Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 24 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 24❤️‍🔥


"குளிருக்குள் அடிக்கும்
அனல் மழை தானோ ............!!!"




தீக்ஷிதா எரிமலைக் குழம்பாய் கொதித்திருந்தாள்.

அவளுக்கு இப்பொழுது பற்றிக் கொள்ள ஒரு கொழுக் கொம்பு வேண்டும்.அதற்காக தான் அவள் ஏகனை நோக்கி வந்திருந்தாள்.

கண்டிப்பாக ஏகன் கோபமாக ஏதேனும் கூறுவான் என்பதும்; அவள் அறிந்த ஒன்றே.

ஆனால் அவன் காவல் துறை வரை சென்று, மறுமுறை 'கண்டிப்பாக செய்தியாளர்களுக்கு தான் செய்தி கொடுத்து வேலைக்கு உலை வைத்திடுவேன்!' என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு செல்வான் என்று அவள் எண்ணவில்லை.

"யூ ப்ளடி........!"

என்று வாயிற்கு வந்தபடி ஏகனை திட்டிக் குமித்தாள்.

இதற்கு இடையில்,'எலி தான் எள்ளிற்காக காய்கிறது! எலி வால் எதற்காக காய்கிறது!?'

காரணம் அறியாது; அவளின் வாயில் அவலாய் சென்று சேர்ந்தனர் இக்னேஷும், நவநீயும்.

தன் கைபேசி எடுத்தவள் ஏகன் வாழ்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த சம்பவங்கள் ஒன்றுவிடாது இன்னும் இரண்டு நாட்களில் தனக்கு அறிக்கை வேண்டும் என்று கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தவள்.

மீண்டும் மூவரையும் கடலையாய் வறுக்க தொடங்கியிருந்தாள்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு,அகரன் பிறந்த பொழுது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வர அதற்காக தன் உடலை பேண வேண்டும் என்று சீரிய கொள்கை கொண்டு ஏகனிடம் விவாகரத்தும், ஜீவனாம்சமாய் பல கோடிகளையும் விழுங்கிக் கொண்டு தான் அவனை விட்டு விலகி இருந்தாள்.

இப்பொழுது அவன் முன் மீண்டும் தோன்றி 'பேபி', 'பாபி' என்றால் ஒரு மனிதன் கொஞ்சவா செய்திடுவான்.அதுவும் ஏகன் போன்றதொரு குணம் உடையவன் அவளை உயிரோடு விட்டதற்கு காரணமே அகரன் ஒருவன் தான்.

'ஆம்!'

ஆயிரம் இருந்தாலும் அவள் 'அகரனை ஈன்ற தாய்!' என்ற ஒரு காரணமே அவளை மன்னிக்க போதுமானதாக இருந்தது அவனிடத்தில்.

'இனி அறிக்கை வந்த பின் ஏகனை என்ன செய்யலாம்? என்று நிதானமாக யோசிக்கலாம்!'


அறிய முடிவுக்கு வந்தவள்.தன்னை குளிர்விக்க நீச்சல் குளம் நோக்கி சென்றுவிட்டாள்.


"என்னடா இது இன்னைக்குத் தான் ரிதம் பத்தி பேசுன.அதுக்குள்ள இந்த நாடகம் வந்து இறங்கி இருக்கு.மச்சான் எனக்கு நாடகம் வந்திருக்கது என்னவோ தப்பா இருக்குடா!" என்று ஏகனிடம் எச்சரிக்கை பகர்ந்தவன்.

இக்னேஷின் முகம் பார்த்து,"நாடகம் இங்க வர்றதுக்கு முன்னாடி எங்க இருந்துச்சு!? அங்க என்ன திருகு வேலை பார்த்துட்டு இங்க வந்திருக்கு!? அப்பறம் இங்க வந்த பின்னாடி யாரை பார்த்துச்சு,யார்கிட்ட பேசுச்சு இதை எல்லாம் ஃபாலோ பண்ணு.
அதைவிட ரொம்ப முக்கியம் இங்கேயும் அவளை விடாம ஃபாலோ பண்ண 24/7 க்கு ஆளுங்களை ஏற்பாடு பண்ணிடு!" என்று வரிசையாக கட்டளைகள் பிறப்பித்தான்.

அவன் கூறியதை கேட்ட இக்னேஷ் ஒரு நொடி அவனை வியந்து பார்க்க,"நவி சொன்னதை உடனே செஞ்சுடு!" என்ற ஏகனின் கட்டளைக்கு அடிபணிந்து உடனே அதற்கான வேலைகளுக்கு ஆட்களை முடுக்கினான்.

"இன்னும் கொஞ்சமே கொஞ்சம்டா தங்கம் அம்மா உனக்கு சாப்பிட்ட பின்னாடி ரூபி கியூப் சேர்த்து தர்றேன்!" என்றபடி அகரனை இடையில் இடுக்கி இருந்தாள் ரிதம்.


பருப்பில் விழுந்து, நெய்யில் மூழ்கிய சாதத்தை மகனுக்கு தோட்டத்தில் வைத்து கதைபேசியவாரு ஊட்டிவிட்டாள்.

'அன்னை அன்பு எப்படி இருக்கும்!?' என்பதை அறியாத பிஞ்சிற்கு;

மழையில் கிடைக்கும் குடையாக பெண்ணவளின் அன்பு கிடைக்க; அதனை இழக்க விரும்பாத சிறுவன் 'சிக்கென பற்றிக் கொண்டான்!'

திக்ஷிதாவை விரட்ட புதிதாய் தோன்றிய ஆப்ரேஷன் 'டி' குழுவோ; மதிய உணவிற்கு வீடு வந்து சேர்ந்தனர்.


காரில் இருந்து இறங்கிய நவநீயைக் கண்ட ரிதம் "வாங்க அண்ணா!" என்றவள்

அகரனையும் பார்த்து,"தங்கம் நீங்களும் மாமாவை 'வாங்க மாமா' சொல்லுங்க!" என்றிட.

அந்நேரம் ஏகன் காதுகளில் அவளின் வார்த்தைகள் விழுக 'டிஸ்கஸ்டிங்.....' என்றதோடு வீட்டிற்குள் செல்லப்பார்க்க.

வந்ததே கோபம் ரிதம் எனும் பெண் சிகரம் வெடித்து சிதறியது மன்னவனிடம்.

"என்ன சொன்னீங்க டிஸ்கஸ்ட்டிங்கா.எது டிஸ்கஸ்ட்டிங்!? ஒருத்தவங்களை வாயார வெல்கம் பண்றறதா!? இல்லை அந்த 'வாங்கன்னு' சொல்றதையும் தமிழ்ல சொல்றதா!?"

'இன்று ஒரு முடிவு எனக்கு தெரிந்தே ஆக வேண்டும்!' என்பதாய் இருந்தது அவளின் கோபம்.


கொதிக்கும் எண்ணெயில் குதிக்கும் கடுகாய் அவள் மாற.அவனோ கோபத்தில் காது,மூக்கு சிவக்கும் அழகை ரசித்திருந்தான்.

"இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா!?" மிரட்டல் எல்லாம் பலமாய் ஒலிக்க...

அதிலும் லயித்து ரசனையாய் பார்த்த நண்பனை நவநீ தலையில் மானசீகமாய் அடித்துக் கொண்டு பார்த்தான்.

"டேய் ஏகா தங்கச்சிம்மா உன்கிட்ட தானடா பேசிட்டு இருக்கு அதுக்கு பதிலை சொல்லீட்டு அப்பறம் நீ எதுவும் செய்யுடா ராசா!" என்று விலாவில் இடிக்க.

" 'ஹா' என்ன கேட்ட!?" என்று அவளிடமே மீண்டும் கேட்டுவிட...

பிள்ளை ஏந்திய பத்ரகாளியாக மாறிய மனைவியை நோக்கி காலையின் மிச்சங்களை பூர்த்தி செய்ய நடையைக் கட்ட.

தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது தன் புறம் நடந்து வரும் கணவனைக் கண்டவள் எண்ணங்கள் எல்லாம் 'காலை பறந்த பட்டாம்பூச்சிகளின் தாக்கமாய்!' உருகொள்ள.

கோபத்தில் சிவந்த முகமானது; இப்பொழுது இன்பத்தில்,வெட்கத்தில்,
ஆசையில் 'செந்தூரம்' பூசியது.


"நெருங்கிய நெருப்பு
அணைக்காது அணையாதோ....!?"

"அம்மா...ஆ...!!!" என்ற பிள்ளையின் பசி நிறைந்த குரலில் கணவனை முறைத்தவள் அவனுடன் வாதம் பண்ண விரும்பாது மறுபுறம் சென்றுவிட்டாள் பிள்ளையுடன்.


"ஏன் மச்சான் நீ எதை டிஸ்கஸ்டிங்குன்னு சொன்ன!?"

'இதுவரை அவளை பற்றி காதலாகி கசிந்துருகிய நண்பன் இப்பொழுது எதற்காக இவ்வாறு கூறினான்!?'

அறியும் ஆவலில் நவநீ வினவ.

முகத்தில் கோபம் தாண்டவமாட அதனைக் கண்ட இக்னேஷ் ஓர்நொடி அதிர்ந்து பார்க்க.

நண்பனை அறிந்தவனாக,"என்ன அந்த பொண்ணு உன்னை கண்டுக்காம; என்னை வாங்கன்னு கூப்பிட்டதுக்கு தானே நீ 'டிஸ்கஸ்டிங்' சொன்ன!?" சரியாக படித்துவிட்டான் ஏகன் மனதை.

'அதுதான் உண்மை!' என்பதால் வேறு எதுவும் பேசாது, பேச முடியாது;

"டேய் உள்ள வந்தா சாப்பாடு கிடைக்கும்!" என்றவாறு உள்ளே செல்ல.

"என்ன மச்சான் தப்பிக்க பாக்குறியா அதுதான் நீ சிக்குன சிக்கு இடியாப்ப சிக்கால இருக்கு.எனக்கு என் தங்கச்சி சோறு போடும்டா பொடியா!"

கேலி பேசியவாறு இக்னேஷுடன் சேர்ந்து இல்லம் நுழைந்தான்.


"என்னம்மா தங்கச்சி கத்தரிக்காய் புளிக்குழம்பா....? இது என்ன ரசமா...? கொஞ்சம் கைல ஊத்துமா.... மச்சான் தங்கச்சி சமையல் டாப் டக்கருடா!"


ஒவ்வொரு உணவாக உண்ணும் பொழுது வஞ்சனை இல்லா மனதுடன் வேண்டும் என்பதை கேட்டு வாங்கி உண்ட நவநீயாகட்டும்.

பேரனை பற்றிய கவலை இல்லாது; ரச கிண்ணத்திற்குள் மூழ்கி நீச்சலைடிக்க போகும்,'வஞ்சிக்கோட்டை வாலிபனாய்' ரசத்திற்குள் மூழ்கிய சிதம்பரம் தாத்தா ஆகட்டும்.

ஏன் உணவை முடித்துக் கொண்டு உறக்கம் வந்ததன் அறிகுறியாக ரிதமின் கழுத்தை கட்டிக் கொண்டு தோளில் தலையை தேய்த்திருந்த ஏகன் பெற்ற அகரனாகட்டும்.

'எவருமே ஏகன் எனும் ஒருவன் இருப்பதை அங்கே கண்டுகொண்டதாக தெரியவில்லை!?'

இதில் பெரும் நகைச்சுவை என்னவெனில் உணவின் இடையே நீரருந்த நிமிர்ந்த வேல் தாத்தா ஏகன் உண்ணாது இருப்பதை கண்டு.

"என்ன தம்பி இன்னுமா நீங்க சாப்பிடல!? என்றவர்; இருங்கப்பா நான் கிட்சன்ல சொல்லி உங்களுக்கு சாப்பாடு கொண்டுவர சொல்றேன்!"

என்றவர் அத்தோடு அவனை மறந்துவிட, நடப்பதை கடுப்புடன் பார்த்திருந்தான் ஏகன்.

ஆணவன் கோபமாக வேடிக்கை பார்த்திருந்த நேரம் அவன் முன் வைக்கப்பட்ட தட்டில் இருந்த உணவை கண்டு நிமிர.

"பிள்ளைக்கு தட்டி கொடுப்பது போலே வேறு புறம் திரும்பிக் கொண்டாள்!" ரிதம்.


யாரிடமும் எதற்கும்,இறங்கும் பழக்கம் இல்லாத தன்னவன்; தன்னிடமும் இறங்காது அவன் மனமறிந்து செயல்பட்ட மனைவியை எண்ணி மனம் மகிழ உணடான் ஏகன்.

அவனின் மனம் தடம் மாறி தாரகையை நாடுவதை போலே சுவை நாளங்களும் 'தாளம் தப்பியதோ!?' தூரிகையின் கை வர்ணத்தில்.

'தன்னிடமும் கூட,தன் துணை இறங்குவது பிடிக்காத வாழ்க்கை துணை கிடைப்பது என்பது என்றுமே அதிசயம் தான்!'


அந்த அதிசயத்தை பெறுபவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.அதைத் தான் நவநீயும் ஏகனிடம் கிளம்பும் போது கூறிச்சென்றான்.

"மச்சான் நீ கேட்காமலே தங்கச்சி உன் மனசை புரிஞ்சு நடந்துக்குது பாருடா. சிலர் எல்லாம் வாய்விட்டு கேட்டாக்கூட காதுல விழுகாத மாதிரி இருப்பாங்க வீம்பா. ஆனா ரிதம் நல்ல பொண்ணா இருக்குடா.எனக்கு என்னவோ நீ வீண் ஆராய்ச்சி எல்லாம் பண்ணாம கொஞ்சம் கொஞ்சமா உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. அகரனுக்கு நடந்த மிராக்கில், உனக்கும் நடக்கலாம்.
நீ முதல்ல நம்பு.உன் ஃபீலிங்க கண்டிப்பா மறைக்காத மச்சான்.அந்த நாடகம் வேற இப்போ இங்கேயே வந்துருச்சு.அவ இங்க வந்திருக்கதுக்கு பின்னாடி வேற ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு தோனுது.
அதும் இங்க வந்தவ சம்மந்தம் இல்லாம எதுக்கு உன் தோட்டத்து வீட்ல போய் தங்கனும்? 'சம்திங் பிஷிடா' பார்த்துக்கோ!"

உற்ற நண்பனாய் அறிவுரையும், எச்சரிக்கையும் கொடுத்ததோடு அல்லாமல்;


ஒரு முறை ரிதமையும் அழைத்து,நண்பன் அவளின் காலை சமையலை பாராட்டியதாக கூறி அவளுக்கும் சிறு குறிப்பாய் 'நண்பனின் பிடித்தத்தை' பற்றி நாசுக்காக கூறிவிட்டு சென்றிருந்தான்.

மதிய உணவோடு விடைபெற்ற நவநீயைத் தொடர்ந்து தானும் அலுவலகம் சென்றுவிட்டான் ஏகன்.


பொழுது மசங்க,ஒளி கசங்க,இருள் அசங்க
இரவு உணவை முடித்துக் கொண்டு அன்னையும்,மகனும் இன்று புதுக்கதை பற்றிய விவாதத்துடன் உறங்கும் கொண்டாட்டத்தில் இருக்க.

சிறிது நேர விளையாட்டிற்கு பிறகு மகனோடு அறைக்கு வந்தவள் வியர்வையை துடைத்து காய்ந்த பிறகு இரவு குளிக்கும் பழக்கம் கொண்ட மகனை குளிக்க செய்து தானும் குளித்து மகனோடு மெத்தையில் பொதிந்து கொண்டாள் ரிதம்.

என்னதான் மகனுக்கு கதை சொல்லி உறங்க வைப்பதில் கவனம் இருந்தாலும் மதியம் நவநீ கூறியதில் தான் மனம் சென்றது.

'தன் சமையலை தன்னிடம் அல்லாது; நண்பனிடம் பாராட்டியது ஏன்!?'

"இப்பொழுது வந்தால் தன்னை பாராட்டுவானா!? அல்லது எப்பொழுதும் போலே கண்டுகொள்ளாது செல்வானா!?" காலையில் கிடைத்த நெருக்கத்தில் ஆயிரம் எதிர்பார்ப்பும்....

"வந்தால் என்ன செய்வான்!? என்னை காலை அருகே வந்து மயங்க செய்த மாயாவி வேடம் பூணுவானா!?அவன்
அப்படி மாயாவியானால் அதன் பிறகு...!"

எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கமும் அவளிடம் நிறைந்து கிடந்தது.


தனக்குள் மூழ்கி கற்பனையில் வாழ்ந்து தானாய் சிரிக்கும் தன் உள்ளங்கவர் காரிகையை கவனித்தவாரு உள்ளே நுழைந்தான் ஏகன்.

அவளின் சிரிப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும் அவனுக்குள் ஆர்வம் துளிர்க்க

"என்ன ரிதம் தனியா சிரிச்சுட்டு இருக்க!?"

சிரித்தே சிதைக்கும் மனைவியின் அருகே வந்தவன் வேறெதுவும் செய்யாது மகனையும் மனைவியையும் ஆழ்ந்து நோக்கினான்.

"இந்த சின்னஞ் சிறு கூட்டிற்குள் தானுமொரு அங்கமானால்......!" எனும் எண்ணமே அவனுக்கு உவகையை ஊற்றாய் பெருகச் செய்ய.

முதல்முதலாக பெண்ணவளை நேரிடையாக 'வசியப் பார்வை' வீசிச் சென்றான்.

அவளுக்கோ உயிரின் கட்டுக்கள் அவிழ்ந்த உணர்வு.தேவன் பார்வை கண்ட தேவ முல்லையள் முகிழத்துடிக்கும் மோக மலர்களை நாணம் எனும் கயிற்றால் கட்டிவைக்க.

"மலர்ந்த மலரை மறைக்கவா முடியும்!?"

"அறியா பேதை!"

அதைத்தான் முயன்றிருந்தாள்.
 
'தன்னிடமும் கூட,தன் துணை இறங்குவது பிடிக்காத வாழ்க்கை துணை கிடைப்பது என்பது என்றுமே அதிசயம் தான்!'

ஹப்பா....... புல்லரிக்குது போங்க.....


கணவன் - மனைவி உறவில் இந்த தோற்காத வீட்டுக் கொடுத்தல்ங்கறது ரொம்ப அழகான ஒரு அம்சம்....

💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
 
ஹப்பா....... புல்லரிக்குது போங்க.....

கணவன் - மனைவி உறவில் இந்த தோற்காத வீட்டுக் கொடுத்தல்ங்கறது ரொம்ப அழகான ஒரு அம்சம்....

💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
இதமுடை நன்றிகள்💐💐💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓ ஓஹோ நாடகக்காரிக்கு கட்டம் கட்டியாகுதா?!!!.

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள இடம் வேணுமாம் இவனுக்கு.
அதுக்கு காலிங் பெல்லை டிங்டாங்குன்னு அடிடா மடையா.
இதுகூட தெரியாம என்னத்தை குடும்ப இஸ்தரன் ஆகப்போறியோ?.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓ ஓஹோ நாடகக்காரிக்கு கட்டம் கட்டியாகுதா?!!!.

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள இடம் வேணுமாம் இவனுக்கு.
அதுக்கு காலிங் பெல்லை டிங்டாங்குன்னு அடிடா மடையா.
இதுகூட தெரியாம என்னத்தை குடும்ப இஸ்தரன் ஆகப்போறியோ?.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
சற்றே அழுத்தமான சாணி அடியாக இருந்தாலும் நாயகன் துடைத்துக் கொண்டு செல்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்🔊🔊🔊
 
Top