அதன் பின்னர், உறவினர்களுடைய வருகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததும், தங்களுடைய அலங்காரங்கள் கலையாத வகையில் நாற்காலியில் அமர்ந்தார்கள் ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷி.
“நம்மப் பிள்ளைங்களுக்குச் சாப்பிட்டதும் தூக்கம் வந்திருச்சுப் போல ம்மா. ரெண்டு பேரோட கண்ணும் சொருகுது பாரு! அவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்த் தூங்க வச்சிட்டு வா” என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு இருந்த வித்யாதரனிடம்,”நீயும் அவங்க கூடக் கிளம்பி போ ப்பா. இங்கே இனிமேல் நாங்கப் பார்த்துக்கிறோம். நாளைக்குக் காலையில் வாங்க” என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் கவிபாரதி.
அவர்கள் விடைபெற்றுக் கொண்ட சிறிது நேரத்திலேயே அந்த மண்டபத்தில் கூட்டம் குறைந்து விடவும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் சாப்பாட்டுப் பந்தியில் தான் இருந்தனர்.
எனவே,”எல்லாரும் ஃபோட்டோ எடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன். இனிமேலும் ஆட்கள் வர வாய்ப்பு இல்லை. அதனால், மாப்பிள்ளை, பொண்ணை அவங்களோட ரூமுக்கு அனுப்பி வைப்போம்” என்றார் கனகரூபிணி.
அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு, மேடைக்குச் சென்ற மஹாபத்ராவோ, மிகுந்த அயர்ச்சியுடன் காணப்பட்ட தன் நாத்தனார் மற்றும் அவளது வருங்கால கணவனிடம்,”கூட்டம் குறிஞ்சிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க” என்று அக்கறையுடன் உரைக்கவும்,
“சரி அண்ணி” என்று அவளிடம் சொல்லி விட்டுத் தன்னவனுக்கு விடைகொடுத்து விட்டு மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் ருத்ராக்ஷி.
அதே சமயம், அவனுக்குத் துணையாக இருக்கிறேன் என்று சொன்ன வித்யாதரனை அவனுடைய குடும்பத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதால், தான் மாப்பிள்ளையுடன், அவனது அறையில் தங்கிக் கொள்வதாக கூறி விட்டான் காஷ்மீரன்.
அவனுடன் சேர்ந்து, சந்திரதேவ் மற்றும் பிரியரஞ்சனும் இணைந்து கொண்டார்கள்.
அனைவரும் அசதியின் காரணமாக, உறங்கச் சென்று விட்டனர்.
ஆனால், சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனுக்குத் தான் உறக்கம் வரவில்லை.
ஏனென்றால், தங்கள் வீட்டுச் செல்ல இளவரசி இப்போது திருமணமாகிப் போவது தங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தாலும் அவள் ஏற்கனவே தங்களுடன் அவ்வளவாக தங்கி இருக்கவில்லை. இப்போதோ, அவளது திருமணத்திற்குப் பிறகு, இன்னும் தூரமாகி விடுவாள், அதுவும், தங்களை விட்டுத் தொலைவாகத் தான் இருக்கப் போகிறாள் என்பதை நினைக்கையில் எப்படி ருத்ராக்ஷியின் தந்தை மற்றும் தமையனுக்குத் தூக்கம் வரும்?
அதனால் தான், அவ்விருவரும் ருத்ராக்ஷியைப் பிரியப் போவதை நினைத்து மனதிற்குள்ளேயே வருந்தித் துடித்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் ருத்ராக்ஷியை எப்பொழுதுமே தங்களது சுமையாக கருதியது இல்லை. அவளைத் தங்களுடன் தங்க வைப்பதில் எவ்வளவு பிரயத்தனப்பட்டார்கள் என்பது அவர்களுக்குத் தானே தெரியும்?
இதையெல்லாம் எண்ணிக் கொண்டே தாமதமாகத் தான் உறங்கினார்கள் சந்திரதேவ் மற்றும் காஷ்மீரன்.
ஆனால், அதிகாலையில் துரிதமாக எழ வேண்டுமென்பதால் ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் நன்றாகவே உறங்கி விட்டிருந்தனர்.
அடுத்த நாள் காலையில், முதலில் எழுந்தது என்னவோ, மஹாபத்ரா தான்.
அவள் மற்றவர்களை எழுப்பி விட்டு,”நாம சீக்கிரம் ரெடி ஆனா தான், வேலைகளைப் பார்க்க முடியும்“ என்று அவர்களை எல்லாம் தயாராக அனுப்பி வைத்தாள்.
“இன்னும் மாப்பிள்ளை எழும்பலையா? உன் புருஷனுக்கு ஃபோனைப் போட்டுக் கேளு” என மகளிடம் அறிவுறுத்தினார் கனகரூபிணி.
உடனே தன் கணவனுக்கு அழைத்து,”என்னங்க! எல்லாரும் எழுந்தாச்சா? மாப்பிள்ளை குளிக்கப் போய்ட்டாரா?” என்று அவனிடம் விசாரித்தாள் மஹாபத்ரா.
“எல்லாரும் இப்போ தான் எழுந்திருக்கோம் மா. இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளைக் குளிக்கப் போயிடுவார்” என்று மனைவியிடம் தெரிவித்தான் காஷ்மீரன்.
“சரிம்மா. எல்லாரும் கிளம்பிட்டுச் சொல்லுங்க” என்று கூறி அழைப்பை வைத்து விட்டாள் அவனது மனைவி.
அதன் பின்னர், அனைவருமே வேகவேகமாக தயாராகத் தொடங்கினர்.
முதலில், தான் குளித்து முடித்து வந்த மஹாபத்ராவோ,”நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே நான் ரெடி ஆகிடுவேன்” என்று கூறி ருத்ராக்ஷியை அனுப்பி வைத்தாள்.
தனக்கு முன்னதாகவே கிளம்பத் தொடங்கி இருந்த ஸ்வரூபனிடம்,”நீங்க ரொம்ப சுறுசுறுப்பான ஆளு தான் மாப்பிள்ளை” என அவனைப் பாராட்டி விட்டுத் தானும் தயாராகிக் கொண்டிருக்க,
அப்போது, தங்களது பிள்ளைகளுடன் மண்டபத்திற்கு வந்து சேர்ந்து இருந்தார்கள் மிருதுளா மற்றும் வித்யாதரன்.
அவர்களைக் கண்டதும்,”வாங்க! வாங்க” என அவர்களை அழைத்து, உட்கார வைத்த கவிபாரதியிடம்,”பிள்ளைங்க வேணும்னா உட்கார்ந்து இருக்கட்டும் க்கா. நாம வேலையைப் பார்ப்போம்” என்று அவருடன் சென்றனர் இருவரும்.
ஒருபுறம், தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த ஸ்வரூபனுக்குத் தன் வருங்கால மனைவியின் அலங்காரத்தைக் காண வேண்டுமென்ற பேராவல் ஏற்பட்டது.
இதை யாரிடம் சொல்வது என்று தவித்தவாறே தான் வேட்டி, சட்டையை அணிந்து முடித்தவன்,
தன் கண் பார்வையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த காஷ்மீரனிடம் கேட்க மனம் உந்தியது. ஆனால், அவன் ஏதாவது தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது? என்று தன் ஆவலை அடக்கிக் கொண்டான் ஸ்வரூபன்.
ஆனால், அவனது நிலையைக் கடந்து வந்திருந்த காஷ்மீரனுக்கு அவனுடைய ஆசை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டதால், தன் மனைவிக்கு அழைத்து,”ருத்ராவுக்கு அலங்காரம் முடிஞ்சுதா ம்மா?” என்று வினவ,
“இன்னும் இல்லைங்க. இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. ஏன் ங்க?” என்ற மஹாபத்ராவிடம்,
“மேக்கப் போட்டு முடிச்சதும் ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்புறியா?” என்று கேட்டான் காஷ்மீரன்.
“ஓஹோ! உங்க மாப்பிள்ளைக்காகத் தானே கேட்கிறீங்க?” எனக் கேட்டுக் குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள் அவனது மனைவி.
“ஆமாம் மஹா. நானும் அவரோட சுவிட்சுவேஷனைக் கடந்து தானே வந்திருக்கேன்? அதான்” என்று அவளிடம் சொல்லவும்,
“அது சரி! நான் போய் கல்யாணப் பொண்ணை ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன்” என்று கூறி அந்தக் கைப்பேசி அழைப்பைத் துண்டித்து விட்டு,
ருத்ராக்ஷியின் அறைக்குச் சென்று,”மேக்கப் போட்டு முடிச்சாச்சா?” என வினவினாள் மஹாபத்ரா.
“எஸ் மேம்” என்ற அழகுநிலையப் பெண்கள் பெண்ணோ, மணப்பெண்ணின் அலங்காரத்தை அவளிடம் காட்டினாள்.
அதைக் கண்டதும்,”வாவ்! சூப்பர்! அதிகப்படியாகத் தெரியாமல் அளவாக, அழகாகப் போட்டு விட்டு இருக்கீங்க!” என அவர்களை மனதாரப் பாராட்டி விட்டு,
“நான் உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன் ருத்ரா” என்று அவளிடம் அனுமதி பெற்று, தன் நாத்தனாரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் மஹாபத்ரா.
தன்னுடைய அனுமதியுடன் அவளைப் புகைப்படம் எடுத்தவளைப் புன்னகையுடன் பார்த்து,”அவருக்கு அனுப்ப தானே ஃபோட்டோ எடுத்தீங்க அண்ணி?” என்று கேட்டுத் தன் அண்ணியை அதிர வைத்தாள் ருத்ராக்ஷி.
அதைக் கேட்டவுடன்,”ஹிஹி! இல்லையே ம்மா! நீ ரொம்ப அழகாக இருக்க - ன்னு தான் ஃபோட்டோ எடுத்தேன்” எனச் சொல்ல முயன்றவளைப் பார்த்துக் குறுஞ்சிரிப்புடன்,”ஏன் இப்படி தயங்குறீங்க அண்ணி? நீங்க எங்கிட்ட நேராகவே விஷயத்தைச் சொல்லி இருக்கலாம். நான் எதுவும் நினைச்சிருக்க மாட்டேன்” என்று அவளுக்கு மென்மையாக எடுத்துரைத்தாள் ருத்ராக்ஷி.
“நான் ஸ்வரூபன் அண்ணாவுக்காகத் தான் இப்படி பண்றேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?” என்று அவளிடம் வினவினாள் மஹாபத்ரா.
“அவர் என்கிட்ட பேசும் போது, அவர் என்னை மணப்பெண் கோலத்தில் பார்க்கனும்ன்னு ஆசை இருக்கிறதா ஒரு தடவை சொல்லி இருக்கார். அதை வச்சுத் தான் கண்டுபிடிச்சேன் அண்ணி”
“ஓஹோ! சரிம்மா. நான் உன் ஃபோட்டோவை அவருக்கு அனுப்பலாம் தானே?” என்க,
“தாராளமாக அனுப்புங்க அண்ணி” என நாத்தனார் அனுமதி கொடுத்ததும், அங்கேயிருந்து அகன்று தன் கணவனை அழைத்தாள் மஹாபத்ரா.
“என்னம்மா ஃபோட்டோ கிடைச்சுதா?” என்று அவளிடம் விசாரித்தான் காஷ்மீரன்.
“ஆமாங்க. நான் ஏதோ அவகிட்டே இருந்து விஷயத்தை மறைச்சு இதைப் பண்ணலாம்னு பார்த்தால் கடைசியில் எனக்குப் பல்பு கொடுத்துட்டா!” என்று அவனது தங்கை தன்னிடம் உரைத்ததைப் பகர்ந்தாள் மஹாபத்ரா.
அதைக் கேட்ட காஷ்மீரனுக்குச் சிரிப்பு துளிர்ப்பதைக் கண்டவுடன்,”நான் பல்ப் வாங்கினது உங்களுக்குச் சிரிப்பா இருக்குல்ல?” என அவனிடம் சடைத்துக் கொண்டாள் அவனது மனைவி.
“ஹேய்! அப்படியெல்லாம் இல்லைம்மா. இப்போவே போய் நான் என் தங்கச்சி கிட்டே உனக்காக சண்டை போட்றேன்” என்று அவளைச் சமாதானம் செய்ய முயற்சி செய்தான் காஷ்மீரன்.
“க்கும்! இதை நான் நம்பனும்! அப்படித் தானே ங்க?” என்று கணவனை முறைத்தாள் மஹாபத்ரா.
“என்னம்மா இப்படி சொல்ற? உனக்காக கேட்பேன் ம்மா!” என்றவனிடம்,
“எனக்கு இது போதும். நீங்க யார்கிட்டேயும் எதுவும் கேட்க வேணாம். உங்களுக்கு ஃபோட்டோவை அனுப்புறேன்” என்று அவனது செல்பேசிக்குப் புகைப்படத்தை அனுப்பினாள் மனைவி.
அதில் தங்கையின் அலங்காரத்தைப் பார்த்துப் பூரிப்பு அடைந்தவாறே, அதைத் தன் மாப்பிள்ளையின் எண்ணுக்கு அனுப்பி வைத்தான் காஷ்மீரன்.
“ஸ்வரூபன் அண்ணாவுக்கு ஃபோட்டோவை அனுப்பிட்டுச் சீக்கிரம் வாங்க” என்று அவனிடம் கூறி விட்டுப் போனாள் மஹாபத்ரா.
தன்னுடைய அறையில் வெகு நேரமாக அங்குமிங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தவனோ, தன் செல்பேசியில் இருந்து வந்த செய்தியைப் பார்த்தவுடன், தனது மனமகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினான் ஸ்வரூபன்.
கத்திக் கூச்சல் போடாவிட்டாலும், தன் மனம் துள்ளிக் குதிப்பதைத் தடுக்க இயலவில்லை அவனால்.
தன்னவளுடைய மணப்பெண் கோலம் புகைப்படத்திலேயே இத்தனை அழகாக, அம்சமாக இருக்கும் போது நேரில் எப்படி இருக்கும்? என்று அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது ஸ்வரூபனுக்குள்.
அந்தச் சமயத்தில், அவனது மனம் கவர்ந்தவளிடம் இருந்து குறுந்தகவல் வந்ததை அவதானித்தவனோ, அது என்னவென்று பார்க்க,
அதிலோ,'என்கிட்டே கேட்டு இருந்தால் நானே அனுப்பி வச்சு இருப்பேன் ங்க. எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க?’ என்ற செய்தி இருந்தது.
‘நீ பிஸியாக இருக்கியோ - ன்னு நினைச்சிட்டுத் தான், அவங்க கிட்ட கேட்டேன்’ என்று அவளுக்குப் பதில் அனுப்பினான் ஸ்வரூபன்.
‘எப்படி இப்படியெல்லாம் நினைக்கிறீங்க?’ என்று அவனைக் கேலி செய்தாள் ருத்ராக்ஷி.
‘அதெல்லாம் அப்படித்தான்!’ என்று அசடு வழிந்தான் அவளவன்.
‘ஓஹோ!’ என்றவளோ, ‘மேடையில் சந்திப்போம்’ என அனுப்பவும்,
அதற்குச் சரியென்று பதிலளித்து விட்டு மண மேடைக்குச் செல்லப் போகும் நேரத்திற்காகக் காத்திருந்தான் ஸ்வரூபன்.
தான் மந்திரங்களை ஓதி முடித்தவுடன்,”மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ!” என்றார் ஐயர்.
உடனே, மணமகன் அறைக்குச் சென்று, ஸ்வரூபனை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தான் வித்யாதரன்.
“ருத்ராக்ஷிக்குத் துணையாக யார் இருக்கா?” என வினவினார் சந்திரதேவ்.
காஷ்மீரன்,“மஹாவை அனுப்பி வச்சிருக்கேன் ப்பா” என்றவுடன்,
“சரிப்பா” என்றார் அவனது தந்தை.
பட்டு, வேட்டி சட்டையில் கம்பீரம் மிளிர, மண மேடைக்கு வந்து ஐயர் கொடுத்த மாலையைத் தன்னுடைய கழுத்தில் அணிந்த மகனை விழிகளில் ஆனந்தக் கண்ணீர் சுரக்கப் பார்த்து உவகை அடைந்தார் கவிபாரதி.
எந்தவொரு தீய பழக்கமும் இல்லாமல், உழைப்பு மற்றும் நேர்மையைச் சொல்லிக் கொடுத்து வளர்த்ததன் விளைவாக இன்று இந்த தருணத்தில் மகனுடைய முகத்தில் பிரதிபலித்த பொறுப்பு சுடர் விட்டு ஒளிர்வதை அவரால் உணர முடிந்தது.
- தொடரும்