Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகவரி தேடும் காதல் அறிமுகம்..

Advertisement

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ் நானும் உங்களோடு தமிழ் நாவல் போட்டி கதைக்கு இணைந்து விட்டேன்..


என்னையும் கொஞ்சம் திரும்பி பார்த்து கதையை படித்து நிறை குறைகளை கருத்தாக கூறுங்கள் 😊😊😊



முகவரி தேடும் காதல் அறிமுகம்

ஒவ்வொரு மனிதரை பொறுத்து அவர்களுக்கு ஏற்ப காதலுக்கு வரை விலக்கணம் வரைந்திருப்பார்கள்..


இங்கும் அப்படித்தான்.. ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் ஜோடிகளுக்கும் அவர்களுக்கு ஏற்ப தான் காதல் வடிவமைக்கப்பட்டிருக்கும்..


ஒரு சிலர் விட்டுக் கொடுத்தல். பொருத்து போகுதல்.
கணவனை கணவன் குடும்பத்தை அனுசரித்து செல்வது.
திருமணம் செய்து விட்டோம் குழந்தைகள் பிறந்து விட்டது அவர்களுக்காக வாழ்வது.
காலம் முழுக்க சில ஜோடிகளில் ஒருவர் மட்டுமே அந்த குடும்பத்தை சகித்து கொண்டு இழுத்துச் செல்வார்கள்..



இப்படி இருந்தால் எங்கே உண்மை காதல் இருக்கும்..


2024ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று இரவு நேரம்..


ஏன் காதலர் தினம் வருகிறது என்று தெரியாமலே அதை கொண்டாடும் சிலர் இருக்கிறார்கள்..


தங்களது ஜோடிகளின் பெயர்களை பெயரின் முன் எழுத்தை இணைத்து இதயம் வரைவது ஊர் சுவர்களில் படம் வரைவது பூக்களை பரப்பி விடுவது.

ஒரு சிலருக்கு அதுதான் காதல்..

பரிசீல்கள் கொடுப்பது பீச் சினிமா பார்க் அழைத்து சென்று விதவிதமான உணவுகள் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது இதுதான் காதல் என்று சிலர் நினைத்துக் கொண்டு செய்வார்கள்..


அதேபோன்றுதான் அந்த கடற்கரை மணலில் அன்று பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம்..


18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இருந்து அறுபது வயதிற்கு உட்பட்டவர் வரை..

ஜோடிகளாக அனைவரும் காதலர்கள் என்று பெயர் பண்ணி அங்கே அவர்கள் காதலர்களோடு ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டிருந்த நேரம்..



ஜோடி ஜோடியாக மணலில் அமர்ந்து கைகளை கோர்த்துக்கொண்டு ஐஸ்கிரீம் உண்பது. சிரித்து ரசித்து பேசிக் கொண்டிருப்பது, மற்ற ஜோடிகள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது காதலர்கள் வாங்கி வந்த பரிசீல்களை பெற்றுக் கொள்வது போன்று அவர்களுக்கு தெரிந்த வகையில் அன்றைய காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்..




அந்த இடமே இரவு நேரம் என்பதை மறைக்கும் விதமாக மின்விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாக இருந்தது.. அனைத்து ஜோடிகளும் அவர்களது ஜோடிகளோடு அமர்ந்திருந்த நேரம் ஒரு வெட்ட வெளியில் திடீரென்று மின் வெட்டும் வெளிச்சத்தோடு அந்த இடத்தில் யார் கண்ணுக்கும் தென்படாத கையளவு இரண்டு உருவங்கள் வானில் இருந்து பூமியை நோக்கி வந்து இறங்கியது..




இடி மின்னல் பூமியில் விழுந்ததோ என்று நினைக்கும் அளவு கண்ணை கவரும் வெளிச்சத்தோடு இருந்ததால் அனைவரும் பயந்துவிட்டார்கள்..



சற்று நேரத்தின் பின் அது மாயையோ என்று தோன்றும் அளவு அந்த இடம் முன்பு இருந்தது போன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது..



அதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மாய வெளிச்சம் என்று கடந்து மீண்டும் அவர்களது காதல் லீலையை ஆரம்பித்தார்கள்..


காதல் உலகம்..


காதல் அரசன் தன் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்..


“ அரசியாரே 2கே கிட்ஸ் என்னும் தலைமுறை வந்ததும் போதும் நம் காதல் என்னும் புனிதம் அழிந்து கொண்டிருப்பதை தாங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..


ஏதேதோ வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள் பிக்கப் என்கிறார்கள்.. பிரேக்கப் என்கிறார்கள் என்ன கன்றாவி வார்த்தைகளோ..!


காதல் புனிதத்தை எந்த ஜோடி தான் இங்கே உண்மையாக நிலை நாட்டுகிறது..


உண்மையான புனிதமான காதல் ஜோடியை கண்டறிந்து வருமாறு தான் நம் மகன் திருமதி மற்றும் மருமகள் திருமகளையும் பூமியை நோக்கி நாம் அனுப்பி இருக்கிறோம்.. அவர்கள் இதை வெற்றிகரமாக
முடிப்பார்களா?.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..”


“ ஆம் அரசே இப்படியே விட்டால் நம் காதல் உலகமே அழிந்து விடும்..

ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க காதல் என்கிறான்..

பெண் நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஆணிடம் காதல் என்கிறாள்..


இளம் வயதினர் இன கவர்ச்சியில் காதல் என்கிறார்கள்..

குடும்பப் பெண்கள் கடமையே காதல் என்கிறார்கள்..



குடும்ப ஆண்கள் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பை காதல் என்கிறார்கள்..



இப்படி ஒவ்வொருவருக்கும் காதல் என்னும் மந்திரம் பல வகையான அர்த்தங்களை உண்டு பண்ணுகிறது..


அதனால் நம் மகனும் மருமகளும் சிறந்த காதல் ஜோடியை எடுத்துக்காட்டாக உருவாக்கி வருவார்கள் என்று நம்புவோம்..


அப்படி அவர்கள் வெற்றிகரமாக முடித்து வந்தால் தான் அடுத்த காதல் அரசன் எனும் பட்டத்தை நம் மகன் பெற்றுக் கொள்வான்..


நாமும் பொறுத்திருந்து பூமியில் நடக்கும் காதல் நாடக ஆட்டங்களை கண்காணிப்போம் அரசே..! ”



நேரம் நள்ளிரவை கடந்து கொண்டு இருந்தது..


காதல் ஜோடிகள் ஜோடி ஜோடியாக அந்த இடத்தை விட்டு கலைந்து கொண்டு இருந்தார்கள்..


இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் திருமதியும் திருமகளும் ஒவ்வொரு காதல் ஜோடியையும் கண்காணித்து அவர்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஓரளவு அறிந்து கொண்டார்கள்..



அதை வைத்து இனி அவர்களுக்காக கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் கச்சிதமாக செய்வார்கள்..



யாரை யாருடன் ஜோடி இணைத்து அவர்களுக்கு திருப்தி ஆகும் காதல் ஜோடியை கண்டறிவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Last edited:

Advertisement

Top