Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேகம் தாண்டா வெண்ணிலவு- அறிமுகம்

Advertisement

நிசஞ்சனா

New member
Member
வணக்கம் மக்களே!

நான் இந்த தளத்திற்கு புதியவள். சிலர் என்னை பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கலாம். பெயர் மறைத்து இந்த போட்டியில் பங்கு கொள்கிறேன் உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்தவளாக.

கதையைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்: இது இலங்கையிலுள்ள ஒரு சிங்கள கிராமத்தை களமாக கொண்ட கதை. அங்குள்ள பாடசாலை ஒன்றிற்கு தற்காலிக (இளம்) அதிபராக பணிபுரிய வரும் கொழும்பு நகரத்தை சேர்ந்த அழுத்தமும் ஆளுமையும் நிறைந்த நம் நாயகன் தில்ஹான் விஜயசிங்க,

அதே பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரியும் திருமணமான அதே நாளில் வாழ்க்கையை இழந்து கைம்பெண்ணாக மாமானார் வீட்டில் வசித்து வரும் மென்மையின் இலக்கணமான நம் நாயகி நிசஞ்சனா சாந்தினி,

அந்த பாடசாலையில் உயர்தரம் இரண்டாம் ஆண்டு வரை கல்வி கற்று குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் அந்த பள்ளிக்கூடத்தையே சுற்றி வரும் துறுதுறு நேத்மி

மற்றும்

நிசஞ்சனாவை ஒரு தலையாக விரும்பி அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க நினைத்தாலும் தன்னுடைய காதலை அவளிடம் சொல்லும் தைரியம் இல்லாமல் மௌனமாகவே பெண்ணவளை பின்தொடரும் விஜித ஜெயவீர.

இவர்கள் நால்வரின் காதல், குடும்பம், உணர்வு போராட்டங்களுடன் ஜூன் 1 முதல் சந்திக்கலாம்… அதுவரை உங்கள் அனைவரின் அன்பை எதிர்பார்த்தவளாக 🤍 நான் நேத்மி நிசஞ்சனா

phonto.jpeg
 
Last edited:
இலங்கையை மையமாகக் கொண்டு கதை எழுதும் இரு எழுத்தாளர்களின் தீவிர விசிறி நான் 🥰🥰🥰 நீங்க யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு 😍😍😍

வாழ்த்துக்கள் மா ❤️♥️♥️
 
இலங்கையை மையமாகக் கொண்டு கதை எழுதும் இரு எழுத்தாளர்களின் தீவிர விசிறி நான் 🥰🥰🥰 நீங்க யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு 😍😍😍

வாழ்த்துக்கள் மா ❤️♥️♥️
நன்றிகள் சிஸ் 🩷 நானும் யாராவது உங்களுக்கு தெரிஞ்ச ஆளாதான் இருப்பேன் 😃
 
Top