அத்தியாயம் 1

Advertisement

Arpitha

New member
Member
அன்றைய தினத்தின் உதிக்கும் சூரியன் கூட கருணையாய்,காதலாய், மென்மையாய் நிலத்தில் படர்த்தி, அன்றைய நாளை அவன் கூட ரசித்து லயித்து கொண்டு இருந்த காதலர் தினம் அது

உலகின் முதல் நிலம் முதல் கடைசி பகுதி வரை அனைவரின் காதிலும் கேட்டு கொண்டு இருந்தது காதல் என்ற ஒற்றை மந்திரம் தான். சிலருக்கு காதல் கைக்கூடிய பொன் நாள்,சிலருக்கு பிரிவை ஸ்பரிசித்த நாள் இன்று

இந்த இரு உணர்வுமே இல்லாமல்,மனதில் ஓரு நெருடலுடன்,அன்றைய நாளை மகிழ்ச்சியில் கழிக்க இயலாமல்,அலை மோதும் கடலை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் யாழினி

அவள் மனம் மொத்தம் எதோ சொல்ல முடியா துயரம் அவளை வாட்டி வதைக்க, அமைதியாய் அமர்ந்து இருந்தவளை இத்துடன் பாத்தாவது முறையாய் அழைத்து முடித்து இருந்தான் சூர்யா

ஒலிக்கும் ஓசையின் சத்தம் கூட கேட்காமல், கடலை வெறித்தவலை,இதமாய் தீண்டியது போல அமைதி நிழல் அவள் மேல் படர, யார் என்று திரும்பி பார்க்காமலே அவனை உணர்த்தாள் யாழினி

சூர்யா!!“ ஒற்றை அழைப்பில் அவனின் மன நிலையை ஓரு அளவிற்கு புரிந்து கொண்ட சூர்யா,

யாழி,என்ன ஆச்சு உனக்கு? காலையில இருந்து உன்னை தேடிகிட்டு இருந்தேன். கால் பண்ணாலும் எடுக்கல.உன் அண்ணன் கிட்ட கேட்டா என்னை பாக்க காலையிலேயே கிளம்பிட்டன்னு சொல்றான்.நீ என்னடானா இங்க வந்து அமைதியா உக்காந்து இருக்க? என்ன ஆச்சு உனக்கு?” கேட்டவன் அமைதியாய் அவன் அருகே சென்று அமர்ந்தான் சூர்யா

அப்போதும் பதில் பேசாமல் கடலை வெறித்தவலை,அமைதி பார்வை பார்த்து ரசித்து அமர்ந்து கிடந்தவனை,இறுதியாய் நேரே நோக்கிய யாழி,

ஓரு வேலை நான் செத்துட்டா நீ என்ன சூர்யா பண்ணுவ?“ கேட்டாள் கனத்த குரலில்

ஊரே காதலை கொண்டாடுது. நீ என்னடா இப்டி பேசிட்டு இருக்க?” கேட்டவனிடம்

இல்லை சொல்லேன்..நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ?“ மீண்டும் அழுத்தி கேட்டாவளிடம்

நானும் செத்துடுவேன்.சிம்பிள்” என்றான் இயல்பாய் தோல் உளுக்கி

அவன் பதிலிலேயே இறந்தது போல உணர்ந்தவள், சில துளி நீரை சிந்த அதில் பதறிய சூர்யா

இப்போ எதுக்கு இப்டி அழுகுற? ஏன் இப்டி கேட்ட? உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?“ கேட்டான் சூர்யா

ஒன்னும் ஒடலை.சும்மா தான் கேட்டேன்” என்றாள் கடலை வெறித்த படியே

சரி அப்போ நீ கடலையே பாத்துட்டு இரு நான் கிளம்புறேன்“ கோவிந்த படி எழ முயற்சித்தவனை,

சூர்யா போகாத!” என்றாள் கையை பிடித்து கொண்டு

அப்போ என்ன ஆச்சுன்னு ஒழுங்கா சொல்லு“ இம்முறை மிரட்டினான் சூர்யா

அதுவா!! காலையில அனு போன் பண்ணி இருந்தா.அவ தான்..” இழுத்தவலை

ஓ அந்த சகுனி தான் குழப்பி விடுச்சா“ மனதில் நினைத்து கொண்டவன்

என்னவாம் அவளுக்கு? என்ன சொன்னா?” கேட்டான் சூர்யா

இல்லை அவ சொன்னா , காதலிச்ச எதாவது ஓரு பிரச்னையை நாம சந்திச்சே ஆகணுமாம்.ஒன்னு வீட்ல ஒதுக்க மாட்டகலாம், இல்லனா காதலிக்குற பொண்ணோ பையனோ பொண்ணோ சண்டை போடுவாக்கலாம் இல்லனா செத்துடுவாகலாம்.. பிரச்னை இல்லாம காதலிக்க முடியாதாம்

நமக்கு தான் எந்த பிரெச்சனையும் இல்லையே.உங்க வீட்லயும் என் வீட்டுலயும் ஓகே சொல்லிட்டாங்க. நாமளும் சண்டை போட்டே பல மாசம் ஆச்சு.அப்போ நம்மல்ல ஒருத்தர் செத்துடுவோம் தானே. அது தானே நடக்கும் ..இல்லை நமக்குள்ள பிரிவு எதுவும் வந்து நாம பிரிஞ்சிடுவோமா!!“ கண்ணில் நீர் கோர்த்து நிற்க,மனதில் பயத்துடன் கேட்டாள் யாழி

இப்படியெல்லாம் லூசுதனமா எப்படி யாழி உன்னால யோசிக்க முடியுது . நீ பேசுறதுல எதாவது லாஜிக் இருக்கா? ப்ரோப்லம் இல்லாம காதலே இல்லைனு சொல்ல வரியா?” கேட்டவன்

அடுத்த நொடியே, சரி வா, நாம சண்டை போடலாம். நெறய திட்டி, சண்டை போடலாம். அப்போ நீ நிம்மதியா இருப்ப தானே? செத்துப்போகுற அளவுக்கு யோசிக்க மாட்டே தானே!“ கேட்டான் சூர்யா சற்று கோபத்துடனே

அவன் பேச்சை கேட்டவள் சில நொடிகள் அமைதி காத்து,

அப்போ நாம பிரிய மாட்டோன்னு சொல்ல வரியா?” மீண்டும் கேட்டாவளிடம்

நாம இன்னும் நெறய காலம் நல்லா, சந்தோசமா வாழ போறோம் யாழி. நமக்கான அழகாகான வாழ்க்கையே நம்ப கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஆரம்பிக்க போகுது..நான் அந்த நாளை எண்ணி காத்துகிட்டு இருக்கேன்!!நீ என்னடானா சாவு அது இதுன்னு என்னையும் அப்செட் பண்றியே!!“ வேகமாய் ஆரம்பித்தவன், சோகமாய் முடித்தான் சூர்யா

அவனின் வாடிய முகத்தை கண்டவள், சரி சரி... நான் எதுவும் இனிமேல் அப்படி பேச மாட்டேன்..நீ மூஞ்சை இப்டி வெக்காத” என்ற படி அவன் தோல் சாய்நதாள் மனதில் ஓரு நிம்மதியுடன்

அடுத்து சில மணி நேரங்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களை நிதான படுத்தி, எல்லை மீரா காதடுளுடன் உரையாடி முடிபட்டுற்குள் அன்றைய சூரியனே துவண்டு மறைய துவங்கி போனான் .இருந்தும் இவர்களுக்கு அன்றைய தினம் போதவில்லை என்பது ஓரு புறம் இருந்தாலும்,

சாப்பிட போலாம் சூர்யா பசிக்குது..சாப்டுட்டு வீட்டுக்கும் போகலாம். ரொம்ப நேரம் ஆகிடுச்சு“ இறுதியாய் வயிற்றை கவனிக்க முடிவெடுத்தனர் இருவரும்

சரி யாழி நீ இங்கயே இரு..நான் போய் வண்டி எடுத்துட்டு வரேன்” என்றான் சூர்யா பார்க்கிங் நோக்கி நடந்து

செல்லும் அவனையே பார்த்த அவளுக்குள் எதோ ஓரு நெருடல் இருந்த படியே தான் இருந்தது.. கவனத்தை திருப்பி வேறு புறம் நோக்கி நின்றவள் கண்ணில் , சாலை ஓர நடை பாதையில் ஒடுங்கி படுத்து கிடந்த முத்தாட்டி கண்ணில் பட, அவரின் கிழிந்த உடையின் பாகங்களையும் பார்த்தவள், எதோ எண்ணம் தோன்ற தன்னிடம் இருந்த துப்பட்டா துணியை அவரிடம் கொடுக்க குனிந்தவள் தானே அவருக்கு போர்த்தியும் விட்டு, அவரிடம் பேசினாள் யாழி

வண்டியை எடுத்த சூரியா, யாழி வா போகலாம்“ குரல் கேட்டவள், உடனே எழவும்,

அவ்விடம் கில்லி விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் சிலர் தாக்கிய கில்லி கோல் அவளை நோக்கி வந்தது, கண் இமைக்கும் நொடியில் அவளின் பின் மண்டையில் பலமாய் தாக்கி கீழே விழுந்தது

அது வந்து தாக்கிய நொடி எதுவும் விளங்காமல் போக ,தலையில் இருந்து வழியும் குருதியுடன், கண்கள் மொத்தம் இருண்டு வர, அவள் வாய் திறந்து பேசிய கடைசி வார்த்தை ....................


சூர்யாயாயாயா..................
 
Last edited:
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩
போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் 😍😍
 
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு ஜீ.....!!!!!
 

Advertisement

Advertisement

Back
Top