Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 14 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 14 ❤️‍🔥

"பிறன் மூச்சில் குழையும் அனிச்சம் போல்;

குழப்பத்தில் குழையுமோ இப்பேசும் அனிச்சம்!?"


கையில் கோப்பை ஒன்றை ஏந்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் ரேணு.

பிரபா நேற்று சொன்னதை போல சரியாக ஏகன் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பையை அவளிடம் ஒப்படைத்து இருந்தான்.

"எப்படி பிரபா கேட்டதும் உங்களுக்கு கிடைச்சுது!?" என்று அவள் சந்தேகம் கேட்க.

அவனோ,"நம்மளை நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கு அது பாதுகாப்பு நமக்கு ரொம்ப முக்கியம் இல்லையா!? அதுதான் ரிதம் அன்னைக்கு ஏகன் வீட்டுக்கு போனதை நீ சொன்னதும்.. உனக்கு இக்னேஷ் குடுத்த கார்டை என்கிட்ட குடுத்த இல்ல அதை வச்சுத்தான் என் நண்பன் மூலமா தேட சொன்னேன்.அவன் மூனு நாளா அலைஞ்சு திரிஞ்சு கொண்டுவந்தான்.பையன் ரொம்ப சுத்தம் ரேணு எல்லாமே அக்கியூரட்டா இருக்கும் நீ பாரு.நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றேன்!" என்று மனைவிக்கு தனிமை கொடுக்க நினைக்க

அவளோ அவன் வெளியில் சென்று திரும்பும் வரை, 'திறப்போமா!?'
'வேண்டாமா!?' என பட்டிமன்றம் நடத்தி இருந்தாள்.

திரும்பி வந்தவன் தான் வெளியில் சென்று திரும்பி வரும் வரை கோப்பையை கைகளில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த மனைவியை நோக்கி வந்தவன் "இன்னுமா நீ இதை ஓபன் பண்ணலை!" என்றவாறு வந்து அவள் தோளை தொட.

"இல்ல பிரபா எல்லாமே பாசிடிவ்வா இருக்கணும் இல்ல ஏதாவது ஒன்னு நெகட்டிவ்வா இருந்தாலும் என்னால கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது பிரபா!" என்றாள்.

"இது ரிதம் தான் முடிவு சொல்லணும் ரேணு. நீ சொல்றது தப்பு!"என்றான் கண்டிப்பாக.

"அது எனக்கும் தெரியும். ஆனா! என்னால அதை ஏத்துக்க முடியாது பிரபா" மனம் கலங்கியது அவளுக்கு.

"முதல்ல ஓபன் பண்ணி பார்த்துட்டு அப்பறம் பேசலாம்.இப்போவே ஏன் நீயா ஒன்னை கற்பனை பண்ணி கவலை படுற!?" என்றவன் அந்த கோப்பையை திறக்குமாறு ஊக்கம் கொடுக்க.

'சரி திறந்துதான் பார்ப்போமே!' என்று பெருமூச்சை விட்டவாறு திறந்து முதல் பக்கம் பார்க்க

அதில் இக்னேஷ் கூறிய தகவல் தான் இருந்தது.

இரண்டாம் பக்கத்தில் திருப்ப அங்கே அகரன் அன்னை பற்றிய தகவல் இல்லை; ஆனால் ஏகன் 'விவாகரத்து ஆனவன்' என்ற தகவல் இருந்தது.

கூடுதலாக விவாகரத்திற்கு ஏகன் தான் முதலில் மனு தாக்கல் செய்துள்ளான் என்பதும் அதை படிக்க படிக்க புரிந்தது.
அதில் பெரிதாக வேறு எந்த தகவலும் இல்லை.

'இதுவா நீ கூறிய சரியான தகவல்கள்!?' என்று ரேணு பிரபாவை முறைக்க.

அவனோ," சாரி ரேணு இவ்வளவு தான் கிடச்சுது போல கோச்சுகாத்தம்மா!" என்றான் அவன் இறங்கி வந்து.

அவளும்," புரியுது பிரபா விடுங்க நிவே வர்றா இல்ல அவ வந்ததும் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்" என்றாள்.


"நிவே மாப்பிள்ளை வீட்ல என்னடி சொன்னாங்க!?"

"அவனுங்களா இன்னும் ரெண்டே மாசத்துல கல்யாணம் வைக்கணுன்னு சொல்லிட்டு சுத்துறானுங்க பொடி பசங்க !"

வெகு சாதாரணமாக கூற.

"நிவே எப்போடி வருவ!?"

'இப்போதே வந்துவிடு!' என்று ஊருக்கு சென்ற அன்னையை பிள்ளை அழைக்குமே
அதுபோல் ரிதம் நிவேதாவை அழைக்க.

"ஏன்டி ரிதம் என்ன ஆச்சு!?"

"இல்ல நிவே அவரும் தாத்தாவும் இன்னும் நாலு நாள்ல மேரேஜ்ன்னு சொல்றாங்க.
எனக்கு இங்க தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குடி.நீயும் ரேணுவும் கூட இருந்தா நல்லா இருக்கும்டி!"

"ஏய் அதுதான் தாத்தா இருக்காறேடி!"

"யாரு அவரா!? அவர் எப்பவும் சிதம்பரம் தாத்தா கூடவே சுத்துறாருடி. இப்போலாம் என்னை கண்டுக்கறதே கிடையாது !"
இன்பமான கவலையாக கூறினாள் ரிதம்.

"சரி நீ ஒன்னும் கவலை படாத நாளைக்கே வந்துடுறேன்!" என்றாள் நிவேதா.


நான்கு நாட்களில் திருமணம் என்பதால் நிவேதாவை அழைக்க.

அவளோ தாத்தாவை திட்டித் தீர்த்தாள்.

ரேணு,ரிதம் கூட சமாதானம் அடைய.அவள் தான் தீராக் கோபம் கொண்டு நடமாடினாள்.

நாளை திருமணம் என்றால் இரண்டு நாள் முன்பு வந்தவள் தனியே வராது ரேணுவின் தாய் அகிலாண்டம் மற்றும் தந்தை ஆடிய பாதம் உடன் வரப்போவதாக தகவல் கூற.

'அவ்வளவு தான்!'

ரேணுவின் சப்த நாடியும் ஒரே கோட்டில் ஒடுங்கிய உணர்வு.

ரேணுவின் தாய் அகிலாண்டம் பேசத் தொடங்கினாள் எதிர்த்து பேசிட யாராலும் முடியாது.

இங்கிருந்து பேசும் பேச்சு பத்து தெருவிற்கு அப்பால் கேட்கும் அப்படி ஒரு வெண்கலத் தொண்டை அவருக்கு.

"அன்னை வருவாரோ!? ஐயோ என்ன நேருமோ!?" என்ற பதட்டத்தில் ரேணு சுற்ற.

நல்ல வேளையாக சொத்து தகராறு ஏற்பட்டு ரேணு தப்பித்தாள்.அங்கே ஊரில் நிலவரம் கலவரமாக நிவேதா மட்டும் தனியே வந்திருந்தாள்.

வந்தவள் வந்த உடனே,"என்ன ரொமான்டிக் மேன் எப்படி இருக்கீங்க!?" என்ற அலறலுடன் தான் நுழையவே செய்தாள்.

அவளின் 'ரொமான்டிக் மேன்' எனும் அடைமொழிக்கு சொந்தக்காரனான பிரபாவோ,"வாம்மா நிவே எப்படி இருக்க!? பாவம் அத்தையை கூட்டிட்டு வர்றேன் சொல்லி ரேணுவை ரெண்டு நாளா
தூங்கவிடாம பண்ணிட்ட!" கிண்டலாக கேட்க

"என்ன பண்ண? நம்மளால முடிஞ்ச சின்ன சமூக சேவை!" என்று பெருமை பீற்ற.

"பாவி,பாவி,படுபாவி உன் சமூக சேவைல முள்ளவிட்டு தாக்க என்ன வேலைடி பார்த்து வச்சிருக்க. உன்னால ரெண்டு நாளா எங்க அம்மாக்கு கால் பண்ணவே இல்ல.இன்னைக்கு அவங்களா கால் பண்ணி சொல்றாங்க ஊருக்குள்ள நிலத் தகராறு நான் நிவேதாவை அங்க அனுப்புறேன்னு சொல்றாங்க பக்கி!"

"அகிலாம்மா இப்போ வரலைன்னு நினைக்காத வர்றப்போ உனக்கு கண்டிப்பா ஆப்பு இருக்குடி ரேணு!"

"அதெல்லாம் வர்றப்போ ரிதம் பார்த்துப்பா. இப்ப நீ போய் குளிச்சுட்டு வா"வென விரட்ட.

"பிரபா அண்ணா!" அன்பாய் அழைத்தாள் நிவேதா.

அப்பொழுதே அவன் மண்டையில் ஒரு ஒளி மின்னி மறைந்தது.

'எருமை எதற்காக என்சான்ட்டர் பூசுகிறது!?' சந்தேகம் பிறக்க

யோசித்து பேசலானான் பிரபா,"சொல்லு நிவேதா என்ன!?"


"ஒன்னும் இல்ல அண்ணா எனக்கு ஒரு உதவி!"

"சொல்லுமா என்னால முடிஞ்சா பண்றேன்!" என்க.

எந்த பக்கம் சென்றாலும் அவன் வலையில் சிக்காது போக; நேரிடையாக பேச வேண்டிய விசயம் நோக்கி தாவினாள் அவள்.

"அது ஒன்னும் இல்ல அண்ணா எனக்கு ஏகன் பார்க்க ஒரு அப்பாயின்மென்ட் வேணும் அண்ணா!" பதனமாக பாறாங்கல்லை அவன் தலையில் இறக்க.

'இவளுக்கு இப்படி கூட பேசத் தெரியுமா!?' இருந்தும் அவளின் பணிவான கோரிக்கையை அதிசயித்து பார்த்தான் பிரபா.

'ஏனென்றால்!?'


எப்பொழுதும் அடாவடியாக அதுவேண்டும், இதுவேண்டும் என்று கேட்கும் நிவேதாவை தான் அவன் பார்த்திருக்கிறான்.

'இன்று ஏனோ புதிய அவதாரம் போல!' என்று எண்ணிக்கொண்டு முயற்சி செய்வதாக கூறினான்.

"ரொமான்டிக் மேன் முயற்சி எல்லாம் கிடையாது கண்டிப்பா அப்பாய்ன்மென்ட் வேணும்!" என்றவள் தன்னை சுத்தம் செய்து கொண்டு வர உள்ளே செல்ல.


ரேணு தான் அறிந்த தகவல்களையும் கோப்பையையும் அவளிடம் நீட்ட.

வாங்கியவளோ அதில் இருந்த ஒரு எண்ணிற்கு தன் எண்ணில் இருந்து அழைப்பு விடுக்க.

'பட்'டென்று எதிர்ப்புறம் அழைப்பை ஏற்க...

"ஹலோ யாருங் அது மாடு பிடிக்கிற மாரி மச்சானுங்களா !?" என்று நிவேதா குரலின் சாரீரத்தை மாற்றி சிற்றூரின் சின்னம்மாளாய் கூவ.

"யாருங்க பேசுறீங்க உங்களுக்கு என்ன வேணும்!?" எதிர்ப்புறம் அழைப்பை ஏற்ற இக்னேஷ் பதட்டத்துடன் தனக்கு வந்த எண்ணை ஒருமுறை தெரிந்த எண்ணா என்று சோதித்தவாரு கேட்க.

"என்ன மச்சான்!? நீங்க என்ன சாதா மச்சான்னுங்களா !?நீங்க ஒரு தெய்வ மச்சான்; என்ற மச்சான் என்னைய மறந்துட்டீகளே!" என்று அலறோ அலறென்று இக்னேஷின் செவிப்பறை அதிர அலற.

தன்னை கலாய்ப்பதற்காக வந்த அழைப்பு என்பதை புரியாத இக்னேஷிற்கு சித்தம் கலங்கியது.

"என்னங்க யாருங்க நீங்க!?"
மண்டைக்குள் குருவி பறக்கும் அறிகுறி தென்பட வினவ.


"ஐயோ! மச்சான் என்னைய மறந்துட்டியலே"

திடீரென்று அழைத்த பெண் ஒருத்தி இவ்வாறு தன்னை கைவிட்டு சென்ற மச்சான் என்று எண்ணி தன்னிடம் பேசுவது புரிந்து "நான் உங்க மச்சான் இல்லைங்க!" இவன் பதற...

"மச்சான்! உன் வாயால அப்படி சொல்லாத மச்சான். என் உசுரே உருகுதே ஐயோ நா என்ன செய்வீ!?" இவள் புலம்ப

'யாரிந்த பொண்ணு!?'

'எதுக்கு எனக்கு கால் பண்ணி மாடு மேய்க்கற மாரி மச்சான் கூப்பிடுது!?'

'ஒன்னுமே புரியலையே!' என்று முழி பிதுங்க.

பின் அதே பெண்ணே மேலும் பேசினால்..

"ஐயோ! இது என்ற மச்சான் நம்பரு இல்லையா.யோவ் இது என் மச்சான் நம்பருன்னு நினச்சு நான் பேசிட்டு இருக்கேன்.நீயும் ஒரு பொம்பள புள்ள கொரல (குரலை) கேட்டுபுட்டு எனக்கென்னன்டு காதுல போன வச்சுகிட்டு பராக் பார்த்துட்டே நிக்கிறியாக்கும் போன வையியா பரட்ட மண்ட!" என்று கூறி அழைப்பை துண்டித்த நொடி.

அதுவரை அடக்கிய சிரிப்பை சிரித்து தீர்த்தனர் ரேணு,நிவேதா,பிரபா மூவரும்.

தொடர்பு இணைக்க பட்ட மறுநொடி அழைப்பை ஸ்பீக்கரில் அல்லவா வைத்திருந்தாள் நிவேதா. அதனால் மற்ற இருவராலும் கேட்க முடிந்தது.


மீண்டும் அதே கோப்பையில் இருந்த மற்றொரு எண்ணிற்கு அழைத்தாள்

"ஹலோ ஐ'ம் நவநீத் குமார் ஸ்பீக்கிங்!" கையில் புதிதாக வாங்கிய நாய்யை பிடித்துக் கொண்டு அழைப்பை ஏற்றவன் பேசத் தொடங்க..

"நாங்க என்ன நீ புனித் ராஜ்குமாருனா சொன்னோம்!"

சிக்கினான் அடுத்த சில்வண்டு...

"யாருங்க நீங்க எதுக்கு எனக்கு கால் பண்ணி கலாய்க்கிறீங்க!?"

"ஓ!உனக்கு கலாய்கிறோம்னு தெரியுதாடா சோடா" என்க

அவ்வளவு தான் பிடித்துக் கொண்டான் அவன்

"ஏய் நீ அந்த சடையன் ஏற்பாடு பண்ண ஆளு தானே!"

இக்னேஷ் தன்னை கேலி செய்வதற்காக ஒருஆளை நியமித்து இருப்பதாக கற்பனை செய்து கொண்டான் இவன்.

"ஆமாம் இவரு பெரிய பில் கேட்ஸ் இவரை பத்தி புகழ்ந்து பேச ஒரு ஆளை
போடனுமாக்கும்! டேய் பாடி சோடா உன்னை கலாய்க்க எல்லாம் நானே போதும்டா.வந்துட்டானுங்க நல்லா ஆளப்பாரு அறை டவுசரும் குறை டவுசருமா!"

நிவேதா கூறிய பிறகு தான் தன் உடையை குனிந்து பார்த்தான்

அது முட்டி வரை நின்ற பெர்முடாசாக இருக்க, 'எங்கோ இருந்து தான் கண்காணிக்க படுவதாக நினைத்துக் கொண்டான்!' நவநீ.

"ஏய் யாரு நீயி எங்க இருந்து என்ன வாட்ச் பண்ற!?"

"ஆமாம் இவரு ஜனாதிபதி இவரை வாட்ச் பண்றாங்க டேய் நீயே நாய் மேய்க்கிற நாயி!"

அப்பொழுது தான் புது நாய்க்குட்டியை கைகளில் வைத்திருந்தவன் உண்மையாக தான் கவனிக்கபடுவதாக இப்பொழுது உறுதியாக எண்ணினான்.

இங்கே பேசிக் கொண்திருந்த நிவேதாவோ
சாதாரணமாக தான் கூறினாள்.அவை அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று 'அவள் என்ன கனவா கண்டாள்!?'

"ஹேய் உண்மையை சொல்லு யாரு நீ!?"

"என்ன பாட்சா பட டயலொக் ரீமேக் பண்றியா!? போய் ஒரு ஓரமா பண்ணுடா பாடி சோடா!" என்றதோடு
அழைப்பை துண்டித்தாள் நிவேதா.

அவள் சாதாரணமாக கலாய்த்து விட்டு அழைப்பை துண்டிக்க "என்னை கலாய்க்க நீ தானே
ஆளை அனுப்பினாய்!?" என்று இக்னேஷ்,நவநீ இருவரும் சண்டை பிடிக்க.


ஏகன் தான் கூறினான் இவருக்கும் அழைப்பு வந்திருப்பது ஒரே எண்ணில் இருந்து என்று.மீண்டும் அந்த எண்ணை அழைக்க அதுவோ 'அணைத்து' வைக்கப் பட்டிருந்தது.
 
"ஐயோ! இது என்ற மச்சான் நம்பரு இல்லையா.யோவ் இது என் மச்சான் நம்பருன்னு நினச்சு நான் பேசிட்டு இருக்கேன்.நீயும் ஒரு பொம்பள புள்ள கொரல (குரலை) கேட்டுபுட்டு எனக்கென்னன்டு காதுல போன வச்சுகிட்டு பராக் பார்த்துட்டே நிக்கிறியாக்கும் போன வையியா பரட்ட மண்ட!"

ஹ்ம்ம்.... இப்போல்லாம் பெண்கள் எல்லா துறைகள்ளயும் ரொம்ப ரொம்ப முன்னேறிக்கின்னு போறாங்கப்பா..... புல்லரிக்குது.....
😜 😜 😜 😇 😇 😇 :cool::cool::cool:
 
ஹ்ம்ம்.... இப்போல்லாம் பெண்கள் எல்லா துறைகள்ளயும் ரொம்ப ரொம்ப முன்னேறிக்கின்னு போறாங்கப்பா..... புல்லரிக்குது.....
😜 😜 😜 😇 😇 😇 :cool::cool::cool:
அப்பறம் பெண்களை பற்றி வரலாறு என்ன சொல்லும் அதுதான்🤓🤓🤓🤓
 
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 டேய் ஏகா என்னா டா உன்ற பாடிகாட்ஸூக்கு வந்த சோதனை.
பாடிசோடாவா மாறிட்டானுங்க பயபுள்ளக.
ஏகனை சந்திக்க நிவே போட்ட திட்டம் சக்ஸஸ்.
இரண்டு போன்லையும் ஒரே நம்பருன்னு தெரிஞ்சு கிட்ட ஏகாவோட மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 images-90.jpeg
 
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 டேய் ஏகா என்னா டா உன்ற பாடிகாட்ஸூக்கு வந்த சோதனை.
பாடிசோடாவா மாறிட்டானுங்க பயபுள்ளக.
ஏகனை சந்திக்க நிவே போட்ட திட்டம் சக்ஸஸ்.
இரண்டு போன்லையும் ஒரே நம்பருன்னு தெரிஞ்சு கிட்ட ஏகாவோட மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 View attachment 8626
😁😁😁😁
 
Top