முதல் காதல்

Advertisement

SHANMUGALAKSHMI

Member
Member
203






"முகம்

அறியா

முதல்

காதல்"



"கோடி உணர்வுகளை

கும்மிருட்டிலிருந்து

உணர்ந்திட்ட காதல்"



"குரல் மட்டும்

கேட்டு

குத்துச்சண்டையிட்ட காதல்

ஒன்பது திங்கள்

ஒளிந்து விளையாடிய

காதல்"



"ஈருடல் ஓருயிராய்

உதிரப்பிணைப்பில்

உயிர் போகும்

வழித்தந்து

உள்ளங்கையில்

மிதந்திட்டக்காதல்"



"ஆயிரம் கைகளில்

தவழ்ந்திட்டப்போதும்

உங்கள் கைசுகத்தில்

உறங்கியக்காதல்"



"கத்தியழுகையிலே

உங்கள்

குரல் கேட்ட

ஓர் நொடியில்

சிரிப்பைச்சிந்திட்டக்காதல்"



"காதலின்

அர்த்தம்

உணர்ந்தேன்

உங்கள் அளவற்ற

அன்பில்"



"உரிமைகொண்ட

உங்கள் மேலே

என்

முதல் காதல்"



"பெற்றோரோராய்

அவனிக்கு

அடையாளம் காட்டப்பட்ட

ஆண்டவர்களே

உங்கள் மேல்

தான்

என் முதல்காதல்

என் உயிர்துறக்கும்

நொடி வரைக்கும்"


 

Advertisement

Advertisement

Back
Top