அத்தியாயம் 1.1

Advertisement

Arpitha

New member
Member
சூரியன் இவன் ஒருவன் தானே, பூமி உருவாகி பல மாற்றங்களை கண்டு, உருவில் மாறி, வடிவில் மாறி இன்று இருக்கும் நிலைக்கு வரும் வரை அது கண்ட அத்துணை தூயருக்கும் ஒற்றை சாட்சியாலன்

அவன் பூமிக்கு மட்டும் இல்லை, பூமியில் நிலை கொண்ட உயிர்கள் அனைத்திற்குமே அவன் ஒருவனே கண் கண்ட தேவனும் அறக்கணும். அவன் அறியா மாற்றம் இவ்வுலகில் எதுவுமே நிகழ்ந்தது இல்லை

அன்று யாழி வாழ்வை மாற்றிய பொழுதை கூட அவன் நினைவில் கொண்டே இருந்ததால் தான், இன்று இதோ அழகிய விடியலில் கூட அமைதி காத்து, இதமாய், மென்மையாய் அவளின் வீட்டு ஜன்னல் வழியே எட்டி பார்க்க ஆயத்தம் ஆகி காத்திருந்த அதிகாலை நேரம் அது

அதிகாலைச் சூரியனின் இளங்கதிர்கள் ஜன்னல் திரைச்சீலைகளின் இடுக்கு வழியாகப் புகுந்து, யாழி மூடிய இமைகளின் மேல் நடனமாடின. அவளை கண் விழிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இன்று அதிகமாய் இருந்தது

கண் விழிக்கும் அவள் என்ன கேட்பாள்! யாரை தேடுவாள்! இரவு முழுதும் அவள் கால் அருகே தவம் கிடக்கும் அவனிடம் என்ன பேசுவாள்!! இதை தெரிந்து கொள்ள அத்துணை ஆர்வம் சூரியனுக்கு

ஆனால்,கண் விழித்தவளுக்குகோ,அந்த விடியல் ஒரு பெரும் புதிராகத் தெரிந்தது. எதை பார்த்தாலும் ஆச்சர்யம் அவளின் விழியில் தெரிந்து மறைந்தது .சுவர்கள் பூசப்பட்டிருந்த மென்மையான இளஞ்சிவப்பு நிறம், அறையின் மூலையில் இருந்த நறுமணம் வீசும் மெழுகுவர்த்திகள், அலமாரியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்—எதுவுமே அவளுடைய நினைவடுக்கில் இல்லை. அவளது இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

இது தன் அறையா? தான் இப்போது எங்கே இருக்கிறோம்?“ யோசித்தாவலுக்கு அவளின் நினைவு தான் கை கொடுக்காமல் போயிருந்தது

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள், தன் கைகளைப் பார்த்தாள். இடது கை மோதிர விரலில் ஒரு மெல்லிய வைரம் பதித்த மோதிரம் மின்னியது. ஏனோ அதை பார்த்த நொடி மனத்துல் ஓரு நெருடல் வந்து மீண்டு,அதை தழுவி பார்க்க உந்திய மனதையும் மீறிகுழம்பியது அவளின் மூளை

“நான் யார்?" என்ற கேள்வி அவள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. பயத்தில் மூச்சுத் திணறியவள், கட்டிலை விட்டு இறங்க முயன்றபோது, அறையின் மூலையில் இருந்த ஒரு மர நாற்காலியில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

யார் இவன்?“ அடுத்த கேள்வியை எழுப்பியது அவளின் மூளை

தான் இருக்கும் அறையில் ஓரு ஆணா!” பயம் தன் முதலில் வந்தது அவளுக்கு.பதறினாலும் அவனை மேலும் உற்று கவனிக்க துவங்கினாள் அவள்

அவன் கைகளில் ஒரு சிறிய கருப்பு நிற டைரி இருந்தது. இவளின் அசைவு கண்டு அவனும் தன் நாற்காலியில் இருந்து எழுந்து அமர்ந்தான்.அவன் கண்கள் சிவந்து காணப்பட்டன, உறக்கமில்லாத இரவு அவனது முகத்தில் சோர்வைத் தந்திருந்தது. ஆனாலும், அவளைப் பார்த்தவுடன் அவனது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"காலை வணக்கம் யாழி“,என்றான் உச்சகமாய்.அவன் குரலில் ஒரு ஆழமான நடுக்கம் இருந்தபோதிலும், கண்கள் எல்லையற்ற அன்பைச் சிந்தின.

யாழி பயத்துடன் போர்வையை மார்போடு அணைத்துக் கொண்டு பின்வாங்கினாள். அவள் மொத்தமும் நடுங்கவே ஆரம்பித்து இருந்தது.மிகவும் முயன்று,

“யார்... யார் நீங்க”
“என் அறைக்குள் எப்படி வந்தீங்க?
”நான் ஏன் இங்கே இருக்கேன்?“என்று அடுக்கடுக்கான கேள்விகளை நடுங்கும் குரலில் கேட்டாள்.

சூர்யாவிற்கு பழகிப்போன ஒரு வலியைத் தன் இதயத்திற்குள் ஒளித்துக்கொண்டான். இவள் இதை தான் முதலில் கேட்பாள் என்பது தெரிந்தே காத்திருந்த சூர்யாவிற்கு, தன்னை அவள் பெயர் சொல்லி அழைக்க மாட்டாளா என்ற ஏக்கம் இன்றும் நிராசையாகி,தினம் கேட்கும் அதே கேள்வியை கேட்டாள் அவள்

இது அவனது தினசரி சடங்கு. ஒவ்வொரு காலையும் அவன் காதலிக்கும் பெண் அவனை ஒரு அந்நியனாக, ஒருவேளை ஒரு குற்றவாளியாகக் கூடப் பார்ப்பாள். அனைத்தும் பழகி போன அவனோ, எப்பொழுதும் போல நிதானத்தையே இன்றும் காட்டினான்.அவன் மெதுவாக எழுந்து, அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்று கைகளை உயர்த்தி,

“பயப்படாதே யாழி . என் பெயர் சூர்யா.நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன். என்னால் உனக்கு எந்த ஆபத்தும் வராது.நான் உன்னுடைய... உன்னுடைய மிக நெருங்கிய நண்பன்," என்றான்.

“காதலன்' என்று சொல்ல அவனது நாக்கு தவித்தது, ஆனால் அந்த வார்த்தை இப்போது அவளை இன்னும் பயமுறுத்தும் என்று அவனுக்குத் தெரியும்.அதானேலேயே அதை தனுள் விழுங்கி கொண்டான்...எப்போதும் போல

அவன் மேஜை மீது இருந்த அந்த டைரியை அவளிடம் நீட்டினான். "இந்த டைரியைத் திறந்து முதல் பக்கத்தைப் படி. இது உன்னுடைய கையெழுத்துதான். உனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, அதன் விளைவாக நீ ஒவ்வொரு நாளும் உன் நினைவுகளை இழந்துடுவ..ஆனால் இந்த டைரி உனக்கு உண்மையைச் சொல்லும்.நீ மறந்துட கூடாதுனு உனக்கு நீயே எழுதி வெச்சிக்கிற நினைவு படலம். பிடி படிச்சி பாரு ," என்றான், டைரியை நீட்டிய படி

யாழி அப்போதும் குழம்பி,சந்தேகத்துடன் அந்த டைரியைப் பெற்றாள். முதல் பக்கத்தில் அவளது அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது:

“யாழினி,நீ இன்று விழிக்கும்போது உனக்கு எதுவும் நினைவிருக்காது. ஆனால் உன் முன்னே நிற்கும் சூர்யா என்பவன் தான் உன் உலகம். அவன் சொல்வதைக் கேள். அவனை நீ முழுதாய் நம்பலாம். அவன் உனக்காகத் தன் உயிரையே கொடுப்பான். இன்றைய நாளில் அவன் நம் காதலை நிச்சயம் உணர வைப்பான்“

அந்த வரிகளைப் படித்ததும் அனன்யாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. அந்த எழுத்துக்கள் அவளுள் சிறு தளர்வை ஏற்படுத்தியது..ஒரு அந்நியனைப் பற்றித் தானாவே இப்படி எழுதியிருக்கிறோம் என்றால், இவன் யாராக இருக்கும்? தினம் மறக்கும் வியாதி தனக்கு எப்படி ஏற்பட்டது? அப்போ தினமும் காலையில் இவன் நமக்காய் காத்திருப்பானா! இவனை நான் கதலிதேனா!!“ ஓரு புறம் குழப்பமும் மறு புறம் அதிர்வும் அவளுள் அலையாய் எழுந்தது.

யாழி டைரியைப் படித்து முடித்ததும் ஓரளவிற்கு அமைதியானாள். சூர்யா அவளுக்குக் காபி தயாரித்துக் கொடுத்தான்.

இன்று உனக்கு இது புது நாள் யாழி.எல்லாமே புதுசா தான் இருக்கும்.பட் நான் எல்லாமே உனக்கு எஸ்பிளான் பண்றேன்.பயப்படாதே.“ என்ற படி காபியை நீட்டினான் அவன்

காபி குடிக்கும் அந்த சிறு பொழுதில் பல கேள்விகளைதன்னுள் எழுப்பி பதில் தேட முயன்று கொண்டு இருந்தாள்.அதிலும்

நான் தினம் எல்லாத்தையும் மறந்து போறேனா,இவன் எதுக்கு என் கூடபே இருக்கான்? என்னை விட்டு ஏன் போகல? வேறு எதுவும் ஆதாயம் என் கிட்ட இருக்குமா? இல்லை காதல் மட்டுமே இவனோட ஒற்றை ஆதாயமா?” யோசிக்கும் அவளின் மன போக்கை உணர்ந்த சூர்யா,

உனக்கு கடற்கரை என்றால் மிகவும் பிடிக்கும் தானே,நாம அங்க போலாமா? உன் கேள்விகளுக்க்கு பதில் அங்க இருக்கோ என்னவோ?“ நிதானமாய் கேட்டான் சூர்யா

யாழி மெதுவாகத் தலையாட்டினாள். இல்லை இல்லை, அதுவே ஆடியது .அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், சூர்யா கண்களில் தெரிந்த நேர்மையும் கருணையும் அவளைச் சற்றே நிம்மதியடையச் செய்தன.

பொம்மை போல அவன் கூறுவதை கேட்டாள் யாழி.அவர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றனர். அங்காவது அன்றைய நினைவுகள் அவளுள் மீண்டும் தூண்ட பட்டு,இந்த அக்னி பரீட்சை தனக்கு முடிவுக்கு வராதா என்ற ஏக்கத்தில் அவளை அங்கி கூட்டி சென்றான் அவன்

அலைகள் கரையைத் தொட்டுச் செல்லும் அழகை யாழி முதல் முறையாகப் பார்ப்பது போலப் பிரமிப்புடன் ரசித்தாள். மணலில் அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சூர்யா பேசத் தொடங்கினான்.

“நம்ப காதல் கதை தெரிஞ்சிக்க உனக்கு விருப்பம் இல்லையா யாழி?"கேட்டான் யாழியின் பதில் எதிர்பார்த்து


நானே கேக்க நினைத்தேன்,பட் எப்படி கேக்குறதுனு ஓரு தயக்கம்.சொல்லுங்களேன்... எனக்குக் கேட்க ஆசையாக இருக்கிறது."என்றாள் ஆர்வத்துடன்

ஒன்னு தெரியுமா உனக்கும் எனக்கும் இருக்க பொதுவான இணைய்ப்பே இந்த கடல் தான். உனக்கும் சரி எனக்கும் சரி மனசு சரி இல்லைனாலோ, இல்லை, மனத்தோட கஷ்டத்தை அழுது தீர்க்க இந்த கடல் தான் வடிக்காலா இருந்து இருக்கு

நான் ஓரு அரசு தேர்வுக்கு ஓரு வருஷமா படிச்சி போராடிக்கிட்டு இருந்த நேரம் அது. அப்போதான் என் துயரத்தை கடல் கிட்ட கத்தி சொல்லி அழுதுட்டு இருந்தேன்..என் அழுக்குறள் கடலுக்கு கேட்டுச்சோ இல்லையே, படகுக்கு பின்னாடி உக்காந்து அழுதுட்டு இருந்த உனக்கு கேட்டுச்சு.. உனக்குமே அப்போதான் அப்பா இறந்து போயிருந்தார்.. அந்த துயரை குறைக்க தான் இங்க வந்து அழுதுட்டு இருந்த

என் குரல் கேட்டு படகு பின்னாடி இருந்து எழுந்து வந்த உன் கண்ணுலயும் கண்ணீர் என் கண்ணுலயும் கண்ணீர். சில நொடிகள் அந்த கண்ணீர் மட்டுமே பேசிக்குச்சி..நம்ப ரெண்டு பேருமே அமைதியா ஒருவரை ஒருத்தர் பாத்துகிட்டு நின்னு இருந்தோம்

பித்தம் தெளிஞ்ச மாதிரி நான் வேறு பக்கம் பாத்து நடக்க எத்தனைத்த அப்போ,

சார்“ அப்டினு நீ கூப்பிட ,நான் திரும்பம அப்டியே நின்னு இருந்தேன்

எல்லாம் சரி ஆகிடும்..நீங்க ஆசை படுற எல்லாமே உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கும்-ன்னு சொல்லிட்டு நீ நிக்காம போயிட்ட

எதோ இந்த பிரபஞ்சமே எனக்கு இந்த செய்தியை சொன்னது போல ஓரு நிம்மதி எனக்கு..அதே வேகத்துல நான் படிக்க ஆரம்பிச்சேன்

சுமார் இரண்டு வருஷம் இருக்கும்..இதோ இதேகடற்கரை தான்.. ஒரு மாதிரி அந்தி சாயும் வேலையில, ரொம்பவே சந்தோசமா இந்த கடல் கிட்ட நான் வந்து இருந்தேன்

நான் அந்த எக்ஸாம்ல பாஸ் ஆகி இருந்தேன்.. ஏனோ அன்னைக்கு உன்னை பாத்து அந்த சந்தோசத்தை சொல்லணும்னு தோணுச்சு..பட் நீ யார்?எங்க இருக்க? எதுவுமே தெரியாம போனதால அமைதியா இருந்தேன்

ஆனா இந்த கடல் உன்னை என் கிட்ட கொண்டு வந்து சேர்த்துச்சு..சந்தோசமா வந்த என் கண்ணுல, கடலில் கால் நினைத்து குழந்தைங்க கூட விளையாடினா நீ பட்ட

வரம் தந்த சாமியே கண் முன்னாடி வந்தது போல ஓரு பூரிப்பு எனக்கு..ஆனா உன் கிட்ட வந்து பேச ஓரு தயக்கம்..என் சந்தோசத்தை பகிர்ந்துக்க முடியாம நான் இருந்த அப்போ நீயே என் கிட்ட வந்து,

என்ன சார்? சந்தோசம் முகத்துல மின்னுது.. ஆச பட்டது கிடைச்சிடுச்சி போல“ -ன்னு சொன்ன உனை கட்டி அணைத்து எல்லாம் சொல்லணும் போல இருந்துச்சி..பட் அமைதியாய் இருந்துட்டேன்

அதுல இருந்து தான் நான் நட்பு வளர்ந்து, காதலாகி திருமணம் வரைக்கும் போயிருக்கு

நமக்குள்ள இருக்குறது காதல்ன்னு சொல்றதை விட,இது ஓரு தோழமை, என்ன ஆனாலும் இவ நமக்கு கூட இருப்பாடான்ற நம்பிக்கை

இவ கூட இருந்த நமக்கு கெட்ட விஷயம் எதுவும் நடக்காதுன்ற நம்பிக்கை. .அன்னைல இருந்து இதோ இன்னைக்கு வரைக்கும் எனக்கு தோல் கொடுத்து ஆதரவா நின்னுகிட்டு இருக்க

பேசியவன் எப்போது தன் தோல் மேல் சாந்தானோ கவனிக்க கூட இல்லை யாழினி.. அவனின், அவர்களின் காதல் கதையில் முற்றிலும் மூழ்கியவலுக்கு,இப்பொது அவன் தோல் மேல் சாய்ந்து இருப்பது நினைவை மீட்கா விட்டாலும், அவனின் ஸ்பரிசம் அவளுள் நம்பிக்கையை கொடுத்தது..தன்னவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது

அது தந்த உணர்வை உணர்த்தவள், கண்ணில் நீர் கோர்த்து விக்கிது நின்று போனால்..அதை கவனித்தால் சூர்யா

ஹே லூசு ..நான் ஓரு ப்லொவ்ல சொல்லிட்டேன்..உனக்கு என்ன ஆனாலும் நான் உன்னை விட்டு போற மாதிரி எல்லாம் இல்லை..உடும்பு மாதிரி உன்னை எப்போதும் நெஞ்சுல அனைத்த படி தான் இருப்பேன்“ என்றவன் அவளை தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டு அமைதியை தேடினான்

அவளுமே காலையில் இருந்த குழப்ப நிலை மாறி, மனம் அமைதியாகி, முகம் மலர்ந்து சிரிக்க துவங்கி இருந்தாள். சூர்யாவை உணர துவங்கி இருந்தாள்

இந்த உணர்வில் லயித்து போயிருந்தவளோ,மாலையில் சூரியன் செந்நிறமாக மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்த யாழியின் முகம் மெல்ல வாடியது. டைரியில் படித்த விஷயங்கள் அவளுக்கு நினைவுக்கு வந்தன.

இன்னும் சில மணி நேரங்களில் அவள் உறங்கிவிடுவாள், மீண்டும் விழிக்கும்போது இந்தக் சூர்யாவையும், இந்தப் பொன்னிற மாலையும், அவளது சிரிப்பும் அனைத்தையும் அவள் மறந்துவிடுவாள்.

"சூர்யா... எனக்கு பயமாக இருக்கு ," என்றாள் யாழி , அவன் கைகளைப் பற்றிக் கொண்டு. அவளது விரல்கள் நடுங்கின.

கவின் அவளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டான். "எதுக்கு பயப்படுற அம்மு..நான் எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன்..பயப்படாதே“உறுதி அழைத்தான் அவன்

"இல்லை சூர்யா... நான் உன்னை மறந்துடுவேன். நாளை காலை நான் மறுபடியும் உன்னை ஒரு அந்நியனாகப் பார்த்து பயப்படுவேன். நீ என் மேல் இவ்வளவு அன்பு வெச்சி இருக்க, ஆனால் என்னால் அதைத் தக்க வெச்சிக்க முடியல . நான் உனக்கு ஒரு சுமையாக இல்லையா?" என்று கூறி விம்மி அழுதாள்.

சூர்யா அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவள் கண்களை நேராகப் பார்த்தான்.

“யாழி , இது நான் உனக்கு கொடுத்து இருக்க வாழ்நாள் வாக்குறுதி..நீ தினம் எழுந்து என்னை மறந்தாலும்,தினம் நான் உன்னை காதலில் மூழ்கிடிப்பேன்..உன்னை விட்டு செல்லும் எண்ணம் எனக்கு ஓரு பொழுதும் இல்லை”

அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர். இரவு உணவு முடிந்து யாழி படுக்கைக்குச் சென்றாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. சூர்யா அவள் அருகிலேயே அமர்ந்து அவளுக்குப் பிடித்தமான ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல அவளது இமைகள் மூடின. உறக்கத்தின் பிடியில் அவள் நழுவும்போது,

“சூர்யா ... நாளைக்கும் என் கூடவே இரு..நான் பாக்குற முதல் முகம் நீயா தான் இருக்கனும்..." என்று முணுமுணுத்தாள்.

சூர்யா அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு,

“நிச்சயமாக அம்மு ," என்றான். அவள் உறங்கிய பின், சூர்யா அந்த டைரியை எடுத்து இன்றைய நினைவுகளை எழுதத் தொடங்கினான். அவனது கண்கள் கலங்கின. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காதலைத் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் யாழினிக்காக அவன் எதையும் செய்யத் துணிந்திருந்தான்.

'நாள் 1: இன்றும் அவள் என்னைக் காதலித்தாள். நாளை மீண்டும் அவளைக் கவரப் புதிய வழிகளைத் தேடுவேன்.' என்று எழுதிவிட்டு விளக்கை அணைத்தான்.
 

Advertisement

Advertisement

Back
Top