Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 23 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 23 ❤️‍🔥


"இடைவெளி இல்லா
இலக்கணம் நீயோ .................!!!"




இக்னேஷின் கடுகடு குரலில் அதுவரை கண்களை மூடிக்கொண்டு விரல்களை மட்டும் ஆட்டி ஆட்டி நீட்டி முழக்கி பேசியவன் பட்டென்று கண்களை திறந்தான் நவநீ.

"டேய் சடையா இங்க என்னடா பண்ணுற எப்போ வந்த!?"


அதை எல்லாம் கண்டுகொள்ள அவன் வெட்டியாய் இல்லையே.அவனின் தலைவன் ஏவிய வேலையை செய்ய வேண்டும் என்பதனால் நவநீயை இழுத்துக் கொண்டு சென்று குளியல் அறைக்குள் அடைக்க.

'காக்காய் குளியல்' குளித்து, அவசரமாக உடை மாற்றியவனை சட்டை காலரை பற்றி இழுத்துக் கொண்டு நடந்தான் இக்னேஷ்.

"டேய்..டேய்.. விடுடா! விடுடா! என்ன ஏதுன்னு சொல்லாம என்னை எங்கடா இழுத்துட்டு போற!? டேய் சடையா இப்போ நீ விடல நான் வரவே மாட்டேன்டா!" மிரட்டல் விடுக்க.

"உன்னை பாஸ் கூட்டிட்டு வர சொல்லலடா சோடா.குண்டுகட்டா தூக்கிட்டு வரதான் சொன்னாரு!" என்றவன் தூக்குவதை போல பாவனை செய்திட

"வீட்டை பூட்டிட்டு வாடா சடையா!" என்ற கத்தலுடன் ஓடியவன் நண்பன் காரின் முன் புறம் வாகன ஓட்டின் அருகே இருக்கும் இடத்தில் சென்று ஏறிக் கொண்டான்.

"என்ன மச்சான் காலைலயே என்ன பார்க்க வந்திருக்கா என்ன விசயம். வாட்ஸ் பாதரிங் யூ மேன்!?" (what's bothering you man!?) நண்பனை அறிந்தவனாக அக்கறையாக வினவ.

வீட்டை பூட்டி கொண்டு வந்த இக்னேஷ் காரில் ஏறி காரை இயக்கும் வரை மனதில் கேள்விகள் புடை சூழ அமர்ந்தவன் கார் நகர்வதை உணர்ந்து நவநீயின் கேள்விக்கு பதில் கூற தொடங்கினான்.

"என்னோட கண்டிஷன் சிவியர் ஆகிடுச்சுன்னு தோணுது நவி!"

கவலையும் அல்லாது பதட்டமும் அல்லாது எல்லாம் சமமே எனும் நடுநிலைக் குரலில் கூறினான் ஏகன்.

"என்ன மேன் சொல்ற. எப்படி சொல்ற வேற சிம்டம்ஸ் எதுவும் புதுசா உன்னை அங்கம்பெர்ட்டா ஃபீல் பண்ண வைக்கிதா ஏகா!?"

நவநீ குரலில் நண்பன் மீதான அக்கறை கூத்தாடியது.

'நண்பனின் நிலை அறிந்து; எப்படியும் நண்பனை காக்க வேண்டும்!' என்ற வெறி மனதில் நவநீக்கு.


"இப்போ எல்லாம் நான் ரிதம் பக்கம் பிளர்ட் ஆகற மாதிரி இருக்குடா.அவ முன்னாடி என்னை அறியாம டெம்ப்ட் ஆகற ஃபீல்டா மச்சான்.எனக்கு இதுக்கு ஏதாவது ஒரு மருந்து சொல்லுடா!?" என்று தன் மனைவி புறம் மனம் சரிவதை தடுக்க மருந்து வேண்டி நின்றான்.

கட்டிய மனைவி புறம் மனம் செல்வத்தை தடுக்க மருந்து கேட்கும் நோயாளி கணவனாய் அவன் மாற.

இது போன்றதொரு நோயினை இதுவரை எங்கும் அறியாத மருத்துவனோ விழி பிதுங்கி நண்பனைக் கண்டான்.

அதில் நிம்மதி என்னவென்றால் தோழனுக்கு வேறெந்த 'அசௌகரியமும் இல்லை' என்பது தான்.



"டேய் நல்லவா உனக்குள்ளையும் இருக்காடா ஃபீலிங்கு!"

ஏகனின் மனக்கவலையை கேட்டிருந்த நவநீ கேலி செய்திட.

தன் முதலாளியை கேலி செய்ததால் கோபம் கொண்ட இக்னேஷோ பக்கவாட்டில் திரும்பி 'கழுத்தை அறுத்து விடுவேன்' என்பதாய் சைகை காண்பித்தான் அவனுக்கு.


அத்தோடு பசையிட்ட பேனரை போல் வாயை 'பக்'கென்று மூடிக் கொண்டான் நவநீ.

"என்னடா பேசாம அமைதியாகிட்ட!?" நண்பன் உத்தவியாளனின் மிரட்டலில் வாய் மூடியதை அறிந்தும் ஏகன் கேள்வி கேட்க.

"டேய் உன் நடிப்பை எல்லாம் என்கிட்ட காட்டாத.எனக்கு ஒன்னும் இந்த சடையன் மேல பயம் எல்லாம் கிடையாது. இன்னைக்கு இந்த நேரத்துக்கு இவ்வளவு தான் பேசணும்னு குறிக்கோள் வச்சுருக்கேன்.அதுதான் அளந்து பேசிட்டு இருக்கேன்!"

பயத்தை தன் பேச்சினால் மறைக்க பார்க்க.

"எனக்கு இதுக்கு ஒரு பதில் சொல்லலைன்னு வைடா நவி உண்மையா அவன் சொன்னது நடக்கும் அதுவும் என் அனுமதியோட!"

தன் மனைவியின் மீதான எண்ணப்போக்கின் வகையை உரைக்கவில்லை என்பது உண்மையாக உன் உயிருக்கு நான் உத்திரவாதம் இல்லை எனும் உயிர் பயத்தை தூண்டுகிறது.

“எல்லாருக்கும் எமன் எருமைல எமனேஸ்வரத்துல இருந்து வருவான்.
ஆனா நான் மட்டும் நண்பன்னு சொல்லி, கொலைகார பாவி உன்னை கூடவே வச்சுட்டு சுத்துறேன்...!" பயத்தில் பிதற்றினான் நவநீ.

"ச்ச.. ச்ச.. பாஸ் அப்படி சொல்லல சோடா!"
ஆறுதல் மொழிந்த இக்னேஷை சந்தேகமாக பார்த்தான் நவநீ.

ஏனெனில்

ஏகன் பேச்சிற்கு மறுவார்த்தை அல்ல மறுப்பாக மூச்சையும் விடாத இக்னேஷ் இவ்வாறு உரைப்பது தான் கழுதையாக அவன் மனதை உதைத்தது.

"என்ன? உன் பாஸ் சொன்னதுக்கு நீ மறுவார்த்தை பேசமாட்ட இன்னைக்கு என்னடா எனக்கு ஆறுதல் சொல்லிட்டு வர்ற.சடையா நீ என்னடா செய்ய காத்திருக்க!?" அவனின் குணமறிந்து நவநீ கேட்க.

“இல்லைடா சோடா பாஸுக்கு நீ
சொல்யூஷன் சொல்லலைன்னா தான் உன் உயிர் போகும்! அதுனால நீ பண்ற உடனே சொல்யூஷன் சொல்லிடு.அப்படி சொல்லிட்டா உன் தலை தப்பிடும் இல்லை....அதை தான் உனக்கு ஞாபகபடுத்தினேன்!" கூலாக கூறினான் அந்த விசுவாசி.

"ஆக! என்னை கொல்றதுல ரெண்டு பேரும் உறுதியா இருக்கீங்க அப்படித் தானே. ஏன்டா ஒருத்தன் கொஞ்சம் வெள்ளந்தி மனசோட வெளிப்படையா பேசிடக் கூடாதா!? உடனே தலைய வெட்டுவேன் கையை வெட்டுவேன்னு கிளம்பிடுறதா!?" விசனமாய் கேட்டான்

எங்கே தன் தலைக்கு 'ஆபத்து நேருமோ!?' என்ற எண்ணத்தில்.

"இல்லையே சோடா பாஸ் உன் தலைக்கு மட்டும் தான் குறின்னு சொல்லிருக்காரு!" என்று வம்பளந்தான் இக்னேஷ்.

அவர்கள் எப்பொழுதும் போகும் ஓய்விடம் செல்லும்வரை இருவரின் சலசலப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதனை கண்டும் காணாமல் எண்ணங்களில் மூழ்கினான் ஏகன்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள தென்னந்தோப்பின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ஒரு அலங்கார மர வீட்டின் முன்னால் சென்று நின்றது வாகனம்.

அதில் இருந்து இறங்கினாள் மும்பையில் இருந்து வந்திருந்த 'மாடர்ன் ஹைக்கூ' பெண்ணவள்.

அதே சரவணம்பட்டியில் இருக்கும் தோப்பு வீட்டிற்கு தான் இக்னேஷ் உடன் வந்து சேர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.

“சடையா என்னடா வீடு திறந்து இருக்கு!?
எப்பவும் வேலைய முடிச்சிட்டு பூட்டிட்டு தானே போவாங்க இன்னைக்கு மட்டும் என்ன திறந்து கிடக்கு... வீட்ல இன்னும் வேலைய முடிக்கல!?"

நவனியின் கேள்விக்கு பதில் கூறாது தானே இறங்கி சென்று பார்க்க சென்றான் இக்னேஷ்.


அனைவரின் கண்களும் ஒரு எச்சரிக்கை உணர்வை பிரதிபலிக்கின்றன...


"பேபி!"


என்ற கூவலுடன் இக்னேஷை தள்ளிக்கொண்டு தாவி வந்தாள் அவள்.

அவள் தான் ஏகனின் முன்னாள் மனைவி தீக்ஷிதா.இந்நாளைய இந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை.

அவளைக் கண்ட நவநீ காரைவிட்டு இறங்கி சும்மாயிராது,"என்னம்மா நாடகம் என்ன இந்தப் பக்கம்!? அதுவும் அடுத்த வீட்டுக் கதவை உடச்சுட்டு உள்ளே போய் உட்கார்ந்திருக்க போல.இது அபென்ஸ் தெரியுமா!?"

சிரித்துக் கொண்டே உனக்கு இங்கு 'உரிமை இல்லை!' என்பதாய் நவநீ வாழைப்பழத்தில் ஊசி இறக்க.

அவளோ அதெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

"பேபி எப்படி இருக்க.நம்ம பேபி பாய் என்ன பண்றான்!?"

நவநீயை மதிக்காது ஏகன் புறம் கவனம் செலுத்தி நலம் விசாரிக்க.

'நண்பனை அவமதித்தவளிடம் தனக்கு என்ன பேச்சு!?'

அவள் நவநீயை கண்டுகொள்ளாததை போல இவனும் அவளை கண்டுகொள்ளாதவன்

"இக்னேஷ் நீ வா!" அங்கே நின்றிருந்தவனை கூப்பிட்டு அவனிடம் ஏதோ ரகசியமாக கூற அவனும் கைபேசியை எடுத்து 'யாருக்கோ அழைப்பு விடுக்க'

சற்று நேரத்தில் அந்த சரகத்தின் காவல் துறை ஆய்வாளர் வந்துவிட்டார்.அவருடன் இன்று இரண்டு பெண் காவலர்கள் வந்திறங்க.

தீக்ஷிக்கு உள்ளுள்ளே அல்லு விட்டாலும்; ஏகனை கண்டு வெளியே ஜொள்ளு விடுவதை நிறுத்த முடியாதவளோ,

“என்ன பேபி எதுக்கு போலீஸ் எல்லாம்
எனக்கு புரொட்டக்ஷன் குடுக்கவா உனக்கு என் மேல அவ்வளவு லவ் இல்லையா பேபி!?" என்றிட.

"கண்டிப்பா எனக்கு உங்க மேல லவ் இல்ல மிஸ். தீக்ஷிதா.இவங்க உங்களை என் பெர்மிஷன் இல்லாம, என் வீட்டு பூட்டை உடச்சு உள்ள போனதுனால 'டிரஸ் பாஸ்' ஆப்ன்ஸ்ல உள்ள பிடிச்சு போட வந்திருக்காங்க.அவங்களுக்கு
கோ - ஆப்ரேட் பண்ணுங்க!" என்றவன் காரை இயக்க கட்டளை விதிக்க.

"பேபி..!பேபி..!!" என்றவள் கொஞ்சலாய் கூவிட

"டோண்'ட் கால் மீ தேட். இட்'ஸ் இரிட்டேட்டிங் மீ!" (Don't call me that. It's irritating me) கோபமாய் கொதிக்க.

"இல்ல ஏகன் பிளீஸ் இது மீடியாக்கு தெரிஞ்சா என் கரியர்க்கு பெரிய லூப் ஹோல் ஆகிடும் ஏகன் ஃபர்கிவ் மீ!"
எனக் கெஞ்ச.


அதற்கும் மேல் அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவ்விடம் இருக்க விரும்பாதவன் காவல் துறை ஆய்வாளரிடம் வந்ததற்கு நன்றி உரைத்து அனுப்பிவிட்டு

"இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் மிஸ்.தீக்ஷிதா.. இன்னும் ஒரு முறை இப்படி செஞ்சீங்கன்னா கண்டிப்பா இன்னைக்கு பாதில நிறுத்தினது போல இல்லாமல் நேரா மீடியாவுக்கே நியூஸ் கொடுப்பேன்!"

மீண்டும் இப்படி நடந்தால் கண்டிப்பாக தீக்ஷிதாவை 'உன் வாழ்வை அழித்தே தீருவேன்!' என்ற மிரட்டல் கொடுக்கவும் மறக்கவில்லை.

அவள் அவ்வீட்டை விட்டு தன் உதவியாளன் உடன் கிளம்பிய பிறகுதான் நண்பனுடன் அமைதி வேண்டி வேறிடம் நோக்கி பயணித்தான்.

ஏகன் ஒரு பழக்கம் வைத்திருந்தான்
மனக் குழப்பம் வந்தால் தனியே சென்று அமர்ந்து கொள்வான்.யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டான்.


சிறு வயதில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பெரும் படையாய் விளையாடும் குழந்தைகளின் மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த நவநீ தன் வாலில்லா வானரத் திறமையை காண்பிக்க....

அவனுக்கு பரிசாய் கிடைத்ததோ முட்டியில் கல் குத்திய காயம் தான்.


இரத்தம் வடிய அவ்விடம் விட்டு நகர்ந்தவன் தனியே ஒரு மூலையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் ஏகனை கண்டு அவனை அறியும் ஆர்வம் மேலோங்க.தன் வலி மறந்து அவனை நாடினான்.

"நீ ஸ்கூலுக்கு புதுசா!?" என்ற கேள்வியுடன் நெருங்கினான் நவநீ.

பிறன் நெருங்குவதை ஏற்காத பிஞ்சு இன்னும் ஓரமாய் ஒதுங்கி ஒடுங்க.

அவனுக்கு,'அடுத்தவர் நெருக்கம் பிடிக்கவில்லை!' என்பதை உணர்ந்தவன் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு.


"நீ ஸ்கூலுக்கு புதுசா!?" மீண்டும் அதையே கேட்டிருந்தான்.

'ஆம்'

எனும் விதமாய் தலை அசைத்தவன் நிமிர்ந்து நவநீயை பார்த்தவன் ஒன்றும் கூறாது தன் புத்தக பைக்குள் இருந்த தண்ணீர் குப்பியையும்,உடன் சிறு முதலுதவி பெட்டியையும் எடுத்து நீட்டினான்.

"யாருடா நீ!? பைக்குள்ள மினி மெடிக்கல் ஷாப் வச்சுட்டு சுத்துற!" என்ற கேள்வியை கிண்டலாய் கேட்டுக்கொண்டே அவன் நோக்கம் புரிந்து தன் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு மீண்டும் மினி மெடிக்கல் கிட்டை ஏகனிடம் நீட்ட.


அவனோ பைக்குள் இருந்த டெட்டால் பாட்டிலால் கிட்டை சுத்தம் செய்துவிட்டு உள்ளிருந்த அனைத்தையும் ஒருமுறை சுத்தம் செய்து பைக்குள் வைத்துக் கொண்டான்.

"டேய் என்னடா பண்ற!? என்ன பார்த்தா உனக்கு நோயாளி மாதிரி இருக்கா!? ஏதோ கொஞ்சமா சேட்டை செஞ்சு சின்னதா அடி பட்டுடுச்சு அதுக்கு என்னை நீ ஏதோ தீண்டத் தகாதவன் மாதிரி பண்ற!" என்று கோபம் கொண்டாலும் அவனைவிட்டு நகரவில்லை நவநீ.

மற்றவர்களை போல நவநீயும்,' தன்னை திட்டிவிட்டு நகர்ந்து விடுவான்!' என்று ஏகன் நம்பியிருக்க.

ஆனால் நவநீயோ," ஏன்டா நான் கோபமா இருக்கேன்.என்னை சமாதானம் செய்ய மாட்ட!?" என்ற மிரட்டலாய் கேட்க.

அவனை நோக்கி தன் முட்டை கண்ணை உருட்டிக் காண்பித்தான் ஏகன்.

"சரி விடு சமாதானம் செய்ய வேண்டாம் ஒரு சாரி கூட சொல்லாம முறைக்கிற நீ!" என்று பம்மினான்.

அன்றில் இருந்து இன்று வரை குழப்பம் என்றால் ஏகன் தேடும் ஒரே நபர் நவநீ 'மட்டுமே!'

சில நேரம் வார்த்தைகளால் கூறி விடுவான்.பல நேரம் அவ்வாறு கூறாமல் அழுத்தமாய் அமர்ந்து கொள்வான்.

நவநீ தானாகவே முன்வந்து நண்பன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து நயமாக பேசி,விளையாட்டாக பேசி எப்படியானாலும் 'குட்டி கரணம்' அடித்தானா அவனின் குழப்பத்திற்கு அந்நேரம் ஒரு விடுதலை வழங்குவான்.

இந்த பழக்கம் சிறு பிள்ளை பிராயத்தில் துவங்கியதால் வளர்ந்து அதையே அடிப்படையாக கொண்டு மரு
த்துவம் பயின்றவன் மனோதத்துவத்தில் சிறந்து விளங்குகிறான்.

'வேலை' என்றால் வெள்ளைக்காரனான நம் நவநீயும் வெளியில் விளையாடும் பிள்ளையாய் தெரிந்தாலும்; நண்பனின் ரகசியம் காப்பதில் அந்த 'நந்தி தேவன்!' தான்.
 
கட்டிய மனைவி புறம் மனம் செல்வத்தை தடுக்க மருந்து கேட்கும் நோயாளி கணவனாய் அவன் மாற.

இது போன்றதொரு நோயினை இதுவரை எங்கும் அறியாத மருத்துவனோ விழி பிதுங்கி நண்பனைக் கண்டான்.

ஏகனோட மருத்துவ மனையிலேயே ஒரு Research Team போட்டு இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடியாதா?????? 🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️
 
ஏகனோட மருத்துவ மனையிலேயே ஒரு Research Team போட்டு இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடியாதா?????? 🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍🔬🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️
அப்படி செஞ்சா ஏகன் நிலமைய உலகம் அறியுமே...😜😜😜! அதனால தான் நவநீயை பிடிச்சுட்டு பாடா படுத்துறான்😥😥😥😥😥😥
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍

பேபியா? ங்கொய்யாலே!😬😬😬😬😬😬.
ஆளில்லாத வூட்ல முங்கம் போட வந்திருப்பா போல.
கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.
இந்த தொழிலதிபர் ஆல்ரெடி வேற ஒருத்தரோட பிராப்பர்டியாகி ரொம்ப நாளாச்சு.
வந்துட்டா சிலுப்பிகிட்டு.
மவனே அந்த சினிமாகாரிகிட்ட பேசியிருந்தா உன்னை கும்மிருப்பேன்.

எதே கட்டுன பொண்டாட்டி பக்கம் மனசு போகுதா? அதைய தடுக்க டிரீட்மென்டா?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
டேய் பக்கி இதுக்கெல்லாம மூனாவது மனுசனை ரோசனை கேப்பாங்க .அவனே சிங்குளா டீ ஆத்தி கிட்டு இருக்கான்.
இதுக்கு நானு சொல்யூசன் சொல்லறேன் கேட்டுக்க.🧐🧐🧐🧐
சாமியே சரணம் சொல்லற மாதிரி பொண்டாட்டியே சரணம்ன்னு சரண்டர் ஆகிடு.🤗🤗🤗🤗
உன்ற ஈகோ+ பணத்திமிருன்னு அடைப்பு இருக்குற மூளை ரிதம் ஒன்லி ரிதம் மட்டும் டெல்லிங்கு டா🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍

பேபியா? ங்கொய்யாலே!😬😬😬😬😬😬.
ஆளில்லாத வூட்ல முங்கம் போட வந்திருப்பா போல.
கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.
இந்த தொழிலதிபர் ஆல்ரெடி வேற ஒருத்தரோட பிராப்பர்டியாகி ரொம்ப நாளாச்சு.
வந்துட்டா சிலுப்பிகிட்டு.
மவனே அந்த சினிமாகாரிகிட்ட பேசியிருந்தா உன்னை கும்மிருப்பேன்.

எதே கட்டுன பொண்டாட்டி பக்கம் மனசு போகுதா? அதைய தடுக்க டிரீட்மென்டா?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
டேய் பக்கி இதுக்கெல்லாம மூனாவது மனுசனை ரோசனை கேப்பாங்க .அவனே சிங்குளா டீ ஆத்தி கிட்டு இருக்கான்.
இதுக்கு நானு சொல்யூசன் சொல்லறேன் கேட்டுக்க.🧐🧐🧐🧐
சாமியே சரணம் சொல்லற மாதிரி பொண்டாட்டியே சரணம்ன்னு சரண்டர் ஆகிடு.🤗🤗🤗🤗
உன்ற ஈகோ+ பணத்திமிருன்னு அடைப்பு இருக்குற மூளை ரிதம் ஒன்லி ரிதம் மட்டும் டெல்லிங்கு டா🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
ஆத்தி என்ன ஒரு உள்ளக்குமுறல்😥😥😥 டேலெய் ஏகா உன்ற மண்டை தப்பிச்சுது பார்த்துக்கோ😂😂😂... எப்பா என்னா மிரட்டல்😳😳😳... இந்த மந்திரம் கூட ஒரு மாதிரி நல்லாத்தான்யா இருக்கு 🤣🤣🤣😂😂😂
 
Superb da, Vasishu.... 👌👌👌👌👌👌👌👌👌
உனக்கு எதிரா ஒரு கூட்டமே இயங்குதேடா நாயகா... இதுல இருந்து யாரு உன்னை காப்பாத்துவா🤔🤔🤔 என்னை எல்லாம் நம்பாத😁😁😁.. ஏன்னா!? நான்தான் முதல் ஆளா ஓடிடுவனே 🤓🤓🤓
 
Top