வந்துட்டோமுங்க நாங்க வந்துட்டோம், எப்படிப் போனோமே அப்படியே வந்துட்டோம்னு சொல்ல முடியாம, கொஞ்சம் புதுசா வந்திருக்கோம்,
எஸ், கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023 , we are back, வருஷா வருஷம் இதை நடத்தணும்ன்னு நினைச்சிருந்தோம், கடந்த ரெண்டு வருஷமா சில தவிர்க்க முடியாத சூழல் நடத்த முடியலை, இதோ இந்த வருஷம் வந்துட்டோம்.
போட்டியில் உங்களை மார்ச் மாதம் இறுதி வரை பதிவு செய்து கொள்ளலாம் : THE LAST DATE TO REGISTER IN THE CONTEST : 31.03.2023.
போட்டி முடியும் நாள் : 31.05.2023
(நிச்சயம் நாட்கள் நீட்டிக்கப் பட மாட்டாது... பெயர் சொல்லி எழுதும் போட்டி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும்)
கதை முப்பத்தி ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு குறையாமலும் ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்...
மீண்டும் சொல்கிறோம்: இவை காதலின் கதைகள், லவ் அண்ட் லவ் ஒன்லி, ரொமான்ஸ் இருக்கலாம், விரசமில்லாமல் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு எழுத்துப் பிழை வாக்கியப் பிழை பொறுத்துப் போகலாம். ஆனால் அதிகமாக இருந்தால் நிச்சயம் அந்த கதை எத்தனை பெரிய வரவேற்பை பெற்றாலும் பரிசு கிடையாது, தமிழன்னைக்கு நம்மாலான ஒரு சிறு செயல்.
அதனால் அத்தியாயம் பதிவிடும் முன் எழுத்துப் பிழையில்லாமல் இருப்பதில், வாக்கியம் முற்றுப் பெறுவதில், டயலாக் கொடேஷன் குள் இருப்பதில், வார்த்தைகள் அதன் அர்த்தத்தை சரியாக கொடுப்பதில் கவனம் தேவை.
போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள்
கதை பெயர் , உங்களின் பெயர் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்
[email protected]
நான் உங்களுக்கு வேறு பெயர் கொடுத்து பாரம் செய்து விடுவேன்.
வாசகர்களுக்கு எதுவும் பரிசுகள் இருக்கிறதா என்று ஓரிருவருக்கு தோன்றலாம். இன்னும் முடிவு செய்யவில்லை. போட்டி துவங்குமுன் எதுவும் இருந்தால் அறிவித்து விடுவோம்!
Disclaimer: பங்கு பெரும் அனைவரும் எனக்கு நண்பர்களே! ஆனால் அதற்கும் போட்டிக்கும் சற்றும் சம்மந்தம் கிடையாது. போட்டி சற்றும் பாகுபாடு இன்றி, எனது நண்பர்கள், நமது தளம், என்று எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல் அவர்களின் கதைகளின் வரவேற்பை கொண்டே வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.
முன்பு நடந்த போட்டியில் நான் சொன்னது தான். நமக்கு நாம் எழுதும் கதைகள் சூப்பர் எப்போதும் சூப்பராய் தான் தோன்றும். ஆனால் வாசகர்களின் வரவேற்ப்பு என்பது எப்படி இருக்கும் என்றே சொல்ல முடியாது. சில படங்கள் அருமையாய் இருக்கும் ஓடாது மக்களை ஈர்க்காது. சில படங்கள் சுமாராய் தான் இருக்கும் ஆனால் மக்களின் வரவேற்பை அவ்வளவு பெரும்.
இந்த போட்டி ஒரு ஆரோக்யமான போட்டி. எந்த சண்டை சச்சரவிற்கும் காழ்புணற்சிக்கும் இங்கே இடம் கிடையாது. இங்கே யாருக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட மாட்டாது. எல்லோரும் சரி சமமானவர்களே!
இது எழுத்தாளர்களோடு வாசகர்கள் கை கோர்க்கும் உங்கள் திருவிழா!
கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை!
“லவ் அண்ட் லவ் ஒன்லி – காதலின் கதைகள்
வாருங்கள் எழுத்தாளர்களே வாசகர்களே எங்களோடு இணையுங்கள்....

- நீங்க கதையை உங்க பேர் சொல்லியும் எழுதலாம் இல்லை பேர் சொல்லாமலும் எழுதலாம்...
- பேர் சொல்லி எழுதறவங்களுக்கு தனி போட்டி, பேர் சொல்லாம எழுதறவங்களுக்குத் தனி போட்டி...
- அண்ட் போட்டியின் தீம் – லவ் அண்ட் லவ் ஒன்லி , காதல் மட்டுமேங்க , காதலின் கதைகள், ஆனால் ஆரோக்யமான அழகான காதல்... அதுக்கிடையில கொஞ்சமா நீங்க என்ன வேணா புகுத்திக்கோங்க லைக் காமெடி , கிரைம் , த்ரில்லர் , பாமிலி டிராமா இன்னும் எனக்குத் தோணாத எதுவும் உங்களுக்கு தோணினாலும் ஓகே.
- காதல் காதலர்களுக்குள் மட்டுமில்லை, கணவன் மனைவிக்குள்ளும் எழுதலாம்.
- ஆனாலும் ப்ரைம் ப்ளாட் ஆர் தீம் காதல் மட்டுமே! அதாகப்பட்டது வாசகர்கள் கதை படித்து முடிக்கும் போது, அது ஒரு காதல் கதையாக மட்டுமே மனதில் நிற்க வேண்டும்.
- சிந்தனைகள் நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், ரொமான்ஸ் இருக்கலாம், ஆனால் விரசமில்லாமல் முகம் சுளிக்க வைக்காமல் இருக்க வேண்டும்.
- வாசகர்களின் வரவேற்பே முக்கியம்... எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் கருத்து பதிவு செய்கிறார்கள்... இதுவும் கணக்கில் கொள்ளப்படும்..... ஆனால் இது மட்டுமே கணக்காகாது.
- நிச்சயம் வோட்டிங் உண்டு, நடுவர்களோ அல்லது நடுவரோ உண்டு...
- கதை தளத்தில் பதிவிடும் காலம் மூன்றரை மாதம், ரெண்டு மூன்றரை மாதம் நடக்கப் போகுதுங்க, அதாகப்பட்டது, பேர் சொல்லாம எழுத விருப்பப்படறவங்களுக்கு முதல் மூன்றரை மாதம், பேர் சொல்லி எழுத விருப்பப்படறவங்களுக்கு பிறகு மூன்றரை மாதம்... முதல் மூன்றரை மாதத்திற்கு தனி பரிசு, பிறகு வரும் மூன்றரை மாதத்திற்கு தனி பரிசு,
- பரிசுன்னு சொல்றதை விட பரிசுகள் தான் சரியா இருக்கும்.. ஆம்! முதல் பரிசு ரெண்டாம் பரிசு இப்படி கிடையாது, ஏழு பேருக்கு பரிசு, அவர்களின் கதைகள் புத்தகங்களாய் வரும் இன் மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன். ( புத்தகம் பிரசுகரமாகிய பிறகு புத்தகப் பதிப்பின் ஊக்கத் தொகை வழங்கப்படும், புத்தக பக்கங்களுக்கு ஏற்ப 3000/- to 5000/- )
- இரண்டு போட்டிக்கும் தனித் தனி ஏழு பேர். ( சோ நமது பதிப்பக எழுத்தாளர்களுக்கு போட்டியில் அனுமதி உண்டு ஆனால் புத்தகப் பதிப்பில் அனுமதி இல்லை.. ஏனென்றால் எப்படியும் அவர்கள் கதை நமது பதிப்பகத்தில் புத்தகமாய் வரும், அதனால் மட்டுமே. ஆனால் நமது பதிப்பகம் அல்லாமல் நமது தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் நிச்சயம் பங்கு கொள்ளலாம். இல்லை நானும் பங்கு கொள்வேன் என்று நமது பதிப்பக எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்களது ஒரு ஹோஸ்ட் பெர்ஃபார்மன்சாய் மட்டுமே இருக்கும்... போட்டியில் இருக்கும்... முடிவில் பெயரும் வெளியிடுவோம் ஆனால், புத்தகப் பதிப்பின் இந்த ஏழு பேரில் இருக்க மாட்டீர்கள்)
- இந்த ஏழு பேர்ன்றது அவங்களோட பெஸ்ட் பெர்ஃபார்மன்ன்ஸ் ஸா இருக்கணும், ஒரு வேளை நமக்கு பெரிதாக எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் ஏழு பேர் மட்டுமே ரேசில் ஓடினால் நிச்சயம் அந்த ஏழு பேருடையதும் வராது. எது சிறந்ததோ அது மட்டுமே!
- கதை இங்கே மட்டுமே முதல் முறை பதிவிட்டிருக்க வேண்டும். புது கதையாய் இருக்க வேண்டும். இங்கு பதிவிடும் கதை வேறு எங்கும் எழுதியிருந்தாலோ பதிவிட்டு இருந்தாலோ அவை கணக்கில் எடுத்துகொள்ளப் பட மாட்டாது.
- ஒரு வேளை எங்களுக்கு போட்டியில் பங்கு பெற விருப்பம். ஆனால் வேறு இடத்தில் வெளியிட எங்கள் பதிப்பாளர்கள் அனுமதி அளிப்பது சிரமம் என்று நினைப்பவர்கள், போட்டியில் பங்குகொள்ளலாம். வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர் வரிசையில் இடம் பெறுவீர்கள் சான்றிதழும் வழங்கப்படும்.
- ஆனால் பரிசு என்பது புத்தகப் பிரசுகரமும் அதன் பொருட்டு வரும் தொகை மட்டுமே. நீங்கள் புத்தகம் பிரசுகரிக்க விருப்பப்படவில்லை என்றால் உங்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவருக்கு வாய்ப்பு சென்று விடும்.
- ஆனால் ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாய் இடம் வழங்குவதில் உங்கள் பெயர் இருக்கும், மொத்தத்தில் வெற்றி இருக்கும், பரிசை நீங்கள் நிராகரிகிரீர்கள் அதனால் பரிசு இல்லை அடுத்தவருக்கு சென்று விடும்.
- தளத்தின் தீர்ப்பே இறுதியானது!
- ஒரு போட்டிக்கு ஒருவர் ஒரு கதை தான் எழுத முடியும்
- பேர் சொல்லாத போட்டியில் கலந்து கொள்கிறவர்கள், பேர் சொல்கிற போட்டில கலந்துகொள்வதானாலும் கலந்து கொள்ளலாம்.
- போட்டியின் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
- நாங்கள் போட்டியை செம்மையாக, நேர்மையாக நடத்துவோம் என்ற எண்ணமிருப்பவர்கள் எங்களோடு இணைந்தால் போதுமானது...
- தள பாகுபாடு எல்லாம் இல்லை, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்... Anybody can join us and everybody can join us.
- எழுத்தாளரின் விருப்பம் இருந்தால் கதைகள் தளத்தில் இருக்கலாம் இல்லை அதனை நீக்கி கொள்ளலாம்.. ஆனால் போட்டியின் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஒரு மாத காலம் தளத்தில் இருக்க வேண்டும். பின் அவர் விருப்பம் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் எடுத்து விடலாம்.
- சரி விஷயத்திற்கு வருவோம், இவை எல்லாம் பெயர் சொல்லாத போட்டிக்கு மட்டுமே. இது முடிந்த முடிவு வந்த பிறகு பெயர் சொல்லும் போட்டிக்கு பதிவு செய்ய புதிதாய் அறிவிப்பு வெளியிடுவோம்.
- முடிவுகள் ஜூலை இறுதிக்குள் நிச்சயம் வெளியிட்டு விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
- எழுத்தாளரின் விவரங்கள் எனக்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரிவிக்கப்படமாட்டாது. போட்டியில் கலந்து கொள்பவர்களும் தங்கள் பெயர்களை வெளியில் சொல்லாமல் இருக்குமாறு அறிவுருத்தப்படுகிறீர்கள்.
- போட்டி முடிவு வந்த பிறகே எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இல்லை முடிவு வந்த பிறகும் என் பெயர் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை என்பவர்களின் பெயர்கள் இறுதி வரை வெளியிடப் பட மாட்டாது.

Last edited: