மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நேரம் வந்து விட்டதால், ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியுடன், மற்றவர்களும் ருத்ராக்ஷி தங்கியிருக்கும் இல்லத்திற்குக் காரில் சென்று இறங்கினர்.
உடனே அவர்களை நிற்க வைத்து ஆரத்தி எடுத்துப் பொட்டு வைத்தவர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார் மிருதுளா.
“உள்ளே போங்க” என்றவர், அனைவரையும் இல்லத்திற்குள் அனுப்பி வைத்து விட்டு ஆரத்தியை ஊற்றி முடித்து, அவரும் உள்ளே வந்தார்.
அந்தச் சமயத்தில்,”மாப்பிள்ளை, பொண்ணுக்குப் பால், பழம் கொடுக்கனும்ல? அதுக்குத் தயார் பண்றேன்” என்ற கவிபாரதியிடம்,
“அதை நான் அவங்களுக்குக் கொடுக்கவா அத்தை?” என்று முன்னே வந்தாள் மஹாபத்ரா.
“ஆமாம். இனிமேல் நீ தான் அதையெல்லாம் செய்யனும்” என்றார் ஸ்வரூபனின் தாய்.
“சரி அத்தை” என்றவளோ, அந்த நிமிடத்தில் இருந்து பம்பரம் போல சுழலத் தொடங்கி, மணமக்களுக்குப் பால் மற்றும் பழத்தைக் கொடுத்து அந்தச் சம்பிரதாயத்தை நல்லபடியாக செய்து முடித்தாள் மஹாபத்ரா.
அதன் பின்னர், ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் மணக்கோலத்தை முற்றிலுமாக ரசித்துக் கொண்டு இருந்தார்கள் சந்திரதேவ்வும், காஷ்மீரனும்.
அவர்கள் இருவருக்குமே, ருத்ராக்ஷியைப் பார்க்கையில், அவள் நீலவேணியின் மறு பதிப்பாகவே தெரிந்தாள் எனலாம்.
தன்னுடைய கணவனிடம் மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தவள், தந்தை மற்றும் தமையனின் பாசமிகுப் பார்வைகளைக் கவனிக்கவில்லை.
ஆனால், தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த ஸ்வரூபனோ, அதைக் கவனித்து விட்டான் போலும்.
எனவே,”ருத்ரா ம்மா. நீ போய் உங்க அப்பா, அண்ணா கிட்டே பேசு” என மனைவிக்கு வலியுறுத்திய கணவனைக் கேள்வியாகப் பார்த்தாள் ருத்ராக்ஷி.
“நான் காரணமாகத் தான் சொல்றேன்” என்றவுடன்,
அவளுக்கும் அவர்கள் இருவரிடமும் போய்ப் பேச வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாள்.
ஆகவே, தன் கணவனின் சொல்லைத் தட்டாமல், சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனிடம் போனாள் ருத்ராக்ஷி.
“என்னாச்சுடா?” என்று அவள் தன் மணாளனைத் தனியாக விடுத்து தங்களிடம் வந்திருப்பதைக் கண்டுத் திகைப்புடன் வினவினார் அவளது தந்தை.
“சும்மா தான் ப்பா. உங்க ரெண்டு பேர் கூடவும் பேசிட்டு இருக்கனும் - ன்னுத் தோனுது. அதான் வந்தேன்” என்றவளிடம்,
“மாப்பிள்ளை ஏதாவது நினைச்சுக்கப் போறார் ம்மா. நீ அவர்கிட்டே போய் உட்கார்” என அவளுக்கு உணர்த்தினான் காஷ்மீரன்.
ருத்ராக்ஷி,“என்னை உங்க கூடப் பேசுன்னு அவர் தான் அனுப்பினார் அண்ணா”
“அப்படியா?” என ஆச்சர்யம் அடைந்தவர்களோ, தங்களைப் பார்த்துப் புன்னகைத்த ஸ்வரூபனுக்குக் கண்களால் நன்றி செலுத்தி விட்டு, அவளுடன் இணைந்து அளவளாவத் தொடங்கினர்.
சிறிது நேரம் கழித்து,”கல்யாணம் முடிஞ்சதும், பொண்ணையும், மாப்பிள்ளையையும் மூனு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்ப் பால், பழம் தரனும். அதனால், அவங்க இப்போ கவிபாரதியம்மா வீட்டுக்குப் போகனும்” என அனைவருக்கும் வலியுறுத்தினார் மிருதுளா.
“இதெல்லாம் எங்களோட கல்யாணத்தில் சொல்லலையே?” என்ற சந்தேகத்தை எழுப்பினாள் மஹாபத்ரா.
“இந்த முறையை எல்லாம் மாப்பிள்ளை வீட்டாளுங்க தான் முடிவு பண்ணனும் மா. சந்திரதேவ் ஐயா வீட்டில் இப்படியான சம்பிரதாயம் இல்லைம்மா. அதான், உங்க கல்யாணத்தில் இதெல்லாம் நடக்கலை” என்று அவளுக்கு விளக்கம் அளிக்கவும்,
“ஓஹோ! சரிங்க அக்கா” என அதைப் புரிந்து கொண்டாள் காஷ்மீரனின் மனைவி.
காஷ்மீரன்,“எல்லாரும் காரிலேயே போயிடலாம்”
அனைவரும் காரில் ஏறி ஸ்வரூபனின் வீட்டிற்குப் போயினர்.
அங்கேயும் ஆரத்தி எடுத்தப் பிறகு தான் மணமக்களை வீட்டினுள் அனுமதித்து, அவர்களுக்குப் பாலும், பழமும் கொடுக்கப்பட்டது.
“மூனாவதா யாரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்?” என்பதற்கு,
“எங்க வீடு பக்கத்தில் தான் இருக்கு. அங்கே போனா கரெக்டா இருக்கும்” என யோசனை கூறினார் வித்யாதரன்.
அதே போலவே, அந்தச் சடங்கும் முடிந்து விட, மீண்டும் ருத்ராக்ஷியின் இல்லத்திற்குத் திரும்பினர்.
“முடிஞ்ச அளவுக்கு உன்னோட துணிமணிகளை எல்லாம் எடுத்து வைம்மா. இங்கே தானே இருக்கு. மத்ததை எல்லாம் பொறுமையாக வந்து எடுத்துக்கலாம்” என்கவும்,
அவளுக்குத் தேவையான உடைகளை மட்டும் டிராவல் பேக்கில் எடுத்து வைத்து விட்டு வந்தாள் ருத்ராக்ஷி.
தன் தந்தை மற்றும் தமையனுக்கு அருகில் சென்றவள்,”அப்பா, அண்ணா! என்னை நீங்க மிஸ் பண்ணுவீங்க தானே?” என்றவுடன்,
“என்னம்மா இப்படி கேட்டுட்ட? நாங்க உன்னை மிஸ் பண்ணாம இருப்போமா?”என்று வேதனையுடன் அவளுக்குப் பதிலளித்தார் சந்திரதேவ்.
“நான் என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே உங்க கூட தங்குனதே இல்லை. அப்படி இருந்த நாட்களும் கம்மி தான். அதனால் நீங்க என்னைச் சீக்கிரம் மறந்துடுவீங்களோ அப்படின்னு தான் இப்படிக் கேட்கிறேன்” என்று கூறித் தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றவளைப் பார்த்துக் கலங்கினர் அவளது தந்தையும், தமையனும்.
ருத்ராக்ஷியின் பதிலைக் கேட்டு அந்த அறையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
பின்னே, இவ்வளவு மன முதிர்ச்சி கொண்ட பெண்ணிற்கு இப்படியான சந்தேகமும், கேள்வியும் ஏற்படுவது ஸ்வரூபனுக்கே வியப்பை அளித்தது.
“உனக்கு என்னம்மா ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என்று அவளிடம் தவிப்புடன் வினவினான் காஷ்மீரன்.
“எனக்கு அப்படித் தோனுதே அண்ணா! நான் என்னப் பண்றது? உங்க ரெண்டு பேரையும் நான் கண்டிப்பாக மிஸ் பண்ணுவேன். ஆனால் அதே ஃபீல் உங்களுக்கும் இருக்குமா?” என்று இன்னும் அழுத்தமாக கேட்டாள் அவனது தங்கை.
அவளது இந்தக் கேள்விகள் நியாயமானவை தான் என்றாலும், அவற்றை இப்போது அனைவரின் அதுவும் அவளது கணவன் மற்றும் மாமியாரின் முன்னிலையிலும் போட்டுடைத்தாற் போன்று கேட்டதால் இருவரும் ஆடித்தான் போய் விட்டார்கள்.
இப்போது அனைவரது கவனமும் ஸ்வரூபனிடம் இருக்க, அவனோ தன் மனைவியைத் தான் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“மாப்பிள்ளை” என அவனைச் சங்கடத்துடன் அழைத்தார் சந்திரதேவ்.
“அவ பேசுவதில் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா. நீங்களும், அவளும் எல்லாத்தையும் இப்போவே பேசி முடிச்சிட்டா நல்லது தான்” என்று கூறி விட்டு அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விட்டான் ஸ்வரூபன்.
அவனது கருத்தை ஆமோதிப்பதைப் போலத் தானும் எதுவும் பேசாமல் நின்றார் கவிபாரதி.
எனவே, இப்போது தன் கேள்விக்குப் பதிலளிக்குமாறு அவர்களை அழுத்தமாகப் பார்த்தாள் ருத்ராக்ஷி.
“இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான் காஷ்மீரன்.
“ம்ம்” என ஒப்புதல் அளித்தவளிடம்,
“நம்ம அம்மா இறந்ததுக்கு அப்பறம் நானும், அப்பாவும் உன்னை ஒதுக்குனோமா? இல்லை, நீ எங்களோட சேராமல் தனியாக ரூமில் அடைஞ்சு கிடந்தியா?” என்று கேட்டான் அவளது தமையன்.
ருத்ராக்ஷி,“நான் தான் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்”
“எங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் உனக்குத் தேவையானதை செய்வதில் ஏதாவது குறை வச்சி இருக்கோமா?”
“ம்ஹூம்”
“உனக்குப் பிடிச்சதை, உன் மனசுக்கு நிம்மதி கொடுக்கிறதைப் பண்ணுன்னு நாங்க உன்னை மோட்டிவேட் செய்யலையா?”
“செஞ்சீங்க” என அவனுடைய வினாக்களுக்கு ஒற்றைச் சொல்லில் விடையைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.
காஷ்மீரன்,“அப்பறம் நீ இங்கே வந்ததில் இருந்து நாங்க உன்னை எவ்வளவு மிஸ் பண்ணோம்ன்னு உங்கிட்டேயே அப்பப்போ சொல்லி இருக்கோமே! அதெல்லாம் உனக்கு ஞாபகமே இல்லையா என்ன?”
“ஞாபகம் இருக்கு அண்ணா” என்றவளது கண்ணீரைப் பார்க்க முடியாமல்,
“போதும் ப்பா. அவ ரொம்ப அழுகுறா பாரு!” என மகளுக்காகப் பரிந்து பேசினார் சந்திரதேவ்.
“நான் இந்த விஷயத்தை ஆரம்பிக்கலையே அப்பா? அவளுக்கு நம்ம மேலே இவ்வளவு சந்தேகம் இருக்கும் போது அதை அவ வாய் விட்டுக் கேட்டதுக்கு அப்பறமும் நாம அதைத் தெளிவுபடுத்தி தானே ஆகனும்? நான் அதைத் தான் பண்றேன்” என்றவனோ,
தனது தங்கையிடம்,”என்னை விடு… எத்தனை தடவை உன்னை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி நம்மளோட அப்பா உங்கிட்ட கெஞ்சி இருப்பாரு? அப்போ எல்லாம் நீ வந்தியா?” என்கவும்,
“இல்லை அண்ணா” என்றாள் ருத்ராக்ஷி.
“அப்பறம் என்ன தைரியத்தில் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களை அப்படி கேட்ட? நாங்க என்னமோ உன்னைப் பார்த்துக்க முடியாததால் இந்த ஊருக்கு அனுப்பி வச்ச மாதிரி அப்படியொரு வார்த்தையைக் கேட்டியே? நீ எப்பவும் சரியாகத் தான் யோசிப்ப - ன்னும், எங்களைப் புரிஞ்சு வச்சிருப்ப - ன்னும் நானும், அப்பாவும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அதெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள் தனம்ன்னு எங்களுக்குப் புரிய வச்சிட்ட ருத்ரா!” என்று வருத்தத்துடன் உரைத்தான் காஷ்மீரன்.
“அண்ணா!” என்றவளைக் குற்ற உணர்வு மனதைக் குத்தியது.
“நீ இதை நாம மூனு பேரும் மட்டும் தனியாக இருக்கும் நேரத்தில் கூடக் கேட்டு இருக்கலாம். ஆனால், உன்னோட புருஷன், மாமியார் மட்டுமில்லாமல் என்னோட பொண்டாட்டி, புகுந்த வீட்டாளுங்க முன்னாடியும், மிருதுளா அக்காவோட ஃபேமிலி இருக்கும் போதும் கேட்ட பார்த்தியா? ரொம்ப சந்தோஷம் மா!” என்று கூறித் தங்கையைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடவும்,
அதற்குப் பிறகு தான், தன்னுடைய செயல் மற்றும் வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்து,
“என்னை மன்னிச்சிருங்க அண்ணா! அப்பா! உங்க கிட்டேயும் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்றவளோ, அனைவரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் குறுகிப் போய் நின்றாள் ருத்ராக்ஷி.
“இதுக்கு மேலே எதுவும் சொல்றதுக்கு இல்லைன்னு நினைக்கிறேன் ம்மா” என்று தளர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்து விட்டான் காஷ்மீரன்.
உடனே அவனுக்குக் குடிக்க நீர் கொணர்ந்து கொடுத்தாள் மஹாபத்ரா.
அதேபோல், தன் மனைவியைத் தனியே நிற்க விடாமல் அவளுக்கு ஆதரவாக அருகில் வந்து கையைப் பற்றிக் கொண்டான் ஸ்வரூபன்.
“நான் உன்னைக் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிரு. உன்னோட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்னு நம்புறேன்” என்று தன்னிடம் கூறிய தமையனை விழிகளில் நீர் வடியப் பார்த்தாள் ருத்ராக்ஷி.
அப்போது,”உன் மனசில் இருக்கிறதை நீ கேட்டுட்ட, அதே மாதிரி அவர் மனசில் இருக்கிறதை அவரும் சொல்லியாச்சு. இதையெல்லாம் நீ கடைசி வரைக்கும் உள்ளேயே வச்சிட்டு இருக்காமல் இப்படிக் கேட்டது அவங்களுக்கு நிம்மதியாகத் தான் இருக்கும்” என்று அவன் கூறியதை ஒப்புக் கொண்டதைப் போல் தலையை அதைத்தார்கள் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்.
“நல்ல நேரம் முடியிறதுக்குள்ளே பொண்ணை அவளோட புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்” என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார் மிருதுளா.
“ம்ம். அதுக்கான வேலையை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி நிலைமையைச் சகஜமாக்கினார் கனகரூபிணி.
“நான் போய் உன் பெட்டியை எடுத்துட்டு வர்றேன் ருத்ரா” என்று அவளுக்கு உதவிக்கரம் நீட்டினாள் மஹாபத்ரா.
“பரவாயில்லை அண்ணி. நானே எடுத்துக்கிறேன்” என்று அவளைத் தடுக்கவும்,
“நீ சும்மா இரு” என அவ்வேலையைத் தானே செய்தாள் அவளது அண்ணி.
- தொடரும்