Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 2

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் - 2

“அம்மா நான் காலேஜ் கிளம்பறேன் ‘என்று சொல்லிக்கொண்டே வந்தாள் சாஹித்யா.

“சஹி நேத்திக்கு என்ன நடந்ததுன்னு இப்ப வரைக்கும் நீ கேட்கவேயில்லை... ஏன் மா?”

“அம்மா ப்ளீஸ் நேத்து நடந்தது சின்ன குழந்தைக்கு கூட புரியும்மா ,எனக்கு புரியாதா?”

“சரிடி நீயும் அப்பா மாதிரியே பேசாத நான் உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு நினைச்சது தப்பா?”

“அது தப்பில்லை மா பட் என்னை கேட்காம பொண்ணு பார்க்கிற வரைக்கும் போனது தப்புமா, விட்டுடு மா இனிமே இதைப்பத்தி பேசாதே” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

வெளியே வரும்போது நேற்று தன் தந்தையுடன் பேசியதை நினைத்துக்கொண்டே வந்தாள்.

கோவிலில் இருந்து வந்தவுடன் தன் அப்பாவை தனியே கூப்பிட்டு பேசினாள் சஹி “அப்பா என்ன நடக்குது இங்க? நீங்க ஏன் முன்னாடியே என் கிட்ட சொல்லலை?” என்றாள் கோபமாக...

“சஹி எனக்கே இதைப்பத்தி முதல் நாள் ராத்திரி ல தான் சொன்னாமா உங்க அம்மா..., எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு., என்னம்மா நீயே எப்படி முடிவு எடுக்கலாம்?னு கேட்டதுக்கு ‘நீங்க எப்பவும் நான் சொல்றதை தானே கேக்கறீங்க அதான் நானே முடிவு எடுத்துட்டேன்’ னு கூலா சொல்றா உங்க அம்மா. இதுல நான் காலையில் எழுந்ததும் உன்னோட பேசாம கோவிலுக்கு கிளம்பி போய்டனும்னு ஆர்டர் வேற.. ஏன் ன்னு கேட்டா? ‘நீங்க எதாவது சொல்லி அவளை தடுத்திடுவிங்க’ ன்னு சொல்றா, பட் நான் அப்பவே யோசிச்சிட்டேன். உனக்கு இதுல இஷ்டம் இல்லன்னா ஒத்துக்ககூடாதுன்னு.” என்று சொன்னார் ராகவன்.

“எனக்கு கல்யாணம்னா முதல்ல நீங்க ரெண்டுபேரும் கலந்து பேசி, பிறகு என் கிட்ட வந்து சொல்லி, எனக்கும் பிடிச்சிருந்தாதான் நீங்க அடுத்த ஸ்டெப்க்கு போகணும்.. இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்வாங்க.”

தன் மகளின் கூற்றை ஆமோதிப்பவராக தலையை ஆட்டினார் ராகவன்.

“ஆமா இங்க வந்து தலைய ஆட்டுங்க உங்க ‘’பங்கு’’ கிட்ட ஒன்னும் சொல்லாதீங்க .இது எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்.” என்றாள் சஹி.

“சரி விடு சஹி அவளை நான் பார்த்துக்கிறேன்.. இதுலேர்ந்து உனக்கு கல்யாண வயது வந்துவிட்டதுன்னு தெரியுது.”

“அப்பா நீங்களும்மா?”

“ம்ம்.. நானும் தான் ஆனா நான் உன்னையும் அம்மாவையும் கேக்காம ஒண்ணும் செய்யமாட்டேன்.”

“அப்பா இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”

“இல்ல சஹி, அம்மா செஞ்சது நமக்கு தப்பா தெரியலாம், பட் என் கண்ணுக்கு இன்னும் குழந்தையா தெரியற நீ அம்மா கண்ணுக்கு குமரியா தெரிஞ்சுரிக்க, அதோட விடாம அதை எனக்கு உணர்த்தவும் செஞ்சுட்டா.... என்ன அதை அவளோட பாணில கொஞ்சம் அதிரடியா உணர்த்திட்டா, அது தான் அவ செஞ்ச தப்பு.”

“இப்போ தான் என் கடமை எனக்கு புரியுது. நீ இன்னும் சின்ன குழந்தையல்ல, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.”

“சொல்லும்மா உனக்கு இப்போ எந்த மாதிரி மாப்பிளை வேணும்? இல்ல உன் மனசுல யாராவது இருக்காங்களா?”

“இப்போதான் எம்.சி.எ. பைனல் இயர் பா.....என் படிப்பு முடியவே இன்னும் சிக்ஸ் மந்த்ஸ் இருக்கு..... அது முடிஞ்சதும், வேலைக்கு போகணும் பா அப்புறம்...” என்று சொல்லிக்கொண்டே வந்தாள் சஹி..

“அப்போ உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?”

“தெரியலப்பா இப்போதைக்கு என் மனசுள்ள அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்ல” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அம்மாவின், ”ஏங்க இன்னும் அங்க என்ன பேச்சு?” என்ற வாக்கியத்தினால் சஹியின் பேச்சு தடைப்பட்டது.

“சரிம்மா நாம இதை பத்தி அப்பறமா பேசலாம்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் ராகவன்.

சஹி இவற்றை எண்ணிப்பார்த்துகொண்டிருக்கும்போதே கல்லூரி வளாகம் வந்தது.

“சஹி! சஹி!” என்ற கூக்குரலில் திரும்பி பார்த்தாள் சஹி, அங்கே அவள் தோழி நளினா நின்று கொண்டிருந்தாள்.

“சஹி உன்னை எத்தனை தடவை கூப்பிட்டேன் நீ நிக்கவே இல்ல அப்படி என்னடி யோசனை, உன் எண்ணத்தின் நாயகன் யார்? யார் அந்த பாக்கியசாலி?”

“நளின் கொஞ்சம் சும்மா இரு.”

“சஹி என்ன ஆச்சு?” என்று கவலையுடன் கேட்டாள் நளினா.

சஹி தன் வீட்டில் நேற்று நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள்... தன் அப்பாவிடம் பேசும்போது பேச்சு தடைபட்டதையும் சொன்னாள்.

“சஹி என்னடி ஆன்டி இப்படி பண்ணி இருக்காங்க? அங்கிள்க்கு கோபம் வரலியா? எங்க விட்டுல மட்டும் இப்படி நடந்திருந்தா எங்க அப்பா அவ்ளோதான் அம்மாவ ஒரு வழி பண்ணிருப்பார்.” என்று சொன்ன நளினாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சஹி.

சஹியும் நளினாவும் சிறு வயது முதலே நல்ல தோழிகள் அதனால் சஹியின் குடும்பத்தை நன்றாக தெரியும் தெரிந்தும் தன் தோழி இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்குதான் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே “என்னடி நீயே இப்படி கேக்கற?” என்றாள் சஹி.

“ஆமாம் உங்க அம்மா எப்பவும் இப்படி தான் படு ஸ்பீடு, உங்க அப்பாக்கிட்ட எதுக்குமே கலந்து ஆலோசிக்க மாட்டாங்க ,எப்பவும் டாமினேட் பண்ணனும், அதுக்காக பொண்ணுக்கு மாப்பிளை யா பார்ப்பாங்க?, அதை அங்கிள்க்கிட்டையும், உன்கிட்டயும் சொல்லமலா செய்வாங்க... எனக்கு ஆறவேயில்லை” என்று கோபத்துடன் சொன்னாள் நளினா.

“விடுடி அம்மா எப்பவுமே இப்படி தான் அதையும் அப்பா சரியான கோணத்தில் எடுத்துப்பார்.. இப்ப கூட அம்மா பண்ணினத உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுன்னு புரியவச்சிட்டான்னு சொல்றார். அப்பா இப்படி இருக்கிறதுனால தான் அவங்க லைப் ஸ்மூத்தா போயிட்டிருக்கு ன்னு நினைக்கிறேன்.” என்றாள் சஹி.

“சரிடி.. ஆன்டிக்கு, அங்கிள் போன் பண்ணினதும் நீ ஏண்டி “ஹப்பா என்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க ன்னு சொன்ன?”

“அதுவா அப்பா போன் பண்ணி விஷயத்தை சொல்லும்போது அம்மா தலையில் அடிச்சிக்கிட்டே, ‘நீங்க சொல்லுங்க’ன்னு ரொம்ப பவ்யமா பேசினாங்க.. சரி இனி அம்மாக்கு என்னைப் பத்தி ஒண்ணுமே நினைவு இருக்காதுன்னு நினைச்சு தான் அப்படி சொன்னேன்.. .பாவம் அப்பா செம்மையா மாட்டிட்டார். பார்க்கறதுக்கே ரொம்ப காமெடியா இருந்துச்சு” என்றாள். சிரித்துக்கொண்டே அதைப்பத்தி சொன்னா இன்னும் டூ எபிசொட்ஸ் வேணும் என்னடி சொல்லவா?” என்று கேட்டாள் சஹி.

“அய்யய்யோ! வேண்டாம்டி ஆளை விடு”, என்று அலறினாள் நளினா.

“சஹி நெக்ஸ்ட் வீக் கம்பஸ் இன்டர்வியூக்கு எந்த கம்பெனி 1st வருது தெரியுமா?”

“எந்த கம்பெனி நளின்?”

“அவ்யுக்த் சொல்யுசன்ஸ்“ என்றாள் நளினா.


இளையராஜா பாட்டை கேட்டுகொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் பரத்.
சிடியில் "சாலையோரம் சோலை ஒன்று " என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
பரத் அந்த பாடலின் இசையையும் பாடல் வரிகளையும் மிகவும் ரசித்து கேட்டுகொண்டே... காரை ஒரு திருப்பத்தில் திருப்பினான் ....

“தொம்” என்ற சத்தம் கேட்டு காரை நிறுத்தினான். அவனுக்கு புரியவேயில்லை எங்கே இருந்து சத்தம் வந்தது என்று அதனால் காரை விட்டு கீழே இறங்கினான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவன் வண்டியின் முன்னால் ஒரு இளம்பெண் விழுந்திருந்தாள் அருகே அவள் வண்டியை பிடித்துக்கொண்டு இன்னொரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

அவன் காரை விட்டு இறங்கி வருவதை பார்த்த கீழே விழுந்தபெண், “யோவ்! என்னய்யா வண்டிஓட்டற?” என்று கத்தினாள்.

சற்று அதிர்ந்த பரத், ”என்னம்மா ஏதாவது அடி பட்டுவிட்டதா?” என்றான்.

“யோவ்! முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுய்யா.”

“நான் கிரீன் சிக்னல்ல தான் வந்தேன், உங்களுக்கு தான் ரெட் நீங்க வந்தது தான் ராங் வே.”

“இது டூ வீலர் தானே நீ கொஞ்சம் சைடு வாங்குவேன்னு நினைச்சு வந்தா நீ பெரிய இவனாட்டம் எங்கயோ பராக்கு பார்த்துட்டு வந்து என் வண்டி மேல இடிச்சு..” என்று கத்திக்கொண்டிருக்கும்போது ''நளின்...நிறுத்துடி போலாம்'' என்றாள் நின்று கொண்டிருந்த பெண்.

“நளின், இங்க பாருங்க தப்பு உங்க மேல வச்சிட்டு என் கிட்ட கோபப்படாதிங்க” என்றான் பரத்.

“யோவ்! நீதான் எனக்கு பேர் வச்சியா?”

“இது தான் இப்ப உன் பிரச்சினையா?” என்று ஒருமையில் அழைத்தான் பரத்.

அவன் ஒருமையில் அழைப்பதை கவனித்த சஹி “ப்ளீஸ் எழுந்திரி நளின் நாம போகலாம்..” என்றாள் .

நளினாவுக்கு கோபம் தலைக்கு ஏற “சஹி! எங்கடி எழுந்துக்கிறது? என்னால எழுந்துக்கவே முடியல.. நீ கை கொடுப்பன்னு பார்த்தா வண்டிய பிடிச்சு நிறுத்திட்டு அப்படியே நின்னுட்டு இருக்க... இந்த ஆளு அதை பார்த்து சிரிச்சிட்டு இருக்கான். உன்னை...” என்று பொரிந்து தள்ளிவிட்டாள் நளினா.

அப்பொழுதான் தன் தவறு உணர்ந்து “சாரி நளின்” என்று சொல்லிவிட்டு வண்டியை ஸ்டான்ட் போடாமலே விட்டுவிட்டு ,நளினாவை தூக்கிவிட சென்றாள்.

“அம்மா” என்ற அலறலில் நின்று திரும்பி பார்த்தாள். ஸ்டான்ட் போடாத வண்டி அந்த ஆளின் காலின் மேல் விழுந்து இருப்பதை கவனித்து “அய்யோ! சாரி சார்.” என்று சத்தம்மாக சொல்லிக்கொண்டே வண்டியை தூக்கி விட முனைந்தாள்.

“மேடம், ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க நானே வண்டிய தூக்கி தள்ளி வைக்கிறேன், என் அடுத்த காலாவது தப்பிக்கும்..”என்று சொல்லியபடியே வண்டியை தூக்கி ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான்.

“தான்க் யு சோ மச் சார்.” என்றாள் சஹி.

“நம்மள விழ வச்சவன்க்கு இந்த தேங்க்ஸ் ரொம்ப தேவையா?” என்றாள் நளினா.

“நளின் நம்ம மேல தப்ப வச்சிட்டு நீ இப்படி பேசறது சரியில்லை.”

“சார் ஒன்ஸ் அகைன் சாரி அண்ட் தேங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு தோழியை எழுப்பி கூட்டி சென்றாள் சஹி.

எழுந்து நடக்கும்போது திரும்பி பரத்தை பார்த்து முறைத்து விட்டு “வந்துட்டான் பெரிய புன்னகைமன்னன்னு நினைப்பு.” என்று சொல்லியபடியே சென்றாள் நளினா.


இதை பார்த்துக்கொண்டிருந்த பரத்தின் புன்னகை அதிகரித்தது.. சிரித்துக்கொண்டே காரை நோக்கி சென்றான் அப்பொழுது அவன் செல்போன் ஒலித்தது.

“ஹாய் அவ்யுக்த், சொல்லுடா” என்றான் சிரித்துக்கொண்டே.

சிரித்துக்கொண்டே பரத் பேசியதை கேட்ட அவ்யுக்த், “பரத் என்ன இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று கேட்டான்.

“இல்லடா இப்ப தான் இங்க படபட பட்டாசு வெடிச்சுட்டு போச்சுன்னு..” என்று ஆரம்பித்து நடந்ததை தன் தோழனுக்கு தெரிவித்தான்.

அவ்யுக்தும் சிரித்துக்கொண்டே “நீ ஏன்டா சிரிச்ச?, அதான் கோபம் அவங்களுக்கு.”

“நீ இங்க இருந்தாலும் சிரிச்சுருப்ப டா, நளின் அவ பிரண்டு வந்து தன்னை வந்து தூக்கி விடுவான்னு நினைச்சு அவங்களை பார்த்தா... அவங்க முதல்ல வண்டிய தூக்கிட்டு நிக்கறாங்க..., நளின்க்கு அழுகையே வந்துடும் போல இருந்தா டா, எனக்கு சிரிப்பு வந்துடுச்சு அவ்ளோ தான் டா. சரி நீ இப்போ எதுக்கு போன் பண்ணின அதை சொல்லு?”

அவனுக்கு தன் வீட்டில் நடந்ததை சுருக்கமாக சொல்லி விட்டு, “அம்மா எனக்கு த்ரீ மந்த்ஸ் டைம் கொடுத்திருக்காங்க டா அதுக்குள்ள உன் மனசுக்கு பிடிச்சவளை கண்டுபிடி இல்லைனா நான் சொல்றவளை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரே அன்பு தொல்லை டா.”

“விடுடா, த்ரீ மந்த்ஸ் டைம் இருக்கே” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “டேய் நளின் பிரண்டு உனக்கு ஏத்தவங்க மாதிரி இருக்காங்க டா... நீ சரின்னு சொல்லு நான் போய் நளின் கிட்ட பேசி அவங்க ஊரு, பேரு எல்லாம் வாங்கி தரேன் நீ போய் அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்கு.” என்றான் பரத்.

பரத் பேசியதை கேட்டு அதிர்ந்தான் அவ்யுக்த்.
 
ஹா ஹா ஹா
அடேய் பரத்
சாஹித்யாவை அவ்யுக்த்துக்கு
ஜோடி சேர்க்கக் கிளம்பிட்டியே
ஒரு வார்த்தை சாஹிக்கிட்டே
நீயி கேட்டியா, பரத்
 

Advertisement

Top