Chapter 3
நிழலாக உன்னை
தொடர்ந்து கொண்டிருக்கும்
நிஜம் நான்..
நிழலை நம்பும் நீ
என் நிஜங்களை நம்ப மறுப்பதேன்..
திருப்போரூர் முருகன் கோவில், வேலைநாட்கள் என்பதால் அதிக கூட்டமின்றி அமைதியாக இருந்தது. என்று இல்லாமல் இன்று லேசான சன்ன கரையிட்ட சில்க் காட்டன் சேலையும், ஆங்காங்கே சிறிதளவு நகைகளும், தலையில் கையளவு மல்லியுமாக புன்னகையுடன் வந்த அன்னையை பார்த்தவளுக்கு இந்த சிரிப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணமே எழுந்தது.
அதிகம் வீராவுடன் பேசிக்கொண்டே வந்தாலும் அவ்வப்போது பிள்ளைகளுடனும் உரையாட தவறவில்லை அருணா. சஞ்சய் வளவளத்து கொண்டே வர அடையாறில் இருந்து திருப்போரூர் வந்து சேர்ந்த நேரமே தெரியவில்லை. இந்த சாலைகள் நான்கு பழக்கப்பட்டவன் போல அவன் வண்டி ஒட்டி வந்த விதத்தை பார்க்கும்பொது இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இங்கே தான் இருக்கானோ, அப்போ ஏன் இதுவரைக்கும் இங்கே வரலை, திடீர்னு முன்னாடி வந்து நின்னுட்டு அத்தையாம், சொந்தமாம் எங்கிருந்து தான் முளைச்சானோ.
அனைவரும் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தனர், கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அருணா கொண்டு வந்திருந்த இட்லியை சாம்பார் எள்ளு பொடியுடன் சேர்த்து சாப்பிட்டனர்.
குளக்கரை படியில் அமர்ந்தபடி மீன்களுக்கு பொரியை தூவி அவை கூட்டமாக வந்து ஆர்பரித்து உண்பதை ஆசையாக பார்த்தனர். அவ்வளவு தானே முடிந்ததா என்றபடி இவள் பார்க்க, அனைவரும் எழுந்து கிளம்பினர்.
மேலோட்டமாக பிடிக்காதது போல நடந்து கொண்டாலும் உள்ளுக்குள்ளே அந்த பயணத்தை ரசித்து கொண்டு தான் இருந்தாள். சஞ்சய் புதிதாக ஒரு தோழன் கிடைத்தது போல, அவனோடே ஒட்டிக்கொண்டு திரிந்தான். அம்மாவை பற்றி சொல்லவே வேண்டாம், அவன் என்னவோ தேவலோகத்தில் இருந்து வந்தவன் போல அத்தனை வாஞ்சையாக அவனிடம் பேசினார். அப்பா இன்னும் வரவில்லை என்று இவர்கள் யாரும் ஏங்கவே இல்லையா.
பொதுவாக வேலை விஷயமாக சுகுமார் வெளியூர் சென்றால் அவரே அழைத்து தான் பேசுவார். இடையில் இவர்கள் யார் அழைத்தாலும் கூட எடுக்க மாட்டார். தானே அழைத்து பேசுவதாக சொல்லி விட்டு சென்று விடுவார். அதனால் அப்பாவே அழைத்தால் பேசிக்கொள்ளலாம் என்று இவள் விட்டுவிட்டாள்.
இதமான மனநிலையோடு எல்லாருமே வீடு வந்து சேர்ந்திருந்தனர். வரும்போது மணி மதியத்தை நெருங்கி இருந்ததால் வழியிலேயே மதிய உணவை முடித்து கொண்டனர். வீடு வந்து சேர்ந்ததும் அக்கடாவென அசந்து உறங்கி விட்டனர்.
“நான் கொஞ்சம் படுக்கிறேன் வீரா” என்று கூறிவிட்டு அன்னை படுக்க சென்றது இன்னும் அவளுக்கு ஆச்சர்யம் தான். மதியத்தில் அன்னை தூங்கி அவள் கண்டது இல்லை ஏதேனும் வேலை செய்து கொண்டே தான் இருப்பார். இப்போது தான் எல்லாமே புதிதாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டே தனது அறைக்கு சென்றாள்.
வீரா மட்டும் ஹாலில் அமந்து கொண்டு போனை பார்த்து கொண்டிருந்தான். உடை கலைந்து மாற்றுடை அணிந்து படுக்க சென்ற நேரத்தில், அவள் அறைகதவு தட்டப்பட்டது. சென்று கதவை திறந்தாள் வீரா தான் நின்று இருந்தான்.
“நான் உள்ளே வரலாமா” என்ற கேள்வியோடு.
“இல்லை இப்படியே சொல்லுங்க என்ன விஷயம்” முறைத்து கொண்டே சொன்னாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே” என்றான் அவளை தாண்டி உள்ளே சென்றபடியே.
“முதல்ல உங்களை நான் உள்ளே வரவே சொல்லலையே”
“உள்ளே வரலாமான்னு நான் நாகரீகமா தான் கேட்டேன், அதே இங்கிதத்தோட நீயும் வாங்கன்னு சொல்லிறுக்கனும், நீ சொல்லலை அதான் நானே உள்ளே வந்துட்டேன்” என்றான் ஜன்னல் வழியே வந்த காற்றை முகத்தில் வாங்கி கொண்டே.
தன் வீட்டிற்கு வந்து தனக்கே நாகரீகம் கற்று தருபவனை என்ன சொல்வது சலித்து போனவளாக “இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு” என்றாள்.
“அதான் சொன்னேனே உன்கிட்டே கொஞ்சம் பேசனும்”
“ஆனா உங்ககிட்ட பேச எனக்கு எந்த விசயமும் இல்லையே” என்றாள் அவள் கைகளை கட்டிக்கொண்டு.
“நீ பேசாத நான் பேசறதை கேளு” என்றான் கூலாக.
“நான் ஏன் கேட்கனும், நான் என்ன உங்க பொ.... என கூற வந்தவள் அவனின் பார்வை ஊடுருவதை கண்டு அப்படியே நிறுத்தி விட்டு, “நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கனும்” என என கேட்டு வைத்தாள்.
அதற்கு ஹா ஹா என சத்தம் போட்டு சிரித்தவன், “தட் சவுண்ட்ஸ் நாட் பேட்” என கூற இவள் சொல்ல வந்ததை கண்டு கொண்டானே என்றதில் அவள் முகம் கண்றி போனது.
அவள் அருகில் நெருங்கி வந்தவன், பக்கவாட்டில் பார்த்து நின்ற அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து விழியோடு விழி நோக்கி, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே” என்றான் அவளிடம்.
“ஹெல்ப்பா அதுவும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு எப்படி நினைக்கறீங்க” என கேட்டாள் அவளும் அவன் கண்களை பார்த்து. அவள் கண்களின் வழியே உள்ளே ஊடுருவி செல்லும் முயற்ச்சியை செய்து கொண்டிருந்தவன் இதழ்கள் அழகாக விரிந்தது புன்னகையில். அவன் புன்னகை மானை பிடிக்க வலை விரிக்கும் வேடனின் புன்னகையாகவே அவள் கண்ணுக்கு தெரிந்தது. ஆனாலும் கூட இமைக்க மறந்து அவனை பார்க்க வைத்து கொண்டிருந்தான் வீரா.
இத்தனை நெருக்கத்தில் ஒரு ஆணின் மூச்சு காற்று அவளை தகிக்க வைக்க, உள்ளிருக்கும் உயிர் அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல்தவித்து போனது. தன்னிச்சை செயலாக அவள் பார்வை தாழ்ந்து போக, இப்போது முன்னை விட அதிகமாக இதழ்களை விரித்தவன், “என்ன உதவின்னு கேட்க மாட்டியா” என்றான் ஆழ்ந்த குரலில்.
நான் இன்னும் உதவி செய்யறதா ஒத்துக்கவே இல்லையே என நினைத்தாலும், “என்ன” என்றாள் உதடுகள் நடுங்க.
“நாளைக்கு ஈவினிங் என் ஃப்ரெண்ட்டோட ரிசப்ஷன் தனியா போக ஒரு மாதிரியா இருக்கு. நீ என்னோட வர முடியுமா” என்று கேட்டான். அவன் குரலின் வசியம் அவளை மதி மயங்கிய மானாக தானே வந்து வேடனின் வலையில் விழ வைத்து இருந்தது.
“சஞ்சய்யை கூட்டிட்டு போங்க” வாய் தான் சொன்னதே தவிர கண்கள் வேறு கதை பேசியது.
“நீ தான் பெட்டர் கம்பெனியா இருப்பன்னு எனக்கு தோணுது” என்றான் ஆழ்ந்து பார்த்தபடியே.
“நான் எப்படி வர முடியும், அப்பாகிட்ட கேட்கணுமே” என்றாள் அவள். இத்தனை நாள் இவனுடன் தான் மல்லுக்கு நின்றோம் என்ற எண்ணமே இல்லாமல் அப்பா என்ன சொல்லுவாரோ என்ற யோசனை ஓடிகொண்டிருந்தது அவளுள்.
“ஏன் அம்மாகிட்ட கேட்க மாட்டியா” என்றான் அவன் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு.
“அம்மாகிட்ட” என அவள் யோசிக்க, “அத்தை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, நாளைக்கு ஈவினிங் ஏழு மணிக்கு ரெடியா இரு” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.
அவன் சென்ற பிறகே இப்போ இங்கே என்ன நடந்தது, இவன் என்ன சொன்னான், நான் என்ன சொன்னேன் என புரியாமல் அப்படியே அமர்ந்து விட்டாள் பெண்.
மாயாவி போல வந்து அவள் மனதை மயக்கி சென்றிருந்தான் அந்த மாயவீரன்.
அதன் பிறகு அவன் வழக்கம் போல உலா வர இவள் தான் நாளை மாலை எப்போது வரும் என்ற ஆர்வ குறுகுறுப்போடு சுற்றி கொண்டிருந்தாள்.
மறுநாள் காலையிலேயே வெளியே சென்றவன் மதியம் கூட வீடு திரும்பவில்லை, காலையில் அவள் செல்லும்போது அவனை பார்க்க, ஒரு சின்ன உதட்டு நெளிவுடன் தலையசைத்து விட்டு கிளம்பிவிட்டான்.
மாலை விசேஷத்திற்கு செல்ல வேண்டியது பற்றி எதுவுமே சொல்லவில்லை, ஏனோ மனதிற்குள் சின்ன ஏமாற்றம் பரவுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
இவள் கல்லூரி முடித்து வீடு வந்த போது அவன் வந்திருக்கவில்லை, சரி அவனே திரும்ப அதை பற்றி பேசாத போது நான் மட்டும் ஏன் பேச வேண்டும் என்று நினைத்தவள் தனது வேலையை பார்த்து கொண்டிருந்து விட்டாள்.
மாலை நெருங்கும் நேரம், “அக்கா உன்னை அத்தான் கிளம்பி இருக்க சொன்னார்” என்று கூறிவிட்டு சென்றான் சஞ்சய்.
ஏன் அதை என்கிட்டே சொல்ல மாட்டாரா, அவ்வளவு ஈகோ பார்க்கிறவன் ஏன் என்கிட்டே உதவி கேட்கனும். சிலுப்பி கொண்டாலும் கிளம்ப தயாரானாள்.
ரிசப்ஷன் தானே என்று ஒரு முழு நீள ஸைட் கட் வைத்த டாப்பும் ஜெக்கினும் அணிந்து கொண்டாள். தலையை விரித்து விட்டு இரு பக்கம் கொஞ்சம் முடி எடுத்து கிளிப் போட்டு கொண்டு, ஆங்காங்கே சிறு சிறு நகைகளை அணிந்து கொண்டாள். தயாரானவள் அவன் வந்து விட்டானா என்று பார்க்க வெளியே வர அப்போது தான் அவனும் உள்ளே நுழைந்து இருந்தான்.
இவளை பார்த்ததும் நெற்றியை விரல்களால் தேய்த்து கொண்டவன், “நாம ஒண்ணும் நைட் ஷோ சினிமாக்கு போகலை, கல்யாண வீட்டுக்கு போறோம் புடவை கட்டலாம்ல” என்று கேட்டான்.
இதென்ன பட்டிக்காட்டான் மாதிரி டிரஸ் கோட் பார்த்துகிட்டு, “நாம உங்க ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்ஷனுக்கு தான் போறோம். பட்டு புடவை கட்டி அலங்காரம் பண்ணிட்டு வர கல்யாணம் நமக்கு இல்லை” என்றாள் பட்டென்று.
“நம்ம கல்யாணத்துக்கு ஜீன்ஸ் கூட போட்டுட்டு வா, இப்போ எனக்காக ஸாரி கட்டிக்கிட்டு வாயேன்” என்றான் குழைவாக.
பாருடா, இந்த வில்லனுக்கு கூட பணிந்து பேச தெரியுது என்று சிரித்து கொண்டவள் நம்ம கல்யாணம் என்று அவன் சொன்னதை கவனிக்க தவறி விட்டாள்.
என்னவோ அவன் நயந்து பேசியதே தனக்கு கிடைத்த வெற்றி போல எண்ணிகொண்டவள், உள்ளே சென்று அழகிய புடவை ஒன்றை உடுத்தி, அதற்கு தோதாக நகைகளும் அணிந்து வந்தாள்.
இப்போது அவளை பார்த்து நிறைவாக உணர்ந்தவன், புருவம் உயர்த்தி மெச்சி கொள்ளவும் தவறவில்லை.
“அம்மாகிட்டே சொல்லிட்டு வரேன்” என்று அவள் திரும்ப அருணாவே வந்து நின்றார்.
உச்சி முதல் பாதம் வரை மகளை பார்வையால் வருடியவர், “ரொம்ப அழகா இருக்க தங்கம்” என்று நெற்றியில் முத்தமிட்டார்.
கட்டி அணைத்து பாசத்தோடு பேசியிராத அம்மா, இன்று முத்தமிடமும் விழி விரித்து பார்த்தாள் மகள்.
அம்மாவின் விழிகள் கலங்கி இருந்ததோ என்னவோ, ஊன்றி பார்க்க அவளுக்கு நேரம் கொடுக்காமல், “கிளம்பலாம் நேரமாச்சு” என்று அவளை கை பிடித்து இழுத்து கொண்டு சென்றான்.
காரில் ஏறி அமர்ந்த நேரம், அம்மாவும் அவனும் கண்களால் பேசிக்கொண்டதை நன்றாக பார்க்க முடிந்தது. அவன் ஏதோ சமாதானம் செய்வது போல கண்மூடி திறக்க அருணாவும் தலையசைத்து கொண்டார்.
கார் கிளம்பி சிறிது தூரம் சென்றதும், அமைதியாக வந்தவளை இரு முறை திரும்பி பார்த்தவன் “என்ன இவ்வளவு அமைதி” என கேட்டான்.
“ஒண்ணுமில்லை” என்றாள் யோசனையாக.
“இல்லையே நிறைய இருக்கும் போல தோனுதே” என்றான் அவன்.
“ஆமா அம்மா ஏதோ வித்யாசமா நடந்துக்கிற மாதிரி இருக்கு”
“அப்படி என்ன வித்யாசம்”
“பொதுவா அம்மா கலகலப்பா பேச மாட்டாங்க இப்போ உங்ககிட்டே மணிகணக்கா பேசறாங்க, வெளியே எல்லாம் வர மாட்டாங்க உங்களோட கோவிலுக்கு வராங்க, புது புடவை, நகை, பூ, சிரிப்பு, இன்னைக்கு கொடுத்த முத்தம் வரைக்கும் எல்லாமே புதுசா இருக்கு” என்றாள் புருவம் சுருங்க.
“அத்தை இப்படி இருக்கிறது உனக்கு பிடிக்கலையா”
இந்த கேள்விக்கு அவனை முறைத்தவள், “நான் அப்படி சொன்னேனா” என எதிர் கேள்வி கேட்டாள்.
“சரிடி முறைக்காத அவங்க இப்படி இருக்கிறது உனக்கு பிடிச்சிருக்கு தானே அப்போ அப்படியே ஏத்துக்கோ” என்றான் அவளை பக்கவாட்டில் பார்த்தபடி.
“பிடிக்குது பிடிக்கலை அது இல்லை விஷயம், இத்தனை நாளா இல்லாம இப்போ என்ன. அதுவும் உங்களை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம் என்னவோ நாங்க அவங்களை கொடுமை படுத்திகிட்டு இருந்ததை போல நடந்துக்கிறாங்க” மூக்கை சுருக்கி கோபமாக அவள் சொன்ன விதத்தில் பக்கென சிரித்து விட்டான் வீரா.
“உனக்கு பொறாமையா இருக்கு போலயே”
“நான் எதுக்கு பொறாமைபடனும்” என முகத்தை திருப்பி கொண்டு கேட்டாலும் அவள் கண்ணில் சிறு பிள்ளையின் பொறாமை தெரியத்தான் செய்தது.
“அத்தை என்னோட சகஜமா பேசறது உனக்கு பொறாமையா இருக்கு தானே”
முகத்தை அவன் பக்கம் திருப்பாமலே “லேசா” என்றாள் தலையசைத்து.
“அப்போ இத்தனை நாள் நீ ஏன் இதை எல்லாம் கவனிக்கலை”
“கவனிக்கனும்னா அதுக்கு அவங்க இப்படி எல்லாம் இருப்பாங்கன்னு தெரியனுமே, எங்களுக்கு தான் எல்லாமே புதுசா இருக்கே”
“ம்ஹூம், அவங்க இயல்பே இது தான், அதை தொலைச்சிட்டு தான் இத்தனை நாளும் இருந்திருக்காங்க”.
“அதெப்படி சொல்றீங்க”
“சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன் எனக்கு தெரியாதா என்னோட அத்தையை பத்தி”
அப்படியா என்ற பார்வையை அவள் பார்த்து வைக்க வண்டி நின்று இருந்தது, அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டவன் “இடம் வந்தாச்சி” என்றான்.
“ஓஹ்”..சுற்றிலும் இடத்தை பார்வையிட்டாள்.
“இறங்கலாமா” ஆழ்ந்த குரல் அவனிடம் இருந்து.
அவன் குரல் அவளை கட்டி போட, தலையை மட்டுமே அசைக்க முடிந்தது அவளால், இருவரும் இறங்கி அந்த ஹோட்டலுக்குள் நுழைய “ஹே வீரா” என ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டது ஒரு கூட்டம்.
மலைபகுதியில் சரிந்து விழும் மண் குவியல் போல் வந்து இவனை கட்டிக்கொண்ட கூட்டத்தை பார்த்து இவள் திகைத்து விழிக்க, அவள் புறம் திரும்பி அழகாக கண்ணை சிமிட்டினான் வீரா.