Chapter 12
காயங்கள் ஆறினாலும்
வடுக்கள் மாறாது,
காதல் தந்த காயம்
வடுவாய் நிறைந்திருக்கும் நெஞ்சில்
காதல் முகிழ்க்காது...
நேற்று பால்கனியில் படுத்திருந்தவள் எப்படி இங்கே வந்து படுத்தாள் என்று தெரியவில்லை. அவள் உறங்கும் முன்பே யார் எக்கேடு கேட்டு போனால் என்ன என்று அவன் உறங்கி இருந்தான்.
ஆனால் காலையில் இவள் கண் விழித்த போது மெத்தையில் இருந்தாள். அவனை தவிர வெறு யாரும் அவளை தூக்கி வந்து மெத்தையில் கிடத்தி இருக்க முடியாது தான். ஆனால் ஒருவர் தூக்குவது கூட தெரியாமலா தூங்கி கொண்டிருந்தேன் என்று தன் மீது தான் அவளுக்கு கோபமாக வந்தது.
மேகவி உறங்க துவங்கினால் இப்படித்தான், அடித்து போட்டது போல உறங்கி விடுவாள். இடையில் இடியே விழுந்தாலும் அவளுக்கு தெரியாது.
அம்மா கூட பல முறை அவளை இது பற்றி கண்டித்திருக்கிறார். “பொம்பளை பிள்ளை இப்படியா தூங்கறது” என்று ஆனால் அப்பா தான் “ஏன் என் பொண்ணு அவ இஷ்டப்படி தான் இருப்பா” என்று வக்காலத்து வாங்கினார். அம்மாவுக்கு நம்மை பிடிக்கவே பிடிக்காதோ அதனால் தான், இப்படி ஒரு இடத்தில் பிடித்து தள்ளி விட்டாரோ, காலையிலேயே எழும் இது போல எதிர்மறை எண்ணங்களை எண்ணி சினம் தான் வந்தது.
போர்வையை உதறி எழுந்தவள், குளித்து உடை மாற்றி கொண்டு ஜன்னலோரம் சென்று போனுடன் அமர்ந்து கொண்டாள். தன்னுடன் இன்னொரு ஜீவன் அந்த அறையில் இருந்ததே அவளுக்கு நினைவில்லை போலும், பால்கனியில் அமர்ந்து கொண்டவள் அப்போது தான் அங்கே பார்த்தாள்.
வீரா தோட்டத்தில் நின்று யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான்.
அவன் அருகே இருந்த ஒரு ரோஜா செடியின் மலரை கைகள் வருடிகொண்டிருக்க, காற்றில் பறந்த முன் உச்சி முடிகளை சட்டை செய்யாமல் அளவளாவி கொண்டிருந்தான்.
அவன் நெடு நெடு உயரமும், ஆளை வீழ்த்தும் பார்வையும், அசரடிக்கும் கம்பீரமும், அதில் எல்லாம் குறைச்சல் இல்லை. ஆனால் குணம், அது இல்லையே விருப்பம் இல்லாத பெண்ணை ஏமாற்றி திருட்டு தனமாக திருமணம் செய்து விட்டு, விருப்பமில்லாமலா எங்கே உன் மானசாட்சியை தொட்டு சொல் அவனை உனக்கு பிடிக்காதா? தனக்கே எதிர்பதமாக கேள்வி எழுப்பிய மனதை மனமார சபிக்கத்தான் தோன்றியது.
திருமணம் வேண்டுமானால் அவன் தந்திரத்தன்மையால் நடந்திருக்கலாம், ஆனால் அவன்பால் அவள் மனமும் ஈர்க்கப்பட்டதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை.
அவனை முதல் முறை பார்த்த போது கோபமும், அதன் பிறகு அவன் நடத்தையில் வந்த மதிப்புமாக எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அது மட்டுமா அவன் சின்ன சின்ன பார்வைக்கே இவள் சிலிர்த்து அடங்கிய கதை எல்லாம் கூட நிகழ்ந்தது. ஆனால் அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்பது போல அவன் நடந்து கொண்டானே வெறுப்பாக இருந்தது.
செடியை விட்டுவிட்டு, கேசத்தை கோதியபடி, திரும்பியவன் இவள் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு வெண்பற்கள் பளீரிட புன்னகை செய்தான்.
ஆமா இது ஒண்ணு தான் குறைச்சல் என்று அவள் திரும்பி அமர்ந்து முகத்தை போனில் மறைக்க முயன்றாள், ஆனால் முடியாமல் போனது, அவன் பளீரிட்ட புன்னகை நெஞ்சில் அச்சாய் பதிந்து போக, மீண்டும் அவனை பார்க்க சொல்லி கண்கள் அவளை கெஞ்சியது.
நைட் எல்லாம் ஒரே ரூம்லா தானே இருந்தோம், என்னவோ பல நாள் கழிச்சி பார்க்கிற மாதிரி ஈன்னு பல்லை காட்டிக்கிட்டு என திட்டி கொண்டே, அவன் பால் திரும்பி விட துடிக்கும் மனதை அடக்கி கொண்டு அப்பாவிற்கு அழைத்தாள். அவள் அழைப்பதற்காகவே காத்திருந்தது போல வேகமாக போனை எடுத்த சுகுமார், “அம்மாடி மேகா” என்றார் குரல் தழுதழுக்க.
எத்தனை பாசம், இவரை நினைப்பதை விட்டுவிட்டு தேவையற்றதை நினைத்து கொண்டிருக்கிறேனே என்று தன்னை தானே நொந்து கொண்டவள், “எப்படிப்பா இருக்கீங்க” என்று கேட்டாள்.
“இருக்கேன்மா, இந்த சஞ்சு பையன் கூட என்னை மதிக்க மாட்டேன்கிறான் மா, ஏன்தான் இருக்கோமோன்னு இருக்குமா” என்றார் கவலையுடன்.
“ஏன் பா சஞ்சு என்ன பண்ணான்”
“என்னன்னு மா சொல்றது, அவனும் உங்க அம்மா பக்கமும் அவ அண்ணன் மகன் பக்கமும் சேர்ந்துகிட்டு என்னை தப்பு தப்பா பேசறான்மா. நான் கெட்டவனாம், அந்த வீராவும் உங்க அம்மாவும் நல்லவளாம். என்னத்தை சொல்றது” என்றார் விரக்தியாக.
“அப்பா, அவனுக்கு அப்பவே அந்த வீராவை பிடிக்கும்” என்று கூறி கொண்டிருக்கும்போதே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் வீரா.
வீராவை பிடிக்கும் என்று அவள் சொன்ன வார்த்தை மட்டும் அவன் காதினில் விழ, “அப்படியா பேபி” என்று அவள் அருகே வந்து அமர்ந்தான்.
படக்கென அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டவள், “எல்லாம் வெளிச்சாயம்ப்பா, அது என் கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரி அவன் கண்ணுக்கும் தெரியற நாள் வரும், இங்கே எல்லாரும் உள்ளே ஒரு வேஷம் வெளியே ஒரு வேஷம் தான் போடறாங்க. சின்ன பையன் தானே போக போக புரிஞ்சிப்பான். நீங்க கவலை படாதீங்க நான் அவன் கிட்டே பேசறேன்” என்று அவள் நகர்ந்து கொண்டே போக அவளை நெருக்கி கொண்டே இருந்தான் வீரா.
ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவள் அதற்கு அடுத்து இடமில்லாமல் போக, போனை அணைத்து விட்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.
அவனோ நீயெல்லாம் எனக்கு எறும்பு போல என்று அப்படியே அமர்ந்து இருந்தான்.
“எதுக்கு இப்படி பண்றீங்க, அங்கே ஏதோ உத்தமன் வேஷம் எல்லாம் போட்டுட்டு இங்கே வந்து அய்யோக்கியத்தனம் பண்றீங்க” என வெடித்தாள்.
“ஏன்மா கட்டின பொண்டாட்டி பக்கத்திலே உட்கார்றதே அய்யோக்கியதனம்னா, இன்னும் மத்ததெல்லாம் செய்தா என்ன சொல்லுவ” என்றான் அவள் தோள் உரசியபடி.
“மத்ததெல்லாமா, ம்ம் பொறுக்கின்னு சொல்லுவேன்” என்று அவனை தள்ளி விட்டு கோபமாக அவள் எழுந்து கொள்ள, அவள் கை பற்றி சுண்டி இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்திற்கு அவன் மார்பிலேயே அவள் விழ, “இதோ இப்போ நீ என் மேலே விழுந்திருக்க, அப்போ உன்னை என்ன சொல்றது” என்றான் அவன் குறும்பாக கண் சிமிட்டி.
“நான் ஒண்ணும் விரும்பி உங்க மேலே விழலை” என அவள் எழ முயல, அவளை விடாது தன்னுடன் இறுக்கி கொண்டவன், “கட்டின பொண்டாட்டியை பக்கத்திலே வச்சுகிட்டு ஒண்ணுமே செய்யாம இருக்கேன், என்னையே பொறுக்கி சொல்ற, அப்போ நான் பொறுக்கி செய்ய வேண்டிய வேலையை செய்யணுமே” என்று அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.
அழுத்தமான சூடான இதழ்கள் அவள் மென்மையான குளிர்ந்த இதழ்களுடன் கலந்து விடவும், அதிர்ந்து போனாள் பெண்.
அவன் மார்பில் அடித்தபடி விலகி போக பார்க்க, அவனோ அவள் பின்னந்தலையை தன் பக்கமாக அழுத்தி பிடித்து கொண்டு தன் காரியத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
எப்படியோ அவன் விடாமல் அவளால் விடுபடவே முடியாது என்று உணர்ந்து கொண்டவள், அவள் இதழில் நறுக்கென கடித்து வைத்தாள்.
ஸ்ஸ்ஆ, என கத்தியபடியே அவளை பட்டென விட்டவன் இதழ்களை வருடி கொள்ள, லேசாக ரத்தம் கசிந்திருந்தது. “அடிபாவி ராட்சசி, ட்ராகுலா, இப்படியா கடிச்சு வைப்ப” அவன் தொட்டு பார்த்து கொண்டே அவளை கேட்க, கட்டை விரலால் தன் இதழில் படிந்திருந்த ரத்தத்தை துடைத்து கொண்டவள், “என்கிட்டே இந்த வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான்” என்று நிமிர்வாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் உதடு கடித்து சிரித்து கொண்டவன், அவள் தந்த காயத்தை ரசித்து கொண்டான். “நீ ராட்சசியே தான்டி, பொண்டாட்டிகிட்டே முத்தம் வாங்கி உதட்டுல காயம் படற குடுப்பனை எல்லாம் யாருக்கு கிடைக்கும்” என்று முனகலோடு அவள் தந்த முத்தத்தில் லயித்திருந்தான்.
அறைக்கு வந்தவள் அடுத்து தம்பிக்கு அழைத்தாள், அக்கா என்று அவன் பாசமாக துவங்கும்போதே,
“என்னடா அப்பாவையே தப்பா பேசறியாம், உனக்கு அவ்வளவு தெரியுமா இங்கே இருக்கிறவங்களை பத்தி. இங்கே என்ன நடக்குதுன்னு கண் முன்னாடி பார்த்து கிட்டு இருக்கேன்டா. இத்தனை வருஷம் பெத்து வளர்த்த அப்பாவையே உன்னால புரிஞ்சுக்க முடியலை, நீ நேத்து வந்தவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டு இருக்கியா. நம்ம அப்பாவை விட இவங்களை எல்லாம் உனக்கு நல்லா தெரியுமோ. எல்லாம் வேஷம் போடற கூட்டம். அதை தெரிஞ்சுக்க முதல்ல” என்று படபடவென பொறிந்தாள்.
“அக்கா கொஞ்சம் நிறுத்தறியா, நானும் ஒண்ணும் முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசலை, நம்மளை பெத்த அம்மாவை தான் சப்போர்ட் பண்ணி பேசறேன், அதே போல நம்ம அம்மாவோட அண்ணன் மகன் நம்ம அத்தானை சப்போர்ட் பண்றேன். அதுவும் சும்மா இல்லை, காரணம் இருக்கு. நீ இப்படி அப்பாவை பத்தி மட்டுமே யோசிக்காம ஏன் எதுக்காகன்னு கொஞ்சம் நிதானமா யோசி அடுத்தவங்க சொல்றதையும் கேளுக்கா அப்புறம் பேசு” என்றான் இளையவன்.
“ஆமாடா, உனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எதுவுமே தெரியாதில்ல, சின்ன பையனா போய்ட்டா, அந்தாளை பத்தி சொல்ல முடியலை” என்றாள் வெறுப்பாக, உதடு வேறு அவன் செய்த வேலையில் தீயாக எரிந்தது.
“அக்கா நான் ஒண்ணும் சின்ன பையன் இல்லை எனக்கும் வயசு ஆகுது, நீ தான் அப்பா அப்பான்னு எப்போவும் ஒரே புராணம் பாடற” என்றான் அவன் கோபமாக.
“நீயெல்லாம் தம்பின்னு என் பக்கம் நிப்பன்னு நினைச்சேன் பாரு என்னை சொல்லணும் இனிமேல் உன்கிட்டே எனக்கென்னடா பேச்சு” என்று கோபமாக போனை வைத்து விட்டு மூச்சு வாங்கினாள்.
அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வீரா அவள் அருகே வந்தவன், “எதுக்குடி இவ்வளவு கோபம் உனக்கு” என்றான்.
“கோபமா, உங்களை எதுவும் செய்யாம இருக்கேன்ல அந்த வெறி தான் எனக்கு” என்றாள் கண்கள் சிவக்க.
“ஒரே ஒரு முறை நான் சொல்றதை.. வேண்டாம் மத்தவங்க சொல்றதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளு மேகவி, அப்புறம் ஒரு முடிவுக்கு வா, இப்படி எதுவுமே இல்லாம, குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி ஒரே பார்வையா இருக்காத” என்றான்.
“குதிரையா, யோவ் என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது” என்றாள் அதே கோபத்துடன்.
பாயத்துடிக்கும் பாவனையோடு அவள் கேட்க, ம்ம் அவளை ஏற இறங்க பார்த்தவன் “சும்மா சொல்லக்கூடாதுடி நீ சாதாரண குதிரை இல்லை அரேபியன் குதிரை தான்” என்று அவன் கூற, கையில் கிடைத்த பூக்குவலையை எடுத்து அவனை நோக்கி வீசி இருந்தாள்.
ஆனால் அதற்குள் அவன் குளியலறை புகுந்திருக்க நல்ல வேலையாக அவன் தலை தப்பியது.
பாத்ரூமில் இருந்தே சஞ்சய்க்கு அழைத்தான் வீரா, அத்தான் பாசமாக அவன் அழைக்க, நல விசாரிப்புகளுக்கு பிறகு “எப்படி மச்சான் உங்கக்காவை வீட்டுலே வச்சு வளர்த்தீங்க” என்று கேட்டிருந்தான் வீரா.
“ஏன் அத்தான் என்ன ஆச்சு”
“சஞ்சு ஜஸ்ட் மிஸ் டா, உங்க அத்தானுக்கு ஆயுசு கெட்டி இல்லை மண்டையை திறந்திருப்பா உங்க அக்கா” என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு.
“அய்யோ என்ன அத்தான் சொல்றீங்க”
“ஆமாண்டா, அதென்ன பழக்கம் கட்டின புருஷனை பூ ஜாடி தூக்கி அடிக்கிறது”
“அச்சச்சோ அப்படியா” என்று சஞ்சு அந்தபக்கம் விழுந்து விழுந்து சிரித்தான்.
“சிரிடா, சிரி, ஏன் சிரிக்க மாட்ட, காட்டுல வச்சு வளர்க்க வேண்டிய மிருகத்தை எல்லாம் வீட்டுலே வச்சி வளர்த்திருக்கீங்க, நான் மாட்டிக்கிட்டு அவஸ்தை படறேன்” என போலியாக சலித்து கொண்டான்.
“அத்தான் எதுக்கும் எங்க அக்காகிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க, இல்லை சேதாரத்துக்கு நாங்க பொறுப்பெடுத்துக்க மாட்டோம். இப்போ நீங்க தான் அந்த ப்ராப்பர்டியோட முழு ஓனர், லாபமும் நட்டமும் நீங்க மட்டும் தான் அனுபவிக்கனும்” என்றான சஞ்சு கிண்டலாக.
“அதுவும் சரி தான், ஆமா சஞ்சு நான் சொன்னது என்ன ஆச்சு”
“அத்தான் ஏற்கனவே அனுப்பிட்டேன், இன்னைக்கு உங்க கைக்கு வந்து சேர்ந்திடும்”
“அவளுக்கு படிக்க இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு, தாங்க்ஸ் சஞ்சு” என்றான்.
“அத்தான் இதுக்கெல்லாமா தாங்க்ஸ் சொல்வாங்க”, என அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்து விட்டான்.
சஞ்சய் இப்போது தந்தையிடம் சுத்தமாகவே பேசுவது இல்லை, அறவே அவரை தவிர்த்து வந்தான். அது தன் அன்னையின் மீது அவன் வைத்திருந்த அன்பினால் மட்டுமா, என்றால் இல்லை, வீரா மீது அவனுக்கிருந்த நம்பிக்கையும் சேர்ந்ததால் தான்.
சஞ்சய்க்கு அவன் மீது இருந்த நம்பிக்கையில் ஒரு சதவீதம் மேகவிக்கு இருந்திருந்தால் கூட, ஏன் இப்படி செய்தாய் என்ன காரணம் என்று அவனிடம் கேட்டு இருப்பாள். குறைந்தபட்சம் தனது அன்னையிடமாவது கேட்டு இருப்பாள். ஆனால் அவள் கேட்கவில்லை, அவள் நம்பிக்கை வேறு இடத்தில் இருந்தது. அது அவள் தந்தை மீது. ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தவறல்ல, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில விஷயங்கள் நடக்கும் போது அதை ஏன் எதற்காக எப்படி என்று ஆராயாமல் விடுவது சரியாகாது.
அந்த தவறை தான் மேகவி இப்போது செய்து கொண்டிருக்கிறாள்.
எல்லாரும் தன் தந்தையை மட்டுமே குறை சொல்லும்போது ஏன் இப்படியெல்லாம் என்று அவரிடம் கூட கேட்க தோன்றாத அவள் அன்பில் அவனுக்கு கொஞ்சம் பொறாமை கூட வந்தது. இது போல ஒரு அன்பை அவள் தன் மீது வைப்பாளா என்று நினைக்கும்போது ஏக்கம் வந்தது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் அவள் அன்பை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று எண்ணும்போது அதில் திளைக்கும் தருணத்த கற்பனையில் எண்ணி நெஞ்சம் உவகை கொண்டது.
அதே நேரம் அவள் தந்தை மீதான அந்த நம்பிக்கை பொய்த்து போகும்போது அவளின் நிலை என்னவாகும் என்று நினைக்கும்போது அவள் மீது இரக்கம் வந்தது.
மேகவி ஒரு குழந்தை உள்ளம் கொண்ட குமரி, தான் அன்பு கொண்ட ஒருவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அதில் அவள் தவறு என்று எதுவுமே இல்லை, அவள் தந்தை கூட அவள் மீதான அன்பில் எந்த குறையும் வைத்திருந்தது இல்லை. அப்படி இருக்கும்பொது அவள் தன் தந்தை பக்கம் நிற்பது தான் சரி. ஆனால் சரி எது தவறு எது என்று நியாய தராசில் வைத்து பார்க்கும் மனம் அவளுக்கு இல்லை. அவள் தராசு எப்போதுமே அவள் தந்தை பக்கமே சாய்ந்து இருக்கிறது.