@Nirmala senthilkumar அக்கா வாங்க இங்க (உருட்டு கட்டை கிடைக்கல) Mrs.A ன்னு சொல்ல மூணு மாசம் ... அதுலயும் நான் இல்லன்னு சொல்லவும் back அடிக்கிறீங்க... யாரோ N ன்னு சொல்றிங்க. .. தம்பி பொண்டாட்டின்னு மரியாதை இல்லாம போச்சு இருக்கட்டும். ..
ஊடலில் தொடங்கும் காதலின் கதை. கணவனின் பொய்யால் மட்டுமே அவர்களின் காதல் நிலைபெற்றது எனும் கோபத்தில் உழலும் மஹிமாவை காதலால் அரவணைக்கும் கணவன் சுசீந்திரன்.
உருவகேலியை சாரமாக்கி பின்னப்பட்ட காதல் கதை. பாரதியும் கண்ணம்மாவுமாக பாரதியின் கவி கொண்டு காதலால் கட்டப்பட்ட கதை இது.
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் நட்புக்களே.
நட்பாக நீ, காதலாக நான் !
கரையும் நீ, கவியாக நான் !
கூடலில் நான், ஊடலுடன் நீ !
உரிமையுடன் நான், உண்மைக்காக நீ !
உணர்ந்தேன் நான், உயிர்த்தாய் நீ !
உருகினேன் நான், உள்ளமுதம் நீ !
என்னுயிர் நீ கண்ணம்மா !!!
முத்தத்தின் ஈரத்தில் முத்தான நம் காதல் !!!
இமை மூடினேன், இதழ் தீண்டினாய்
இதழ் தீண்டினேன், இதயம் திருடினாய்
இதயம் திறக்கிறேன், இமை மூடி நிற்கிறாய்
முத்தத்தின் ஈரத்தில் முத்தாய்ப்பாய் நம் காதல் !!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.