Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்ப(து )னை சுகமானதே கதை சுருக்கம்

Advertisement

Subageetha

Active member
Member
கொஞ்சம் இடைவெளி விட்டு கதையை தொடர வேண்டிய நிலை. புரிதலுக்கு நன்றி.

கதையின் சுருக்கத்தை மீண்டும் உங்கள் நினனவுக்கு ,

கண்மணி-சாம்பசிவம் தம்பதியின் பிள்ளைகள் நரேந்திரனும் திருமகளும். திருமகள் வீட்டின் செல்ல மகள்.சாம்பசிவம் ஆடிட்டர். துரைசாமி -ராஜம் தம்பதியின் ஒற்றை பிள்ளை சாகேத். சாகேத்தும் நரேந்திரனும் நண்பர்கள்.துரை ஒரு சிறு தனியார் பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார். அதேசமயம் ட்யூஷன் வகுப்புகளும் நடத்துகிறார்.

திருமகள் அவரிடம்தான் ட்யூஷன் செல்கிறாள். சாகேத்துக்கு திருமகள் மீது ஆழ்ந்த காதல் உண்டு. ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை.நரேனுக்கு தன் நண்பனின் விருப்பம் தெரியும்.ஆனால் அதைப்பற்றி அவன் யாரிடமும் பேசவில்லை. தனது நண்பனுக்கு திருமகள் தகுதியானவள் அல்ல என்பது அவன் எண்ணம்.

சாம்பசிவம் குடும்பத்துடன் ஒப்பிடும் பொழுது துரை குடும்பம் பல படிகள் கீழே இருக்கிறார்கள் .அதுவும் சாகேத் அமைதியாக இருக்கிறான். சாகேத் வெளி நிமித்தமாக பெங்களூரு செல்ல பெற்றவர்களின் உதாசீனம் காரணமாக நரேன் தானும் பங்களூர் சென்று சாகேத்துடன் தங்குகிறான். சி ஏ படிக்கும் பொழுது தன்னுடன் பயிலும் சாருவுடன் காதல் மலர்கிறது.

அந்த காதல் திருமணத்தில் சேர ,இன்னொருபுறம் சாகேதின் காதல் தோல்வியில் முடிகிறது. திருமகளுக்கு நிவாஸுடன் கல்யாணம் நடக்க அவள் கணவனுடன் அமெரிக்கா சென்று விடுகிறாள். வீட்டின் வற்புறுத்தலின் பெயரில் ஜான்வியை காரம் பிடிக்கிறான் சாகேத்.

ஜான்வியுடன் நெருக்கமாக இருக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க அவர்களின் கட்டில் உறவு விரிசல் அடைகிறது. நிவாஸ் திருமகளை அலட்சியமாக நடத்துகிறான். அவர்களது உறவும் விரிசலில் . .

ஜான்வி தான் ஏற்கனவே லிவின் இல் இருந்த வினீதனிடம் ஆறுதலை காண முயல்கிறாள். திருவின் கணவன் நிவாஸும் திருவின் மனதை கொஞ்ச நாட்கள் திருமணம் முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்த நிரூபனும் நெருங்கிய நண்பர்கள். வேலை காரணமாக சிலவருஷங்களாக சந்தித்துக்கொள்ளாமல் இருந்தவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள்.

இனி என்ன ஆகும் என்பதை கதைக்குள் சென்று அறிந்து கொள்வோம்.
 
Top