Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜிமிக்கியின் ஜனனம் விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை சங்கீதா ராஜாவின் ஜிமிக்கியின் ஜனனம் எனது பார்வையில். விஜியின் அம்மா மங்கையின் தங்கை ஜமூனா அக்கா இருக்க அக்காவின் கணவரான அவள் அப்பா முத்தையாவின் மேல் உள்ள காதலால் அவரை திருமணம் செய்ய விரும்புவதால் மங்கையின் வீட்டினர் செய்த செயல்களால் மங்கையும் விஜியையும் முத்தையா பிரிய நேரிடுகிறது. அவள் அப்பா அவளுக்காக வாங்கிய நிலத்திற்கு அவளின் மாமா விற்பனை செய்ய கையெழுத்து வாங்க வரும் ஜனா விஜி என்கிற ஜிமிக்கியை விரும்புகிறான். தன் அப்பாவின் சிகிச்சைக்கு பணத் தேவைக்கான முயற்சியில் இருக்கும் அவன் , சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜியை உடனடியாக திருமணம் செய்து கொள்கிறான். தன் அப்பாவின் மீது மிகவும் பாசம் வைத்த விஜி அப்பாவின் பிரிவிற்கு பிறகு அப்பா மற்றும் ஜமூனா இருவரையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். ஆனால் அது வரை பிறந்த வீட்டில் இருக்கும் அவள் அம்மாவின் மனப்பிறழ்வால் தான் வெறுக்கும் அப்பாவுடன் அம்மாவை அனுப்பி வைக்கிறாள். ஜனாவின் அப்பா அவள் அப்பாவின் நண்பர் என்பதால் அவளை அவன் அப்பா ஏற்றுக் கொண்டாலும் அவன் அம்மா சமாதானம் அடையாமல் இருக்கிறார். இந்த நிலையில் ஜனாவிற்கு தன் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடியேறும் நிலை ஏற்படுகிறது. ஜனாவின் துணையுடன் பிரச்சினைகளை சரியாக எதிர்கொண்டாளா என்பதையும் அவள் மீது அதிகம் பாசம் வைத்த அவளது அப்பாவை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார் சங்கீதா. யதார்த்தமான கதைக் களம். அறியாமையால் ஜமூனா செய்த காதலும் மங்கையின் பொறுப்பற்ற தன்மையால் பாதிக்கப்பட்டது அன்பான அப்பா மகள் உறவு. இனிமையாக இருந்த விஜியின் குழந்தைப் பருவம் பாதித்தாலும் ஜனா என்ற தங்க மனிதனால் சீராகிறது. ஆனால் நல்ல இளமைக் காலத்தில் நல்ல குடும்ப வாழ்க்கையையும் பாசம் வைத்த மகளின் பிரிவால் வாடும் வாழ்க்கையை அனுபவிக்கும் முத்தையா பாவம்தான். ஆனாலும் அவரது கோபத்தால் விளைந்ததை அனுபவிப்பது கொடுமைதான். பிரிந்திருந்தாலும் தந்தை மகள் உறவு அருமை. வாழ்த்துகள் மா.
 
மிக்க நன்றிம்மா.... 😍😍😍😍😍😍😍 தங்களின் விமர்சனத்திற்கு காத்திருந்தேன் ❤❤❤❤❤
 
Top