Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 11 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 11 ❤️‍🔥


"இன்பத்தில் தெரிவதல்ல நட்பினாழம்
தடுக்கும் தடைகளில் மிளிரும்
தத்துவமே நட்பெனும் நல்முத்து.....!!!"



"கல்யாணம் பத்தி உன்னோட பதில் என்னன்னு ஏகன்கிட்ட சொல்லிடும்மா.
ரெண்டு பேருமா சேர்ந்து வந்தா தாத்தா கல்யாணத்தை பத்தி பேசிடுறேன். இல்லைனா நீ ஒன்னும் கவலைபட வேண்டாம்மா!"

அத்தோடு பேச்சு முடிந்தது என்பதாக தாத்தா சென்றுவிட்டார்.

இவளோ யோசனையாக தோட்டம் நோக்கி நடையை கட்டினாள்.

கல் இருக்கையில் அமர்ந்து நீல வானத்தை நீண்ட நேரமாக பார்த்திருக்க.நொடிகள் பாதையைக் கடந்து மணி நேரங்களுக்கு உருண்டு செல்ல.


கடந்த பொழுதை கட்டிவைக்க முடியா கால தேவன் அடுத்த பொழுதிற்கு இடம் பெயர்ந்தான்.

நண்பகலை நோக்கி நாள் நகர.

"இனி என்ன செய்வது..!? ஏகன் வேண்டாம்!" என்று மனமும் மூளையும் ஒருமித்த குரலில் மறுக்க

"அகரன் தன்னை போல் தாயில்லாது வளரும் அவல நிலை கண்முன் விரிய...அதைவிட பெரிதாய் கண்முன் விரிந்தது தாத்தாவின் வாக்கு தான் அவளை பெரும் குழிக்குள் தள்ளியது!" என்றே சொல்லலாம்.

சிதம்பரம் தாத்தா எதை வைத்து அவளை கேட்டிருந்தாலும் மறுக்கும் மனம் அவளிடம் இருந்தது.மனதிற்கு ஒவ்வாத ஒன்றை ஏற்றுக் கொள்ள திணிக்க கூடாது. இதுதான் வேல் தாத்தாவின் பாலபாடம் இன்றுவரை அவள் அவ்வாறு தான் வளர்க்கபட்டாள்.

"பாப்புமா என்ன டிரஸ் எடுக்க போறம்மா!?"

"எந்த குரூப் எடுக்க போறம்மா!?"
என்று பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் துறை தேர்வு செய்தது முதல் அவள் வாழ்வின் முடிவுகளை தேர்வு செய்வது அவளின் விருப்பம் தான்.

அவளின் விருப்பம் சிறு சிறு பொருட்களில் நிறைவு பெறும் என்பதால் வேல் என்றுமே பேத்தியின் விருப்பம் அறிந்து செயல்படுவார்.

அப்படி தன்னை...தன் விருப்பத்தை...
போற்றி வளர்த்த தாத்தா கொடுத்த வாக்கு தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிட மனம் ஏற்க மறுக்க.மூளை அதை யோசிக்க கூட விரும்பாது ஏகன் புறம் திரும்பாது அகரனை மட்டுமே சிந்தையில் நிறுத்த.

"என்னடி ரொம்ப யோசனையா இருக்க!?" என்றவாறு வந்தாள் ரேணு.

அவளை அங்கே அந்நேரம் எதிர்பாரா ரிதம்
"ரேணு நீ இங்க என்னடி பண்ற!?" ஆச்சர்யமாக வினவ

"இல்லைடி உன்னை இங்க அனுப்பிட்டேன். ஆனா எனக்கு அங்க வீட்ல இருக்கவே முடியலை.ஒருமுறை உன்னை பார்த்தா மட்டும் தான் மனசு சரியாகும் அதுதான் அந்த மண்டையனுக்கு கால் பண்னேன் அவன்தான் வந்து கூட்டிட்டு வந்தான்!" என்று இக்னேஷை புகழ.

"அவன் தான்டி இப்போ எல்லாத்துக்கும் காரணம் நல்லா குடுமி ஒன்னை வச்சுட்டு இருக்க எல்லாருக்கும் சிண்டு முடிச்சு விடுறான் பக்கிப்பய!"

ரிதம் தானும் தன் பங்கிற்கு இக்னேஷை பங்கம் பண்ண.

"அதை சொல்லு நேத்து மட்டும் அவன் வந்து கெஞ்சலைனா இப்படி இங்க வந்திருக்க வேண்டியதே இருக்காது!"

"ஏங்க ரிதம் நீங்க இங்க வந்ததினால தான் உங்க தாத்தாவோட ப்ரெண்ட் கிடச்சுருக்காரு!" என்றவாறு அவர்கள் முன் தோன்றினான் இக்னேஷ்.


'பக்'கென்று இருந்தது அவன் திடீர் வருகை.

"ஏங்க இப்படித்தான் ரெண்டு பொண்ணுங்க பேசறப்போ வருவீங்களா!?" ரேணு கேட்க

"ஏங்க இப்படித்தான் ஒருத்தனை முன்னாடி விட்டு பின்னாடி பேசுவீங்களா!?" என்று அவனும் நியாயம் கேட்க.

"இதெல்லாம் நல்லா கேளுங்க! இப்படி பேசி பொய் சொல்லித்தான் உங்க பொழப்பு ஓடுது போல!" கோபமாக உரைத்தாள் ரிதம்.

"ஏங்க அதுதான் சாரி சொல்லிட்டனேங்க. திரும்பவும் அதையே பிடிச்சுட்டு நின்னா நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க !?"

"நீங்க ஒன்னும் சொல்லவே வேணாம்னு அர்த்தம்!" ரேணு பதில் உரைக்க

"ஒரு கேப்விட்டு அப்பறம்
அசிங்கபடுத்துங்க. நீங்க விடாம தொடர்ந்து வரிசையா போட்டு தாக்கினா நான் என்ன பண்ணட்டும்!?"

"பண்ண வரை போதும் பேசாம இருந்தா சகல சௌபாக்கியம்!" என்று ரிதம் கூற.

"ஏங்க இப்படியா பேசுவீங்க!?"

"எப்படி பேசுறாங்க!?" இப்போது தோழியர் இருவரும் இணைந்து பல்லவி பாட

"ஐயோ வேண்டாங்க இப்படி கூட்டமா என்னை மிரட்டாதீங்க!" என்றவன்

"உண்மையா சாரிங்க ரிதம்!"
மனதார மன்னிப்பு வேண்ட

"சரிங்க நீங்களும் பார்க்கற இடத்தில எல்லாம் இப்படி மன்னிப்பு கேட்டு எனக்கு திரும்ப திரும்ப நடந்ததை ஞாபகப் படுத்தாதீங்க ஓகே!" என்றிட

"சரிங்க அப்ப நீங்க பேசிட்டு இருங்க பாஸ் என்னை கூப்பிட்டா நான் வீட்ல இருக்கேன்னு சொல்லிடுங்க!" என்க.

"உங்க வீடு இங்கையா இருக்கு!?" ரேணு ஆச்சர்யம் காட்ட

"ஆமாமங்க அதோ அங்கே இருக்கு இல்ல குவாட்ரஸ் அதுதான் என்னோட வீடு. ஒரு நாள் வாங்க!" என்று அழைப்பு விடுத்து நாகரீகமாக நகர்ந்துவிட்டான்.

"பார்க்க நல்லவனா தெரியுறான்டி!"

"அதுதான் தெரியுமே ரேணு நீ சொல்லு அந்த கடுப்பன் கூட தான் வந்தியா என்ன!?"


"ஆமாம்டி! நான் இவனுக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டேன்.இவன் என்னனா நேத்து நான் குடுத்த அட்ரஸ் வச்சு வீட்டுக்கே வந்துடுறேன் நீங்க ரெடியா இருங்கன்னு சொல்லிட்டான்.சரி வர்றவனை ஏன் வேண்டாம்னு சொல்லன்னு நானும் விட்டுட்டேன். பார்த்தா அந்த கோபக்கார சுண்டு லிங்கமும் கூட வந்திருந்தான்!"


"அவன் உன்னை ஒன்னும் சொல்லலையா!?" ரேணு.

"இல்லைடி கார்ல ஏறினதுல இருந்து அவனுக்கு ஒரே ஃபோன் கால் பிஸியாவே இருந்தான்!"

"போடி நாடகத்தை எதும் கிளப்பறானா இருக்கும்!?"

"இல்லடி ரிதம்! நானும் கூட அப்படி நினச்சு தான் இருந்தேன்.ஆனா அவனுங்க கேள்வி கேட்க கேட்க இவன் எல்லாத்தையும் விளக்கம் சொல்லிட்டே வந்தான்"

"அப்பறம் என்னடி ஆச்சி!?"

"அதை ஏன் ரிதம் கேட்கற அவன் பேச பேச எனக்கு தூக்கம் வந்து தூங்கிட்டேன்.
வீட்டுக்கு வந்த அப்பறம் இந்த மண்டையன் தான் எழுப்பினான்!" என்று கூறிய தோழியை வெறியாய் முறைத்தாள்.

'அவனே தன்னை கேவலமாக எண்ணி கொண்டு அலைகிறான்.அவன் முன்பு தூங்கி வழிந்து மானத்தை வாங்கி வந்துள்ளாளே!' என்று கோபம் தான்.

ஆனால் அவனிடம் பேசாமல் 'வந்தவரை போதும்' என்று ரேணுவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சிதம்பரம் தாத்தா ரேணுவை பற்றி விசாரிக்க.இவளும் தன்னை பற்றி கூறியவள் அமைதியாக இருக்க.


அகரன் தான் ரேணுவின் முகத்தை முகத்தை பார்க்க

"ஜாமுன் இவ என்னோட ப்ரெண்ட் பேரு ரேணு!"

"ரேணு இது என்னோட பிரெண்ட் பேரு அகரன்.ஆனா எனக்கு ஜாமுன்!" இருவருக்கும் அறிமுகப்படலம் நிகழ்த்த.

"ஹேய் நானும் இவங்களை போல உங்களுக்கு ப்ரெண்ட்டா!" ஆசையாய் கேட்க

"ஆமாம் நீதான் எங்க கேங்ல சேர்ந்த முதல் பாய்டா ஜாமூன்!" என்றாள் ரேணு.

"நான் உங்களை எப்படி கூப்பிட!?" உரிமையாக அவளிடம் கேட்க

"நீ என்னை ரேணு அத்தைனு கூப்பிடு ஓகே!" என்று கையை நீட்ட

அவளின் கையை பற்ற பிள்ளை தயங்க.

"ஓகே.. ஓகே.. உனக்கு பிடிக்கலைன்னா விடு அத்தை நானே குடுத்துப்பேன்!" என்று அவன் பிடிக்காது விட்ட தன் வலகரத்தை
தன் இடகரத்தால் பிடித்து குலுக்கிக் கொண்டாள்.

அவளின் செய்கை சிரிப்பை உண்டாக்க புன்னகைத்து கொண்டே ரிதம் மடி மீது அமர்ந்து கொண்டான் அவன்.

பேச்சு அவனை சுற்றியே வர கண்கள் சொக்கி தூங்கிவிட்டான் பிள்ளை.

அவனை தூக்கிக் கொண்டு தன் அறை சென்றாள் ரிதம்.

அவளை யாரும் தடுக்கவில்லை.ஆனால் சிதம்பரம் தாத்தாவுக்கும் ஏகனுக்கும் இடையே ஒரு பார்வை 'பரிமாடல்' நடந்தது.


அறைக்குள் வந்து அகரனை உறங்க செய்துவிட்டு ரேணுவை சோஃபாவில் அமர்த்தி தானும் அமர்ந்தவள் இங்கே நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாது ஒப்பிக்க.

அவளோ,"இதற்கு என்ன தீர்வு!?" என்பதை அறியாது தவிக்க.

இவர்களுடன் அழைப்பில் இணைந்த நிவேதாவோ," ஏன்டி இந்த போல்டுக்கு எதுக்கு இந்த வேலை!? அது பேசாம வாக்கு குடுக்குறேன் பாக்கு குடுக்குறேன்னு குடுத்துடுச்சு இப்போ நம்மல்ல அள்ளாடுறோம்!"

"எனக்கு என்ன செய்றது தெரியல நிவே!" மனம் வெம்பக் கூறிட.

"அடி ரிதம் நீ என்ன பண்ற பேசாம அங்க இருந்து கிளம்பி ரேணு வீட்டுக்கு போய்டு.
தாத்தா மெடிக்கல் செலவை எங்க அம்மா எனக்கு பேங்க்ல போட்டிருக்க பணத்தை வச்சு பார்த்துக்கலாம்!" என்றாள்.

அவள் கொடுக்கிறேன் என்பது அவளின் பெரும்தன்மையை குறிக்கலாம்; ஆனால் அதனை பெற்றால் "தான் அவளின் அன்னையின் உழைப்பை உறிஞ்சும் அட்டையாய் அல்லவா மாறிவிடுவோம்!" என்று எண்ணி

"இல்லடி நிவே உனக்கு கல்யாணம் வருது அதுக்கு தானே அம்மா குடுத்தாங்க.அது வேண்டாம். நம்ம வேற எதையாவது யோசிக்கலாம் புரியுதா.நீ அவசரமா எதையும் செஞ்சு வச்சிடாத" அறிவுரை வழங்க

ரேணுவோ," ரிதம் நான் வேணா பிரபாகிட்ட கேட்கறேன்டி!"என்றாள் அவள் பங்கிற்கு.

இருவரின் அன்பு அவளை மெய்சிலிர்க்க செய்திட.

"இல்ல ரேணு எனக்கு வேண்டாம் தாத்தா வாக்கு கொடுத்தது நான் மீற முடியாது. நம்ம என்ன பேசினாலும் என்னால தாத்தாக்கு ஒரு அவமானம் தலைகுனிவை கொண்டுவர முடியாதுடி.அது உங்களுக்கே தெரியும் இல்ல?"

"அப்போ முடிவு பண்ணிட்ட!?" என்று தோழியர் கேட்க.

"ஆமாம்டி! இதோ இவனை பாரு அம்மா இல்லாம வளர்ற வயசா சொல்லு.தாத்தா வாக்கு மட்டும் காரணம் இல்லடி ; இதோ இவனும் தான் காரணம் பாரு வந்ததுல இருந்து என்னையே சுத்திட்டு இருக்கான்.
இவனை எப்படி நான் விடுவேன்!?"என்க.


"சரிடி அப்போ நீ அந்த ஆப்ரிக்கன் குரங்குகிட்ட பேசிட்டு அவன் என்ன சொன்னான்னு எனக்கு சொல்லு சரியா!?" என்றாள் நிவேதா.

"அடியேய் அவனை பார்க்க கூட இல்ல அதுக்குள்ள ஆப்ரிக்கன் குரங்குன்னு சொல்ற!?" ரேணு சந்தேகம் கேட்க

"ஆமாம்! இவ்வளவு மொரட்டு பீஸா அதுதான் இருக்கும் அதுதான் அப்படி சொன்னேன்"

"ஆனா ஒன்னுடி நிவே நீ சொன்ன மாதிரி அவன் சரியான கோவக்காரனா இருக்கான்டி.திமிரு திமிரு அப்படி ஒரு திமிரு!" ரிதம் ஒப்புக்கொண்டாள்.


"ஏய் அவ உன்னோட உட் பீயை பத்தி தான் பேசறாடி!" ரிதம் புறம் திரும்பி ரேணு கேட்க

அதற்கு ரிதமோ,"ஆமாம் அவன் என் உட் பீ இதே பிட்டைத்தான் அவன் தாத்தாகிட்டயும்
போட்டான்.சரியான அழுகுனி புழுகுனியா இருக்கான்டி.நேத்து தாத்தா கேட்ட உடனே எப்படி ரெடிமேடா பொய் சொல்றான் தெரியுமா!?"

"அதுதான் நீ சொல்லும் போதே தெரியுதே!"
நிவேதா சொல்லிக்கொண்டே"ஏன்டி ரேணு ஆள் பார்க்க எப்படி இருக்கான்டி!?" என்க

"ஆனா நிவே சொல்லியே ஆகனும்டி அவன் அம்புட்டு அழகாத்தான் இருக்கா
ன்!" ரேணு அவனை புகழ.

"ஆள் பார்க்க அழகா இருந்து என்ன
பண்ண!? தலைக்கணம் அதிகம்டி.சரியான மண்டைக்கசாயம்!" ரிதம் ஏகனை பற்றி தோழியரிடம் புகழாரம் சூட்ட.

தோழியரின் பேச்சு சீன சுவர் வரை நீண்டது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் ஏகா உன்னைய இதைவிட யாரும் பங்கம் பண்ணமுடியாதுடா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
விமன்ஸ் பவர்😎😎😎😎😎

வைஷு குட்டி..... இங்க நாங்களும் உங்க பக்கமாகும்..... ஹீரோயின ரொம்ப பிடிச்சு போச்சு.... :p:p:p
 
வைஷு குட்டி..... இங்க நாங்களும் உங்க பக்கமாகும்..... ஹீரோயின ரொம்ப பிடிச்சு போச்சு.... :p:p:p
வாங்க வாங்க சிஸ். அவனைய தட்டிப் புழிஞ்சு காயப்போடலாம்.😆😆😆😆
ஆனா ஈரோ ஆர்மின்னு ஒன்னு இல்லையே 🙄 🙄 🙄 சிஸ்.
நம்ம ஆத்தர் ஜீய அப்பாயின்ட்மென்ட் பண்ணிடலாமா?😜😜😜😜😜
 
Top