நிறம் மாறிய நேசம் 2

Advertisement

Sarayu R

Member
Member
இதோ அடுத்த பதிவு


ஷ்யாம் நடந்ததை அசை போட தொடங்கினான்
2 வருஷத்திற்கு முன்பு

ஆபீஸ் கிளம்பிய ஷ்யாமை பார்த்து அவன் அம்மா சுமித்ரா,
என்ன ஆபீஸ் போறியா?
இல்லை பொண்ணு பார்க்க போறியா?
மேக்கப் தூள்.
என்ன விஷயம்?

அம்மா கிண்டல் பண்ணாதே. இன்னிக்கு 6 இன்டர்ன்ஸ் ஜாயின் பண்ண போறா. விஷ்வா ஊர்ல இல்லை. நான் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. அதுதான்.....

ஆனா, செம டென்ஷனா இருக்கியேப்பா!!!!!

ஹும் எத்தனை girls? பார்த்தா எனக்கு சரியா படலை.
சரி சரி நடத்து உன் இராஜாங்கத்தை.

அம்மா please அம்மா.
அம்மாவிற்கு ஒரு கிஸ் குடுத்து விட்டு ஷ்யாம் ஆபீஸ் கிளம்பினான்.

அது ஒரு MNC. விஷ்வா ( ஷியாம்க்கு 2 வருஷம் சீனியர்) அண்ட் ஷ்யாம் ரெண்டு பேரும் US ல பண்ணின புராஜக்ட் மூலம் இந்தியா ஆபரேஷன்ஸ் இவர்கள் கையில்.
பெங்களூர், டெல்லில பிராஞ்ச், சென்னை தரமணியில் மெயின் ஆபீஸ். விஷ்வா, ஷ்யாம் அயராத முயற்சியினால் தான் பெங்களூர், டெல்லி ஆபீஸ் உருவானது.

விஷ்வா இன்டர்வியூ பண்ணும் பொழுது ஷ்யாம் US ல இருந்ததால் இன்டர்ன்ஸ் பற்றி ஒன்றும் தெரியாது.

ஆனால் விஷ்வா சொன்ன ஒரு candidate பற்றி ஷ்யாமின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு, அந்த வயதிற்கே உள்ள குறுகுறுப்பு.

காரை பார்க் பண்ணி விட்டு ஆபீஸ்ல தன்னுடைய கேபின் போய்விட்டு நந்திதா பிளீஸ் கம் டூ மை கேபின் என்று PA வை அழைத்தான்.
மே ஐ கம் இன் என்று கதவை நாசுக்காக தட்டி வந்த நந்திதா மார்னிங் ஷ்யாம் . எல்லா இன்டர்ன்ஸ்ம் கீழ ரிசப்ஷன்ல வெயிட்டிங் ஃபார் யூ.

ஓகே let's Go and meet them என்று இருவரும் ரிசப்ஷன்க்கு வர
ஷயாமின் கண்கள் அலை பாய்ந்தது.

எல்லாரையும் கொண்டு விட பெற்றோர் வந்து இருக்க ரிசப்ஷன் ஒரே கூட்டமாக இருக்கவே,
நந்திதா let's all go to the கான்பரன்ஸ் ஹால் என்று சொல்லிவிட்டு எல்லாரையும் பார்த்து பிளீஸ் ஃபாலோ us என்று நடக்க தொடங்கினான்.

6 அடி உயரம், அதற்கேற்ற உடம்பு, கோதுமை நிறம், அலை பாயும் கண்கள், ready made புன்சிரிப்பு, களையான முகம், ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்க தோன்றும் கம்பீரம், ஒரு chocolate boy look, (போறுமா இன்னும் வர்ணனை வேண்டுமா) இதுதான் நம்ம ஹீரோ ஷ்யாம்.
Conference ஹால் வந்ததும் வட்டமாக அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
பெற்றோர்களிடம் முதல்ல பேசி அறிமுகம் பண்ணிக்கொண்டு, யாருடைய பெற்றோர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் குடுத்து அனுப்பி வைத்தனர் நந்திதாவும் ஷ்யாமும்.

விஷ்வா சொன்னது யார் என்று தெரிந்தாலும் ரொம்ப சாதரணமாக இருந்தான் ஷ்யாம்.
Hi guys, let's know about each other.
Your name, college, family, interest, ........

நான் ஷ்யாம் கிருஷ்ணா. ஸ்கூல் சிஷ்யா and வனவாணி.ஜார்ஜியா tech ல under grad and Masters 4 years la முடித்தேன். விஷ்வாவை அங்க தான் தெரியும். He was my senior. ரெண்டு பேரும் பண்ணின ஒரு ப்ராஜக்ட் மூலமா இந்த வேலை, இந்தியா ஆபரேஷன் வந்தது.
ரெண்டு பேருக்கும் அடிக்கடி டிராவல் இருக்கும்.
ஒரே பையன், வயலின் வாசிப்பேன், பாட்டு பாடுவேன்.பாரதி,இளையராஜா, ரஹ்மான் , reading, இது என்னோட other side. Cooking is my passion. Chennai ல இருந்தா கிரிக்கெட். US போனா டென்னிஸ். Gym, வாக்கிங் ஜாகிங் டெய்லி போவேன்.

நந்திதா இப்போ உங்க முறை

நந்திதா, விஷ்வா, ஷ்யாமுக்கு P A.
பக்கா சென்னைவாசி.
கல்யாணம் ஆகி 1 பெண் குழந்தை.
ஹஸ்பண்ட் இங்க இன்னொரு MNC ல வேலை. ஷ்யாம் விஷ்வா ரெண்டு பேரையும் கன்ட்ரோல் பண்ணர பெரிய வேலை. அது தான் ரொம்ப கஷ்டம்.

ஹே கால வாராதே......ஷ்யாம்

செல்வம் நீங்க சொல்லுங்க......

செல்வம் சொன்னதை கேட்டு
வாவ் இம்பிரஸிவ்!!!!!!
நாளைக்கு மீட்டிங்ல உங்க டிராயிங்ஸ் ஷேர் பண்ண முடியுமா?

ராகவி சொல்லுங்க.......

எக்சல்லெண்ட் . நாகர்கோயில் தானா அல்லது பக்கதுலயா?
அடுத்த முறை வரும் போது சிப்ஸ் வேணும்.
பயப்படாம பேசுங்க. இது தான் முதல் தடவையா வீட்டை விட்டு இருக்கறதா?. எப்போ எந்த உதவி வேண்டும் என்றால் நாங்க இருக்கோம்.

Thank you sir.

பிளீஸ் என்னை ஷியாம் என்றே கூப்பிடுங்க. Sir போட்டு கூப்பிட்டா வயசான ஃபீலிங் . பிளீஸ் guys!!!! டீல்...

அப்பறம் சுரேஷ் நம்ம ஸ்போர்ட்ஸ் பர்சன் சொல்லுங்க.
Chess veraya?. தெய்வமே..... கலக்கறீங்க

ஹே guys u r all talented. Romba சந்தோஷமா இருக்கு.

சொல்லுங்க கன்னட தேசத்து ராஷ்மி.
IAS aim.

ஹம் கோச்சிங் போறீங்களா?
அப்போ இந்த வேலை ஜஸ்ட் கொஞ்ச நாள் தானா?
பெஸ்ட் wishes.
அடுத்து யாரு மீரா அல்லது பாலாஜி?

Excuse me...
என்ன மீரா? என்ன வேணும்?

ஷ்யாம் அம்மா கிட்ட இருந்து போன். காலேஜ்ல இப்போ தான் ஃப்ரீ. 2 நிமிஷம் பேசலாமா?

ஹே அவங்க உங்க கூட வாராததுல கொஞ்சம் டென்ஷன் இருக்கலாம்.
கோ ahead.
தேங்க்ஸ் ஷ்யாம்.
மீரா கொஞ்சம் நகர்ந்து அந்த ரூம் வாசல்ல இருந்து பேச, ஷ்யாம் அவளை பார்த்து கொண்டே இருந்தான்

சோ பாலாஜி, சிங்கார சென்னை வாசி.
சொல்லுங்க!!!!!!

தாம்பரமா? எப்பிடி commute பண்ண போறீங்க?
மெட்ரோ. குட் குட்
என்னோட 2 ஃப்ரெண்ட்ஸ் Sai Ram Eng college தான்.
Welcome அபோர்ட்.

அதற்குள் மீரா வந்து விட,.
லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்.
சொல்லுங்க மீரா.

மீரா சங்கர். தூத்துக்குடி,
அப்பா,அம்மா ரெண்டு பேரும் அங்க காலேஜ் பிரின்சிபாலா இருக்காங்க.
SSN college, வாக் இன் வாக் அவுட் ஸ்காலர்ஷிப் recipient.
பரத நாட்டியம், கர்நாடக இசை, வயலின் அரங்கேற்றம் ஆகி இருக்கு.
Music மூச்சு மாதிரி.

சமுதாயத்திற்கு ஏதாவது பண்ண ஆசை. கோவில் அர்ச்சகர், மடபள்ளில வேலை பார்க்கற குடும்பத்துக்கு அவங்க குழந்தைகளுக்கு ஒரு Charity நடத்தரேன்.
வாலி பால் பிளேயர். பாரதி, சுஜாதா கண்ணதாசன், வாலி, ரீடிங் ரொம்ப பிடிக்கும். அதை விட debate / argue பண்ண ரொம்ப பிடிக்கும்.

1 தம்பி, 1 தங்கை
செம வாயாடி.

இன்டரெஸ்டிங்.
வாயடிக்கு எத்தனை லாங்குவேஜ் தெரியும்?..... ஷியாம்
5, தமிழ், இங்கிலீஷ், மலையாளம், ஹிந்தி , பெங்காலி.

நந்திதா உடனே தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி எல்லாருக்கும் தெரியும். மலையாளம் உங்க ஊருக்கு பக்கம் அதுனால? ஆனா பெங்காலி .........

அம்மா வளர்ந்தது கோல்கட்டா. அம்மா வழி பாட்டி கேரளா. வேலை விஷயமாக இருந்தது கோல்கட்டா. போறுமா?

அது என்ன வாக் இன் வாக் அவுட் ஸ்காலர்ஷிப்?......ஷ்யாம்
வருஷ ஆரம்பத்துல ஃபீஸ் கட்ட வேண்டும். நம்ம பெர்பார்மன்ஸ் கிரேடஸ் பார்த்து ஸ்காலர்ஷிப் கிடைக்கும். 95 % இருந்தா வருஷ முடிவில் நம்ம கட்டின ஃபீஸ் திரும்ப குடுப்பாங்க அதுக்கும் மேல நம்ம கிரேட்ஸ் பார்த்து வேற அவார்ட்ஸ், ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.

பேசிகலி ஃப்ரீயா படிச்சு இருக்கீங்க. ரைட்.....ஷ்யாம்
இன் அ வே யூ ஆர் ரைட் ஷ்யாம்.

வெல்கம் வெல்கம்

நந்திதா நெக்ஸ்ட் என்ன?

பேட்ஜ், பார்க்கிங் decal, அக்சஸ் ID, லேப்டாப் குடுக்கணம் .முதல்ல போய் பேட்ஜ் க்கு ஃபோட்டோ எடுத்து விட்டு லஞ்ச் போகலாம்.
திரும்பி வந்த பின் ஒன் மோர் friendly meeting. நாளைக்கு உள்ள மீட்டிங், அதுக்கு எப்பிடி வர வேண்டும், ட்ரைனிங் டீடைல்ஸ் பற்றி பேசலாம். அப்பறம் ஆபீஸ் டூர்.

அதுக்குள்ள ID, பேட்ஜ் எல்லாம் ரெடி ஆகிவிடும். வேற ஒன்னும் இல்லை.

Sounds like a plan.

Guys நந்திதா will கைடு யூ.

லஞ்ச்க்கு அப்பறம் மீட் பண்ணலாம்.
இன்னிக்கும் நாளைக்கும் ஃப்ரீ லஞ்ச்.
என்ஜாய்

ஷ்யாம் தன்னுடைய கேபின் போய்ட்டு விஷ்வாவிற்க்கு மெசேஜ் பண்ணினான்.

கண்ணுக்குள் மீரா மட்டும் .
5 1/2 அடி உயரம் அல்லது கொஞ்சம் கூட இருக்கலாம்
இடுப்புக்கு கீழ தலை முடி, அந்த நிறம் ( அது என்ன சந்தனத்துல பண்ணினதா அல்லது தங்கத்துல பண்ணினதா அல்லது வெண்ணெயை உருட்டி செய்ததா)
யம்மடியோ முடியலையே!!!!!
டான்சர் அப்பிடின்னா கண்ணை இப்பிடியா உருட்டணம்?
அந்த சந்தன கலர் சாரி அய்யோ செத்தேண்டா.
அழகு, அறிவு இருக்கு. அடக்கமா? அடங்கா பிடாரியா?
விஷ்வா நீ சொன்ன மாதிரி
இது எனக்கு கிடைக்குமா? ரொம்ப ஜாஸ்தி...... அவளின் எதிர்பார்ப்பு என்ன? நான் கனவு காண்கிறேனா?

ஃபோன் அழைப்பு அம்மா கிட்ட இருந்து.
என்ன sir, எந்த ,உலகத்துல இருக்கீங்க?. லஞ்ச் சாப்பிட்டசா? இல்லை கனவா?.

எவ்வளவு மார்க் குடுக்கலாம்?

மித்தும்மா, சும்மா இரும்மா. ஒரு
அம்மா மாதிரி இரும்மா.

நானே ஒரு மாதிரி இருக்கேன். நீ வேற.

டேய் ஃபோட்டோ கொண்டு வாடா.
அது முடியாதும்மா.

விஷ்வா கூப்பிடறான். ஐ லவ் யூ அம்மா. சாயந்தரம் பார்க்கலாம்.

ஹே ஷ்யாம், what's up?
எல்லா இன்டரன்ஸ் வந்தாங்களா?
என்ன ஸ்டெடியா இருக்கியா இல்லை கால்ல விழுந்தாச்சா?

ஹே ஆல் ஓகே.
லஞ்ச் ப்ரேக். நிஜமாவே சான்ஸே இல்லைடா.
அம்மா வேற ஒரே கிண்டல்.
பயம்மா இருக்கு.
She is beautiful.
என்ன confidence.
அமேசிங் பர்சனாலிட்டி.

பேட்ஜ், ID அக்சஸ் எல்லாம் நந்திதா வேலை
அப்பறம் ஒரு மீட்டிங். ட்ரைனிங்
டீடைல்ஸ், ஆபீஸ் டூர். அவ்வளவு தான்.
அங்க ஆல் ஓகே யா?
நாளைக்கு ஜூம் ( Zoom) வீடியோ கால்ல பார்க்கலாம்.
குட் நைட்
மனசு நிறைந்து இருந்ததால் சாப்பாடு வேண்டி இருக்கவில்லை.

எல்லா வேலைகளையும் முடித்து திரும்பவும் கான்பரன்ஸ் ரூம்க்கு நந்திதாவுடன் இண்டர்ன்ஸ் வரவும்
ஷ்யாம் நான் போய் லஞ்ச் சாப்பிட்டு வருகிறேன் என்று நந்திதா போய் விட்டாள்

வெல்கம் பேக்.
நாளைக்கு ஜூம் ( zoom) மீட்டிங். பெங்களூர், டெல்லி ஆபீஸ் மேனேஜர், டீம் லீடர்ஸ், விஷ்வா எல்லாரும் இருப்பாங்க.
டிரஸ் கோட்: Business professional
வீடியோ மீட்டிங் ல பிளீஸ் ஷோ உங்க ஃபேஸ் .
நீங்க பேசும்போது தெளிவாக தைரியமா பேசுங்க.
ஏதாவது கேள்வி, டவுட் இருக்கா?

ஓகே
இப்போ 3 கேள்விகள்.
உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் முதல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம்.
ஆனா, அடுத்த 2 கேள்விகள் முக்கியம்.

இது ஒரு பர்சனாலிட்டி செக்.
1. கேம்பஸ் இன்டர்வியூவில் எத்தனை ஆஃபர் வந்தது?. இது optional
2. ஏன் இந்த கம்பெனி ஆஃபர் ஒத்துகொண்டீங்க?
3. இன்னும் 5 வருஷத்துல என்ன பொசிஷன்ல இருக்கணம் என்ன goal அல்லது பிளான்?

ஹே என்ன நடந்தது? ஒரே சைலன்ஸ்?

மீரா போன முறை நீங்கதான் கடைசி. இப்போ நீங்க முதல்ல வாங்க. அடுத்தது பாலாஜி.
ஓகே.
8 இன்டர்வியூ. எல்லாத்துலயும் ஆஃபர் வந்தது.
6 கம்பெனில 3 வருஷ பாண்ட் கேட்டதால் நான் வேண்டாம் என்று விட்டேன்.
அடுத்த 2 ல இது பெட்டர்.

கடைசி பதில் கொஞ்சம் பெரியது.
எனக்கும் ஆசை தான். 5 வருஷத்துல டீம் லீட், அல்லது உங்க பொசிஷன் அல்லது off-site ஆஃபர். ஆனா ரியாலிட்டி அது இல்லை.

தமிழில் ஒரு proverb.
ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
எங்க வீட்ல 1 வருஷம் வேலை பாரு. அப்பறம் நாங்க பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ. அப்பறம் உங்க வாழ்க்கை.
அடையாரோ அமெரிக்காவோ நீங்க முடிவு பண்ணிக்கோங்க.

என்னது?
ஒரு வருஷம் தானா? நீங்க இன்டர்வியூ ல சொல்லலையே?.....ஷ்யாம்

1 வருஷத்துல மாப்பிள்ளை பார்த்தால் உடனே கல்யாணமா? 6 மாசமோ, 1 வருஷம் அல்லது கூடவே ஆகும்.
நம்பிக்கையோடு இருப்போம். மெதுவாக தான் நடக்கும் என்று.

ஷயாம் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது.

என் கல்யாணம் என் குடும்பம் தான் முடிவு செய்யும். காதல், கத்திரிக்காய், புடலங்காய் பிசினஸ் இல்லை.

ஆனா நான் தெளிவா இருக்கேன்.
அடையாரோ, அமெரிக்காவோ நான் கண்டிப்பா வேலைக்கு போவேன்.
அடையார் என்றால் பேசி பேசியே சம்மதிக்க வைத்து விடுவேன்.
அமெரிக்கா என்றால் மேல படிப்பேன் ( அழுது சத்தியாகிரகம் பண்ணி). செலவு பண்ணின dollars திரும்ப எடுக்க வேலைக்கு போவேன்.
அதுனால கவலை படவே இல்லை.
Living at this moment

அப்பறம் ஒரு விஷயம். எனக்கு அடையார்லயோ, அமெரிக்காலயோ
யாரும் கிடையாது. ஜஸ்ட் சொன்னேன். கால வாரதீங்கப்பா.

ஷ்யாம் கொஞ்சம் தடுமாறி நின்றான்.

பாலாஜி வந்து காப்பாத்துப்பா.
2 ஆஃபர், 1 பெங்களூர் இது சென்னை.
அதனால் நான் இங்க இருக்கேன்.

ம்ம். .... 5 வருஷத்தில் கண்டிப்பா ஒரு டீம் லீட் அல்லது ப்ராஜக்ட் மேனேஜர்.
அப்பறம் வீடு வாங்கணம்.
ரொம்ப பேராசை எல்லாம் இல்லை.

ஹே கண்டிப்பா நடக்கும் பாலாஜி.

Come on ராஷ்மி யூ ஆர் நெக்ஸ்ட்.

1 ஆஃபர். IAS தான் aim. அதுனால ரொம்ப அலட்டிக்கல.
5 வருஷம் பிளான் ஒண்ணுமே இல்லை இந்த வேலையை பொறுத்த வரை.

டோண்ட் மிஸ்டேக்.

Understand Rashmi.

சுரேஷ் என்ன சொல்லப் போறீங்க?

ஸ்போர்ட்ஸ் கோட்டால பேங்க் அப்பறம் வேற 2 கம்பெனி வேலை வந்தது.
IT வேலை வேணும், ஸ்போர்ட்ஸ்ல சாதிக்கணம்.
வருகிற எல்லா வாய்ப்புக்களை கரெக்டா use பண்ணி முன்னேற வேண்டும்.

என்ன பாஸிட்டிவ் அப்ரோச்.
குட் ஃபார் யூ....... ஷ்யாம்

ராகவி வாங்க.
இந்த 1 ஆஃபர் தான் வந்தது.
குடும்பத்துல எல்லாருக்கும் பிடித்தது
நல்ல வேலை கற்றுக்கொண்டு, நல்ல பெயர் எடுக்கணம். வாய்ப்புக்களை
நல்லா பயன் படுத்தி முன்னேற பார்ப்பேன்.

ஒரு நேரத்துல 1 வேலை தானே பார்க்க முடியும். சோ எல்லாம் நல்லதுக்கே.... ஷியாம்

செல்வம் சொல்லுங்க. உங்க டிராயிங் பார்க்க வெயிட் பண்ணரேன்.

புரோஸ் கான்ஸ் பார்த்து இந்த வேலை எடுத்துக்கொண்டேன்
Will try my லெவல் பெஸ்ட். கிடைக்கற வாய்ப்பை நல்ல படியா பயன் படுத்தி பதவி உயர்வு பெறுவேன்.
அப்படியே என் பெயின்டிங் exhibit பண்ண ஆசை.

பெஸ்ட் விஷஸ் செல்வம்

எனி கொஸ்டின்ஸ் கன்சர்ன்ஸ்?

ராஷ்மி கை உயர்த்த,
ஷ்யாம் என்ன என்று கண்ணால் கேட்டான்.

தப்பா எடுக்க வேண்டாம் .
ஷ்யாம் சொன்னது போல ஒரு நேரத்துல 1 வேலை தானே பார்க்க முடியும். அப்போ 8 இன்டர்வியூ, 8 ஆஃபர் ........????

யாருமே எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு கேள்வி, அதுவும் முதல் அறிமுகத்தில். ஒரே
நிசப்தம்............

மீரா மெதுவாக ஆரம்பித்தாள்

இந்த வருஷம் எங்க காலேஜ் ஃபேக்கல்டீஸ் கடைசி வருஷ ஸ்டூடன்ட்ஸ் ரெஸ்யூம் எல்லாத்தையும் கேம்பஸ் இன்டர்வியூ வர கம்பெனிஸ்க்கு அனுப்பி விட்டாங்க.
ஒன்னு இல்லாட்டியும் ஒன்னு கிடைக்கும் என்று.

காலேஜ் ஃபர்ஸ்ட், யுனிவர்சிட்டி ரேங்க் அதுனால எல்லா கம்பெனி லிஸ்ட்லயும் இருந்தேன்.

துரதிஷ்டவசமா முதல் 6 கம்பெனில
பேக்கேஜ் நல்லா இருந்தாலும் 3 வருஷம் பாண்ட் கேட்டாங்க. சோ, வேண்டாம் என முடிவு பண்ணிட்டேன்.
7வது பெஸ்ட் பேக்கேஜ் ஆனால் Noidaல பிளேஸ்மெண்ட். பெர்சனல் ரீசன்ஸ்ல வேண்டாம் என்று சொன்னதால் இப்போ இங்க.
Hope I am clear என்று புன்னகைத்தாள்.

ஒரு நிம்மதி பெருமூச்சு.......

மே ஐ கம் இன் என்று நந்திதா வரவும்
சூழ்நிலை இயல்பானது.

நந்திதா உடன் எல்லாரும் போக, ஷ்யாம் பெருமூச்சு விட்டான்
எப்படி ராஷ்மியை சமாளிக்க முடியும்? என்று யோசனையில்.

நந்திதா பேட்ஜ், லேப்டாப், அக்சஸ் குறிப்பு , எல்லாம் குடுத்து விட்டு ஆபீஸ் டூர் முடித்தாள்.

ஓ.க குட் நைட், நாளைக்கு மார்னிங்
7:45 க்கு பார்க்கலாம்.

அவர்களை அனுப்பி விட்டு, ஷ்யாம் ரூமுக்குள் வந்த நந்திதவை பார்த்து

நந்திதா நாளைக்கு ஜூம்க்கு எல்லாம் ரெடியா?.
எல்லாம் ரெடி.

இன்டர்ன்ஸ் பற்றி .........ஷ்யாம் இழுக்க

ராஷ்மி கொஞ்சம் கஷ்டம். அலட்டல்.
ராகவி பாவம்.
மீரா ரொம்ப அனுசரித்து போறாங்க. நல்ல பிரெண்ட்லி.
பாலாஜி ஃபேமிலி கமிட்மென்ட். நம்ப முடியாது.
செல்வம் கனவுல இருக்கார்
சுரேஷ் மதில் மேல் பூனை

ராஷ்மி தவிர 5 பேரும் நல்ல டீம். லஞ்ச் கூட சேர்ந்து சாப்பிட்டங்க.

ராஷ்மி அவங்க கூட சேரவே இல்லை.

ம்ம்........மம்
கரெக்ட் நந்திதா. நானும் அப்படித்தான் நினைக்கறேன்.

ராஷ்மி மீராவை பார்த்து கேட்ட கேள்வி அதை மீரா எடுத்து கொண்ட வீதம் பற்றி ஷ்யாம் சொன்னான்.

Oh No...... நந்திதா.

சரி நாளைக்கு பார்க்கலாம்.
எதாவது வேணுமா?.

பை நந்திதா நாளைக்கு பார்க்கலாம்.

ஷ்யாம் ஒன்னு கேட்கலாமா?
என்ன என்று தன்னுடைய புருவத்தை உயர்த்தி பார்த்தான்.

ஒரு ஆளு ஒரே ஜொள்ளு போல.
வாயாடி வலைல விழுந்தசா?

ஹே சும்மா இருக்கியா?.
கிளம்பற வழிய பாரும்மா தாயே!!!!

எங்களுக்கும் எல்லாம் தெரியும்.

இது எல்லாம் தாண்டின ஆளு நானு தெரியுமா?
சிரித்துக்கொண்டே நந்திதா போனாள்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top