Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 3

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 3

அழகான தாமரை குளத்தை கண்டவனின் ஆழ்மனம் ஏனோ அங்கே செல்ல உந்த மனதின் வேட்கை தாளாமல் ஆடவனும் அங்கே சென்றான்.

அக்குளத்தில் அழகான தாமரை பூக்கள் ஆங்காங்கே பசுமையின் நடுவே வண்ணமாய் தெரிய அதன் அழகில் மயங்கியவனுக்கு சுற்றம் எதுவும் சுத்தமாய் புரியவில்லை.

அந்த மலர்களின் அழகில் மயங்கியவனின் காதுகளில் ரீங்காரமாய் சலங்கை சத்தம் கேட்க அவனின் மன உணர்வு நீந்த சொல்ல நீந்தியவனின் கண் முன்னே பெண் மயில் ஒன்று அழகாய் தன் அங்கங்களை வளைத்து நடனமாடி கொண்டிருந்தது.

மயில்களும் குயில்களும் ரீங்காரமிடும் சோலையில் மரகதபுறாவின் இனிய நாதமாய் பொன் சிலை மேனியாள் ஆடி கொண்டிருந்தாள் மாந்தளிர் மேனியாள்.

அங்கிருந்த அலைபேசியில் பாரதியாரின் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதற்கேற்ப தன் அங்கத்தையும் விழி அசைவையும் வீசிக் கொண்டிருந்தாள் வசந்தமயில்.

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.. வஞ்சியவளின் பார்வை வீச்சில் வஞ்சகன் சாய்ந்தது என்னவோ உண்மையோ.

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே.. பொன்னிற மேனியாளின் வண்ணம் எங்கும் கண்ணன் அவனின் வர்ணத்தில் சேர்த்ததுவோ..

மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்
எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா..
மாறனின் வசிய அம்புகள் நெஞ்சில் வாரி இறைத்ததுவோ..

ஏனோ அந்த பாடலுக்கு நடனமாடிய நாட்டிய நங்கையை ஆடவனுக்கு சற்று பிடித்து தான் போனது.

அவளின் அஞ்சனம் பூசிய கொஞ்சும் விழிகளும் வரிகளுக்கேற்ப அங்க அசைவுகளும் ஆடவனை பித்தம் கொள்ள செய்தது.

அவனையே அறியாமல் பெண்ணவளை பார்த்திருந்தான்.. அவளையே ஆக்கிரமித்திருந்த அவனின் சிந்தையை கலைத்தது என்னவோ சற்று தூரத்தில் கேட்ட ஒரு இளம்பெண்ணின் குரலில் தான்.

"அடியே மாது அங்கே தாத்தா தேடுறாங்க டி உன்னை.." என்றபடி ஒரு தாவணி பெண் அங்கே நடனமாடிய நாட்டிய மங்கையை அழைத்து கொண்டு சென்றாள்.

அவள் சென்ற பின்பு சிந்தை தெளிந்தவன், "ச்சீய் என்ன இது ஒரு பெண்ணை போய் இப்படி பாக்குறேன்.. இவ என்ன இந்த உலக அழகியா.. எத்தனையோ அழகான பெண்களை பாத்துருக்கேன்.. ஆனா யாரையும் இவளை பார்த்தது போல பாக்கலையே.. ஆமா இந்த பொண்ணு இந்த ஊரு தானா.. அப்படின்னா தாத்தாகிட்ட பேச சொல்லனும்.. என்ற நினைவுடன் அங்கிருந்து சென்றவன் தன் தாத்தாவின் வீட்டிற்கு சொன்றவன் நினைக்கவில்லை யாரை சிறு வயதிலிருந்து எதிரியாய் நினைத்தானோ இன்று அந்த பெண்ணை தான் பார்த்து நின்றது என அறியவில்லை.. அறிந்தாள் பெண்ணவளின் நிலை என்னவோ காலத்தின் கைகளில்.

இங்கே வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது என்னவோ மெல்லிய கொலுசின் ஒலி தான்.

அந்த கொலுசொலியை கேட்டு கொண்டு வந்தவனின் நினைவில், "ஓஓ அந்த பிசாசு வீட்ல தான் இருக்காளா என்ன.. சீக்கிரம் தாத்தா பாட்டியை பாத்துட்டு போயிடனும்.." என்ற நினைவுடன் உள்ளே வந்தவனின் நெஞ்சினில் விழுந்தது பூங்கொடி தேகம் ஒன்று.


தன் மேல் விழுந்த மலர் மாலையை கீழே விடாமல் இறுக்கி பிடித்தவன் அவளை நேரடியாய் நிற்க வைத்தவன் அவளின் முகத்தை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ ஒரு விநாடி தான்.

அடுத்த நொடியே தன்னை மீட்டவன் முகத்தில் கோபத்தை கொண்டு,

"ஏய் பாத்து வரமாட்டியா.. இப்படி மேல வந்து விழற.. இடியட் அறிவு இல்லை.." என்றவன் அவன் போக்கில் திட்டி கொண்டு செல்ல அவளின் கண்களோ கண்ணீர் குளத்தை சுமந்திருந்தது.

அவளின் அழுகையும் அவனின் கோபத்தை அதிகப்படுத்த, "ஏய் ச்சீய் எதுக்குடி இப்படி அழற.. என்ன அழுது சீன் போடுறீயா.. உன்னை நல்லவளா காட்டிக்க.." என்றான் கோபம் தாளாமல்.

அதில் மேலும் பயந்தவள் தன் அஞ்சன விழிகளை பயத்துடன் இறுக மூடிக் கொண்டாள்.. அவன் திட்டியும் அழுவதை நிறுத்தாமல் இருக்க அவனின் கோபம் ஆக்ரோஷமாய் மாற,

"ஏய் இப்போ அழறதை நிறுத்துறியா இல்லையா.." என கத்த அவளின் அழுகை அப்போதும் நிற்காமல் இருக்க அதில் ஆடவனின் கோபம் அதிகமாக ஏய்.. என்று கத்தலினூடே அடிக்க கையை ஓங்கியவனின் காதுகளில் சிபி என்று பதட்டமாய் ஒரு குரல் கேட்க ஆற்றாமை தாளாமல் தன் கையை கீழிறிக்கினான்.

"சிபி என்ன பண்ண இருந்த.. அவ சின்ன பொண்ணு டா.. இப்படி கோபமா பேசுனாளே அவ பயப்படுவா.. ஆனா நீ அவளை கை நீட்டி அடிக்க போற.. அம்மாடி மாது இங்கே பாருடா இவனோட கோபத்தை தான் நான் உனக்கு சொல்லிருக்கேன் இல்லை.. நம்மோட சிபி தாண்டா.." பேரனிடம் தாண்டிய தாட்சாயினி மாதுவிடம் மென்மையாய் பேசினார்.

தன்னிடம் கோபத்தை காட்டும் தனது பாட்டி யாரோ ஒரு பெண்ணிடம் மென்மையாய் பேசுவதும் ஆடவனுக்குள் கோபத்தை கிளப்பியது.

" பாட்டி உங்க பேரன் இத்தனை மாசம் கழிச்சி வந்துருக்கேன்.. ஆனா நீங்க அவளை கொஞ்சிட்டு இருக்கீங்க.. உங்களை பாசமா பாக்க வந்தா இப்படித்தான் என்னை ட்ரீட் பண்ணுவீங்களா.." என்றான் ஆத்திரமாய்.

டேய் நீ என்னோட பேரன் டா.. இந்த வீட்டோட வாரிசு.. இந்த வீட்டுக்கு நீ வர்றதுக்கு யாரோட அனுமதியும் தேவை இல்லை.. போ போய் உங்க தாத்தாவை பாரு.. அம்மாடி மாது வாமா போலாம்.." அவனிடம் சண்டைக்கு சென்றவர் மாந்தளிரை கைத்தாங்கலாய் அழைத்து கொண்டு சென்றார்.

அதை கண்டவனுக்கு கோபம் தலைக்கேற ஷீட் என்று கால்களால் உதைத்துக் கொண்டு தனது தாத்தாவை பார்க்க சென்றான்.

அன்று வந்த சிபி அதற்கடுத்த ஒரு வாரமும் அங்கே தான் இருந்தான்.. அவன் இருந்தது ஆச்சர்யமளித்தாலும் தங்களின் பேரன் நீண்ட நெடிய வருடத்திற்கு பிறகு இருக்கிறானே என்ற சந்தோஷமே பெரியவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.

ஆனால் அங்கிருந்த அந்த ஒரு வாரத்தில் சிபியின் கண் முன்னே மாந்தளிரை கொஞ்சிய பெரியவர்களை ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தவனுக்கு சற்று நிறைவை தந்த விஷயம் அந்த பெரிய அரண்மனையில் மாந்தளிர் தங்கியதில்லை.

அந்த அரண்மனையின் பக்கத்தில் உள்ள சிறிய ஓட்டு வீட்டில் தான் அவளின் இரவு ஜாகை ஆனது.. அதனால் பெரிதாக எதுவும் பிரச்சனை ஆகவில்லை.

அவன் வந்த ஆறாம் நாள் சிபி அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

அன்று பௌர்னமி நிறைந்த வெள்ளி கிழமை.. எப்பொழுதும் தாட்சாயினி விரதமிருந்து இரவு பௌர்னமி நிலவை வணங்கி விட்டு தன் விரதத்தை முடிப்பார்.. அவருடன் சேர்ந்து மாந்தளிரும் விரதமிருப்பாள்.

இருவரும் வீட்டு ஆண்களுக்கு காலை உணவை சமைத்து கொடுத்து விட்டு பெண்கள் இருவரும் விரதமிருக்க அந்தியில் கோவிலுக்கு சென்ற மாந்தளிர் அங்கே நடந்த நிகழ்வை கண்டவள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.

ஆம் அங்கே முகமெங்கும் சிவந்த நிலையில் சிபி ஒரு போட்டு அடித்து கொண்டிருந்தான்.. அடி வாங்கி கொண்டிருந்தவனின் உயிர் போகும் நிலையை தாண்டியும் சற்றும் தன் கோபத்தை குறைக்காமல் அடித்து துவைத்து கொண்டிருந்தான் சிபி.

அதை பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் நா எழவில்லை.. ஒரு மனிதன் தன் சக மனிதனை இப்படி அடித்து துன்புறுத்துவது கொலை செய்வதற்கு சமம் அவளைப் பொறுத்தவரையில்.. அதுவும் ஒருவன் உயிர் போக அடிப்பது ஒருவனின் உயிரை கொல்லது மகாபாவம்.

அதுதான் மாந்தளிருக்கு அடிவாங்கியவனின் மேல் பரிதாபம் ஏற்பட அடிப்பவனை தடுத்து நிறுத்த முடியாமல் தவித்தவளுக்கு ஒரு கட்டத்தில் அந்த உதிர துளிகளை பார்த்ததும் ஆஆஆ என்ற அலறலுடன் மயங்கி சரிந்தாள்.

அவளின் சத்தம் கேட்டவன் அடித்து கொண்டிருந்தவனை விட்டு அவள் புறம் திரும்புவதற்குள் அவள் மயங்கி கீழே சரிந்திருந்தாள்.. அவளை அந்த நிலையில் கண்டதும் ஏனோ அவனின் உடல் துடிக்க வேகமாய் அவளருகில் வந்தவன் அவளை தன் கரங்களில் ஏந்தி கொண்டு வீட்டிற்கு சென்றான்.. வீட்டிற்கு செல்லும் வழியிலே மருத்துவருக்கு தகவல் கொடுத்தவன் அவளை திரும்பி பார்த்தபடியே வீட்டிற்கு சென்றான்.

அவளை அந்த நிலையில் கண்ட பெரியவர்கள், "சிபி மாதுக்கு என்னாச்சி பா.." என்று படபடப்புடன் அவளருகில் சென்றனர்.

ஆடவனோ அவர்களிடம் எதுவும் கூறாமல், "பாட்டி டாக்டர் வர்றாங்க.. பழனியை அழைச்சிட்டு வர சொல்லுங்க.." என்றவன் அவளை படுக்கையில் படுக்க வைத்தவன் வேகமாய் அங்கிருந்த மின்விசிறியை ஓட விட்டான்.

பெரியவர்கள் இருவருக்கும் பதட்டம் இருந்தாலும் தங்களின் பேரனின் முகத்தில் கண்ட ஏதோ இனம் புரியாத உணர்வு வாழ்ந்தவர்களுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.. ஆனால் அது என்னவென்று அவனிடம் அந்த நேரத்தில் கேட்கவில்லை.

சற்று நேரத்தில் அங்கே வந்த பெண் மருத்தவர் மாந்தளிரை சோதித்து பார்க்க அதற்குள்ளாகவே ஆடவனுக்குள் பய பந்து உருள ஆரம்பித்தது.. அதன் காரணமும் அவனுக்கு விளங்கவில்லை.. இதுவரை அவனுள் பயம் என்ற ஒன்று இருந்ததில்லை.. ஆனால் அவனுக்கு பயத்தை காட்டி கொண்டிருக்கிறாள் மென்மை மனம் படைத்த வித்தகி.

அவளை பரிசோதித்த மருத்தவர் சிபியிடம் திரும்பி, "சிபி ரொம்ப அதிர்ச்சியில தான் மயக்கமாகியிருக்காங்க.. ஒரு இன்ஜெக்ட் பண்றேன்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு எழட்டும்.." என்றவர் அவளின் கைகளில் ஒரு ஊசியை இறக்கினார்.. அந்த ஆழ்ந்த மயக்கத்திலும் ஊசி போடும் வழியில் ஸ்ஸ் என்றாள் பெண்ணவள்.

அதை கண்டவனுக்கு புரிந்து போனது அவளுக்கு ஊசி போடுவது பிடிக்கவில்லை என.. அவளின் அந்த முகச்சுழிப்பு ஏனோ அவனின் இதயத்தில் தங்கி போனதை ஆடவன் அறியவில்லை.

அவளுக்கு ஊசியை போட்டு விட்டு மருத்துவர் சென்று விட அதற்கு பிறகு அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி சத்தமிட அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன் பேசி விட்டு மீண்டும் உள்ளே வருவதற்கும் அவள் கண் விழிப்பதற்கும் சரியாய் இருந்தது.

உள்ளே வந்தவனை கண்டவள் ஆஆஆ கொலை கொலை என்று அலறினாள்.

அவளின் அலறலை கேட்டவனின் முகம் கோபத்தில் செந்தனலாய் மாறியது.

" ஏய்.." என்று கர்ஜித்தவன் அவளை அடிக்க கையை ஓங்கினான்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. கதையோட கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க பா.
 
Top