அந்த அறையில் இருந்த அலங்கார கண்ணாடியின் முன்பு அழகு பதுமையென அமர வைக்கப்பட்டிருந்தாள் மங்கை ஒருத்தி. ஒப்பனை செய்யும் பெண்கள் அழகாகவே அவளது முகத்திற்கு ஒப்பனை செய்திருந்தார்கள். இன்னும் நகைகள் மட்டும் அவள் கழுத்திலும், காதுகளிலும் பூட்டப்படாமல் இருக்க, அழகில் குளித்திருந்த முகமோ உணர்வற்று வெறுமையாய் கிடந்தது.
சிறிது தூரம் தள்ளி நின்று நகைகளை எல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்த பெண்களுள் ஒருத்தி தனக்குள்ளேயே புகைந்து கொண்டாள்.
“ஆனாலும் இல்லாத வீட்டு பிள்ளைக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை அமைய வேண்டாம். என்ன பண்றது இவளுக்கு எங்கயோ மச்சம் இருக்கும் போல. மாதிரி பொண்ணுங்களுக்கு கூட எப்படியோ அமைஞ்சிடுது, ஆனா நமக்கு சின்னதா ஒரு வாய்ப்பு கூட கிடைக்க மாட்டுதே. எவ்வளவு தான் உழைச்சாலும் நம்மளை உழைப்பாளின்னு ஒத்துக்க மாட்டேங்குறாங்க. அழகா மேக்கப் பண்ணிக்கிட்டு இவங்க கண்ணு முன்னாடி நடந்தா கூட நம்மளைக் கண்டுக்க கூட மாட்டேங்கிறாங்க. நமக்கு மட்டும் ஏன் இந்த விதி இப்படி பாகுபாடு பார்க்குதோ தெரியல..” என்று அநியாயத்திற்கு சலித்துக் கொண்டாள்.
“என்னடி பண்றது எல்லாருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமையும், ஆனா எப்படியும் சிலருக்கு பிடிச்ச மாதிரி அமையும். ஏதோ ஒண்ணு அமைஞ்சுரும் அவ்வளவு தான் வாழ்க்கை.
நெனைச்ச மாதிரி வாழ்க்கை அமையணும்னு காத்துட்டு இருந்தா எல்லாம் சரியா போயிடுமா? இல்ல நெனைச்சு மாதிரி தான் அமைஞ்சிடுமா? நம்ம தலையெழுத்துன்னு ஒன்னு இருக்கே அதை மறந்துட்டியா? இந்த நேரத்துல இதுதான் உனக்கு கிடைக்கணும்னு எழுதி இருக்கும் போது, அது தானே கிடைக்கும். ஏதோ இந்த பொண்ணு செஞ்ச புண்ணியம் இந்த பொண்ணுக்கு நல்ல இடத்துல வாழ்க்கை அமையப்போகுது அதை நெனைச்சு சந்தோஷப்படு, இப்படி பொறாமைப்படாது. ஆமா உன் பக்கத்து வீட்டு பொண்ணு தானே அவ, அவளைப் பார்த்தே இவ்வளவு பொறாமைப் படுறியே இதெல்லாம் நல்லாவா இருக்கு. அந்த பொண்ணு வாய் நெறைய உன்னை அக்கான்னு வேற கூப்பிடுது, கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுடி..” என்றாள் மற்றொருவள்.
“பொறாமைன்னு சொல்ல முடியாதுக்கா, சின்ன ஆதங்கம் அவ்வளவு தான்.அந்த பொண்ணு மேக்கப் பண்ணாமயே அழகா தான் இருக்கா இல்லைன்னு சொல்லல. நமக்கு ஏன் இப்படி அமையலைன்னு ஒரு சின்ன ஏக்கம். அதனால தான் அப்படி பேசிட்டேன். ஆனா அந்த பொண்ணு நல்லா இருக்கணும்னு நான் நினைக்காத நாள் இல்ல, அதனால தான் நானே மேக்-அப் பண்ணி விடுறேன்னு உங்கள கூட்டிட்டு வந்தேன். காசு கூட வேண்டாம்னு சொல்லிட்டேன்கா..” என்றதும் உடன் வந்தவள் திகைப்பாய் பார்த்தாள்.
“ஏண்டி அவ்வளவு நல்லவளா நீ..”
“அப்படி இல்லக்கா அவங்க அவ்வளவு பாவம்.இந்த பொண்ணுக்கு அம்மா இல்லக்கா எவ்வளவோ கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்காங்க. இருக்கணும்னு நானும் நினைப்பேன் தான் இருந்தாலும் சட்டுன்னு இப்படி ஒரு வாய்ப்பு வரும்போது ஒரு சக மனுஷியா, ஒரு பொண்ணா எனக்குள்ள இருக்க எண்ணம் என்னைய மீறி வெளிய வந்துருச்சு. அதை மறைக்காம சொல்லிட்டேன், அவ்வளவு தானே தவிர அவளுக்கு இந்த வாழ்க்கை அமையக்கூடாதுன்னு நான் நெனைக்கலக்கா. எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கணும் அவ்வளவு தான் எனக்கு வேணும்..” என்று தன் எண்ணவோட்டத்தை சொல்லிவிட்டு அவளுக்கு நகைகளை அணிவிக்க சென்றான் விட்டாள் சிறியவள்.
பெரியவளோ, 'இப்படியும் பேசுறா, அப்படியும் பேசுறா. இவளைப் புருஞ்சுக்கவே முடியல. ' என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளுக்கு உதவி செய்யச் சென்றாள்.
இருவரும் சேர்ந்து பெட்டியில் இருந்த அனைத்து நகைகளையும் அவள் கழுத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுப்பது போல் போட்டு விட்டவர்கள், கைகளிலும் வளையல்களை அதிகமாக அடுக்க முயல,
“ரொம்ப போடாதீங்க கழுத்துல இருக்கிறதே எனக்கு ரொம்ப அதிகமா தெரியுது. இதுலயும் கூட ஒரு அஞ்சாறு செட் நகையை எடுத்துருங்கக்கா கழுத்து வலிக்குது. இல்ல நிச்சியத்தை சிம்பிளா தானே வச்சுருக்கோம், அதுக்கு எதுக்கு இவ்வளவு ஆடம்பரமா பண்ணனும்? எனக்கு இந்த மாதிரி மேக்கப் பண்றது பிடிக்காது, மாப்பிள்ளை வீட்ல இது மாதிரி பண்ண சொன்னாங்கன்னு அப்பா தான் கம்பெல் பண்ணி இப்படி பண்ண வைக்கிறாரு. எனக்கு இதுல சுத்தமா விருப்பமே இல்ல. ப்ளீஸ் நகைகளை மட்டும் கொஞ்சம் கம்மியா போடுங்களேன். எனக்கு நகைகளை பார்த்தாலே அலர்ஜி 10 அடி தூரம் ஓடிருவேன். ப்ளீஸ்..” என்று கெஞ்ச அவளின் குரலைக் கேட்டு பெரியவள் ஆச்சரியப்பட்டு போனாள்.
“இந்த பொண்ணுக்கு என்னடி வயசு இருக்கும்..”
“இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்கா..”
“ஆனா வாய்ஸ் குட்டி பொண்ணுது மாதிரி இருக்குடி. என்னமோ கிளி கீச்சுன்னு கத்தும் பாத்தியா அந்த மாதிரி இருக்கு. கேட்குறதுக்கு. ஆமா படிக்கிற பிள்ளைக்கு எதுக்குடி அவசர அவசரமா கல்யாணம் பண்றாங்க..”
“அதான் சொன்னேனேக்கா தானா தேடி வந்த வாய்ப்புன்னு. நல்ல வாழ்க்கை அமையவும் கல்யாணம் பண்றாங்கன்னு நெனைக்கிறேன். வச்சுக்கிட்டு வேற எதுவும் கேள்வி கேட்காதக்கா, நீ கேட்டாலும் எனக்கு பதில் சொல்ல தெரியாது. எனக்கு இவ்வளவு தான் தெரியும்..” என்று அதோட பேச்சுக்கு புள்ளி வைத்த அந்த பெண், மணப்பெண் சொன்னது போல் பாதி நகைகளை எடுத்து விட்டு அவளுக்கு பிடித்தது போல் சிம்பிளான நகைகளை மட்டும் அணிவித்து விட்டாள். கைகளிலும் இரண்டு வளையல்களுக்கு மேல் போடவில்லை. காதிலும் ரொம்ப பெரிதாக இல்லாமல் நடுத்தரமான ஜிமிக்கியை போட்டு விட சொன்னாள். அதற்கு ஏற்றார் போல் தலையிலும் மாற்றம் செய்து விட சொல்ல, அதையும் அவர்கள் செய்து முடித்தார்கள்.
இப்போது அவள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க, முன்பை விட இப்போது அவள் பேரழகாக இருப்பது போல் தோன்றியது. அதாவது ஒரு சிலருக்கு முக வடிவு இயல்பாகவே அழகாகத் தெரியும். அதை ஒப்பனை செய்கிறோம் என்று கண்டதையும் போட்டு அதிகப்படியாக மெருகேற்றும் போது விகாரமாக கூட போய்விடலாம். முன்பு இருந்ததை விட இப்போது அவளுக்கு அழகு இன்னும் கூடி இருப்பது போல் தான் மற்ற இரு பெண்களுக்கும் தெரிந்தது. முழுதாய் அவள் தயாராகி விட்டதை உறுதி செய்த பெண்கள் இருவரும், “நாங்க வெளியில தான் பாப்பா இருப்போம். டச்-அப் பண்றதுக்கு கூப்பிடு வர்றோம் சரியா..!” என்று சொல்லிவிட்டு வெளியே செல்கையில் உள்ளே நுழைந்தார் அவளது தந்தை கண்ணபிரான்.
தந்தையைக் கண்டதும் பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.
அவரோ இதழ்களின் ஓரம் சின்ன சிரிப்பை சிதற விட்டவராய், “அச்சச்சோ என் பொண்ணுக்கு இன்னும் என் மேலே கோபம் போகலையா?” என்றவாறு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்ச வர, இவள் இந்த முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் தாடையைப் பற்றி தன்பக்கம் திருப்பி, தலை சாய்த்து மகளைப் பார்த்தவர், மகளின் அழகில் மெய் மறந்தார். “தேவதை மாதிரி இருக்க தங்கம். உன் அம்மா மட்டும் இருந்தா உன்னை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவா. ஆனா அவளுக்கு கொடுத்து வைக்கலையே..” என்ற மனைவியின் நினைவில் முகம் வாடியவரின் முகவாட்டத்தை பொறுக்க மாட்டாமல்,
“நல்ல நாள் அதுவுமா முகத்தை இப்படி வைக்காதீங்கப்பா..” என்றவள்,
“உங்களுக்கு என்னப்பா என் மேலே கோபம்..” என்றதும் அதிர்ந்தார்.
“எனக்கு என்னடா தங்கம் உன் மேலே கோபம்..”
“அப்புறம் ஏன்பா எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி விரட்ட பாக்குறீங்க..” என்று மனத்தாங்கலோடு கேட்டவளை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர், “அப்படி எல்லாம் இல்லடா.. எங்களை விட்டு உன்னைய பிரிச்சா எங்கால தாங்கிக்க முடியுமா? உன்னைய இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பணும்னு அப்பா என்னைக்குமே யோசிக்கல தங்கம். நீ என் செல்லம், என் தங்கம், என் குலசாமி, என்னைப் பெத்த ஆத்தாம்மா. உன்னைய விட்டுட்டு எப்படி இருக்க போறமோ தெரியல. உன்னை இப்படி சீக்கிரம் அனுப்பணும்னு அப்பாவுக்கு மட்டும் ஆசையா என்ன? நல்ல இடம் வரும்போது தள்ளி போடக்கூடாது சாமி. அது மட்டும் இல்ல உனக்கே தெரியும் எதனால அப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னே..” என்று அவளைப் பார்த்து கண் கலங்க கேட்டதும், சட்டென்று தன் மன உணர்வுகளை, கவலைகளை தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டவளாய்,
“சரி விடுங்க இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறமும் இதை பத்தி பேசி என்னத்துக்காக போகுது. நாளைக்கும் போட்டுக்கிறேனே. ரொம்ப நகை எல்லாம் வேணாம்பா எனக்கு நகைகளை எல்லாம் பார்த்தாலே அலர்ஜியா இருக்கு. அது மட்டும் இல்லாம ரொம்ப ஓவரா மேக்கப் வேண்டாமே, என்னமோ பேய் மாதிரி ஃபீல் ஆகுதுப்பா. என்னைய என் போக்குல விட்டுடுங்க ப்ளீஸ். இதுக்கு மட்டும் எனக்கு பர்மிஷன் வாங்கி கொடுத்துடுங்கப்பா ப்ளீஸ்..” என்று முகத்தை சுருக்கி செல்லம் கொஞ்சியவளின் பாவனையில் எப்போதும் போல அவள் கேட்டதை செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டார் அந்த பாசமிகு தந்தை.
“சரிமா எல்லாரும் வந்துட்டாங்க வா போலாம்..”
“எல்லாரும் வந்துட்டாங்களாப்பா..”
“மாப்பிள்ளை வீட்ல இருந்தும் வந்துட்டாங்கம்மா.” என்றவாறு மகளின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளிப்பட்டார் கண்ணபிரான். அதே சமயம் அரக்கபறக்க ஓடி வந்தான் அவரது மகன் மிதுன்ராஜ்.
மகனின் கலவரமான முகம் ஏதோ சரியில்லை என்பதை சட்டென்று மகளின் கையை விட்டுவிட்டு மகனிடம் ஓடியவர், “என்னாச்சு தம்பி எதுக்கு இப்படி அரக்கபறக்க ஓடி வர, ஏதாவது பிரச்சனையா?”
“ஆமாப்பா பெரிய பிரச்சனை..” என்று அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளாகவே பட்டுப்புடவை சரசரக்க, உடல் முழுவதும் நகைகளால் உடை அணிந்தது போல் அத்தனை நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அதீத ஒப்பனையோடு வேக வேகமாய் பெருமூச்சுகளோடு அவர் அருகில் வந்து நின்ற அந்த பெண் கண்ணபிரானை முறைத்து விட்டு, அவர் பின்னே எதுவும் தெரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தவளை வேக எட்டுக்கோடு நெருங்கியவர் சட்டென்று அவள் மூடி கற்றையைக் கொத்தாகப் பற்றினார்.
“ஏன்டி அந்த அளவுக்கு ராசி கெட்டவளாடி நீ. அப்பவே சொன்னாங்க அந்த தரித்திரம் புடிச்சவளைப் பொண்ணு கேட்க போறீங்களான்னு. யோசிக்காம விட்டுட்டோம். எங்க பையனும் கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னான், கடைசியா எங்க குடியையே கெடுத்துட்டியேடி. எங்க குடும்பத்தையே அழிச்சிட்டியேடி பாவி..” என்றவர் அவள் என்னவென்று உணரும் முன்பே ஓங்கி அவள் கன்னங்கன்னமாக ஐந்தாறு அறைகளைக் கொடுத்திருக்க, அந்த பெண்ணின் வார்த்தைகளில் அதிர்ந்த கண்ணபிரான் அவரது அடுத்த செய்கையில் பதறி மகளின் அருகில் ஓடியவர், அவரிடம் இருந்து மகளை இழுத்து தன் கைணையில் வைத்துக் கொண்டவர்,
“அம்மா பார்த்து பேசுங்க.என்ன பேசுறோம்னு யோசிச்சு தான் பேசுறீங்களா? பாத்துக்கோங்க.." என்று சொல்லி வாய் மூடவில்லை,
“ஐய்யோ.. ஐய்யோ இப்படி ஊரே பார்த்திருக்க ரெண்டு பேரும் கட்டி புடிச்சுக்கிட்டு நிக்கிறாங்களே. இருக்க மாட்டாங்க, புருஷன் பொண்டாட்டி மாதிரி தான் இருப்பாங்கன்னு, நாங்க கேட்டோமா? பொண்ணு நல்லா இருக்காளே, குணவதியா இருக்காளே, அமைதியா இருக்காளே, யாரையும் எதிர்த்து பேச மாட்டான்னு வேற சொன்னாங்களேன்னு நம்பி பொண்ணு கேட்டு வந்தோம். ஆனா இப்ப தானே உண்மை என்னன்னு தெரியுது. கடவுளே கல்யாணத்துக்கு அப்புறமா இவங்க கள்ள உறவு வச்சுக்கணும்னு தான் அப்பாவியான எங்க மகனை வளைச்சு போட்டாளோ என்னவோ யாருக்கு தெரியும்..” என்ற வாயிக்கு வந்தபடி அந்த பெண்மணி பேச,
“ஏய்..” என்ற மிதுன்ராஜின் அதட்டலில் அதிர்ந்து முழித்தார் அந்த பெண்மணி. இத்தனை பேர் இருக்கும் போது இப்படி தன் தந்தையை பேசி விட்டாரே என்ற ஆத்திரத்தில் அவன் ஏதோ பேச போக, அதே சமயம் தன் தன்னை அணைத்திருந்த தந்தையின் உடலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் அவள். அந்த பெண்மணியிடம் வெறித்திருந்த விழிகளை திருப்பி தன் தந்தையை பார்ப்பதற்குள்ளாகவே வெட்டிய வாழை போல் கீழே சரிந்தது கண்ணபிரானின் உடல்..
“ஐயோ..அப்பா..” என்று அலறியவளும், தலையில் விழுந்த பலமான அடியில், மண்டை உடைந்து இரத்தம் வழிய மயங்கி, மடங்கி கீழே விழுந்தாள்..
- நேசத்தூறல் தொடரும்..

Last edited: