Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 38 (epilogue)

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 38 (epilogue)



கார் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, வாசு காரிலிருந்து இறங்கிவந்தான். சாந்திக்கா காபி சொல்லி சோபாவில் உட்கார்ந்தான். மித்ராவை பார்த்தான், திமிரு எப்படி உட்கார்ந்துருக்கா பாரு, “புருஷன் வந்திருக்கானே காபி எடுத்துட்டு வந்து தராளா பாருங்க அம்மா”.

“டேய் நீ சாந்தியக்கா காபிதான கேட்ட, மித்ராண்ணா சொன்ன”-பாட்டி.

“ஏய் சிலுக்கு சிண்டு முடிக்கிறீயா , சண்டையே உன்னாலதான் , யாருகிட்ட கேட்டா என்ன ஹஸ்பண்டுக்கு காபி தரணுமா இல்லையா”. எதுவும் காதில் வாங்காமலே கிச்சனுக்குள் சென்றாள்.

“அம்மா நீ எனக்கு வேற பொண்ண பாரு , நான் அவளே கல்யாணம் பண்ணுக்கிறேன்.”

“யாரு நீ, இத்தோட நூறாவது முறை சொல்லிருப்பே , அடுத்த பத்தாவது நிமிஷம் பொண்ணாட்டி பின்னாடி சுத்துவ போடா காமெடி பண்ணாதே.”

வாசு கிச்சனுக்குள் சென்றான், மித்ராவை நோக்கி “என்னடி செய்யற , உங்கிட்ட பேசனும் ரூமுக்கு வா.”

“நான் வரல, நீதான் போடி சொன்ன இப்ப எதுக்கு கூப்பிடற”.

“ஏய் உன்கிட்ட முக்கியமான விஷியத்தை டிஸ்கஸ் பண்ணனும் வாடி.”

வாசுவை ஏறஇறங்க பார்த்து, எனக்கு பசிக்குது நான் சாப்பிட போறேன்.டைனிங் டேபிளில் உட்கார்ந்து மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி,65 பிஷ் பிரை சாப்பிட ஆரம்பித்தாள்.

“இதுயெல்லாம் ஆகாது ஏன் சாப்பிடற”-வாசு

உனக்கென்ன, நான் சாப்பிடறேன்.

“சாந்தியக்கா”, இந்த தம்பி ஐஸ்கீரிம் கையில் கொடுத்தாள் சாந்தி.வாசு என்னடா இது யோசிக்க “மித்ராம்மா நான்-வெஜ் சாப்பிட்டாலே நீங்க ஐஸ்கீரிம் கேட்பிங்க” சொன்னவுடன் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இவங்களுக்கு எப்படி தெரியும், இந்த மித்ரா எரும சொல்லிருக்கும்.

உலகத்திற்கே தெரியும்டா நீ பண்ணற அலும்பல் பாட்டி சொல்லிக்கொண்டே தூக்கம் வருது நான் ரூமுக்கு போறேன்.

“ பார்வதி இங்க ஏதாவது ஹாஸ்ட்டல் இருந்தா என்னை சேர்த்துவிடு இவன் சேட்டை தாங்கல.”

“முதியோர் இல்லம் இருக்கு போறீயா சல்லு”-வாசு.

வாசு ஐஸ்கீரிம் சாப்பிட்டுக்கொண்டே எல்லோரும் போயிட்டாங்க இவ எங்க இருக்கா தேடினான். தோட்டத்தில் மித்ரா அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அருகில் அமர்ந்தான், இங்க பாருடி, மித்ரா முகத்தை கையில் ஏந்தினான், “என்ன காரமா இருக்கா.”

ம்ம் ,எங்கன்னா அடங்கிறீயாடி நீ சொல்லி அவள் காரத்தை அடக்கினான் தன் இதழ்களில். அவள் கண்கள் சொருக,ரூமுக்குள் போகலாமா தேனு. உனக்கு பிடிச்ச தேன் மிட்டாய் வாங்கிட்டு வந்திருக்கேன்.

போடா, நீ வேணாதான சொன்ன

அப்பறம் யோசிச்சேன்டி நம்ம தான் நிறைய பிள்ளைய பெத்துக்க போறோம்.அது முதல்ல பொண்ணா இருந்தா என்ன பையண்ணா இருந்தா என்ன. அதனால.

அதனால-மித்ரா

தீயா வேலை செய்யனும் மித்ராக்குட்டி.சீசீ சொல்லி மித்ரா அவனை கட்டி அனைத்துக்கொண்டாள்.

5 வருடங்கள் சென்று, வாசு வீட்டிற்குள் நுழைந்தான். வீடே அலோகலமாக இருந்தது.ரிஷி வாசுதேவ் நம்ம வாசுவோட மூனு வயது பையன் பின்னாடி சென்று கொண்டிருந்தாள் பாட்டி, அவள் அப்பன் ஒரு வாலுண்ணா, இவன் நாலு வாலு.

வாசு சிலுக்கை பார்த்து நீ என்ன கணக்கு போட்ட, அவன் என் பையன். டாடி சொல்லி ஓடி வந்து ஏறிக்கொண்டான். அந்தப்பக்கம் நம்ம சல்லுபாய் வாசுவோட 1 வயது மகள் சுஹானாவை தோளில் தட்டி கொண்டே சீக்கிரம் பாலை எடுத்துட்டுவா பாரு அழறா.

பார்வதி வெளிய வந்தவுடன் “எப்போடா வந்த சுவிஸ்ல இருந்து.”

இப்பதான்ம்மா, தன் மகளை வாங்கினான்.தன் அப்பாவை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றது. நீ போய் மூனு மாசம் ஆச்சு, உன் பொண்ணு மறக்கலடா.

“எங்கம்மா என் ஜான்சிராணி,”

“ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தருக்கு மேரேஜ்க்கு போயிருக்காடா.”

நீ போய் ஃபிரஷ் ஆயிட்டுவா-பாட்டி.

சின்னா காலேஜ் இருந்து வந்துட்டானா, கேம்ப்க்கு போயிருக்கான்,(டாக்டர் படிக்கிறதால.)

வாசு,ரிஷியை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.மித்ரா உள்ளே வந்தாள் வாசுவை பார்த்து பார்க்காமல் சுஹாணாவை வாங்கிக்கொண்டு ரூமுக்குள் சென்றாள்.

வாசுவுக்கு கோபம் வந்தது. அம்மா என்று கத்தினான்.

“என்னடா”

அவ என்ன கண்டுக்காம போறா,

ஏன் நீ மூணு மாசமா அவள கண்டுட்டியா-பாட்டி.

சிலுக்கு,ரிஷி கண்ணா பாட்டிய என்னனு கேளு,நீ போங்க டாடி நான் மணியை வச்சு செய்யறேன்.

கதவை திறந்து உள்ளே சென்றான், என்னடி பார்த்தும் பார்க்காம போற

நான் பாப்பாவுக்கு பால் கொடுக்கனும் நீ வெளியே போ, ஆமா யாரு நீ.

ஓ யாருன்னு தெரியாது உனக்கு ,தோ இந்த பாப்பாவ கொடுத்தவன்.

வெளியே போடா .

மித்ரா இப்பதான் ஊருல இருந்து வந்தான், விடுடா அவன –பாரு

வயசானவங்க மூனு பேரும் தணியா இருங்காங்க தெரியுதா இவனுக்கு பத்தாது பசங்கல பார்க்கவே சரியா இருக்கு.இவன் பிசினஸ் சொல்லி ஊர சுத்துறான். போதாதா இருக்கிற பணமே. குடும்பத்தோடு செட்டில் ஆறானா.மனோ அண்ணாவ கூட கூட்டிட்டு போறான், ரம்யாவுக்கு குழந்தை பிறந்து 6 மாசம் ஆகுது, அண்ணா ரம்யாக்கூட இருக்கணும்மா இல்லையா.

என்னடி ஓவரா கம்பளையின் பண்ணற, எனக்கு பிசிணஸ் ரொம்ப முக்கியம் தெரியாதா. போடி நான் எங்க மாமனார் வீட்டுக்கு போறேன். டாடி நானும் வரேன், பாட்டி , தாத்தா,பாரு மூவரும் நானும் வரேன்.

நீங்க திருந்தவே மாட்டிங்க ,போங்க அவன் கூடவே.

இரவு 9.00 மணிக்கு, அனைவரும் மித்ராவீட்டு மாடியில்(தூங்க மேல் மாடியில் பெரிய ஹால் போல் ரூம் கட்டிவிட்டிருந்தான்) . வாசு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.டைம் பார்த்தான் இன்னும் நம்ம ஆளு வரலயே. மித்ரா காரை விட்டு கிழே இறங்கி சாந்தியிடம் மகளை கொடுத்து மேலே போக சொன்னாள். ஊஞ்சலில் உட்கார்ந்தாள்,இன்னும் ஜில்லுக்கு கோவம்போகல. போய் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

. இந்தியாவிலே நம்பர் ஒன் பில்டர்ஸ் அவார்ட் கிடைச்சிருக்குடி. ஹாப்பியா இருக்கேன்டி. ஏய் தேனு என்னடி மாமாவ ஏங்க விடுற என்று அவள் இடுப்பை கிள்ளினான் மித்ரா அழ ஆரம்பித்தாள் , என்னால உன்ன பிரிஞ்சு இருக்க முடியில ஆனா என்னவிட்டு நீ சந்தோஷமா இருக்க இல்ல. அவள் கண்களை துடைத்துவிட்டு இனமே உன்னைவிட்டு போக மாட்டேன்டி. ஐ லவ் யு டி.இதழில் முத்தசண்டை போட்டான்.

அந்த சமயம் வாசு போன் அடிக்க ஸ்பிக்கரில் போட்டான்,என்னடா மனோ, மச்சான் புது பிராஜ்க்டா மலேசியாவில, மிஸ் பண்ணக்கூடாதுடா. வாசு மித்ராவ பார்த்தான்.டேய் நான் அப்புறம் பேசறேன்.

அய்யோ முறைக்கிறாளே இப்பதான சமாதானம் படுத்தினோம். “எழுந்திருடா மேல இருந்து வந்துட்டான்”-மித்ரா.

அய்யோ தேனு ரொம்ப நாள் ஆச்சிடி, இவன் வேற நேரங்காலம் தெரியாத.ஏய் எங்கடி போற மாமாவ கொஞ்சுடி சொல்லி இரு கையால் மித்ராவை தூக்கினான்.

-----நிறைவு----
 
Very nice humorous natural storyline to help get rid of stress.i loved and read so much.thank you lakshu sis
 
Top