நிறம் மாறிய நேசம் 13

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்து வந்த 4 நாட்களும் வேகமாக நகர, மீரா விதம் விதமாக சமைக்க, பாட்டு பாட, கோலம் போட, ஆபீஸ் வேலை பார்க்க, ஏதோ ஜென்ம ஜென்ம பந்தம் போல்....

வெள்ளி கிழமை கெளரியும் சங்கரும் அடுத்த வாரம் உனக்கு கல்யாணம் நிச்சியம் பண்ண போறோம்.
அடையார் ஆனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் .....

அப்படியா.....
நீங்க எப்போ வருவேள்?
நான் எப்போ லீவ் எடுக்கணம்?
நீங்க எங்க தங்குவேள்?

நான் ஏதாவது பண்ணணமா?....
அங்கிருந்து வந்த பதிலுக்கு
ம்ம்
சரி
மாப்பிள்ளை பற்றி தெரிய வேண்டாமா?
வேண்டாம், மண்டபத்தில் பார்த்துக்கறேன்.
உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும்.....
ஆபீஸ்ல கேட்டா.....
எனக்கு தெரியாதுன்னு சொல்லுவேன்.
நீங்க வரேள் என்றால் ஏட்ரியம் வீட்டை க்ளீன் பண்ண சொல்லவா?.....
ஓகே
குட் நைட்
ஐ லவ் யூ

ஃபோனை வைத்த மீரா கொஞ்ச நேரம் பேசவே இல்லை.
விஷ்வா பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியாதா என்ன?

சுவாமியை நமஸ்காரம் பண்ணி விட்டு தண்ணீர் 1 பாட்டில் முழுக்க குடித்து விட்டு........

விஷ்வா, மாமா, மாமி
அடுத்த வெள்ளிக்கிழமை எனக்கு கல்யாணம் நிச்சியம் பண்ண
போறாளாம்....
என்னடி என்னமோ, யாருக்கோ என்பது போல சொல்லற.....
விஷ்வா அவன் பெற்றோர்களை பார்த்து சும்மா இருக்கும் படி சைகை செய்தான்.

வாவ் கை குடுடா....
காங்கிராட்ஸ்...
சொல்லு சொல்லு மாப்பிள்ளை பற்றி
பேரு, வேலை, ஊரு, படிப்பு, ஃபேமிலி....

இன்னும் வேற இருக்கா?..... எல்லாத்துக்கும் ஒரே பதில்
" தெரியாது"
அடையார் ஆனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில்.....
அது மட்டும் தெரியும்.
சரி நாளைக்கு நான் போக எல்லாம் எடுத்து வைக்கரேன்....
வருத்தமா, விரக்தியா, எது நடந்தால் எனக்கு என்ன என்ற நிலையா.....

திரும்பி வந்து அவர்களைப்பார்த்து,
விஷ்வா, மாமா, மாமி
எனக்கு உடம்பு சரியாக இல்லதப்போ என்னை பார்த்துக்கொண்டு , என்னை சகித்துக்கொண்டு எனக்கு சந்தோஷத்தை தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்
நான் ஏதாவது தப்பா நடந்து இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ!!!!!

மாமா, மாமி உங்க ஃபோன் நம்பர் குடுத்தா அப்பாவை கொண்டு கூப்பிட சொல்லறேன்.
விஷ்வா உங்களையும் தான்.
பிரியா மன்னி கிட்ட சொல்லுங்கோ. நான் கூப்பிட்டு சொல்லறேன்.

அண்ணா ஷ்யாமை கூப்பிடலாமா?.....
சொல்லுங்கோ... பிளீஸ் ....

கண்ணா இந்த கல்யாணம் பிடிக்கலையா?...
அப்படி எல்லாம் இல்லையே.
திடீர் என்று சொன்னது கொஞ்சம் ஒரு மாதிரி ஆயிடித்து.
இப்பிடி தானே வேணும் என்று சொன்னேன்.
எப்படியோ என்னோட ஃபேமிலிக்கு நான் நினைத்த மாதிரி நன்றி கடன் செலுத்தி விடுவேன். அது போதும்.

Monday ஆபீஸ் போறேன். Tuesday la இருந்து லீவ் சொல்லறேன்.
நெக்ஸ்ட் Friday நமக்கு லீவ் தானே.
ஈவ்னிங் நீங்க எல்லாரும் வருவேளா?

நான் Monday பெங்களூர் போறேன். புதன் அல்லது வியாழன் வந்துடுவேன்.
கண்டிப்பா Friday உன்னோட அண்ணாவா வருவேன். ஓகே யா?
என்ன கலர் டிரஸ் போட்டுக்க? சொல்லு....
எதுன்னாலும் எங்க அண்ணாக்கு அழகா இருக்கும்.
சொல்லு நீ என்ன கலர் ?
தெரியாது அண்ணா.
அம்மா எந்த saree கொண்டு வருவா, அல்லது அவாத்துல என்ன கலர் புடவை தெரியாது.
எது என்றாலும் சரி தான்.
நீ ஹேப்பியா சொல்லலையே.....விஷ்வா

அது இல்லை, இவ்வளவு சீக்கிரம் எதிர் பார்க்கலை.அது தான்...
******
அடுத்தநாள் தான் படுத்த பெட் எல்லாம் தோய்த்து, பிரேக் பாஸ்ட் பண்ணி எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணி கிளம்பினாள்.
விஷ்வா கொண்டு விட்டு
கவலை படாதே!!!. எல்லாம் நல்லதுக்கே!!!!!
Friday பார்க்கலாம். பை...

ரூம்க்கு வந்து இருந்த வேலைகளை செய்து முடித்து அடுத்த வாரம் ஏட்ரியம் போக பேக் பண்ணி விட்டாள்.

ஒரே அழுகை, மன வருத்தம், தூக்கமின்மை எல்லாம் முகத்தில் தெரிய பக்கத்தில் இருந்த அழகு நிலையம் சென்று வந்தாள்.

அடுத்த நாள் சாதாரணமாக இருக்க ராமன் சித்தப்பா ஃபோன் பண்ணி வந்த விஷயம் சொன்னார்.

மறுநாள் மாலையில் பார்க்கலாம் என்று சொன்னதால்.....
Music கேட்டுக்கொண்டே தூங்கி விட்டாள்.
அதிகாலை எழுந்து தன்னுடைய ரொட்டீன் படி வேலை முடித்து ஆபீஸ் போய் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
லஞ்ச் நேரத்தில் பஞ்ச பாண்டவரிடம் விஷயத்தை சொல்லி இன்வைட் செய்தாள். மாப்பிள்ளை பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்லும் போது அவர்களுக்கு அதிர்ச்சி.

நந்திதாவிடமும் சொல்லி அழைப்பு விடுத்தாள்.

ஷ்யாமுக்கு அபிஷியல் ஈமெயில் அனுப்பி மீட்டிங் பெர்மிஷன் வாங்கினாள்.
ஒரே இயந்திரத்தனமாக இருந்தாள்.

4மணிக்கு ஷ்யாம் ரூமில் இருந்தாள்.
அன்று அவள் அவன் எடுத்த புடவை வேண்டாம் என்று சொன்ன கோவத்தில் இருந்த ஷ்யாம் .

(அது என்ன? அவளை பார்த்தா ஒன்னு ஒரே லவ் இல்லாட்டா கோவம்.
உன் கூட குடித்தனம் பண்ணறது ரொம்ப கஷ்டம் ஷ்யாம்.....)

ம்.... என்ன விஷயம்?
3 நாள் லீவு வேணும்...
எப்போ?
நாளைல இருந்து .....
திடீர் என்று சொன்னால்.....
ஃபேமிலி வரா....
என்ன சென்னை சுத்தி காமிக்க போறியா....
இல்லை...... I am getting engaged....

What?....... ஷ்யாம்
I ......am..... getting..... engaged....( நிறுத்தி நிதானமாக சொன்னாள்)

ஓ.... Congrats.... என்று கை குடுக்க,

தேங்க்ஸ் என்று மட்டும் சொன்னாள்...
(மவனே எனக்கும் பேச, உன்னை உசுப்பேத்த முடியும்.)

உன்னோட would be பற்றி.......
பேரு, ஊரு, வேலை, படிப்பு.....

"எனக்கு ஒன்னும் தெரியாது".

இதை நான் நம்பணம்......
அது உங்க இஷ்டம்......
என்ன நான் எனக்கு கல்யாணம் என்று சொன்னதால் பழிக்கு பழியா?
நீங்க அப்படி நினைத்தால் ஐ can't help

விஷ்வா கிட்ட சொல்லிட்டேன். .... லீவ் பற்றி.....

அப்பறம் நான் என்ன டம்மியா?
அப்படி நினைச்சா நான் ஒன்னும் சொல்ல முடியாது.

நான் உங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணரேன், so.....

சரி எங்கேஜ்மென்ட் எங்க? என்னிக்கு? அதுவாவது தெரியுமா? இல்லை அதுக்கும் அதே பதிலா?

Friday, அடையார் ஆனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில்....

வரலாமா?
அது உங்க இஷ்டம்.

நீ கூப்பிடலையே.......

அதுக்குள்ள லோ லோ என்று பேசினா?

என்ன நான் பேசறது அப்படியா இருக்கு உனக்கு.
நான் என்ன லூசா?

அது எனக்கு தெரியாது....

அவளை கூட கொஞ்ச நேரம் ரூம்ல இருக்க வைக்க பேச்சை வளர்த்தான்.

சி யூ Friday அல்லது நெக்ஸ்ட் வீக்...

பை....
நீ ஹாஸ்டல்ல இருக்க. உன்னோட ஃபேமிலி ஸ்டேக்கு எதாவது ஹெல்ப்?

தேங்க்ஸ், ஏட்ரியம்ல எங்களுக்கு 3 பெட்ரூம் பெண்ட் ஹவுஸ் இருக்கு.

கேட்டதுக்கு தேங்க்ஸ்
திரும்பி பார்க்காமல் மீரா போக,

விழுந்து விழுந்து சிரித்தான்.....
அவ மட்டும் திரும்பி பார்த்து இருந்தால்....மவனே நீ செத்தாய்...

இதை விஷ்வா கேட்டுக்கொண்டு இருந்தான்.
ஏண்டா ஷ்யாம் அவளை இப்பிடி படுத்தறை?
ஆனா இன்னிக்கு அவ நல்லா குடுத்தா உனக்கு!!!!!
இது உனக்கு வேணும்....

இங்க நந்திதா புன்னகையுடன் வந்த மீராவிடம் என்ன என்று கேட்க

இப்போ புரியும் இந்த மீரா யாருன்னு....
என்றாள்...

பிரியா, சுமித்ரா, கிருஷ்ணாவை ஃபோனில் அழைத்தாள்......

****
அடுத்து வந்த நாட்களில் ஒரே சிரிப்பு, கிண்டல், கேலி, .....
பழைய மீராவை பார்த்தனர்.
மீரா, மோஹன், அம்ருதா (ம்ருது), கசின்ஸ் சஞ்சு, அஞ்சு, அஷ்வின் ,அர்ஜுன்..வீடு முழுவதும் சந்தோஷம் மட்டும் தான்.

அக்கா நான் எல்லாம் இப்படி பார்க்காம ஒத்துக்கவே மாட்டேன்.... அம்ருதா
ஹே நானும் தான்....மோஹன்

கண்ணா உனக்கு, உன் தம்பி 2 பேருக்கும் வழியே கிடையாது.
நாங்க 4 பேரும் செலக்ட் பண்ணற பொண்ணுங்க தான்.
லவ்வு, கொவ்வு மறந்துடுங்கடா.....

மீரு ரொம்ப மோசம்டி.....
யேய்,..........

என்னது!!!! ஒரே கூத்தா இருக்கு....
பாட்டி சொல்ல,
பாவம் ரொம்ப நாளைக்கு அப்பறம் பாக்கறா. நாளைக்கு மீரா கல்யாணம் ஆனா, இது மாதிரி சான்ஸ் கிடைக்குமா?
அவா பாட்டுக்கு இருக்கட்டும் ....கௌரி

எல்லாரையும் கூட்டிக்கொண்டு மால்,பீச், கிப்ட்ஸ், ஐஸ்கிரீம் எல்லாருக்குமே ஒரு புதிய அனுபவம்.

அம்ருதா தான் அக்கா நான் ஜிஜாஜி ( அக்காவின் கணவன் ஹிந்தியில்)
கிட்ட உன் கூட பேச சொல்லவா? பிளீஸ்க்கா.....
அவருக்கும் ஆசை இருக்காதா?

ம்ருது, நோ என்றால் நோ தான்...

கௌரி மீராவுக்கு தெரியாமல் சுமித்ரா கூட பேசி பியூடிசியன் ஏற்பாடு செய்து இருந்தாள்.
மெஹந்தி, சங்கீத் என்று அவர்களுக்குள்ளே நடந்தது.
ம்ருது, மோஹன் அவர்களின் கசின்ஸ் டான்ஸ் ஆட ஒரே பிளான்.
இவர்களின் குஷியில் மீரா தன்னையே மறந்தாள்.

வெள்ளிக்கிழமை காலையிலே உறவினர் மண்டபத்துக்கு வர சிறியவர் தவிர எல்லோரும் போய் விட,
கொஞ்சம் தனிமை மீராவிற்கு.
பிரியா, நந்திதா, விஷ்வா, பஞ்ச பாண்டவர் அணியை திரும்ப கூப்பிட்டாள்.
தெளிந்த மனதோடு, சின்ன மண்டபம் (அங்கு பெரிய மண்டபத்தில் இன்றைய நிகழ்ச்சி: சிறியது இவர்கள் வசதிக்கு எடுத்தது. ஒரே நேரத்தில் 2 நிகழ்ச்சி நடந்தாலும் தனித்தனி வாயில், எந்த விதத்திலும் பாதிக்காது).
சென்ற மீராவிடம்,

அக்கா, உங்க ஆபீஸ்ல இருந்து ஒருத்தர் பாக்க வந்து இருக்கார். வர சொல்லவா?
மதிய உணவு சாப்பிட்டு அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட,
உள்ளே பூங்கொத்து கொண்டு வந்த ஷ்யாமை பார்த்து ஒரு வினாடி அதிர்ந்தாள்.
இன்னும் அலங்காரம் பண்ணிக் கொள்ளவில்லை.

சிம்பிளான பட்டு புடவையில் முகம் கொள்ளா சிரிப்புடன் இருந்த மீரா முன் வந்தான் ஷ்யாம்.
சிரித்துக்கொண்டே பெங்களூர் போக வேண்டும். அது தான் வந்து...... பார்த்துவிட்டு ...... இழுத்தான்....

தேங்க்ஸ் ஷ்யாம்......
நீங்க வர மாட்டீங்க என்று நினைத்தேன்.
நான் வராமலா.....இரு பொருள் கொண்டு பேசினான்.

கையில் இருந்த சிவப்பு ரோஜாவை குடுத்து " will you marry me?" என்றான்.

என்னது? அதிர்ந்து கேட்டாள் மீரா..

"will you marry me?" நிஜமா கேட்கிறேன்.

ஷ்யாம் எதுல தான் விளையாட்டு என்று கிடையாதா?
You are getting engaged. இன்று எனக்கும் நிச்சயதார்த்தம்.
இப்போ வந்து......

Are you silly? Mad?

மீரா நீ இல்லாம நான் இல்லை. அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டேன்.
அவளுக்கும் இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லை.
சோ அது ட்ராப் ஆயிடுத்து.

அப்போ நான் உங்க கம்ப்யூட்டர் பாஷைல back up? ரைட்
Tool to fill in the gaps?
ஆர் யூ நாட் ashamed?
எனக்கு உங்களை பார்க்க பிடிக்கலை.
ஒரு ரெக்வெஸ்ட் ....
பிளீஸ் இந்த ஃபங்ஷனை கெடுக்காதேங்கோ......
எங்க ஆத்துல துடிச்சு போய் விடுவா.
எனக்கு என் ஃபேமிலி முக்கியம்.
நான் யாரையும் கூப்பிடறதுக்கு முன்னாடி போங்கோ!!!!!

தேங்க்ஸ் ஃபார் எவரிதிங்......
Get lost....
அவன் கையில் இருந்த பூவை பிடிங்கி எறிந்து விட்டு ரூம் கதவை சாத்தினாள்.

ஷ்யாம் போனானா?
நிச்சயதார்த்தம் நடந்ததா?......
 

Advertisement

Advertisement

Back
Top