Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 12

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 12

சந்தோஷிற்க்கு தன் எதிரில் ரிஷிகேஷை பார்த்ததும் சட்டென மூண்ட மெல்லிய பயத்தில் வியர்த்து கொட்டியது.



முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாது, குரலை சரிசெய்து, "என்ன ஐயா, இங்க நிக்குறீங்க!?" என கேட்டான்



அவனையே வெறித்தபடி

"இது என் வீடு!!!" என்றான்.

ரிஷியின் பதில் சற்று திமிராகவே இருந்துது.



"அதானே!! இது உங்க வீடு,, நீங்க எங்க வேணுனாளும் நிக்கலாம்.. ஆனா நான் அந்த மாறி அர்த்ததுல கேட்கல ஐயா, எங்கயாச்சும் போனுமா? அதுக்காக என்னை கூப்புட இங்க வந்துருப்பீங்களோனு கேட்டேன்... வண்டி எடுக்கட்டுமா??" பயபக்தியுடன் அவன் கேட்க,



சந்தோஷிடம் கண்களால் 'ம்ம்ம்' என்ற ரிஷியை திரும்பி பார்த்தபடியே சந்தேகத்துடன் வண்டியை எடுத்தான் சந்தோஷ்.



கார் மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருக்க,, ரிஷி இன்னமும் சந்தோஷயே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.



ஓரகண்ணால் அவனை கவனித்த சந்தோஷ்," இது என்னடா வம்பா போச்சு! லவ்வர பார்க்கிற மாறி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறான. நம்ம பேசுனது கேட்ருந்தா அப்போவே எதாது பண்ணிருக்கணுமே?! ஒருவேளை கேக்கலையோ!! கேக்கலனா எதுக்கு இப்படி பாத்து தொலைகிறான்...!!!!" என நினைத்தபடி அசௌகரியமாய் உணரதொடங்கினான்.



"காரை நம்ம ECR ரோடு பங்களாக்கு விடு...!!!" ரிஷி சொல்லவும் அவனை வித்தியாசமாய் பார்த்த சந்தோஷ், "அங்க எதுக்கு ஐயா,, ஏதும் பார்ட்டியா?" என்றான்..



"ஏன்? அதெல்லாம் சொன்னதான் துரை வண்டிய விடுவீங்களோ?"



அதன்பின் நல்ல பிள்ளையாய் ரிஷி சொன்னதை செய்தான் சந்தோஷ்.



அங்கே காவலுக்கு இருந்தவரிடம்," சங்கர் நீ உன் வீட்டுக்கு போ,, நான் போறப்போ உன்னை கூப்பிடுறேன்..." என பங்களா பின்புறம் அவனுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்க்கு வாட்ச்மேனை அனுப்பி வைத்தான் ரிஷி.



காரினருகே நின்றிருந்த சந்தோஷை பார்த்து," உள்ள வா!" என சொல்லிவிட்டு அந்த பெரிய வீட்டிற்குள் புகுந்துகொண்டான்.



"சந்தோஷ்,, உஷாரா இருடா... இவன் என்னமோ பிளான் பண்ணிட்டான்... " என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவன் பின்னூடே சென்றான் சந்தோஷ்.



வீட்டின் நடுவில் போடப்பட்டிருந்த சோபாவில் சௌகர்யமாய் அமர்ந்திருந்தான் ரிஷி.

"கதவை நல்லா தாழ் போட்டுட்டு வந்து இப்படி நில்லு..." மறுபேச்சின்றி அவன் சொன்னதை செய்தான் சந்தோஷ்.



"சொல்லு"- ரிஷி



"என்ன ஐயா சொல்லணும்...?"



"தெரியாத மாறி நடிக்காத சந்தோஷ்...."



"உண்மையிலேயே புரியல ஐயா!!!"



"ஓ!!! உனக்கு புரியல!? ம்ம்ம்.... சரி... ராம் எங்க இருக்கான்?? சொல்லு..."



தான் பேசியது அனைத்தையும் அவன் கேட்டுவிட்டதை உணர்ந்த சந்தோஷ்," ராமா? அது யாரு??? எனக்கு ஏதும் தெரியாது!!!" என்றான்.



"நடிச்சது போதும் சந்தோஷ்... நீ டிரைவர் வேலை கேட்டு வந்தப்போவே உன்மேல சந்தேகம் தான் எனக்கு... உன் மூஞ்சியை பாத்தா யாராது டிரைவர்னு நம்புவாங்களாடா!!!? " என அவன் சொல்லவும் இனியும் மறைக்க முடியாது என உணர்ந்த சந்தோஷ்,"ஆமா,, நான் வேற நோக்கத்துல தான் உன் வீட்ல டிரைவர் வேலையில சேர்ந்தேன்... அதுக்கு இப்போ என்ன???" என குரலை உணர்த்தினான்.



"ராம் இப்போ எங்க இருக்கான்??? அதை மட்டும் சொல்லு..."



"எதுக்கு?? தேடி போய் அவனை கொல்லவா?? " சினமாய் சீறினான் சந்தோஷ்.



"அப்போ உனக்கு ராம் எங்க இருக்கானு தெரியும்.. அப்படித்தானே???" ரிஷி கேட்க,



"ஆமா தெரியும்... ஆனா அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை... உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ!" என சொல்லிவிட்டு கதவை நோக்கி சென்றான் சந்தோஷ்.



"ராம்க்கு என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியவேணாமா சந்தோஷ்?"



அவன் கேள்வியில் நின்ற சந்தோஷ்," அவனை நீங்க தான் இந்த நிலைமைக்கு ஆக்கிருப்பிங்கன்னு எனக்கு தெரியும்... ஒரு கொலை பண்ணுன உங்களுக்கு,, எதுமே தப்பா தெரியாது..." என்றான்.



"நீ சொல்றது சரி தான்... ஆனா ஒரு கொலை பண்ணுன நாங்க ஏன் இன்னொரு கொலை பண்ணலனு நீ யோசிக்கலையா சந்தோஷ்???"



"இப்போ அதுக்காக தானே உங்க அப்பா ராமை தேட சொல்லிருக்காரு..."



"சந்தோஷ்!!! நீ என்னை நம்பு... நான் என் அப்பா மாறி கிடையாது ... " பொறுமையாய் பேசினான் ரிஷி.



"வேற எப்படி?? நல்லவன் மாறி பேசி கழுத்தருக்குற ஆளா???" சந்தோஷ் முகத்தில் கோவம் வெளிப்படையாக தெரிந்தது.



"சந்தோஷ் நான் சொல்றத நம்பு... ராம்க்கு நான் நல்லது தான் நெனச்சேன்... நினைக்குறேன்..."



"இதை நம்ப நான் என்ன லூசா?? அவ்ளோ நல்லவனா இருந்தா ராம் அப்பாவ,, உங்க அப்பா கொலை பண்ணப்போ நீ ஏன் சும்மா இருந்த??? ராம்க்கு எதுக்கு இப்படி ஆகவிட்ட??? அப்போ எதுமே பண்ணலயே நீ???"



ரிஷி அவனை ஆயாசமாய் பார்க்கவும்,"என்ன?? எனக்கு எதுவுமே தெரியாது!! நான் ஊருலயே இல்லன்னு கதை சொல்ல போறியா??" என்றான் சந்தோஷ்.



"நீ நம்புனாலும் நம்பாட்டியும் அதுதான் உண்மை... நான் என் மாமா இறந்தப்போ இங்க இல்லை,, என் அப்பாதான் அவர் சாவுக்கு காரணும்னு அப்போ எனக்கு தெரியாது...."



அதுவரை கதவருகே நின்றிருந்த சந்தோஷ், இப்போது சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.



"என்ன? போனவன் திரும்ப வந்து உட்காந்துக்கிட்டானேனு பார்க்குறியா?? உன் கதை ரொம்ப பெருசா போகும்னு நெனைக்குறேன்.... சோ உட்காந்து கேப்போம்... சொல்லு...."



சந்தோஷின் நக்கலை பொருட்படுத்தாது தன்னை புரியவைக்கும் நோக்குடன் நடந்ததை சொல்ல தொடங்கினான் ரிஷி.....



"எடின்பர்க்ல இருந்து ராம் சென்னைக்கு வந்த பிறகு தான் நானும் என்னோட காலேஜ் டூர்ல இருந்து ரிட்டர்ன் வந்தேன்... மாமா விபத்துல இறந்துட்டார்ன்னு என்னால நம்பவே முடியல... அப்போ நான் ராமை தேடி அவன் ரூம்க்கு போனேன்.......... அப்போ......!!!"



(இரண்டு வருடங்களுக்கு முன்பு...)



"ராம்??? " தன் மெத்தையில் ஓய்ந்து போன தோற்றத்தோடு படுத்திருந்த ராமை தேடி வந்த ரிஷி மெதுவாய் அழைத்தான்.



"சொல்லு ரிஷி" என்றான் ராம் இயல்பாய்.



"மாமாவோட இழப்பு நமக்கு ரொம்ப பெருசு... அதை நம்மலால ஈடுகட்டவே முடியாது... எனக்கே இதை தாங்கிக்க முடில... நீ இப்படி கொஞ்சம் கூட அழுகாம, இறுகி போய் இருக்குறது என்னவோ எனக்கு சரியாபடல ராம்... அழுதுடேன்... மனசு விட்டு அழுடா...."



"டேய் நீ எப்போ இருந்துடா இப்படி பெரிய மனுஷநாட்டம் பேச ஆரம்பிச்ச? போ போ!! போய் உன் டேட்டிங் ஸ்கெடூயூல கரெக்ட் பண்ணு, இல்லனா ட்ராபிக் ஜாம் ஆகிடபோது....ஹாஹா" முகத்தில் எதையும் காட்டாமல் எப்போதும் போல பேசி சிரித்தான் ஸ்ரீராம்.



"போடடடடடா!!! உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு...." என நொந்துகொண்டு சென்றவன் திரும்பி வந்து, "எனக்கு ட்ராபிக் ஜாம் ஆகாம எப்படி டேட்டிங் ஸ்கெடூயூல் மெயின்டெயின் பண்ணனும்னு ஒரு பெரிய மகான் சொல்லி கொடுத்துருக்காரு... சோ நோ பிரோப்ளேம் போர் மீ...." என ராமை வம்பிழுத்து சிரித்துவிட்டு ஓடினான் ரிஷி.



என்னதான் ரிஷியிடம் இயல்பாய் இருப்பது போல பேசிவிட்டாலும், தன் தந்தையின் இழப்பு தன்னை மிகவும் பாதித்திருப்பதை உணர்தான் ராம். ராம் பிறந்ததும் அவன் தாய் தவறிவிட, தந்தையின் அரவணைப்பில் தாயை கூட நாடியது இல்லை அவன். இப்போது அவன் மனம் எதற்கோ ஏங்கி நின்றது. எத்தனை வளர்ந்தாலும் பெற்றோரின் அரவணைப்பை இழப்பது பெரும் துயராய் தோன்றியது. ஆயினும் அவன் அழுகவே இல்லை. மருத்துவனாய் இருந்தும் அவன் செய்த பிழை அது ஒன்றே! உணர்வுகளின் ததும்பல்களை இயல்பாய் வெளிவிடாமல் அடக்கி வைத்தான்.



ஒரு வாரம் சென்ற நிலையில், காலை உணவின் போது,



"ஸ்ரீராம்?" விஸ்வநாதன் பேச்சை தொடங்கினார்.



"மாமா... சொல்லுங்க..." வைவரை கொண்டு சென்ற உணவை நிறுத்திவிட்டு மரியாதையாய் பேசினான் ராம்.



"என்ன முடிவு பண்ணிருக்க?" சோகத்தின் சாயலில் தொங்கிய முகத்துடன் கேட்டார் விஸ்வநாதன்.



"எதை பத்தி???"



"இதுவரைக்கும் பிசினஸ் மச்சான் பொறுப்புலதான் இருந்துச்சு... இனிமே அது உன் பொறுப்புல இருக்கணும்..." என்றார் விஸ்வநாதன்.



அவர் அவ்வாறு சொல்லவும், நெற்றி சுருக்கி யோசிக்க தொடங்கினான் ராம்.



அவர்கள் பேச்சை கேட்டபடி உணவருந்தி கொண்டிருந்தான் ரிஷி. விஷ்வநாதன் சைகை காட்ட, அவர் மனைவி லட்சுமி அதை சரியாய் புரிந்து கொண்டு பேச தொடங்கினார்.



"தம்பி இந்த அத்தை சொல்றேன்னு தப்பா நினைக்காத!! உங்க அப்பாக்கு ரொம்ப பெரிய மனசு... அதனாலதான் முறைத்தவறி பொறந்த என்னை சொந்த தங்கச்சியாட்டம் இங்க கூட்டி வந்து கல்யாணம் செஞ்சு வச்சு ஒரு நல்ல நிலைமையில வச்சுருந்தாரு... இவ்ளோ நாளு அவர் தயவுல இருந்துட்டோம்... இனிமே உனக்கு வரபோரவ என்ன சொல்லுவாளோ? ஏது சொல்லுவாளோ?! அவளா ஒரு சொல்லு சொல்றதுக்குள்ள நாங்க இங்க இருந்து போய்டுறோம் தம்பி... அதான் எங்களுக்கும் மரியாதை!!!!"



தன் அத்தையின் பேச்சில் அதிர்ந்தவன், "அத்தை? என்ன பேசுறீங்க நீங்க? எங்க போறேனு சொல்றிங்க?

மாமா! இங்க பாருங்க! அத்தை என்ன சொல்றாங்கன்னு!!?" என விஸ்வநாதனிடம் முறையிட்டான் ராம்.



"அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு ஸ்ரீராம்? இவ்ளோ நாளா ஓசி சாப்பாடு சாப்பிட்டுட்டு உயிர் வாழ்ந்துட்டோம்.... இனிமேலும் அப்படியே இருக்க முடியுமா??" பரிதாபத்தை தூண்டினார்.



அவரும் அவ்வாறு சொல்லவும் திகைத்தவன், திரும்பி ரிஷியை பார்த்தான். தட்டில் இருந்த ஒரு தோசை கூட தொண்டையில் இறங்காமல் குனிந்த தலையோடு அமர்ந்திருந்தான்.



அவன் நிலையை யூகித்த ராம், எழுந்துநின்று உறுதியாய் கூறினான். "உங்க எல்லாருக்கும் இப்போ ஒன்னு சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க... என் வாழ்க்கையில ஒரு பெண்ணுக்கு இனிமே இடமே கிடையாது... நான் கல்யாணமே பண்ணிக்க போறது இல்லை... வராத ஒருத்திகாக நீங்க யாரும் இந்த வீட்டை விட்டு போகணும்னு அவசியம் இல்லை....

இதுவரைக்கும் அப்பா கூட இருந்து பிஸினஸ் பாத்துகிட்டது நீங்க தானே மாமா?? இனிமேலும் அதை நீங்க தான் என் அப்பா ஸ்தானதுல இருந்து கவனிக்க போறீங்க.... நான் இருக்க வேண்டிய இடத்துல இனி ரிஷி இருப்பான்... நீங்க வக்கீல் அங்கிள்ல வர சொல்லுங்க” என சொல்லிவிட்டு அவன் எழுந்துகொள்ள, ரிஷியும் அவனூடே எழுந்து சென்றான்.



தங்கள் திட்டம் எளிதில் வெற்றி பெற்றதை நினைத்து சிரித்து கொண்ட விஸ்வநாதனும் லட்சுமியும் ராம் சென்று விட்டதை உறுதி செய்துகொண்டு சத்தமின்றி பேசினர்.



"எப்படிங்க இவ்ளோ சரியா சொன்னிங்க?" என ஆச்சரியமாய் கேட்டாள் லட்சுமி.



"எங்க அடிச்சா பழம் கனியும்னு உன் புருஷனுக்கு நல்லா தெரியும்டீ!!! இன்னும் என்ன எல்லாம் பண்ண போறோம்னு பாரு.. இந்த ஆஸ்தி முழுக்க நமக்கு தான்!! ஹாஹாஹா"



இதை ஏதும் அறியாத ராம், ரிஷியின் மனநிலையை மாற்ற எண்ணி அவனை சிரிக்க வைத்துக்கொண்டு கடற்கரையில் உலவி கொண்டிருந்தான்.


"டேய் சிரிடா!!! முஞ்சிய இப்படி வச்சுருந்தா என்னலயே உன்னை பாக்க முடில.... சிரிச்சுதொல...." காரை கடற்கரையை நோக்கி செலுத்தியபடியே இடக்கையால் ரிஷியின் இடையில் கிச்சு கிச்சு மூட்டியபடி பேசிக்கொண்டிருந்தான் ராம்.



"டேய் அத்தை மாமா பேசுனதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காதடா!!! அவங்க தெரியாம பேசிட்டாங்க...." என ராம் கூற,, "அவங்க சொன்னதெனல்லாம் உண்மை தானே ப்ரோ!" என ரிஷி கனத்த குரலில் சொன்னான்.



"எதுடா உண்மை??? உங்ககிட்ட இதுவரைக்கும் நாங்க எதாது வித்தியாசமா நடந்துகிட்டோமா??? இன்னொரு தடவ இப்படி நீ பேசுனா என்னை பாக்கிறது இதான் கடைசி முறையா இருக்கும்.... சொல்லிட்டேன்..." என ராம் முறுக்கிக்கொள்ள ரிஷி தன் இறுக்கத்தை விட்டு தணிந்து வந்தான்.



சிறுவயது முதல் நேற்று நடந்தது வரை ஒருவருக்கொருவர் நினைவுகூர்ந்து பேசி சிரித்தபடி கடற்கரையில் உலவிக்கொண்டிருந்தனர்.



"அடுத்து என்ன பண்ண போற ப்ரோ??? எனி பிளான்..???" ரிஷி வினவினான்.



அலைகளில் காலை நனைத்தவாறே, " நாட் எட் பிஸ்க்(fix)டா... பெங்களூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல apply பண்ணிருக்கேன். அவங்க போன் பண்ணதும் அங்க போயிடுவேன்... அவ்ளோதான் இப்போதைக்கு ப்ளான்!" என்றான் ராம்.



"ப்ரோ? நமக்கு இருக்க சொத்துக்கும்,, உன்னோட குவாலிபிகேஷன்க்கும், இங்க நம்மலே ஒரு பெரிய ஹாஸ்பிடல் கட்டலாம்... நீ ஏன்டா இன்னொருதன்ட்ட போய் நிக்கனும்???"



"ம்ம்ச்.... கொஞ்ச நாள் வேற எங்கயாது இருக்கணும்னு தோணுது ரிஷி, அதுவும் இல்லாம இது கூட எனக்கு எஸ்பிரியன்ஸ் தானே!!! இங்க நம்ம ஹாஸ்பிடல் வைக்குறப்போ திணராம இருப்பேன்ல...." ராம் முடிவு செய்துவிட்டான் என உணர்ந்துக்கொண்டன் ரிஷி.



"என்னவோ முடிவு பண்ணிட்டா போல.. நாங்க சொன்னா மட்டும் நீ கேட்கவா போற...." அலுத்துக்கொண்டான்.



ராமின் கைபேசி சிணுங்கவும், "அதானே பாத்தேன்... என்னடா இது இவ்ளோ நேரமா உன் கோபியர்கள் உன்னை கூப்புடமா இருக்காங்களேன்னு... போ போ போய் பேசு....." என்றான் ரிஷி நக்கலாக.



"இது கௌதம் டா .. என் பிரண்ட்.... " என சிரித்தபடி அவன் முதுகில் தட்டிவிட்டு அழைப்பை ஏற்று பேசி முடித்தான் ராம்.



அங்கே வீட்டில்...!!



"என்ன சார்,, திடீர்னு பேக்டரி பொறுப்பை உங்களுக்கு மாத்தி கொடுக்குற மாறி பத்திரம் தயார் பண்ண சொல்லி போன் பண்ணீங்க.... ராம் சார் இன்னும் விளையாட்டா தான் இருக்காரோ...???" வக்கீல் வரதன் விஸ்வநாதனை வினவினார்.



"சின்ன பையன் தானே!! அப்படி தான் இருப்பான்... என்னையே எல்லாம் பாத்துக்கோங்கனு சொல்லிட்டான்.. ஸ்ரீராம் தான் பொறுப்பு இல்லாம இருக்கான்,, ரிஷியாது கம்பெனி விவகாரம் எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்ல... அதான் அவனுக்குனு ஒரு பதவியை குடுத்து உட்கார வச்சுடலாம்னு யோசிச்சேன்...." தன் விஷ எண்ணங்களின் மேல் தேன் தடவி சொன்னார் விஷ்வநாதன்.



"சரிதான் சார்... நீங்க கேட்ட மாறியே எல்லாம் ரெடி பண்ணியாச்சு.... ராம் சார் சைன் பண்ணிட்டா "power of attorney" உங்க பேருக்கு வந்துடும்... நீங்க ஒரு முறை செக் பண்ணிடுங்க"



"இங்க வச்சுடுங்க வரதன்.. நான் இதை சரிபாத்துட்டு, ஒரு நல்ல நாளுல, ராம் சைன் பண்ணினதும் உங்களுக்கு அனுப்பி வைக்குறேன்... நீங்க அதை ரிஜிஸ்டர் பண்ணிடுங்க..."



வக்கீல் வரதன் தன் வேலையை முடித்து கொண்டு சென்றதும் விஷ்வநாதனின் அலுவலக அறைக்கு,, அதாவது முன்பு ராம் தந்தையின் அலுவலறையாக இருந்த அறைக்கு வந்த லட்சுமி கதவை தாழிட்டுவிட்டு அவரிடம் பேச தொடங்கினார்.



"என்னங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? சொத்து நமக்கு தானே?" அவசரப்பட்டார் லட்சுமி.



"ம்ம்ம்... அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடுமா லட்சுமி??? கொஞ்ச கொஞ்சமா தானே கறக்க முடியும்..."



"அதும் சரிதான்... பத்திரம் தான் தயாரா இருக்கே!!! ராம் மனசு மாறுறதுகுள்ள அவன்கிட்ட கையெழுத்து வாங்கிடுங்க... லேட் பண்ணாதீங்க....!!!" என தன் கணவனை துரித்தப்படுத்தினாள்.



"இல்ல லட்சுமி !! ஒரு முறை அவசரப்பட்டுதான் என் ஆசை மச்சான்ன கொல்ல வேண்டியதா போச்சு... அதனால இனி எது பண்ணாலும் யோசிச்சு பண்ணனும்.. சரியான சமயம் பாத்து அவன்கிட்ட காயை நகர்த்தனும்.... அதை நான் பார்த்துக்குறேன்,, விடு"



அடுத்து செய்யவேண்டிய காரியங்களை எந்த பிசகும் நேராமல் இருக்க பொறுமையாய் ஆயிரம் முறை யோசித்து, தன் திட்டத்தை செதுக்கினார் விஷ்வநாதன்.



"ரிஷி பக்கத்துல இருக்க மால்க்கு போலாமா?? அங்கேயே லஞ்ச் முடிச்சுட்டு அப்படியே ஓரு படம் பாத்துட்டு வருவோமா?" கடற்கரை மணலில் நடந்தவாறே கேட்டான் ராம்.



"சூப்பர் ப்ரோ... வீகெண்ட் வேற!!! கலர் கலரா வரும்... வாங்க வாங்க போவோம்...." ராமை இழுத்துக்கொண்டு சென்றான் ரிஷி.



அங்கே ஷாப்பிங் மாலில் மதிய உணவை முடித்தவர்கள்,, சுற்றி வேடிக்கை பார்த்தபடியே,, மூன்றாம் தளம் நோக்கி முன்னேறி கொண்டிருந்தனர்.



"ப்ரோ அந்த எல்லோ ட்ரெஸ்ஸ பாரேன்.... மூக்கு குடைமொளகா மாறி திருப்பிக்கிட்டு இருக்கு... ஹாஹா!!!!"



"டேய் லூசு... பொண்ணுங்க ஒவ்வொருதரும் ஒவ்வொருமாறி அழகுடா!!!! அந்த பொண்னு மூக்க ஏன் குடைமிளகான்னு சொல்ற?? கிளி மாறி மூக்குன்னு நினைச்சுட்டே பாரு!!! அழகா தெரியும்...!!" ராம் சொன்னதை கேட்டு ரிஷி," ஹே ஆமா ப்ரோ.... அழகா தான் இருக்கா!!" என அவளையே பார்த்தபடி சொல்லிக்கொண்டு நடந்தான்.



"சரி சரி போதும் வாட்டர் பால்ஸ்ஸ க்ளோஸ் பண்ணு.... " ரிஷியை இழுத்து கொண்டு அவனுக்கு வேண்டிய பொருட்களை, அவன் மறுத்தும் கேட்காமல் வாங்கி அடுக்கினான் ராம்.



“மாசம் ஒரு டூர் போரடா நீ!” ராம் சொல்ல, “ப்ரோ, போன மாசம் போனது டூர், இப்போ போக போறது கெட்டூ கெதர்” என ரிஷி பிரித்து சொல்ல, “ஆமா, ஆமா! எனக்கு எதுவும் தெரியாது பாரு” அவனை விளையாட்டாய் அடித்துக்கொண்டு நடந்தான் ராம்.



வாங்கிய பொருட்களை கைகளில் அடக்கி தூக்க முடியாமல், இருவரும் சற்று திணறிக்கொண்டு அந்த மாலில் நடந்து கொண்டிருந்தனர்.



"என்ன ப்ரோ இது!!! இந்த பேக் எல்லாம் வச்சுக்கிட்டு நிம்மதியா சைட் அடிக்க கூட முடில... டிஸ்டர்ப் பண்ணுது...." என ரிஷி அலுத்துக்கொள்ளவும், "ஹாஹா டேய் ரிஷி நீ என்னோட சேர்ந்து ரொம்பவே கெட்டு போய்ட்டடா" என ராம் சிரித்துக்கொண்டே இடப்பக்க மாடிவளைவில் பார்வை பாதிக்காமல் திரும்ப, அங்கு யார் மீதோ எதிர்பாராமல் பலமாய் மோதி கீழே விழுந்தான்.



கையில் வைத்திருந்த பைகள் எல்லாம் சிதறி விழ,, சட்டென மூண்ட எரிச்சலில் தன்மீது மோதியவரை திட்டுவதற்காக,, கோவத்தோடு திரும்பியவனின் முகம் மெல்ல மலர்ந்து மென்மையானது.



கீழிருந்து எழுந்துகொள்ள கூட தோன்றாது,, அந்த முகத்தையே வைத்தகண் வாங்காமல் ஒரு வித மயக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தான் ராம்.

Background musicல் இளையராஜா வெளுத்து வாங்க, வெள்ளையுடை தேவதைகள் அவனை சுற்றி ஓடி கொண்டிருந்தார்கள்.



ரிஷியோ ராமின் மனநிலைக்கு நேர்மாறாக மோதியவளை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தான்.



இந்த சம்பவத்திற்கு காரணமானவளோ,, இருவரையும் ஏறிட்டும் பாராது,, விழுந்த பொருட்களை அவசரகதியில் அள்ளி எடுத்து ரிஷியிடம் கொடுத்துக்கொண்டே "sorry sir sorry sir,, i didn't notice you!!! So sorry sir" என ஸ்லோகம் போல் விடாமல் பாடினாள்.



நிமிர்ந்து அவர்கள் முகம் பார்க்க கூட வினாடி நேரமின்றி அவள் பரபரக்க,, ராமிற்கு மட்டும் அவள் ஸ்லோ மோஷன்ல அசைவது போல தோன்றியது.



எவ்வளவு நேரம் அப்படியே "ஈஈஈஈ" என்று இருந்தானோ,, ரிஷி அவனை போட்டு உழுக்கவும் தன் கனவுலகில் இருந்து நிலத்தில் குதித்த ராம்,, தன் எதிரில் சற்று முன் வரை இருந்த தேவதையை காணாது தேடினான்.



ரிஷி, "ஹே என்னாச்சு ப்ரோ... கீழ விழுந்ததுல மண்டைல ஏதும் அடிப்பட்டுருச்சா??"



ரிஷியின் கிண்டலை அசட்டை செய்தவன், "என் மேல மோதுன ஏஞ்சல் எங்கடா?" என பார்வையை சுழற்றியடித்தபடி கேட்டான்.



"எது ஏஞ்சலா? நான் அப்பவே அந்த பொண்ணை நல்லா திட்டிட்டேன்.... ஏன்டா கேக்குற???"



அவளை எங்கேயும் காணாததால், சோர்வுற்றவன், காலை தன் வீட்டில் ‘இனி என் வாழ்க்கைல எந்த பொண்ணுக்கும் இடமில்ல’என்று பேசியது நினைவு வர, "ஒன்னும் இல்லடா,, சும்மா தான்... வீட்டுக்கு போலாம் நேரமாச்சு” என்றான்.



இனி தன் வாழ்வில் எந்த பெண்ணிற்கும் இடமில்லை என்று சொன்ன அன்றே, கண்ணில் பட்ட சில நொடிகளில் ஒருத்தி தன்னை இப்படி மயக்கடிப்பாள் என அவன் நினைக்கவே இல்லை. இதுவரை யாரிடமும் தோன்றாத ஒரு புதுவித உணர்வு அவளை பார்த்த நொடி முதல் தோன்றி அவனுள் ஆக்கிரமித்திருந்தது. அவள் முகம் ஓவியம் போல் நெஞ்சில் பதிந்து போனது.



(ராம் மேல மோதி இதயத்தை திருடிட்டு போன அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் தானே!?)



"எங்க ஸ்ரீராம் கிளம்பிட்ட???" விஷ்வநாதனின் கேள்விக்கு தன் பையை எடுத்து தோளில் மாட்டியபடி பதில் சொன்னான் ராம்.



"பெங்களூர் ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண போறேன் மாமா.... நெக்ஸ்ட் வீக் போறமாறி இருந்துச்சு... பட் இப்போ ஒரு எமெர்ஜென்சி கேஸ்.. அதான் இப்போவே கிளம்புறேன்..."



அவன் திடீரென கிளம்புவான் என எதிர்பார்க்காத விஷ்வநாதன் சற்றே ஆடி போனார்... பின்னே!? இன்னும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவே இல்லையே!!! அவர் கவலை அவருக்கு!



அதிர்ச்சியை தன்னுள் புதைத்தவர், "ஓ!! சரி ஸ்ரீராம்... போய்ட்டு வா... அடிக்கடி வீட்டுக்கு வா!!!" என்றவர்,, பின்பு மெதுவாக , "அதுவரைக்கும் பிசினஸ்ஸ நாங்க கவனிச்சுக்குறோம்..." என்றார்.



"ஸ்ஸ்ஸ்... அச்சோ!!! மறந்தே போய்ட்டேன் மாமா... நீங்களாது நியாபகம் படுத்திருக்கலாம்ல... போறதுக்கு முன்னாடி டாக்குமென்ட்ல சைன் பண்ணி குடுத்துட்டு போனும்னு நினைச்சுருந்தேன்... ஹோ!! ஷிட்!!" என தலையில் அடித்துக்கொண்டான் ராம்.



இதான் சமயம் என எண்ணி தான் தயார் செய்திருந்த பத்திரத்தை பற்றி சொல்ல அவர் எத்தனிக்கும் முன், முந்திக்கொண்ட ராம், "மாமா!!! Empty document இருக்கு தானே நம்மகிட்ட,, அதை கொண்டு வாங்க,, நான் சைன் பண்ணித்தரேன்... நீங்க பில் பண்ணிட்டு ரிஜிஸ்டர் பண்ணிகொங்க....ப்ளீஸ்.." என்றான்.



பசியில் பழையசோற்றிக்கு காத்திருந்தவன் கையில், லெக்பீ்சுடன் பிரியாணி கிடைத்ததை போல இருந்தது விஷ்வநாதன், லட்சுமின் நிலை.



சந்தோஷத்தை வெளியில் காட்டாது, "என்ன ஸ்ரீராம்?? படிச்ச புள்ள நீ!!! இந்த மாறி பண்றது தப்புன்னு தெரியாதா??" என்றார் விஸ்வநாதன் நல்லபிள்ளையாய்.



"இதெல்லாம் அடுத்தவங்களுக்கு தான்.... நமக்குள்ள என்ன இருக்கு மாமா?? எனக்கு நேரமாச்சு,, ரிஷி வந்தா சொல்லிடுங்க... வரேன் அத்தை" என சில வெற்று பத்திரங்களில் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பினான் ராம்.



அவன் சென்றதும் குத்தாட்டம் போடாத குறையாக மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் இருவரும்.



"நான் ஸ்டெப் பை ஸ்டெப்பா போலாம்னு பாத்தேன்... இவன் என்னடான்னா ஒரே ஸீன்ல கதையை முடிச்சுட்டான்... எதிர்பாக்கவே இல்லையே இப்படி பண்ணுவான்னு... "



"நானும்தாங்க... இவன் நம்மல ரொம்ப நம்புறான்.... லூசு... இப்போ தான் வேல முடிஞ்சுதே... இவனை என்ன பண்ண போறீங்க???" என்றார் கணவனுக்கு ஏற்ற மனைவியாய் லக்ஷ்மி.



"இதோ!!! இதை வச்சு என்ன என்னவோ பண்ணலாம்..." என பத்திரத்தை கையில் வைத்து தட்டிக்கொண்டே, " ஆனாலும் இன்னும் கொஞ்ச நாளுக்கு இவன் நமக்கு தேவை... சோ இவனை கொலை பண்ற ஐடியா இப்போதைக்கு இல்ல... வேற எதாது பண்ணுவோம்..." என்றார் விஷ்வநாதன்...



"எனக்கு இப்போவே பறக்கிற மாறி இருக்கு.... அச்சோ!! நீங்க சீக்கிரமா இந்த பத்திரத்தை வச்சு எதாது பண்ணுங்க... " என்றார் லட்சுமி.



விஷ்வநாதன் அடுத்து செய்யவேண்டியவற்றை யோசிக்க தொடங்கினார்.

இவர்களின் சுயரூபத்தை ராம் அறிய முடியாவிட்டாலும்,, அந்த வீட்டில் ரொம்ப காலமாய் விசுவாசமாய் இருக்கும் ரமா பாட்டி காதில் அவர்கள் பேச்சு விழுந்து அவருக்கு பேரதிர்வை தந்தது.

-தொடரும்...
 
ஒதுங்க இடம் கொடுத்தா மடத்தப் பிடிக்கிற கதை...முறை தவறுனத முறையோட உட்கார வைத்ததால் வந்த வினை....உண்மையிலே ராமோட அம்மாவுக்கு இயற்கை மரணமா இல்லை அவங்களையும் கொன்னுட்டாங்களானு தெரியலையே....
 
Top