Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 1

Advertisement

Mithrayuktha

Member
Member
பூவோடு பேசாத காற்று
இளமாலை நேரம் என் வேலை முடிந்து விட்டது என்று ஆதவன் தன்னுடைய வேகத்தை சற்றே குறைத்திருந்தார். பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி பறந்து கொண்டிருந்தது. மக்களில் ஒரு சிலர் காலை பரபரப்பின்றி சாவகாசமாகவும், ஒரு சிலர் பரபரப்பாகவும் இருந்தனர் அதில் இரண்டாவது ரகமான நம் கதையின் நாயகி ஆராதனா.

"ஐயோ பஸ் வேற காணமே கொஞ்சம் லேட் ஆனாலும் இந்த அத்தை பெண் பிள்ளை இப்படி இருக்க கூடாது அப்படி இருக்க கூடாதுனு ஓவரா பேசுவார்களே" ஆராதனா பேருந்துக்கு காத்திருக்கும் நேரம் நாம் அவளைப்பற்றி பார்த்துவிடலாம்.

24 வயது மங்கை பிரம்மன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம் அவளை படைத்திருப்பார் எனும் அளவிற்கு அழகும் அறிவும் உடைய பெண், தந்தை குணசேகரன் ஆராதனவின் இரண்டாவது வயதில் ஒரு விபத்தில் இறந்திருந்தார். தந்தை சற்று உயர் மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது மூன்று வீடும் நிலமும் அவளது தாய் சந்திரிகாவை சற்று சிரமம் இல்லாமல் ஆராதனாவை அவளது அவளது 14 வயது வரை வளர்க்க வைத்தது.

அதன்பின்பு அடிக்கடி சோர்ந்து போவதால் மருத்துவரை அணுக அவர் பல மருத்துவ சோதனைகளுக்கு பின் அவருக்குப் புற்றுநோய் என்று கூறினார். அது சந்திரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருந்தும் சற்றும் மனம் தளராமல் சிகிச்சையைப் பற்றி பேச மருத்துவர் கூறியதோ கீமோதெரபி போல் ஏதாவது செய்தால் இருக்கும் நாட்களை சில மாதங்கள் தள்ளிப் போடலாம் அதைத் தாண்டி எதுவும் செய்ய இயலாது என்பதே ஆகும்.

தன் மகளுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது சந்திரிக்காவிற்கு இனி ஒன்றும் செய்ய இயலாது என்பதால் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார். ஆராதனாவை யார் பொறுப்பில் விடலாம் என்பது பெரும் யோசனையாய் இருந்தது, உறவுகள் இருந்தும் யாரும் சந்திரிகாவுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை,கடைசியில் சிறிதேனும் பாசத்தோடு ,அவள் வயிறு வாடாமல் கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள போவது தன் உடன் பிறந்த அண்ணன் என்று முடிவு செய்து,அதன்படி தன் அண்ணன் சூரியநாதன் அண்ணி யசோதாவையும் அழைத்து பேசினார் அவர்கள் சம்மதத்த பின், ஆராதனா, சூரியநாதன், யசோதா, ஊர் தலைவர், தன் கணவரின் உடன் பிறந்தவர்கள், அனைவரையும் அழைத்து தன் முடிவை கூறினார்.

தன் உயிலின் படி ஆராதனா வின் சொத்துக்கள் மற்றும் சந்திரிகாவின் நகைகள் அனைத்தும் தன் அண்ணன் சூரிய நாதன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அந்த சொத்துக்கள் மற்றும் நகைகள் அனைத்தும் ஆராதனாவின் 21 வயதில் அவளை சேரும்.
அதுவரை 3 வீட்டின் வாடகையும், நிலத்தை தன் அண்ணன் தன் சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அதை குத்தகைக்கு விட்டு வரும் பணத்தை தன் அண்ணன் உபயோகித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார் ஆராதனாவை அவள் விருப்பப்பட்ட பட்டப் படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது ஒரே கோரிக்கையாக இருந்தது.
இதன்மூலம் ஏழு வருட வாடகை பணம் குத்தகை பணம் அனைத்தும் சேர்த்து கணிசமாக வரும் தொகையின் மூலம் தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கலாம் என்றுதான் யசோதா இதற்கு ஒப்புக்கொண்டார், மற்ற நேரங்களில் ஆராதனா விற்கு சில அறிவுரைகளை வழங்க தவறவில்லை சந்திரிக்கா , அத்தை மாமா மனம் நோகாமல் நடக்கும் படியும் முக்கியமாக அத்தையின் மனம் நோகாமல் அவர் என்ன வேலை கொடுத்தாலும் செய்யும்படியும் கூறினார். தன் அண்ணனுக்கும் அவர் மனைவிக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பது அவரது வேண்டுகோள் ஆகவே இருந்தது , படிப்பை மட்டும் எந்த காரணத்திற்காகவும் விடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.
இப்படியாக தன் மகள் படிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொண்டார். ஒருநாள் தூக்கத்திலேயே தன் கடமை முடிந்துவிட்டது என்று இறந்தும் போயிருந்தார் அதன்பிறகு ஆராதனா வின் வாசம் அத்தை வீடு என்றானது.

சூரிய நாதன் மற்றும் யசோதா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் மகன் ராஜேஷ் மற்றும் மகள் சஞ்சனா. ராஜேஷ் வெளிநாட்டில் மருத்துவம் படித்து கொண்டிருந்தான் , சஞ்சனா பட்டப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்

ஆராதனா வின் மாமன் சூரிய நாதன் அதிகம் பாசம் காட்டுவதில்லை என்றாலும் அவளை நல்லபடியாகவே பார்த்துக்கொண்டார் யசொதாவும் அப்படியே கணவருக்கு சற்று பயந்தவர் என்றாலும் தன் குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஆராதனா இரண்டாம்பட்சம்தான் மற்றபடி தாய் சொல்லை தட்டாமல் யசோதா கூறும் வேலை அனைத்தையும் எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் செய்துவிடுவதால் அவள் வாசம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக சென்றது.

கால் மணி நேரம் தாமதமாக வந்த பேருந்தில் ஏறி கொண்டு "போச்சு போச்சு இன்னைக்கு என்ன என்ன சொல்ல போறாங்களோ தெரியல"என்று அமர்ந்திருந்தாள் ஆராதனா.

என்னதான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேகமாக நடந்து வந்து இருந்தாலும் எப்போதும் வரும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க
“ஆராதனா” என்று நிறுத்தி இருந்தார்
“ஏன் லேட்டு” என்ற கேள்வியுடன்
"இன்னைக்கு ப்ராஜெக்ட் முடிய கடைசிநாள் அத்த அதனால்தான் லேட்"

"பெண்பிள்ளை நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு தெரியாதா எத்தனை தடவை சொல்லிருக்கேன்"
"சாரி அத்தை இனிமேல் லேட்டா வரமாட்டேன்"

" நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா தாயில்லாத பிள்ளையை நான் தான் சரியா வளர்க்களன்னு ஊர்ல எல்லாம் பேசுவாங்க,"

" சாரி அத்தை"

" என்னமோ பண்ணு போ போய் எனக்கும் சஞ்சனாவுக்கும் காபி எடுத்துட்டு வா"

அவசர அவசரமாகஅடுப்பில் பாலை வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்து இருவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுக்க,

" நீ போய் இருக்க பாத்திரத்தை தேச்சுட்டு, சப்பாத்திக்கு மாவு பிசைந்து அப்படியே குருமா வுக்கு உருளைக்கிழங்கும் வெட்டி வச்சுடு"

" ம்ம்.."

சூரிய நாதனைப் பொருத்தவரை மனைவி சமையல் தான் அவருக்கு விருப்பம் அதனால் சமையல் மட்டும் யசோதா செய்வார், மற்ற வேலைகள் அனைத்தும் ஆராதனாவின்டையது.

இரவு எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தன் அறைக்கு வந்திருந்தாள், ஆராதனாவிற்கு வாசலை ஒட்டியுள்ள கெஸ்ட் ரூமை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள்,
குளித்துவிட்டு படுக்கும்போது ஆராதனா விற்கு கண்ணைக்கரித்துக் கொண்டு வந்தது உடலில் உள்ள சோர்வை விட மன சோர்வு அதிகமாக இருந்தது,
"எனக்கு மட்டும் ஓய்வே இருக்காதா" என்று

இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து வீட்டின் வேலை அனைத்தும் இவளது என்றானது. ஆராதனா விற்கு உணவைத் தவிர தின்பண்டங்கள் போன்றவை எதுவும் கொடுப்பதில்லை,
சூரிய நாதன் குடும்பமாக ஹோட்டல் டூர் என்று அடிக்கடி வெளியில் சென்றாலும் ஆராதனைவை என்றுமே அழைத்து சென்றதில்லை….வீட்டைப் பார்த்துக்கொள்ள யாராவது இருக்க வேண்டும் என்று கூறி நிறுத்திவிடுவார் யசோதா.

இங்கு வந்த புதிதில் இவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும் போகப் போக பழகி விட்டது சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள நிறையபேர் இருந்தாலும் தனிமை மட்டுமே இவளுக்கு சொந்தமாக போனது

"என்ன வாழ்க்கை இது இப்படி ஒரு வாழ்க்கை எதற்கு யாருக்காக வாழ வேண்டும்" என்று அடிக்கடி தோன்றும் ஆராதனாவிற்கு அழுதுகொண்டே படுத்திருந்தவளை நித்திரா தேவி ஆரத் தழுவிக் கொண்டது.

அடுத்த அத்தியாயத்தில் நம் கதையின் நாயகனை பற்றி பார்க்கலாம்.

தொடரும்…..
 
Nirmala vandhachu ???
Nalla irrukku pa ???
 
என்ன அநியாயம் அவ காசகுல
வாழும் போதே இப்படி
இருக்காங்க
இனி நாயகன் அவன் யாரு

??
 
Top