Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 103

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷியின் குறுந்தகவல் தனக்குக் காணக் கிடைத்ததும், உடனே அவளுக்குக் கால் செய்தான் ஸ்வரூபன்.

ஏனென்றால், அதில்,’அவன் இப்போது ஃப்ரீயாக இருந்தால் தனக்கு அழைப்பு விடுக்குமாறு அனுப்பி இருந்தாள் அவள்’ அதனால் தான் யோசிக்காமல் அவளுக்கு அழைத்திருக்கிறான்.

“சொல்லும்மா, என்ன விஷயம்?” என்று அவளிடம் பரிவாக விசாரிக்கவும் செய்தான் ஸ்வரூபன்.

“உங்ககிட்ட ஒன்னுக் கேட்கனும்” என்று அவனிடம் தயங்கியவாறே சொன்னாள் ருத்ராக்ஷி.

“ம்ம். என்னம்மா? தயங்காமல் சொல்லு” என்று அவளை ஊக்கவும்,

“நம்மளோட ஒவ்வொரு சடங்குக்கும் டிரெஸ் எடுக்க, மோதிரம் வாங்கன்னு உங்களையும், அத்தையையும் அடிக்கடி இங்கேயே வரவழைக்கிறது உங்க ரெண்டு பேருக்கும் சங்கடமாக இருக்கா?” என்று அவனிடம் தன் மனதிலிருந்ததைக் கேட்டு விட்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டவுடனே, ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு,”நீ ஏன் ம்மா இப்படியெல்லாம் யோசிக்கிற?” என்று அவளிடம் கனிவுடன் வினவினான் ஸ்வரூபன்.

“இல்லைங்க. நாங்க உங்களை ரொம்ப சங்கடப்படுத்துறோமோ, கம்பெல் பண்றோமோன்னுத் தோனுச்சு. அதான் கேட்டேன்” என்று அவனுக்கு விளக்கிக் கூறியவளிடம்,

“ஹைய்யோ! அப்படி எந்தச் சங்கடமும் எங்களுக்குத் தோனலை ம்மா. அங்கே வர்றதுக்கு நாங்க சந்தோஷம் தான் படுவோம். கல்யாணத்துக்கு அப்பறம் நீ அந்த ஊருக்குத் தானே வந்து தங்கப் போற? அப்போ உனக்கும் ஏதாவது இப்படி ஃபீல் இருக்கா?” என்றவனிடம்,

“ஊஹூம் ங்க! எனக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது” என்று அதை உடனே மறுத்துக் கூறினாள் ருத்ராக்ஷி.

“அப்பறம் எங்களுக்கு மட்டும் ஏன் அப்படி தோனனும்?” என்று அவளிடம் எதார்த்தமாக கேட்டான் ஸ்வரூபன்.

“கரெக்ட் தான்!” என்று அவன் கூறியதை ஒப்புக் கொள்ளவும்,

“ஆமாம். இனிமேல் எந்தக் குழப்பமும் இல்லாமல் ரிலாக்ஸாக இரு” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் நிச்சயத்திற்கான நாள் குறிக்கப்பட்டு விட்டதையும், அந்தத் தேதியையும் சந்திரதேவ்விற்கு அழைத்துச் சொன்னார் கவிபாரதி.

“நல்லதுங்க சம்பந்தியம்மா. அந்தத் தேதியில் எல்லாம் தயாராக இருக்கிறா மாதிரி பண்ணிடலாம்” என்றார் ருத்ராக்ஷியின் தந்தை.

அந்தச் சமயத்தில் தான், ருத்ராக்ஷி தங்கியிருக்கும் ஊர் மக்களை அவர்களது நிச்சயத்தார்த்தத்திற்கு அழைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதை அறிந்து கொண்டனர் அனைவரும்.

“இப்போ என்னம்மா பண்றது?” என்று மிருதுளாவிடம் கேட்டார் கவிபாரதி.

“வேற வழியே இல்லை ம்மா. நாம் விஷயத்தை வெளிப்படுத்தித் தான் ஆகனும்” என்று அவரும் சொல்லி விட, இதை ருத்ராக்ஷியிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

“நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத அப்போவே நீங்க எனக்கு ஏத்துக்கிட்டுப் பேசுறதுக்குக் கண்ணுங், காதும் வச்சுப் பேசினாங்க! இப்போ என்னவெல்லாம் சொல்லப் போறாங்களோ!” என்று கூறிச் சலித்துக் கொண்டாள்.

“ஹாஹா! நிச்சயத்தப்போ மட்டும் தான் அப்படி பேசுவாங்க! அதுக்கப்புறம்…” என்று அவளிடம் மிருதுளா சொல்லி முடிப்பதற்குள்,

“அதுக்கப்புறம் பேசுறதை நிறுத்திடுவாங்களா?” என்றாள் ருத்ராக்ஷி.

“அதான் இல்லை! அப்பறமாக வேற மாதிரி பேசுவாங்க” என்று அவளிடம் சொல்லவும்,

“அட போங்க க்கா” என்று சொல்லிக் கிளுக்கிச் சிரித்தவளிடம்,

“சரி. நிச்சயத்தைப் பத்தின தகவலை எப்போ சொல்லலாம்?” என்று அவளிடம் வினவினார் கவிபாரதி.

“அதைச் சீக்கிரமே சொல்லனும் அத்தை. ஏன்னா, காஷ்மீரன் அண்ணாவோட கல்யாணத்துக்கு அவங்க எல்லாருக்கும் துணி எடுத்துக் கொடுத்த மாதிரி என்னோட கல்யாணத்துக்கும் அப்படி எடுத்துத் தரனுமே?” என்றாள் அவரது வருங்கால மருமகள்.

“ஓஹ்! எப்போ ஊருக்கு வர்றீங்கன்னுச் சொல்லிடு. நாங்க நாலு பேரும் முன்னாடியே பிரிபேர் ஆகிக்கிறோம்” என்று அவளிடம் சொன்னார் மிருதுளா.

“ம்ம். இங்கே இருக்கிற கடையிலேயே துணியை எடுத்துக் கொடுத்திடலாம் மா. நாங்களும் எங்கக் கைக் காசைப் போட்றோம்” என்று தன்னிடம் கூறிய கவிபாரதியிடம்,

“வேண்டாம் அத்தை” என மறுத்துப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

“இதுக்கு நீ எந்த மறுப்பும் சொல்லக் கூடாது! ஏன்னா, எனக்கு இருக்கிறது ஒரே பையன். அவனோட கல்யாணத்துக்குச் செலவு பண்றதுல எனக்கு எந்த மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் வரப் போறதில்லை ம்மா” என்றார் ஸ்வரூபனுடைய அன்னை‌.

“ஆமாம் ருத்ரா. அவங்களை அவங்க விருப்பத்துக்கு விடு” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் மிருதுளா.

“ஓகே அக்கா” என்றவளோ,

“உங்க இஷ்டப்படியே செய்யுங்க அத்தை” எனக் கவிபாரதியிடம் சொல்லி விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டவளோ,

அதன் பின்னர், தனது தந்தை, தமையன் மற்றும் அண்ணியிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

“இந்த முறை குடும்பமாகப் போய் எல்லாரையும் இன்வைட் பண்ணுவோம்” என்று குதூகலத்துடன் உரைத்தார் சந்திரதேவ்.

“ஆமாம் மாமா. எனக்கும் அங்கே வர ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவரிடம் உற்சாகமாக கூறினாள் மஹாபத்ரா.

“அப்போ நாமளும் அங்கேயே செட்டில் ஆகிடலாமா?” என்று தன் மனைவியிடம் வினவினான் காஷ்மீரன்.

“கண்டிப்பாக ங்க! ஐ யம் ஆல்வேய்ஸ் ரெடி தான்!” என்று அவனிடம் கூறிக் கண்ணடித்தாள் அவனது மனைவி.

“அப்போ நான் மட்டும் இங்கே இந்த வீட்டில் அடைஞ்சுக் கெடக்கனுமா?” என்று அவர்களிடம் கேட்டுப் புன்னகைத்தார் சந்திரதேவ்.

“நாங்க எப்போ இப்படி பேசினாலும் இதையே தான் சொல்றீங்க ப்பா” என்று தந்தையிடம் சொல்லிச் சிரித்தாள் ருத்ராக்ஷி.

“ஹாஹா! உங்களையெல்லாம் நம்ப முடியாதுடா! என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணாமல் அந்த ஊருக்குப் போய்த் தங்கிடுவீங்கன்னு கன்ஃபார்ம் ஆகத் தோனுது!” என்றுரைத்தார் அவளது அப்பா.

“ஐயையோ! உங்ககிட்ட சொல்லாமல் நாங்க எதுவுமே செய்ய மாட்டோம்!” என்றான் காஷ்மீரன்.

“எப்போ அந்த ஊருக்குப் போகலாம்னு டேட் ஃபிக்ஸ் செஞ்சு வைங்க. போயிட்டு வந்துடலாம்” என்று கூறி அந்த உரையாடலை முடித்துக் கொண்டார்கள் நால்வரும்.

அதே போலவே, தான் எடுக்கும் ஆன்லைன் வகுப்பிலேயே தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பெண்களிடம் நாங்கள் ஊருக்கு வரப் போவதாக மேலோட்டமாக அறிவித்து விட்டிருந்தாள் ருத்ராக்ஷி.

“என்ன விஷயமாக வரப் போறீங்க? ஒருவேளை உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?” என்று அவளிடம் ஆர்வத்துடன் வினவினார்கள்.

“ஆமாம் ங்க‌. அதைப் பத்திச் சொல்லத் தான் அங்கே வரப் போறோம்” என்று அவர்களிடம் சொன்னவுடன்,

“அப்படியா? அந்த ஊர் மாப்பிள்ளையா? இல்லை, அசலூரா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டனர்.

“அதை அங்கே வந்ததுக்கு அப்பறம் சொல்றேன் ங்க” என்று கூறி விட்டாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
Top