Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 5❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 5❤️‍🔥

"ஆணின் பேராண்மை நீயெனில்
உன்னில் கையடை....!!!"



மருந்து நெடிகளை பரப்பி தான் பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் தேவலோகம் என்று கர்வமாக நிமிர்ந்து நின்றது அந்த மருத்துவமனை.

பணம் செழித்த மனிதர்கள் மட்டுமே மருத்துவம் பார்க்க கூடிய பலசிறப்புகள் கொண்டு ஒரு நாளைக்கு பல கோடிகளை தனக்குள் இழுக்கும் மருத்துவமனை.

"ஆனால்! மாதம் ஒரு முறை இலவச அறுவை சிகிச்சை வழங்கும் மருத்துவமனையும் அதுவே!"

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம்களை நகரத்தில் அல்ல; மலைகளில் வாழும் மக்களுக்கு வழங்கும் மருத்துவமனை.

'தேவை எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே சென்று உதவும் கரங்கள்!'

இப்படி அந்த மருத்துவமனையின் சிறப்புகள் சொல்லில் அடங்கா... அம்மருத்துவமனையின் மின்தூக்கி மூலம் மூன்றாம் தளம் வந்து சேர்ந்தான் ஏகன்.

அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனன்.

"அவன் குறிக்கோள் எல்லாம் 'பணம்' 'பணம்' 'பணம்' மட்டுமே!"

பணத்தை தாண்டி அவனை ஈர்க்கும் இரண்டு உண்டு. ஒன்று அவன் குடும்பம்; மற்றொன்று அவன் நட்பு.


தன் உயிரில் வந்துதித்த ரத்தினம் முட்டை முழி, சுருட்டை முடி கொழுகொழு அழகன் அவன் மகன் அகர மகிழ்வன்.இன்று ஒரு பெண்ணை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி அறிந்து 'ஓடோடி' வந்தான் தந்தையாக.

இதமாய் மாலை கதிர் இளவஞ்சியின் முகத்தில் விழுக முகம் பட்ட கதிரொளி இடையில் தெரிந்த மூக்கில் சிம்மாசனம் இட்டு வீற்றிருந்த மூக்குத்தியில் பட்டுத் தெள்ளியதாய் மின்ன.

பல வர்ணம் காட்டிய மூக்குத்தியின் கலாபத்தை கண்ட பிள்ளை அவளின் மூக்குத்தியை தொட்டு ரசித்து மகிழ்ந்து விளையாட.

அதுவரை அமைதியாக இருந்த அறை நொடி பொழுதில் 'வட்டமேசை மாநாடு' போல பரபரப்பாகியது.

அறையின் வெளியே கருப்பு உடையை சீருடையாக அணிந்த பாதுகாவலர்கள் கூட்டம் கூட.

அவர்களின் புடை சூழ கண்கள் படு கூர்மையாக கூறு போடும் விழிகளை குளிர் கண்ணாடிக்குள் மறைத்து வந்த ரிதம் கண்டு மயங்கிய 'ரோமன் சிற்பம்' வந்தான்.


நெடு நெடு உயரமும் ஊசி மூக்கும் க்ளீன் சேவ் செய்த சதுர தாடை இறுகி கிடக்க, அழுத்தமான மீசை கனியாத இதழோடு உறவு கொண்டாடியது.

அவன் அருகே யாரும் நெருங்காதவாரு இரண்டடி விலகியே நடந்துவர.

தேவ சபைதனில் தேவர்கள் புடை சூழ்ந்திருக்கும் தேவர்களின் தலைவனாய் ஒற்றை மணிவைரமாய் மின்னினான் பொன்னார் மேனியன்.

விடுவிடுவென்று உள்ளே நுழைந்தவன் அதிரடியாய் மருத்துவரை பார்த்து தன் கேள்விகளை கேட்கத் தொடங்கினான்.

"டாக்டரை தவிர இங்க எதுக்கு இன்னொரு ஆள் முதல்ல!? வெளிய போங்க! இது என்ன கட்சி கூட்டமா!?" விரட்ட.

அவன் விரட்டியதில் அரண்ட செவிலி விருட்டென்று அறையை விட்டு ஓடி இருந்தாள்.

அறைக்குள் வந்த ஏகனை முதலில் "இவனா!?" என்று தான் எண்ணினாள் ரிதம்.

அவனை முதன்முதலில் பார்த்த போதே "அழகாய் இருக்கிறான்!" என்ற எண்ணம் தோன்றினாலும்; தன் தாத்தாவை அவன் தள்ளிவிட்டு சென்றது அவனை 'குப்பையாய்' அல்லவா அவளுக்கு காட்டியது.

இன்னும் சிறிது நேரம் அங்கே இருந்தால் பொறுமை கரைந்து, கோபம் கனன்று, அவனை எதுவும் பேசிவிடும் அபாயம் உள்ளதால் சிறுவனை விலக்கிவிட்டு வெளியேறினாள் ரிதம்.

அறையில் இருந்து அனைவரும் வெளியேற

"ஹேய் யூ உன்னை யாரு இப்போ வெளிய போக சொன்னது!?" கத்தினான் அவன்.

யாரிடமோ மீண்டும் கத்தத் தொடங்கி விட்டான் 'பைத்தியம்' என்று ரிதம் நடையை கட்ட.

அவளின் முன்பு வந்து நின்றான் ஒரு கருப்பு உடை

"என்ன!?"
என்றிவள் கோபமாக நிமிர

அவனோ மரியாதையாக"சிஸ்டர் கொஞ்சம் இருங்க!" என்க

அப்பொழுதும் இவள் "செவிலியர் யாரையேனும் அழைப்பான்!" என்று எட்டுக்களை எட்டிப்போட.

அவ்வளவு தான் அவன் பொறுமை காற்றில் பறக்கும் பொரியாய் பறந்திருந்தது.

"ஏய் ரெட் சுடி! உன்னத் தான்" என்ற பிறகு தான் இவ்வளவு நேரம் அவன் 'ஏய்','ஓய்' என்று ஆணவமாய் அழைத்தது தன்னைத் தான் என்பது புரிந்தது அவளுக்கு

"என்ன வேணும்!?" என்றவாறு கோபமாய் அவன் முகம் ஏறிட்டாள் ஏந்திழை.

ஒருவழியாக அவள் திரும்பி விட மற்றவர்கள் அறையை காலி செய்தனர்.

கொட்டை பாக்கு விழியழகன் அகரன் திருதிருக்க ; பெண்ணவள் உள்ளம் 'எதற்காக அழைத்தான்!?' என்று குறுகுறுக்க; குத்தீட்டி விழியால் குதறுவதற்கு நேரம் பார்திருந்தான் ஏகன்.


"யார் நீ!? என்ன மோட்டிவ் வச்சுட்டு என் பையனை நெருங்குற!? இதோட செகண்ட் டைம் என் பையனை நீ அப்ரோச் பண்றது ஐம் ரைட் உனக்கு என்ன வேணும் !?"

கடுமையிலும் கடுமை, கடும் கடுமையாக வார்த்தையை அள்ளி அவன் தெளிக்க.

அவன் தோரணையும் , சுற்றி நின்ற பாதுகாவலர் கூட்டமும் சொல்லாது சொன்ன 'பணமுதலை' அடைமொழையை மனதால் உணர்ந்தவள் ஏகன் கூறிய 'இரண்டாம் முறை' என்றதில் தான் சிறுவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள் ரிதம்.

'ஓ! அன்னைக்கு மதுரையில பார்த்தது இந்த பையன் தானா. ஒரே வாரத்துல ஆள் ஒல்லியான மாதிரி இருக்கான் பிள்ளை!'

தனக்குள் எண்ணிக் கொண்டு வெளியே அக்னி தீரளாய் நின்றவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து நோக்கி

"நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. அது எனக்கு தேவையும் கிடையாது. நான் உங்க பையனை ரெண்டு டைம் பார்த்ததும் கூட கோ - இன்சிடன்ட் தான். இதை நம்புங்க, இல்லைனா விடுங்க!" என்றவள் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாவது உணர்ந்து.

சிறுவனிடம் மட்டும் கிளம்புவதாக 'டாட்டா' காண்பித்து சென்றேவிட்டாள் ரிதம்.


அவள் வெளியேறிய நேரம் உள்ளே நுழைந்த கருப்பு உடை ஆள் ஒருவன் ரிதமின் காரைக்குடி வாழ்வை பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பையை அவன் கரத்தில் ஒப்படைத்தான்.

'ஏன்?'

அந்த கோப்பையில் இப்பொழுது இதே மருத்துவமனையில் அவள் தாத்தாவிற்கு இரண்டாம் அடுக்கில் உள்ள மூளை நரம்பு சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் அனுமதி வாங்கி உள்ளதும்.தாத்தா அவளின் தோழியுடன் பூங்காவில் அமர்ந்து கொண்டிருப்பது வரை தகவலாக வந்திருந்தது.

'அப்படியெனில் அவன் தீரம் எத்தகையது!?'

தீரனின் தீரனாய் திகழும் தன்னையே மதிக்காது அவள் செல்வது ஏகனின் அகங்காரத்தை அசைத்துப்பார்க்க 'இவளை' என பல்லை கடித்தவன் அமைதியுற்றான்.

மகனின் 'ப்பா' என்ற அழைப்பில்.

அவ்வளவு தான் ஏகன் அகங்காரம் எல்லாம் ஆரணன் கண்டு கரையும் அல்லல் போல் கரைந்து காணாது போனது.

'திமிர் ,தலைகணம் ,அகங்காரம் எல்லாம் மண்டியிடும் ஓரிடம் அவன் மகன் முன்பு மட்டுமே இதோ இப்பொழுது போல!'

"என்ன அகரா? என்ன வேணும்!?" அக்கறை சக்கரையாய் இனிக்க மகனிடம் கேட்க

"அப்பா எனக்கு ரசகுல்லா வேணும்!" என்றான் பிள்ளை.

இனிப்பு வகையில் அகரனுக்கு குலாப் ஜாமுன் மட்டுமே பிடிக்கும் இன்று புதிதாய் ரசகுல்லா கேட்க

மகனிடம் "வெய்ட் பண்ணு அகரா!" என்று சென்றவன் தன் இல்லத்தில் பணிபுரியும் தலை சிறந்த உணவுக்கலை வல்லுனர் மூலம் கைப்படாது சுத்தமாக செய்யப்பட்ட ரசகுல்லா கிண்டிக்குள் கூத்தாட அதை ஒருவர் அரைமணி நேரத்திற்குள் கொண்டுவர.

ஏகன் மகன் கரத்தில் அதனை ஒப்படைத்து அவன் முகம் பார்க்க.

ஓர் கணம் அப்பனை நிமிர்ந்து பார்த்த பிள்ளை வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டது.

ரசகுல்லா அவன் தீண்டாததால் ஒரு ஓரமாக இருக்க.

"என்ன ஆச்சு அகரா!? சொல்லு !"
மூன்று வயது மகனிடம் ஏகன் இறங்கி வந்து கேட்க.

அவனோ,"அப்பா எனக்கு இப்போ போனாங்க இல்ல ரசகுல்லா அவங்க வேணும்!" என்பதற்குள் குட்டியின் குண்டு விழிகள் குற்றாலத்தை நிறைத்தது அம்பகத்தில்.

மகனின் விருப்பம் ஒரு பொருளிலோ அல்லது பொம்மையிலோ என்றால் நொடியில் கைகளில் தவழ செய்வான்.

மகன் வானிலா கேட்டால் நிலவுப் பயணம் ஒன்றை நிறுவச்செய்யும் வல்லவன்.


'ஆனால்! மகன் இப்போது கேட்பது உயிருள்ள பெண்ணை அல்லவா வேண்டும் என்கிறான் என்ற தயக்கம் கிஞ்சித்தும் இல்லாது ; கண்டிப்பாக அழைத்து வருவதாக வாக்களித்தான்!' தந்தை.

அறையில் இருந்து வெளியேறிய ரிதம் ரேணுவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து தாத்தா உடன் மருத்துவமனைக்குள் வருமாறு கூறி தாங்கள் அனுமதி பெற்ற மருத்துவரின் அறை முன்பு காத்திருப்போர் இருக்கையில் சாய்ந்தாள்.

'தனக்கென இருக்கும் ஒற்றை இரத்த உறவை பாதுகாத்தே ஆகவேண்டும்!' வைராக்கியம் அவளுக்கு.

அதற்காக இழிவான செயல்கள் செய்திட அவள் மனதும் வளர்ப்பும் ஒரு போதும் அவளுக்கு இடமளிக்காது.ஆனால் தாத்தாவிற்காக தன்னால் முடிந்த தலைகுனிவில்லாத எதையும் செய்வதற்கு தயாராய் இருந்தாள்.

உதாரணமாக,'உன் தாத்தாவிற்கு மருத்துவம் இலவசம். காலம் முழுதும் இதே மருத்துவமனையில் செவிலியாய் ; ஏன் ஒரு ஆயாவாக பணிபுரி!'

என்றொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்க அவள் தயார்.அடுத்தவரை அடித்து,பழித்து பெறாத; உடல் உழைப்பில் வராத; சிறு பொருளும் 'சீண்டக்கூடாத பொருளே' என்பாள்.

"தன் உழைப்பில் வாழ்வதே சிறந்தது!" என்றெண்ணி ஆயா வேலையையும் உடனே ஏற்றுக்கொள்வாள்.

'ஆனால் அதற்கும் வாய்ப்பில்லாது போனது தான் இங்கே வேதனை!'

சென்ற மாதம் எடுக்கப்பட்ட சோதனைகள் மற்றும் மதுரையில் எடுக்கப்பட்ட சோதனைகள் தவிர்த்து புதிதாக சோதனைகளுக்கு மருத்துவர் எழுதி கொடுக்க.

ஒருமணி நேரத்தில் சோதனை முடிந்து முடிவகளோடு மீண்டும் மருத்துவரை நாடி வர.

ஒருமுறைக்கு இருமுறை மருத்துவ சோதனைகளை நன்றாக பார்த்த மூளை நரம்பியல் மருத்துவர் ரிதமை மட்டும் அறைக்குள் இருக்கக் கோர.

ரேணு தாத்தா உடன் வெளியேற ; ரிதம் ஒன்றாக பிணைந்த கரத்தை கோர்த்து பிரித்தவாரு 'என்ன சொல்ல போகிறாரோ!?' பதைபதைப்புடன் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.


அவள் மனம் புரிந்தாலும் நிலையை விளக்க வேண்டி ரிதமிடம் பேசத் தொடங்கினார் மருத்துவர்.

"மிஸ்.ரிதம் உங்க தாத்தாக்கு மூளைல சின்னதா கட்டி இருக்கு. முன்னாடி எதும் அறிகுறி தெரிஞ்சதா!?" என்க

"ஆமாம் டாக்டர்! கொஞ்ச நாளா மறதி இருந்தது அது வயசானதால இருக்குன்னு நினச்சு விட்டுட்டேன்" என்றாள்.

"அது ஆரம்ப நிலை மிஸ்.ரிதம்.இப்போ அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்திருக்கு. அதனால தான் முன்ன விட இப்போ மறதி அதிகமாகி தான் யாருன்னே மறக்கறதும்
முன்னாடி நடந்ததை இப்போ நடந்த மாதிரி பேசறதும் எல்லாம் அதோட அறிகுறி தான்.
உடனே ஆப்பரேட் பண்ணினா அவருக்கு நல்லது.இன்னும் கொஞ்சம் வளர்ந்தாலும் ரொம்ப கஷ்டம் தான்!" அவர் உண்மையை உடைத்து கூறிவிட.

காதால் கேட்ட செய்தியின் வீரி
யம் இதயத்தை சென்று தாக்க நெஞ்சு விம்மியது பெண்ணவளுக்கு.

துக்கம் தொண்டையை அடைத்தாலும் அவருக்கு 'நன்றி' கூறி விரியாத இதழை இழுத்து விரியச் செய்து வெளியே வந்தாள் ஏக்கத் தாரகை.
 
அகரனுக்கும் ரிதத்துக்கும் இடையே ஒரு bondingஉருவாக ஆரம்பிச்சிட்டுது..... ❤️ ❤️ ❤️


ஆமா, இன்னும் அகரனோட அம்மாவைப் பற்றி எதுவுமே சொல்லலியே..... divorce ஆஹ் இல்ல, இறந்துட்டாங்களா...?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேய் குட்டி வாண்டு ரிதத்தோட பேரை ரசகுல்லா ஆக்கிட்டியே.
ரசகுல்லா வேணும்னு கேட்டா இந்த ஏகன் கைபடாம தயாரிச்ச ரசகுல்லா ஸ்வீட்டை தர்றானே.
அதெப்படி கைபடாம தயாரிக்கிறது?🙄🙄🙄. ஆனாலும் இவனோட அலப்பறை அதிகமா இருக்கு 🫤🫤🫤🫤.
அச்சோ தாத்தாக்கு மூளைல கட்டியா??😔😔😔😔😔
 
❤️❤️❤️❤️❤️ so sad ரிதம் என்ன செய்ய போறாள்...... 🙁 ரிதத்துக்கு பெயர் ரசகுல்லாவா நல்லாயிருக்கு 👌
இணையிலா நன்றிகள்💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேய் குட்டி வாண்டு ரிதத்தோட பேரை ரசகுல்லா ஆக்கிட்டியே.
ரசகுல்லா வேணும்னு கேட்டா இந்த ஏகன் கைபடாம தயாரிச்ச ரசகுல்லா ஸ்வீட்டை தர்றானே.
அதெப்படி கைபடாம தயாரிக்கிறது?🙄🙄🙄. ஆனாலும் இவனோட அலப்பறை அதிகமா இருக்கு 🫤🫤🫤🫤.
அச்சோ தாத்தாக்கு மூளைல கட்டியா??😔😔😔😔😔
கையில் உறை அணிந்திருந்தால் கைபடாமல் தயாரித்தது தானே 😂😂😂😂 ஒப்பிலா நன்றிகள் 💐
 
அகரனுக்கும் ரிதத்துக்கும் இடையே ஒரு bondingஉருவாக ஆரம்பிச்சிட்டுது..... ❤️ ❤️ ❤️


ஆமா, இன்னும் அகரனோட அம்மாவைப் பற்றி எதுவுமே சொல்லலியே..... divorce ஆஹ் இல்ல, இறந்துட்டாங்களா...?
கடக்கும் நதியில் சருகாய் நாமும் செல்வோம்... வழியில் அனைத்திற்கும் விடைகள் மிதக்கலாம்.... ஈடிலா நன்றிகள்💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேய் குட்டி வாண்டு ரிதத்தோட பேரை ரசகுல்லா ஆக்கிட்டியே.
ரசகுல்லா வேணும்னு கேட்டா இந்த ஏகன் கைபடாம தயாரிச்ச ரசகுல்லா ஸ்வீட்டை தர்றானே.
அதெப்படி கைபடாம தயாரிக்கிறது?🙄🙄🙄. ஆனாலும் இவனோட அலப்பறை அதிகமா இருக்கு 🫤🫤🫤🫤.
அச்சோ தாத்தாக்கு மூளைல கட்டியா??😔😔😔😔😔
😂😂😂😂 வீடியோ உண்மையாகவே அருமை
 
Top