Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 25 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 25 ❤️‍🔥

"உன் கைபட்டு
இனிக்கும்
வேப்பம் குச்சி..........!!!"


தனக்குள் மூழ்கி கற்பனையில் வாழ்ந்து தானாய் சிரித்து விரல் நகத்தை இழந்து கொண்டிருந்த தன் 'உள்ளங்கவர்' காரிகையை கவனித்தவாரு உள்ளே நுழைந்தான் ஏகன்.

அவள் சிரிப்பில் என்றுமே 'ஒரு அழகு' மறைந்து தாக்குவதை கண்டுள்ளான் ஏகன்.

அதில் பலமாய் தாக்குண்டவன் அவன்
அல்லவா!

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக சிரிப்பாள் ரிதம்.

தோழியர் இடையே 'கலகலவென்று' நகைப்பவள்;

இக்னேஷ், நவநீ, கதிர் முன்பும் 'மனம்விட்டு' சிரிப்பாள்.

ஆனால் பாலு,லதா முன்பு 'அடக்கமாக' புன்னகைப்பாள்.

அடுத்தவர் முன்பு 'மென்னகை' மட்டுமே காண்பிப்பாள்.

அகரன் முன்பு அவனுடன் சரிசமமாக பேசி சிரிக்கும் நேரம் 'பிள்ளையாய்' சிரிப்பாள்.


சில நேரம் அவனுடன் வார்த்தையாடி அவனை வெல்லும் தருவாயில் 'பூடகமாய்' சிரிப்பாள்.

மகனுக்கு பாடம் சொல்லி கொடுத்து அவன் தவறாக கூறி விழிக்கும் போது 'விளையாட்டாய்' சிரிப்பாள்.


அவன் கூறும் கதைகளை கேட்டு 'மகிழ்ந்து' சிரிப்பாள்.

அவன் திறமைகளை கண்டு வியந்து 'ஆனந்தமாய்' பூரிப்பாள்.


"அவளுக்குள் தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள்!?"


ஆனால் இன்று எதையோ நினைத்து தனியே சிரித்துக் கொண்டிருந்த,

"சிற்றிடை செந்தாமரை சிரிக்கும் காரணம் என்னவாக இருக்கும்!?" அவனுக்குள் ஆர்வம் துளிர்க்க

"என்ன ரிதம் தனியா சிரிச்சுட்டு இருக்க!?" என்றவாறு மனைவி அருகே வந்தவன் வேறெதுவும் செய்யாது மகனையும், மனைவியையும் ஆழ்ந்து நோக்கினான்.

"இந்த சின்னஞ் சிறு கூட்டிற்குள் தானுமொரு அங்கமானால்...!?"

எனும் எண்ணமே அவனுக்கு உவகையை ஊற்றாய் பெருகச் செய்ய.

தனக்கு அந்த வாய்ப்பை விதி வழங்கினால்,'தானும் தன்யனாவோம்!'
கிடைத்தால் எனும் கற்பனையே உள்ளூர உவகையை ஊறச் செய்தது.

முதல்முதலாக தன் கண்களால் பெண்ணவளின் கண்களை தாக்கி 'போரின்' அறிவிப்பை கொடுத்து நேரிடையாக 'வசியப் பார்வை' வீசிச் சென்றான்.

அவளுக்கோ உயிரின் கட்டுக்கள் அவிழ்ந்த உணர்வு.

தேவன் பார்வை கண்ட தேவ முல்லையள் முகிழத்துடிக்கும் மோக மலர்களை நாணம் எனும் கயிற்றால் கட்டிவைக்க.

கட்டவிழும் காதல் மலரின் அறிகுறியாக 'தனியே சிரித்து' மாட்டிக்கொண்ட நறுமுகை ஒன்றை மறந்தாள்

"மலர்ந்த மலரை மறைக்கவா முடியும்!?"

அறியா பேதை அதைத்தான் முயன்றிருந்தாள்.

"என்ன நினச்சு சிரிக்கிற!? சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன் இல்ல!" என்றவாறு வந்தவன் சுவாதீனமாக அறையில் கிடக்கும் சோஃபாவில் சென்று அமர.

எப்பொழுதும் அறைக்குள் வந்தால் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுற்றும் கணவன்.

உறங்கும் நேரம் அவன் அறைக்குள் சென்று அடைந்தான் என்றால் விடியலில் தான் 'சொர்கவாசலைத்' திறக்கும் இயல்பு கொண்டவன்.அவளாய் அழைக்காது அவளிடம் ஒன்றும் பேசிடாத ரிதமின் மன்னவன் இன்று வழியேற்க வந்து பேசிட.

"ஏன் என்னிடம் இத்தனை நாள் நீ பேசவில்லை!?" என்று கேள்விகளை கேட்டு இந்நேர இதத்தை போக்கிக் கொள்ள விரும்பாது அவனின் போக்கிற்கே சென்றாள்.

திருமண வாழ்வு என்பது இரு முனைக் கயிறு அதனை ஒருவர் அழுத்தி இழுக்கும் போது மற்றொருவர் சற்று விட்டுப்பிடித்தால் வாழ்வு சிறக்கும்.

அதை விடுத்து உன்னில் நானே உயர்ந்தவன் என்றோ!? உன்னில் நானே உயர்ந்தவள் என்றோ!? கிளம்பினால் வாழ்வு நிர்மூலம் தான்!

அறிந்தவர் வாழ்வார்! அறியாதவர் விட்டுக் கொடுத்தலின் சுவையை உணராது, துணையின் அழுத்தம் பற்றி பேசியே வீழ்வார்!

வீடுபேற்றின் தத்துவம் உணர்ந்தவள் ரிதம்.
சிறு வயதில் 'குடும்பம்' எனும் தளைக்குள் இளவரசியாக வலம் வந்தவள்.

தாய் கோபம் கொள்ளும் நேரம் தந்தை அமைதியாவதும்,தந்தை கோபம் கொண்ட நேரம் தாய் அனுசரிப்பாய் நடந்து குடும்பம் எனும் வண்டியை நகர்த்திய அற்புதத்தை கண்டவள்.

"என்ன!? அந்த அற்புத உணர்வை காலம் முழுவதும் நினைவாக அணைக்கும் பாக்கியம் மட்டுமே தனக்கு கிட்டும் என்று தான் அன்று அறியாது போனாள்!"

அவன் அருகே அமர்ந்து தோள் சாய மனம் மிட்டாய் கேட்கும் குழந்தையாய்
அடம்பிடிக்க.கூச்சம் இமயமாய் உயர்ந்து தடையாய் நின்றது.

நாணம் விற்று நாதன் தோள் சாய முடியாத கன்னிகை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் ஆசை தீக்கு பதில் கூற முடியாது தத்தளிக்க.

"அவளின் விழி வழி அகம் புகுந்தானோ என்னவோ!?"

"கொஞ்ச நாள் எனக்கு டைம் குடு ரிதம்!" மனைவி இடம் கால அவகாசம் கேட்டிருந்தான்.

அவள் தலையை மேலும் கீழும் ஆட்டி 'சம்மதம்' தெரிவிக்க.

அதைக் கண்டவன் அதற்கும் மேல் அங்கே அமர்ந்து பெண்ணின் மனதை காதல் எனும் அருங்கயிற்றால் கட்டி இழுத்து.
பிறகு இழுத்த வேகத்தில் கீழே தள்ளி 'துன்புறுத்த விரும்பாது' வேகமாய் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

ரிதம் மனமோ, "நேரம் கேட்டவன் ஏன் வெடுக்கென்று எழுந்து சென்றான்!?" புரியாது தடுமாறி.


"உனக்கு கொஞ்சம் கூட ரோசமே கிடையாது அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.அவனை பார்த்தா தாவி ஓடுற... எங்க போற...!? இப்போ பார்த்த இல்ல உன்ன அம்போனு விட்டுட்டு போய்ட்டான்.இதுக்கு வீணா கற்பனை பண்ணி பைத்தியமா சிரிப்பு வேற.இனி இந்த மாதிரி அசட்டு வேலை எதையாவது செய்யு உனக்கு அப்பறம் இருக்கு!" என்று அவனை எண்ணி தறிகெட்டு அவன் புறம் தாவிய தன் மனதை கடிய.

'தீரா பாரம்' ஒன்று நெஞ்சில் ஏற தொண்டை கடந்து மேலெழுந்த உணர்வு கண்ணீராய் பெருக்கெடுக்க தயாராக.
ஏறிய பாரம் எல்லாம் நொடியில் மறைந்தது.


ஏகனின் சிறு உருவமாய் அவள் தவமின்றி பெற்ற வரம் தலையை அவளின் மார்மீது பதித்து கழுத்தை இறுக்கிக் கொண்டது.

'என் தந்தைக்கு தான் அன்பை சொல்ல வார்த்தைகளும், காலமும்,பொழுதும் வேண்டும்.எனக்கு அவை எல்லாம் தேவையே இல்லை!'

பெறாத அன்னையின் வருத்தமுற்ற மனதிற்கு அன்பெனும் மயில் பீலையால் மருந்திட்டான்.

மகனின் எதிர்பார்ப்பில்லா அன்பில் அகம் மகிழ அவனை அணைத்துக் கொண்டு உறங்கி போனாள் அன்பு சூழ் அன்னையவள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு ரிதமிற்கு ஓர் நிம்மதியான உறக்கம்.

ஏகன் செய்த செயலில் மனம் கவலையில் மடிய இருந்த நேரம்.புதைமணலில் புதைந்து கடைசி மூச்சிற்கு ஏங்கி,


'உதவிக்கு யாரும் வருவரா!?'

'பிடித்து எழ சிறு கம்பு கிடைக்காதா!?'

வாழ்வின் கடை நொடியில் மருகும் உயிர் போகும் நேரத்தில் கிடைக்கும் 'கொழுக் கொம்பாக' கிடைத்த மகனின் அணைப்பு அவளை அனைத்தையும் மறக்க செய்த மாமருந்தானது.


மெல்ல எழுந்து சோம்பல் முறித்து மணியை பார்க்க அதுவோ 'பத்து' என்று பல்லை காட்டியது.அருகே மகனை பார்க்க எப்பொழுதும் ஆறு மணிக்கு எழுந்து யோகா பயிற்சிக்கு செல்லும் மகன் இன்று அன்னையை போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.


அவன் முடிக்கோதி நெற்றியில் முத்தமிட.

"அப்படி என்ன தான் உள்ளதோ அந்த முத்தத்தில்!? முத்தத்தை எப்படித் தான் உறக்கத்தில் கூட உணருவானோ!? அழகாய் சிறு மூரல் பூப்பான்!" அகரன்.

அந்த புன்னகைக்காகவே ரிதம் அவன் உறங்கும் போது முத்தமிட்டு மகிழ்வாள். இன்றும் அதுபோல் முத்தமிட்டு நிமிர்ந்து பார்க்க.


மகன் உறங்குவது அதிர்வு அதையே அவளால் தாங்க முடியவில்லை என்றால்; இரவு உடையுடன் அறையை விட்டு வெளியே வந்த தலைவனைக் கண்ட தலைவிக்கு 'மின்சாரம்' தாக்கிய உணர்வு தான்.

"நாம் தான் அவனை எண்ணி கவலையில் தூங்காது நேரம் சென்று உறங்கினோம். இவனுக்கு என்னவாம்!? அதுதான் என் மனதை இரவோடு இரவாக உடைத்தானே. இன்னும் என்ன வேண்டுமாம்!?" பொறுமலாய் உள்ளுக்குள் பொறுமித் தீர்க்க.

அவள் எங்கே அறிவாள் அவள் உறங்கிய சிறு பொழுதில் தன் அறைக்குள் உறக்கம் வராது தவித்தவன் வெளியே வந்து மனைவி மகனின் முகம் பார்த்தவாறு சோஃபாவிலே உறங்கியதும்.

பிறகு பின்னிரவில் கண்ணக்கோளிட வரும் கள்வனை போல;மீண்டும் தன் அறைக்குள் சென்று உறங்கிய கதையும் அறியா ஆம்பல் விழி விரித்து அவனை முறைத்துவிட்டு குளியல் அறை சென்று அடைந்து கொண்டாள்.


"கணவன் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருப்பான். என்பதெல்லாம் இன்று அவள் மனதில் கொள்ளவில்லையாம்!" என்பதாக பெயர்பண்ணிக் கொண்டாலும்;
கைபேசி அழைப்பில் அவன் பிஸியாக இருப்பதை உணர்ந்து விரைந்து வந்தவள் மகனையும் கையோடு கிளப்பிக் கொண்டு சமையல் அறை சென்றுவிட்டாள்.

"எல்லாம் அவன் கிளம்பி வரும்போது; அவன் முன்பாக உணவை வைக்கவேண்டும் அல்லவா!"

இதை அவளிடம் கேட்டால் 'ஒத்துக் கொள்வாளா என்ன!?'

"இல்லையே நான் பிள்ளைக்கு பசியாறவே விரைகிறேன்!" என்பாள் அந்த கள்வனுக்கு ஏற்ற கள்ளி.


நேரம் சென்று கீழே வர அனைவரும் 'கேலிப்பார்வை' பார்ப்பதாய் கற்பனை வேறு.

ஆனால் அங்கிருக்கும் அனைவரின் ஆச்சர்யம் எதுவெனில் அவள் நேரம் தாழ்த்தி வருவது அல்ல.

அவளின் கணவனான ஏகன் இன்னும் பள்ளியறை விடுத்து வராது இருப்பது தான்.வாயில் விரல் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களை வியக்க வைத்தது.

'கேலி பேசுவரோ!?'


மனதிற்கு அசௌகரியமாக இருக்க யாரையும் நிமிர்ந்து பாராது சமையல் அறை சென்று மகனுக்கு பாலை சூடாக்கி குடிக்க கொடுத்தவள்.

இடியாப்பம் உடன் பாலை எடுத்து நாட்டுச் சர்க்கரை இட்டு கலக்கி தயாராக வைக்க.

அவள் வந்ததில் இருந்து தங்கள் வேலைகள் குறைந்ததாக கூறிய சமையல் கலை வல்லுனர் ரகுலின் பேச்சிற்கு மென்னகை பூத்து நகர்ந்தாள்.

நல்ல வேளை இரண்டு தாத்தாக்களும் கோவிலுக்கு சென்றுள்ளனராம். ரிதம் மகனுடன் கீழே வரும் போது கிடைத்த தகவல் அது.

'இல்லை என்றால்!'

பெரியவர்கள் முன் தவறு செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போலே விழித்து கொண்டு நிற்க வேண்டும்.

அந்த நிலைக்கு தன்னை ஆழ்த்தாத கடவுளுக்கு மனதில் 'நன்றி' கூறியவள் உணவு மேசையை காலை உணவினால் நிறைத்தாள்.

இப்பொழுது எல்லாம் வேல் தாத்தாவின் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும்; பின்னிறக்கம் இல்லாது இருப்பதே ரிதம் மனதை குளிர்விக்க போதுமானதாக இருந்தது.


புன்னகை இல்லா முகம் என்றாலும் இன்று ஏனோ ஓர் 'ஒளி பொருந்தி' கிடந்தது அவனின் வதனமதில்.

அவனின் முகத்தில் தெரியும் ஒளிர்வின் காரணம் அறிய மனைவி மனம் ஆர்வம் கொள்ள.

அவனை இப்படி ஒளிமிகு முகத்தோடு காணாத அவன் வீட்டின் உதவிக் கரங்கள் அனைவரும் ஆச்சர்யமாகவும், அதே சமயம் மன நிறைவுடனும் பார்த்திருந்தனர்.


மனைவியை பார்த்து அவளின் பாதாம் கண்களை விழுங்கும் வேலையை தன் ஹூடட் கண்களுக்கு வழங்கிவிட்டு மென்மையாய் அவளிடம் கூறினான் 'காலை வணக்கம்!' ஒன்றை.

தந்தையின் முயற்சி புரியா மகன்," குட் மார்னிங்ப்பா!" என்று பதில் வணக்கம் கூறி

"முயற்சி எல்லாம் வீணாகி போனதே!
" என்ற நிலைக்கு தந்தையை தள்ளிட.

"என்ன இருந்தாலும் தன் இரத்தம் அல்லவா!"


அதனால் அவனை ஒன்றும் செய்ய முடியாது போக அமைதியாக மனைவி வைத்த உணவை உண்ண தொடங்கினான்.

"ஆகா!!! மாட்டிகிட்டான் மண்டைகசாயம்"
 
"உனக்கு கொஞ்சம் கூட ரோசமே கிடையாது அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.அவனை பார்த்தா தாவி ஓடுற... எங்க போற...!? இப்போ பார்த்த இல்ல உன்ன அம்போனு விட்டுட்டு போய்ட்டான்.இதுக்கு வீணா கற்பனை பண்ணி பைத்தியமா சிரிப்பு வேற.இனி இந்த மாதிரி அசட்டு வேலை எதையாவது செய்யு உனக்கு அப்பறம் இருக்கு!"

அதானே.....


ரிதம், இன்னும் கொஞ்சம் smart ஆகனும் நீ.....

உன்னோட dignity & demand யை கவனமா maintain பண்ணு.....

அந்த hooded eyes ஆணவம் இன்னும் நிறைய இறங்கி வர இருக்கு.....

🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
 
அதானே.....

ரிதம், இன்னும் கொஞ்சம் smart ஆகனும் நீ.....

உன்னோட dignity & demand யை கவனமா maintain பண்ணு.....


அந்த hooded eyes ஆணவம் இன்னும் நிறைய இறங்கி வர இருக்கு.....

🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
இப்போவே பாதி இறங்கிட்டான்... அப்பறம் காலிலே விழுந்துவிட்டான் ஐயா நிலை ஏகனுக்கு வருமோ 🤔🤔🤔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

பொண்டாட்டிய திருட்டு தனமா நைட்டுல கிட்டத்தால தூங்காம சோபாவுல படுத்து தூங்கி சைட்டு அடிச்சிட்டு போறானே.
ம்ம் ம்ம் பரவாயில்லை மண்டைல இருக்குற ஈகோ கொஞ்சம் கம்மியா குறையுது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

பொண்டாட்டிய திருட்டு தனமா நைட்டுல கிட்டத்தால தூங்காம சோபாவுல படுத்து தூங்கி சைட்டு அடிச்சிட்டு போறானே.
ம்ம் ம்ம் பரவாயில்லை மண்டைல இருக்குற ஈகோ கொஞ்சம் கம்மியா குறையுது.
அவனும் ஆண்தானே 🤣🤣😂😂
 
Top