Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 1

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 1

வர்த்தன் குரூப்ஸ் அந்த மாலை வேலையிலும் பரபரப்பாய் காட்சியளிக்க ஊழியர்கள் அனைவரும் தங்களை மறந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.. சற்று நேரத்தில் அங்கே வந்தான் சிபி வர்த்தன்.. வர்த்தன் குரூப்ஸ் கம்பெனியின் சீ ஈ ஓ. அவனின் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.. நிறைய ஊர்களிலும் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களிலும் அவனின் வர்த்தன் குரூப்ஸ் பரவிக் கிடக்கின்றது.

வர்த்தன் குரூப்ஸ் அவனின் பரம்பரை வழியாக வந்த சொத்துக்கள்.. கிட்டதிட்ட பல கோடி சொத்துக்களுக்கு அதிபன்.. ஆறடியில் மாநிற தேகத்தை கொண்டவன் என்றாலும் முகத்தில் ஒரு திமிரும் கர்வமும் அவனுடன் என்றும் இருக்கும்.

தன் பாட்டன் பூட்டன் சொத்துக்களை தந்தை கொஞ்சமாய் வளர்த்தியிருக்க சிபி அதன் பொறுப்பெடுத்ததற்கு பின்பு அசுர வளர்ச்சி தான்.

தனது தகுதிக்கு யாரையும் போட்டியாய் என்ன மாட்டான்.. அவனின் விஷயத்தில் தலையிடாத வரைக்கும் அவரவர்க்கு அவன் நல்லவன் தான்.. ஆனால் ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள் எத்தனை பாடுபட்டேனும் அதை நிறைவேற்றி விடுவான்.. பிடிவாதத்திற்கு சொந்தக்காரன்.

இன்று அவனின் மெயின் அலுவலகத்தில் தான் அவனுக்கு வேலை.. காலையிலிருந்து சற்றும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறான்.. ஆனால் இன்னும் அவன் உணவருந்தவில்லை.. மாலை நேரம் ஆனாலும் ஆங்காங்கே ஊழியர்கள் தங்களின் களைப்பை போங்க தேநீர் அருந்தி கொண்டிருக்க ஆடவனோ அதற்கு கூட நேரமில்லாது தன் அறைக்கு வந்தவன் இயந்திரத்திற்கு போட்டியாய் இயங்கி கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் அவனின் அறைக்கதவை தட்டிவிட்டு அவனின் பி ஏ வான அரவிந்தன் வந்தவன்,

"குட் ஈவ்னிங் பாஸ்.." என்றான் பதட்டத்துடன்.

"அரவிந்த் அந்த மலாய் பார்ட்டிக்கு மெயில் பண்ணிடு.. அவங்க கொட்டேஷன் ஓகே ஆயிடுச்சி.. நெக்ஸ்ட் மன்த் பிப்டின் மீட்டிங் அரேன்ஜ் பண்ணிடு.. அப்புறம் அந்த எஸ் எஸ் கம்பெனி டீல் கேன்சல் பண்ணிடு.. தரமில்லாத பொருளை அவங்க இன்போர்ட் பண்றதா எனக்கு இன்பார்மேஷன் வந்துருக்கு.. சோ அவங்களுக்கு இந்த சிபி யாருன்னு தெரியலை தெரிய வச்சிரு.. நம்மோட இன்ஸ்டியூட்க்கான மெட்டீரியல் ஆர்டர் போட்டிருக்கேன் அதை செக் பண்ணி அனலைஸ் பண்ண சொல்லு லால்கிட்ட.. அவ்வளவு தான் நீ போலாம்.." இத்தனையும் அரவிந்தனின் முகம் பார்க்காமலே கணிணியில் பார்வை பதித்தே சொல்லி முடித்தான்.

இது தான் அவனின் அசுர வளர்ச்சியின் ரகசியம் என்றும் சொல்லலாம்.. எதிலும் ஒரு வேகம்.. ஒரு நேர்த்தி.. ஒரு வெற்றி.. இடைவிடாத முயற்சி.. என அவனின் ஒவ்வொரு நாளும் இயந்திர தனமாய் தான் செல்கிறது.. ஆனால் அது அவன் அறிந்ததா இல்லை அறியாத விஷயமா என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

இவனின் வேகம் மற்றவர்களுக்கும் வருமா என்பது தான் பெரிய சந்தேகம்.. அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க எல்லோராலும் முடியாது.. ஆனால் முடிந்த விஷயத்தை செய்து கொடுப்பவன் தான் அரவிந்த்.

சிபி கூறிய அனைத்தையும் தனது நோட்பேடில் குறித்துக் கொண்டவன் கணிணியில் வேலை செய்யும் சிபியை தயக்கமாய் பார்த்து கொண்டே வெளியே செல்ல இருந்தவனை,

"அரவிந்த் என்ன சொல்லனும்.. எதுக்கு இந்த தயக்கம்.." என்றான் அப்பொழுதும் தலைநிமிராமலே.

அவன் கேட்டதும் புன்னகையுடன் திரும்பியவனுக்கு ஏமாற்றம் தரும் விதமாய் அவனின் பார்வை கணினியை பார்த்திருந்தது.. அதுவும் அவனுக்கு எப்பொழுதும் போல் சிபியின் மேல் மரியாதையை தோற்றுவித்தது.

எப்பொழுதும் ஒருவரின் முகத்தை பார்த்து தான் அவரின் மனநிலையை கணக்கிடுவார்கள்.. ஆனால் சிபியோ தனக்கு பின்னே என்ன நடக்கிறது என்பதை கூட திரும்பாமலே கூறுவான்.. அப்பொழுது அரவிந்தே நினைப்பான் மனுஷனுக்கு எல்லா பக்கமும் கண்ணுய்யா என்று சிலாகிப்பான்.

ஆனால் இப்படித்தான் சில நேரம் ஏமாற்றத்தை தருவான்.. புன்னகை சுமந்த முகம் ஏமாற்றத்தை தாங்கி, "பாஸ் நீங்க இன்னும் சாப்பிடலை.. மணி ஆறு ஆக போகுது.. உங்களுக்கு சாப்பாட்டை நினைவு படுத்த சொன்னாங்க மாதும்மா.." என்றான் மௌனமாய்.

அவனின் வார்த்தையில் கணினியை தட்டிக் கொண்டிருந்த விரல்கள் அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது.

கணினியிலிருந்து பார்வையை அப்படியே தன் இமைகளுக்குள் சிறைபடுத்திக் கொண்டு அந்த ஈசி சேரில் சாய்ந்து விட்டான் சிபிவர்த்தன்.

சற்று நேரம் அவனையே பார்த்திருந்த அரவிந்த மௌனமாய் பெருமூச்சு விட்டு அந்த இடத்தை விட்டு நகரும் நேரம்,

"அரவிந்த் ஒரு காபி கொடுத்து அனுப்பு.." என்று முதுகில் அவனின் குரல் உத்தரவாய் ஒலித்தது.

அதை கேட்டு தலையாட்டியபடி சென்ற அரவிந்தனுக்கு இந்த அளவாவது இறங்கி வந்தாரே என்று தான் இருந்தது.

அவன் சென்றதும் கண்களை மூடியபடி இருந்த சிபியின் முகமெங்கும் கோபத்தில் இறுகி செந்தனலாய் சிவந்தது.

அணலென கொதித்தெழுந்த கோபத்தில் ஆடவனின் விழிகள் செவ்வேரி போய் இருந்தது.

மாது இந்த பேரை கேட்டாளே உள்ளுக்குள் தணலென கொதிப்பதை அடக்கும் அங்குசமாய் தன்னை தானே செதுக்கி கொள்கிறான் இந்த சிபிவர்த்தன்.

இங்கே வெளியே வந்த அரவிந்தன் யாருமறியாமல் தன் அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ போன் செய்து,

"சார் இன்னும் மார்னிங் ல இருந்து சாப்பிடலை.. நானும் டிரை பண்ணேன் ஆனா முடியலை.. கொஞ்சம் நீ பாத்துக்கோ.. உன்கிட்ட பேசுறது தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாறு.. ம்ம் ஓகே பாய் வைக்குறேன்.." என்று அலைபேசியை வைத்தவனுக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதியாய் இருந்தது.

அந்த சிறிய ஓட்டு வீட்டின் நடுவே முற்றமிருக்க வீட்டை சுற்றிலும் பூ செடிகளும் காய்கறி செடிகளும் வாழை மரங்களும் பசுமையாய் வீட்டின் வெளிப்புறத்தை அழகுபடுத்தியது.

அதே போல் அந்த சிறிய ஓட்டு வீட்டின் அருகே பளிங்கு மாளிகையாய் கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த அரண்மனை.

அந்த அரண்மனையிலிருந்து மென்மையாய் ஒரு குரல் கானம் இசைத்தபடி பூஜையறையில் விளக்கேற்றியது.

அதே நேரம் அந்த வீட்டின் ஹாலில் இருந்து கம்பீரமாய் வயதான குரலொன்று,

"அடியே மாது இன்னும் என்ன பன்ற.. சீக்கிரம் வாடி கோவில் நடையை சாத்திட போறாங்க.." என்றபடி அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தது அந்த குரலுக்கு சொந்தமான உருவம்.

அவர் தாட்சாயினி அந்த அரண்மனையின் தூண்.. அந்த வீட்டின் அனைத்து முடிவையும் எடுக்கும் வலிமை கொண்ட வீட்டின் மூத்தவர்.

அந்த வீட்டின் சொந்தகாரரான வர்த்தனின் காதல் மனைவி.. காலம் கடந்த பின்பும் இன்னும் காதலாய் வாழும் தம்பதிகள்.

வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்..
ஆனாலும் அன்பு மாறாதது..
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்..
பிரிவென்னும் சொல்லே அறியாதது
..

என்ற வரிகளுக்கு ஏற்ப இன்னும் மனைவி சொல்லே மந்திரமாய் வாழ்பவர் வர்த்தமான்.

"தாட்சா எதுக்கு இப்போ மாதுவை ஏலம் விட்டுட்டு இருக்க.. அவ தான் பூஜையறைக்கு போனா லேட்டா தான வருவா.. நீ முதல்ல உட்காரு.. இந்த டீயை குடி.. அவ வந்ததுக்கு அப்புறம் கிளம்பு.." என்றபடி காபி டிரேயை கொண்டு வந்து தன் மனைவியிடம் ஒரு கப்பை கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டு தாட்சாவிடம் அமர்ந்தார் வர்த்தன்.

கணவரின் வார்த்தைக்கு எதிர் சொல் பேசாமல் அவர் கொடுத்த டீயை வாங்கியவர்,

"ஏங்க இந்த பொண்ணு எதுக்கு இப்படி பூஜையறையே கதியா இருக்கான்னே தெரியலை.. அதுவும் இந்த சின்ன வயசுலேயே.. எதை பார்த்தாலும் பயம்.. யாராவது அதட்டுனா ஒடனே அழுகுறது.. இந்த பொண்ணை எப்படித்தான் மாத்தறதோ.." என்றார் வேதனையாய்.

அதே நேரம் அவர் யாரை பற்றி பேசிக் கொண்டிருந்தாரோ அவளே கால்களில் கொலுசு சினுங்க கைகளில் வளையல் குலுங்க வெள்ளை தாவணியிலும் ரோஜா வண்ணத்தில் பாவாடையும் அணிந்து கொண்டு வந்தாள் அவள்.

அந்த காலை வேலையிலே தலைகுளித்து பனியில் நனைந்த அல்லி மலராய் மலர்ந்த முகத்துடன் வந்தாள் அவள் மாந்தளிர்.

வர்த்தனுக்கும் தாட்சாயினிக்கும் அவள் என்றும் மாது தான்.. அந்த பேரை சொல்லி தான் அவளை அழைப்பார்கள்.

" தாத்தா பாட்டி.." என்று சிரித்தபடி வந்தவள் இருவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

" நல்லா இரு மா.." என்றார்கள் இருவரும் மனநிறைய.

" பாட்டி கோவிலுக்கு போலாமா.. தாத்தா எதுக்கு டீயில சுகர் போட்டு குடுக்கிறீங்க.. நான் தான் சுகர் போடாத தானே வச்சேன்.. " என்றவளின் கேள்விக்கு வர்த்தன் தன் மனைவியிடம் தன்னை மாட்டி விட்ட தன் பேத்தியை முறைக்க அவளோ தான் வந்த வேலை முடிந்தது என்றளவில் அங்கிருந்து சென்றுவிட்டாள் டீ கோப்பைகளை எடுத்தபடி.

" ஓ இதுக்கு தான் நீங்களா டீ டம்ளரை எடுத்து கொடுத்தீங்களா.. ஊருல இருக்கற எல்லா சக்கரையும் உடம்புல வச்சிகிட்டு சக்கரை போட்டு டீ குடிக்கீறீங்களோ.. உங்களை என்ன தான் பண்றது.. ம்ம்.." என்று முறைத்தபடி நின்றிருந்தார் தாட்சாயினி.

தன் மனையாளிடம் தன்னை மாட்டி விட்ட தன் பேத்தியை மனதில் வஞ்சித்து கொண்டிருந்தவர் தன் மனைவியின் முன்னே தவறு செய்த குழந்தையாய் கைகட்டியபடி நின்றிருந்தார்.

இருவரின் காதலான சண்டையை பார்த்தபடி கோவில் பூஜை கூடையை எடுத்துக் கொண்டு வந்தவளுக்கு இருவரின் சண்டையும் சிரிப்பை தான் வரவழைத்தது.

இதோ இப்படி சண்டை போட்டுக் கொண்டிருப்பவர் தான் இன்னும் சற்று நேரத்தில் தன் கணவர் ஆசையாய் கேட்ட சேமியா கேசரிக்கு தயார் செய்து வைப்பார்.. இது தான் பாசம் காதல் அளவில்லாத அன்பு.. இதுபோல் ஒரு வாழ்க்கை கிடைத்தால் அது வரம் தான்.. என்று யோசித்தவளின் கண்முன்னே நிழலாய் சில நிகழ்வுகள் தோன்றியது.

அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பெண்ணவளின் கண்களில் கண்ணீர் அவளறியாமல் சுரந்தது.

இதை கண்ட வர்த்தன் தாட்சாயினி இருவருக்கும் மனம் பாரமாய் ஆனது.. இந்த அப்பாவி சிறு பெண்ணை எப்படி அந்த பழைய நிகழ்வில் இருந்து மீட்பது என்பது பற்றி அந்த வயோதிக தம்பதிகளுக்கும் புரியவில்லை..

ஆனால் இதற்கெல்லாம் காரணமானவனோ கோபத்தில் தன் முன்னே நின்றிருந்தவனின் தலையில் துப்பாக்கி குண்டை சத்தமில்லாமல் இறக்கியபடி அங்கிருந்து சென்றான்.

தித்திக்கும் தீஞ்சுவை கொண்ட அணலன்..
மென்மையாய் துளிர்விடும் தளிரவள்..
உதிரத்தில் குளிக்கும் மேனியவனை..
இறக்கத்தில் கரம் பிடிப்பாளோ பாவையும்.. இல்லை
பயத்தில் உடைத்தெறிவாளோ உறவையும்..
பாசம் நேசத்தின் அர்த்தம் அறியாதவன்..
பாசத்தின் இருப்பிடமானவள் நங்கையவள்..
நானினும் நங்கை சேர்வாளோ..


பொறுத்திருந்து தான் பார்ப்போமே.. இந்த அணலில் துளிர்த்த பூ(மா)ந்தளிரை.
 

Attachments

  • ei4FQX777802.jpg
    ei4FQX777802.jpg
    525.5 KB · Views: 1
Top