Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 16 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 16 ❤️‍🔥

"புவியை மிஞ்சும் பொறுமையள்
என்னிடம் கோபம் கொள் குறுந்தொகையோ!?"

ஏகன் உடனான சந்திப்பிற்கு ஒருமணி நேரம் முன்பே வந்து காத்திருந்தனர்.

'ஏனென்றால்!?'

அவனுக்கு தாமதம் என்பது அறவே ஆகாத ஒன்று.இதில் வரும் நேரம் முன்பின் என்றாகி பார்க்கமுடியாது போனால்;இது தோழியின் வாழ்க்கை அல்லவா.
அதனால் முன்பே வந்து காத்திருப்போர் இருக்கியில் அமர்ந்தனர் நிவேதா,ரேணு,
பிரபா மூவரும்.

சரியாக இவர்கள் நேரம் வர,இரண்டு ஆங்கிலேயர் உடன் இரண்டடி இடைவெளியில் தனித்து தனித்துவமாய் செறிவுடை அரிமாவாய் தோன்றினான் ஏகன்.

அவனை நேரில் கண்டதும் நிவேதாவிற்கு அப்படி ஒரு நிறைவு.தன் 'தோழிக்கு ஏற்றவன்' என்று பொருத்தம் பார்த்து திருப்தி கொண்டது அவளின் விழிகள்.

ரேணுவிற்கு மற்றவருடன் நடந்து வரும் போதும் அவனிடம் தெரியும் மிடுக்கும் யாரையும் தீண்டாது நடக்கும் தோரணையும் அவள் கருத்தை நிறைக்க.

வெளிநாட்டினர் என்பதால் அவர்களின் கலாச்சாரம் வாயில் வரை சென்று வழி அனுப்புவது என்பதால் தான் வெளியே வந்துள்ளான்.'இல்லை' என்றால் இக்னேஷ் தான் சென்று வழி அனுப்புவான்.

வெளிநாட்டவர் சென்றதும் இவர்களுக்கான அழைப்பு வர அனுமதி பெற்று உள்ளே செல்ல.

தன் எதிரில் இருந்த இருக்கையை காண்பித்து அமருமாறு பணிக்க.
மூவரும் அமர்ந்தனர்.

குளுகுளு காற்று அந்த அறையை நிறைத்தது.மேசை மீது காற்றில் பறந்துவரும் தூசி கூட ஒட்டாது சுத்தமாக இருக்க.

நிவேதா எண்ணினாள்," இந்த டேபிள்ல இலை போட்டு சாப்பிடாம சோற அப்படியே போட்டு சாப்பிடலாம் போல அவ்வளவு சுத்தமா இருக்கே!" வியக்க.

"ஆள் ரொம்ப சுத்தக்கார பேர்வழி போல நல்லது!" ரேணு நினைக்க.

அவர்களின் முன் அமர்ந்திருந்தவன் வந்திருந்த மூவரையும் ஆராய.பெரும் ஆராய்ச்சிக்கு பிறகும் யாரும் பேசாததால் பிரபா தானே பேச்சை தொடங்கினான்.

"சார் நான் பிரபாகரன்.." தன்னை அறிமுகம் செய்தவன் "ரிதமோட அண்ணன்!" என்றே தன்னை அறிமுகம் செய்தான்.

அவனின் இந்த உண்மை அன்பு ஒன்று தான் ரேணுவை அவன் அன்னையிடம் பொறுத்துப் போக வைக்கிறது.

"ஆனா ரிதம் சிங்கிள் சைல்டுன்னு தான் வேல் தாத்தா சொன்னாங்க!"
ஏகனுக்கும் எதிரில் இருப்பவர்களை ஆழம் பார்க்க வேண்டும்.

'அவ்வளவு எளிதில் யாரும் யாரையும் நம்ப கூடாது!' என்பதை அனுபவத்தில் கண்டவன் என்பதால் அவர்களை கேள்வியால் துளைக்க.

அதற்கு பிரபா, "இரத்த சொந்தம் இருந்தா மட்டும் தான் அண்ணன் ஒத்துக்குவீங்களா!?" சற்றும் யோசிக்காது கேட்டுவிட்டான்.

"அப்படி நான் சொல்லையே மிஸ்டர்.பிரபாகரன்!" என்க.

"நான் நிவேதா ரிதம் ஃப்ரெண்ட்.உங்ககிட்ட நான் சில கேள்வி கேட்கணும் கேட்கலாமா!?"

அனுமதி பெற்று மரியாதையாக தொடங்கியது நம் புலிக்குட்டி.

அவன் சிறு தலை அசைப்பை கொடுக்க.

"உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.அப்படி இருக்க நீங்க இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணை கல்யாணம் பண்ண நினைக்கிறீங்களே
ஏன்!?"
நிவேதா கேட்க

அடுத்தது ரேணு தன் அறிமுகம் முடிந்து,

"நீங்க கல்யாணம் பண்ண ரிதத்தை ஏன் சூஸ் பண்ணீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா!?"

இருவரும் மாறி மாறி அவனை கேள்வி கேட்டு செய்தியாளர் சந்திப்பாக மாற்றி இருந்தனர்.

"ரெண்டுக்கும் ஒரே காரணம் தான் ஒரே பதில் தான் என் பையனுக்கு உங்க ஃப்ரெண்டை தான் பிடிச்சிருக்கு அதுதான்!" என்றான் அமர்த்தலாய்.

"அப்போ உங்க பையனுக்கு நாளைக்கு ரிதமை விட வேற ஒரு பொண்ணு மேல பாசம் அதிகமானா நீங்க எங்க ஃப்ரெண்டை விட்டுட்டு உங்க பையன்னு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிபீங்களா!?" என துடுக்காய் கேட்டாள் நிவேதா.

"ஒருவேளை என் பையனுக்கு வேற ஒரு பொண்ணு மேல பாசம் வந்தா அவங்களை என் பையனுக்கு கேர் கிவ்வரா வைப்பேன்!" பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துக்கொண்டு காட்டமாய் கூறினான்.

அவன் ஏதோ 'பெண் பித்தன்' போல இருந்தது நிவேதா கேட்ட கேள்வி.

ஆனால் அவளை அக்கேள்வி கேட்க தூண்டியது தான் கூறிய, 'என் மகனுக்காக கல்யாணம் பண்றேன்!' என்ற பதில் தான் என்பது சமயம் பார்த்து அவனுக்கு புரியாது போனதுதான் விந்தை.

"அப்போ ஏன் நீங்க ரிதமை உங்க பையனுக்கு பெர்சனல் கேர் கிவ்வரா வைக்காம கல்யாணம் பண்ணனும் நினைக்கிறீங்க!?" ரேணு கேட்க.

"எல்லாம் ரிதம் தாத்தா எங்க தாத்தாக்கு குடுத்த வாக்கு தான் காரணம். முடிஞ்சுதா!?"

என்று அவன் கைகடிகாரத்தை பார்க்க.

"உங்களை நாங்க பார்க்க வந்தது அவளுக்கு தெரியாது. நீங்களும் சொல்ல வேண்டாம்!" என்ற கோரிக்கையை முன்வைத்து பெண்கள் முன்னே நடக்க.

"சார் ஒரு டூ மினிட்ஸ்!" என்ற பிரபா பெண்கள் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு அவன் மட்டும் ஏகன் உடன் பேசலானான்.

"உங்களுக்கு ரிதம் பத்தி என்ன தெரியும் எனக்கு தெரியாது.ஆனா உங்க பையனுக்காக பார்க்கற நீங்க கொஞ்சம் அந்த பொண்ணோட மனசையும் பார்த்தா நல்லா இருக்கும்.தாத்தா கொடுத்த வாக்கிற்காக தன் வாழ்கை பத்தி ரிதம் யோசிக்கலை.நீங்க உங்க பையன் வாழ்கைகாக ஒரு பொண்ணோட வாழ்கையை யோசிக்க மறந்துடாதீங்க சார்.ஒரு வேளை தாத்தாவோட ஹாஸ்பிடல் செலவு பத்தி ரிதம் மனசை மாத்தி இருந்தீங்கன்னா சொல்லுங்க.அதை நான் பார்த்துப்பேன்.நாளைக்கு காணா போற காசுக்காக ஒரு பொண்ணோட லைஃப் வீணாக வேண்டாம்!" என்றான்.

ஏகன் பற்றி சரியாக கணித்து இருந்தான் பிரபா.

ஏகன் கூறும் பதிலில் தான் பிரபாவின் அடுத்த நகர்வு உள்ளது என்பதால் ஏகன் முகம் பார்க்க.

அவனோ, "எனக்கு இந்த லைஃப்ல உங்க தங்கச்சி மட்டும் தான் என் வைஃப் போதுமா மிஸ்டர். பிரபாகரன்!" என்க

"ரொம்ப நன்றிங்க சார்.உங்க வார்த்தையை நம்புறேன்!" என்றவாறு அறையில் இருந்து வெளியேறினான்.

அவன் வெளியேறிய பிறகு ஏகன் சிந்தையில் தோய்ந்தான்.

'அவனும் தான் என்ன செய்வான்!?'

ரிதமை கேர் கிவ்வராக வைக்கத்தான் அவனும் 'ஆசை' கொண்டான்.

ஆனால் மகனோ அவளை 'தன்னுடனே இருக்குமாறு' வேண்டி நின்றதை கண்டபின்.அவள் கையால் உணவை உண்ண ஆசை கொள்வதும்.இதுவரை வயதிற்கு ஏற்ற ஆசைகள் ஏதும் இல்லாது இருந்தவன் இன்று அவளுடன் ஆசையாய் பேசுவதும் சிரிப்பதும்.

தன் யோகாசனம் முடித்த மறுகணம் அவளை நாடுவதும் அவனுக்கு பார்க்க பார்க்க தெவிட்டா தெள்ளமுதாக.

தன் மகனின் மகிழ்வு அவனுக்கு 'வாழ்நாள் முழுதும் கிடைக்க ஏது வழி!?' என்று யோசனையில் இருந்த நேரம் நண்பன் முகம் மின்னி மறைந்தது.

உடனே நவநீயை காணொளியில் அழைத்து பேச

"என்னடா நல்லவா எப்படி இருக்க என்ன ஆச்சு என் ஞாபகம் வந்திருக்கு!?" என்றான் அவன்.

"நவி" என்று ஆரம்பித்து மதுரையில் அவள் அகரனை அணைத்துக் காத்ததை தான் காரில் அமர்ந்து பார்த்தது வரை கூறி மீண்டும் அதே பெண்ணை அன்று மருத்துவமனையில் கண்டதாக கூற.

இந்த கதை எல்லாம் இக்னேஷ் மூலம் பாதியும்,தாத்தா மூலம் மீதியும் முன்பே அறிந்திருந்தான் நவநீ.

இருந்தாலும், அந்த பெண்ணை பற்றிய நண்பனின் எண்ணம் 'என்ன?' என்பதை அறிவதற்காக ஒன்றும் அறியாதவன் போல ஏகன் உரைப்பதை முதன்முறை கேட்பதை போல கேட்க.

நவநீக்கு தகவல் இக்னேஷ் மூலமும், தாத்தா மூலமும் தெரிந்திருக்கும் என்பது தெரிந்தாலும்; அவனிடம் பேசினால் 'தெளிவு பிறக்கும்' என்பதால் அவனிடம் மீண்டும் கூறினான்.

"நவி எனக்கு என்ன தோனுதுனா அந்த பொண்ணை ஏன் நான் கேர் கிவ்வரா வைக்க கூடாது!? அவளையே கேர் கிவ்வரா வச்சா நல்லா இருக்கும் இல்ல!"

"ஹேய் செம! யோசனைதான்.அந்த பொண்ணு அவங்க தாத்தாக்கு சரி ஆனதும் அப்போ அவங்க ஊருக்கு போய்டும் இல்ல!?"

சிறிதாய் குத்தி பார்த்தான் நண்பன் தெளிவு 'எவ்வளவு?' உள்ளது என்பதை.

"நான் அவக்கூட அக்ரீமெண்ட் போடலாம்னு இருக்கேன்!"

"ஓகோ... ஓகே டா,ஓகே டா அப்போ அவங்க ஒரு ஃபைவ் இயர்ஸ்,டென் இயர்ஸ் அப்பறம் அவங்க ஊருக்கு போகணும் இல்ல.அதுமட்டும் இல்ல அவங்க அன்மேரிட்ன்னு வேற சொன்ன!"

"ஆமாம் நவி! அன்மேரிட் தான்.அதுமட்டும் இல்ல நம்ம தாத்தாவோட பிரெண்ட் வேல் தாத்தாவோட பேத்தி வேற!"

"அப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி அதுவீட்டுக்கு போகுமா!? இல்ல நம்ம அகரனை பார்த்துக்க இங்கேயே இருக்குமா!?"

சரியாக அடித்துவிட்டான் நவநீ.

"ஹோ அப்படி ஒன்னு இருக்கோ? ஆனா நவி அதுக்காக நான் என்ன பண்ண முடியும்!?"

நண்பன் விரித்த வலையை தன்புறம் திருப்பி 'தானே' சென்று விழுந்தான் ஏகன்.

"அதுக்காக நீ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணாம இருன்னு ஆடர் போடமுடியுமா!?அது அவங்க விருப்பம்.உன் பிள்ளைக்காக இன்னொரு பொண்ணோட வாழ்கையை நீ வீணாக்க நினைக்கிறது நாட் ஃபேர்டா ஏகா!"

"நான் அப்படி நினைக்கல நவி. எனக்கு அப்படி மோட்டிவ் கிடையாதுடா மச்சான்!" ஏகன் கூற.

"எப்படி இருந்தாலும் அந்த பொண்ணை சிதம்பரம் தாத்தாவே யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்காம விடமாட்டாரு ....!"

நீட்டி முழக்கியவாரு தானாக பேசுவது போலே பேசி கொண்டு நண்பன் முகத்தின் ரேகைகளை ஆராய.

ஏகன் முகமும் சிந்தனை வயமாக இருந்தது.

"நீ சொல்றதும் உண்மைதான் நவி!" என்றவன்

காதல் பாடத்திலும்,குடும்பப் பாடத்திலும் ஏகன் 'மக்கு மந்தாரை' என்பது புரிந்தது,
நவநிக்கும் அது நன்றாக தெரியும்.

ஆனால் இந்த அளவிற்கு 'கூமுட்டையாக' இருப்பான் இந்த விசயத்தில் என்று அவன் யோசிக்கவில்லை.

எப்படியோ நண்பன் வாழ்வை சிறக்க செய்ய அவன் முயலும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியை அளிக்கும் என்று நம்பிக்கை கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

"ஏன்டா ஏகா இந்த யோசனை சரி வருமா!?"

நவநீ ஒன்றும் அறியாதவன் போல கேட்க நண்பன் தனக்காக புதிய யோசனை ஒன்றை கூறப்போகிறான் எனும் ஆர்வத்தில், l"சொல்லுடா நவி என்ன அது!?"

'அவ்வளவு தான் கவிழ்ந்துவிட்டான் ஏகன்!' நண்பனிடம்.

"இல்ல நீயே ஏன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாது!?"

முடிந்தது வேலை.

"ஏய் என்னடா சொல்ற நானா...!? அவளையா...!?" அதிர்வோடு வெளிவந்தது ஏகாந்தன் அவனது குரல்.

நண்பன் அதிர்ந்த குரலில் மறைந்திருந்த குழப்பத்தை கண்டுகொண்ட நவநீ..
ஏகன் மனதில் அகரன் பற்றிய பாச விதைகளுக்கு நீர் ஊற்றி வளர்த்து..
கடைசியாக ஏகன் வாயில் இருந்து
"சரி நவி நான் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன்டா!" என்றதில் வந்து தான் முடிந்தது.

அதன்பின் குழப்பத்தில் இருந்தவன் அவளிடம் 'உணவு வேண்டும்!' என அகரன் வேண்டி நின்றதில் தான் மனதில் உறுதி கொண்டான்.

நினைவை விரட்டி வேலையில் ஏகன் மூழ்க.

ஏகன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த பிரபாவைக் கண்டு ரேணு நிவேதா இருவரும்

"இவ்வளவு நேரம் என்ன பேசினீர்கள் இரண்டு பேரும்!?" வினவலோடு அருகே வர.

"அதெல்லாம் மாமன் மச்சானுக்கு இடைல ஆயிரம் இருக்கும் உங்களுக்கு எதுக்கு!?" என இருவரையும் அழைத்துக் கொண்டு இல்லம் நோக்கி பயணித்தான் அந்த மாண்பாளன்.

"இனிமே நீங்க ரிதம் பத்தி கவலை பட வேண்டாம் புரியுதா ஜாலியா மேரேஜ்கு ரெடி ஆகுங்க.அப்போ தான் ரிதம் கூட ஹேப்பியா இருக்கும் புரியும்னு நினைக்கிறேன்!" என்றான் பிரபா.

இருவரும் 'புரிந்தது' என்பதாக தலை அசைக்க கார் ரேணு வீட்டிற்கு பறந்தது பிரபாவின் கையில்.

அவனுக்கு நிம்மதி தங்கையாக பார்த்த பெண்ணின் வாழ்வில் ஒரு நல்லது நடக்கப்போகிறது என்று.

மூன்று நாட்கள் குழப்பத்தில் மட்டுமே ஓடியது ரிதம் எனும் பொன் பேழைக்கு.

இன்று தாத்தாவை அழைத்து வருமாறு மருத்துவர் கூறி இருந்தார்.

அதனால் ரேணு அல்லது நிவேதாவை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.ஆனால் மாலை இல்லம் வந்த ஏகன் தானே அவளுடன் வருவதாக கூற அவனுடன் கிளம்பினாள்.

ஏகனோ மருத்துவமனை வந்தவன் வாசலோடு காரை நிறுத்தி அவளையும், தாத்த்தவையும் மட்டும் இக்னேஷுடன் அனுப்பிவிட்டான்.

'சரி' என்று உள்ளே சென்றால் இவர்களுக்காக மருத்துவர் காத்திருக்க.

இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் இன்னும் சில பரிசோதனைகள் முடிய மருத்துவர் இன்னும் ஒரு ஐந்து நாளில் அறுவை சி
கிச்சைக்கான தேதி குறிப்பிட.

அதுவோ இவர்கள் திருமணம் முடிந்த மறுநாளாக இருக்க.அவரிடம் நன்றி கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

ஏகனோ ரிதம் மூலமாக அல்லாது நேரிடையாக மருத்துவரிடமே தகவலை பெற்றுக் கொண்டான்.
 
வாய திறந்து கேட்டா துரை தலையில இருக்கிற கிரீடம் 👑 இறங்கிரும் அதான் டாக்டர்கிட்ட கேட்கிறான்.......
டேய்... மாதர் சங்கம் பங்கம் பண்ணுதுடா உன்னை😥😥😥
 
Nice
 
நிவேவும் ரேணு பிரபாவும் கேட்ட கேள்விகள் எல்லாமே கரக்கிட்டு. அதுக்கு எதுக்கு இவன் மூக்குல காத்தடிக்கிறான்.
இதுவே இவனோட கூடப்பொறந்த பொறப்பா இருந்தா கேக்க மாட்டானா கேள்வி.😬😬😬😬😬😬😬
அடேங்கப்பா வேல்தாத்தாவப் பத்தி டாக்டர்கிட்ட கேப்பானாம். ஆனா ஆஸ்பத்திரி வாசல்வரைக்கும் தான் வருவானாம். கூட போறது அந்த குடுமிக்காரன்தான் போவானாம்.🫤🫤🫤🫤🫤
 
டேய் ஏகா... உனக்கு இருக்குடா சாதாரண ஏகாதசி இல்ல வைகுண்ட ஏகாதசி... உன் கூட இருக்க பாவத்துக்கு குடுமிக்கும்... ஐயோ இல்ல இக்னேஷ்கும் பெத்தையா இருக்குடா...😥😥😥😥😥😥😥
 
Top