ஆகுது, அதுக்குள்ள அவளுக்கு குழந்தை இல்ல, அவளுக்கு என்ன பிரச்சினை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனீங்களா அது இதுனு பேசுச்சிங்க, இதுங்களுக்கெல்லாம் அந்த அம்மணி கிழவி தான் ஹெட், எப்போ பாரு ஒன்னு வெத்தலை மெல்லுது இல்லன்னா புறணி பேசுது… வாய் வேலை செஞ்சிட்டே இருக்கனும் போல அதுதான் வாய்க்கு வேலைய குரைக்கலாம்ன்னு எடுத்துட்டு வந்தேன்.

“இப்போ என்னனு சொல்லி டா அத திருப்பி குடுகறது..”

“என்னாது திருப்பி குடுக்க போறீங்களா…? அதெல்லாம் வேணாம்.”

“டேய் பாவம் டா அது ராத்திரி எல்லாம் அழுதுட்டே இருந்தது…”

“அடுத்தவங்கள பத்தி பேசும்போது இனிக்குதோ?? இரு பெரியம்மா அடுத்த தடவ புறணி பேசட்டும் வாய்ல பட்டாசு கொழுத்தி போடறேன்..”

“டேய் பாவம் டா… ஒரல் இல்லாம என்னடா பண்ணும்” என்று இளமாறன் கூற

“ அதெல்லாம் சுட்டுட்டு வந்தத கொடுக்க வேண்டாம், 2 நாள் அழட்டும் அப்புறம் நானே கடையிலருந்து எடுத்துட்டு வந்து கொடுகறேன்…” என்றான்.

“பெரியம்மா பசிக்குது நைட்ல இருந்து ஒன்னும் சாப்பிடல, எனக்கு டீ வேணும்….நீ ஃப்ரெஷ் அஹ் போட்டு கொண்டு வா அந்த அறை காப்படி செல்வி போடுற டீ வேணாம்….”

“ சபிடாம அப்படி என்ன டா வேலை உனக்கு? எவ்ளோ பசியில இருந்தாலும் செல்வி டீ வேண்டாமாம்...” புலம்பிக் கொண்டே சமயலறைக்குச் சென்றார்.

“அப்புறம் மச்சான் அமெரிக்கால………” என்று திரும்பியவன் வாயை பிளந்து

அட கொன்னியான்… யாருடா இந்த பொண்ணு???இளமாறன் யார் என்று திரும்பி பார்க்க அங்கே சுரபி தன் அறையிலிருந்து குளித்து முடித்து, நைட் பாண்டும் இறுக்கமான டீ ஷர்ட் அணிந்து ஃபோனை பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தாள்…

சிரித்துக்கொண்டே “சுரபி டா…” என்றான்….

என்னாது சுரபியா??? அம்மா கிட்ட சொல்லிட்டியா???

சொல்லிட்டேன் டா..… அம்மா தான் கூட்டிட்டு வர சொன்னாங்க….

“சூப்பர் மச்சான், பெரியம்மாலாம் ரொம்ப நல்லவங்க டா இதயே நான் எங்க அம்மா கிட்ட சொல்லி இருந்தேன்னு வை, வெலக்கமாத்த எடுத்துகிட்டு தெருத்தெருவா ஓட விட்டு அடிச்சிருக்கும்….” சொல்லிக்கொண்டே சுரபியைப்பார்த்து முறுவலித்தான்.

“ஹேய் சுரபி… நான் சொல்லி இருக்கேன்ல என்னோட பெஸ்ட ப்ரெண்ட் அண்ட் கசின் சுகன்…” இளமாறன் ஆங்கிலத்தில் பேச,

“ஹாய்… உங்கள பத்தி அடிக்கடி பேசுவார், ஐ ஆம் சுரபி” என்று கை நீட்டினாள்

“ஹாய்…” என்று கை குலுக்கிவிட்டு, இளமாறனிடம்

“ஏன்டா தமிழ் வராதா???” இளமாறன் இல்லை என்று தலையாட்ட,

“எனகுன்னே வருவீங்களா டா… நான் இங்கிலீஷ்ல பேசி, நான் பேசறது அந்த பொண்ணுக்கு புரிஞ்சி… விடிஞ்சிடும்.” என கூற, இளமாறன் சிரித்து விட்டான்.

சுகன் தமிழ் வழி கல்வி பயின்றவன், இளமாறன் ஆங்கில வழியில் படித்ததால் அவனுக்கு ஆங்கிலம் பேச எந்த சிரமமும் இல்லை, சுகானுக்கு கல்லூரி படிக்கும்பொழுது கூட, புறியாததை இளமாரனிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்வான். இப்பொழுது நன்றாக பேச தெரிந்தாலும் பேச தயங்குவான். நம் ஊரில் பலருக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்தாலும் எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற அச்சமே தடை போட்டுவிடுகிறது…..

அதற்குள் அமுதா டீயுடன் வர… அதை வாங்கிக்கொண்டு “ டீ ன்னு கேட்டா டீ மட்டும் தான் தருவியா பெரியம்மா, எப்படியும் உன் மகனுக்கு மட்டன், சிக்கன்னு வாங்கி சமைசிருப்பல்ல அத போடு… எப்படியும் வீட்டுக்கு போனா இங்க அம்மா உப்புமா தான் செஞ்சி வச்சிருக்கும் அதை எவன் சாப்பிடுறது என்று டீயுடன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்…

“உனக்கு இல்லாததா டா…. வாம்மா சாப்பிடலாம், கண்ணா வாப்பா உட்காருங்க….” என்று மூவருக்கும் பரிமாறினார் அமுதா, அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்

“சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு ஆன்ட்டி…..” அமுதா புன்னகைக்க,

“பை த வே இளா…. வைஃபை பாஸ்வேர்டு என்ன??”

“இங்க வைஃபை இல்ல அபி.”

“ வாாட் வைஃபை இல்லையா????” என்று ஆச்சர்யமாய் கேட்க,

அதுக்கு ஏன் மா வாய் வாசப்படி வரைக்கும் போகுது என்று மனதில் கவுண்டர் கொடுத்து கொண்டான் சுகன்.

“ஆமா அபி, இங்க இன்டர்நெட் யூஸ் பண்ணுவதற்கு யாருமே இல்ல அதனால கனெக்ஷன் வாங்கல”

“ஓ மை காட் இன்டர்நெட் இல்லாமல் எப்படி ஆண்ட்டி இங்க இருக்கீங்க???” அமுதா புன்னகைக்க,

“அம்மா பெருசா இன்டர்நெட் யூஸ் பண்ண மாட்டாங்க அபி போன்ல இருக்க இன்டர்நெட்டை போதும்னு சொல்லிட்டாங்க அதனால தான் வைஃபை வாங்கல”

“ ஓஹ்...இப்ப எப்படி நான் வீட்டுக்கு காண்டாக்ட் பண்றது???”

“இப்போதைக்கு என்னோட போன் யூஸ் பண்ணி பேசிக்கோ நான் நாளைக்கு வைஃபை கனெக்சன் வாங்கிடுறேன்”

“தாங்க் காட்...சீக்கிரம் பண்ணு வைஃபை இல்லாம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது, ஃபுட்டு ரொம்ப நல்லா இருந்தது ஆன்ட்டி தேங்க்யூ…..” என்று கூறி விட்டு எழுந்து சென்றாள் சுரபி.

இளாவுக்கு சுரபி நிச்சயம் பொருத்தமில்லை என்று சுகனுக்கும் அமுதவுக்கும் தோன்றியது, அவன் மனம் நோக கூடாது என்று இருவரும் எதுவும் பேசவில்லை.

“ சரி மச்சான் நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு, நாளைக்கு தோட்டத்தை பார்க்க போகலாம், வரேன் பெரியம்மா” விடைபெற்றார் சுகன்.

அதன் பின்னர் இளமாறன் சிறிது நேரம் தாயுடன் பேசிவிட்டு உறங்க சென்றுவிட்டான்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு வரும்பொழுது வாசலிலேயே நின்று ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான் ராஜேஷ்… அவனை பார்த்து முறுவலித்துவிட்டு வீட்டினுள்
நுழைய,

“வந்துட்டியா வா வா.. போய் முகம் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா கொஞ்சம் வேலை இருக்கு…..” என்றார் யசோதா.

“இதோ வரேன் அத்தை” என்றுவிட்டு அங்கே சோபாவின் கைப்பிடியில் கால்களைப் போட்டு ஆட்டிக்கொண்டே பாடல் கேட்டுக்கொண்டிருந்த சஞ்சனாவை பார்த்துக்கொண்டே தன் அறைக்கு சென்று முகம் கழுவிவிட்டு உடை மாற்ற கப்போர்டை திறந்தாள், ராஜேஷ் முன்னிலையில் வீட்டில் அணியும் பாண்ட் டாப் போன்றவை அணியக்கூடாது என்று அவள் வந்த புதிதில் கூறியிருந்தார் யசோதா அதை நினைத்துப்பார்த்த ஆராதனா எதற்கு வம்பு என்று பழைய குர்தியைய் அணிந்து வெளியில் வந்தாள்.

அதற்குள் ஃபோன் பேசி முடித்துவிட்டு தங்கையோடு டிவி முன் அமர்ந்திருந்தான் ராஜேஷ், ஆராதனா சமயலறைக்கு செல்ல, ராஜேஷின் பார்வை அவளையே பின் தொடர்ந்தது, ‘ இவன் பார்வயே சரி இல்லையே காலையில தான் அப்படி பார்த்தான்னு பார்த்தா இப்பவும் அப்படியே பாக்குறானே’ என்று யோசித்துக்கொண்டே அத்தையின் அருகில் நின்றாள்.

“ அங்க என்ன யோசனை? இந்தா வெங்காயத்தை அழகா வட்டமா வெட்டு, ரஜேஷுக்கு வெங்காய பஜ்ஜி ரொம்ப பிடிக்கும் அதுக்குள்ள நான் சஞ்சுவுக்கு வாழைக்காய் பஜ்ஜி சுடறேன், எப்பயும் போல ட்ரெஸ் மாட்டிட்டு வருவியோண்ணு நெனைச்சேன் பரவால்ல” என்று கடாயில் எண்ணெய் ஊற்றக்கொண்ட கூறினார்.

அவர் கூறியதை செய்து முடித்துவிட்டு, இரவு உணவிற்கு தேவையானவற்றை செய்ய ஆரம்பித்தாள், யசோதா பஜ்ஜி செய்து எடுத்து சென்று சிறிது நேரமாகியும் ஆராதனா வெளியில் செல்லாததால் ராஜேஷ் இவளை தேடி சமயலறைக்கு வந்து விட்டான்.

“என்ன ஆரா… எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சு முடிக்கவே போகிறோம் நீ இன்னும் வெளிய வராம இங்க என்ன பண்ற” எனக் கேட்க

“இல்ல ராஜேஷ் எனக்கு பசிக்கல.. நீங்க போய் சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறினாள், அவன் சென்றவுடன் இவளுக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது…

இங்கே வந்த புதிதில் எந்த தின்பண்டங்கள் இருந்தாலும் சஞ்சுவுக்கும் ரஜேஷுக்கும் கொடுத்து விட்டு மறு நாள் அவர்களிடம் கேட்பார் அவர்கள் அப்போது வேண்டாம் என்றால் மட்டுமே ஆராதனாவிற்கு கொடுப்பார். இதை சில நாட்களிலேயே கண்டுகொண்ட ஆராதனா, மொத்தமாக வீட்டில் உணவை தவிற எதையும் உண்பதில்லை, ஒருமுறை யசோதா கொடுத்த பழைய வடையை இவள் வேண்டாம் எண்க, சஞ்சு ‘ஒன்றும் இல்லாதவளுக்கு கொழுப்பை பாரு,’என்றாள் ராஜேஷின் பார்வையும் அதை அமோதிப்பதை போலத்தான் இருந்தது… அவர்களுக்கு யார் சொல்வது அதற்கு பெயர் தன்மானம் என்று…

தன் மாமன் கொடுக்கும் கை செலவுக்கான பணத்தில் அவ்வப்போது பள்ளிக்கூடத்தில் எதாவது வாங்கி உண்பாள் அவ்வளவுதான், இப்போது அவளே சம்பாதிபதால் அவள் விருப்பப்படி வெளியில் வாங்கி உண்கிறாள்.

“ஆறு வருஷத்துக்கு முன்னாடி இங்க தான இருந்தான், அப்போ எல்லாம் நம்மல நக்கலா பாத்துட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி வந்து கேட்கிறான்’ என சிறிது கோபம் வந்தது….. எல்லா வேலைகளும் முடித்துவிட்டு தன் அறை நோக்கி செல்ல,

ராஜேஷ் “ஆரா எங்க போற, வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து டிவி பாரு” என்றழைக்க, யசோதா முகம் கடுத்தது...அதை கண்ட ஆராதனா முறுவலித்துவிட்டு

“ இல்லை எனக்கு கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் இருக்கு நீங்க பாருங்க” என்றுவிட்டு தன் அறைக்கு வந்து செல்போனில் பாடல்களை ஓட விட்டு ஹெட்போன் மாட்டிக்கொண்டு அறையின் ஜன்னோலரமாக அமர்ந்து கண் மூடினாள்.
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
 
Top