Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -5

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -5


அம்ருவும் ரஞ்சித்தும் இருவருமே ஒரே டீமில் பணியமர்த்தப்பட ..அதன் பின்னர் இருவரது நெருக்கமும் அதிகம் ஆகியது.

இருவருக்கும் ஒரே அலைவரிசை , ஒரே பிடித்தங்கள், ஒரே ரசனை என்று எல்லாமே ஒத்துப்போக இருவருமே தைரியமாக காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.

வேலை என்று வந்துவிட்டால் இருவருமே இரவு பகல் பார்க்க மாட்டார்கள். அதிலும் இப்போது உற்சாக பானம் போல் மனம் கவர்ந்தவர் அருகில் இருக்க இருவருமே தங்கள் பணியில் முன்னிலையில் இருந்தனர்.

அலுவலகத்தில் யாருக்கும் இவர்கள் விஷயம் தெரிவதில் விருப்பமில்லை இருவருக்குமே!

அதனால் எல்லா பேச்சுக்களும் பொதுவாகவே இருக்கும்..பெரும்பாலும் சித்து காயு மூலமே நடக்கும். டீம் அவுட்டிங் போது கூட குழுவாகவே இருப்பர்.

வெளியில் இருந்து பார்க்கும் யாருக்குமே இருவரும் காதலர்கள் என்பது தெரியாது.

இருவருக்கும் இடையில் பார்வை பரிமாற்றம் மட்டுமே !

அதுவே இருவருக்கும் போதுமானதாக இருக்க.. தனிமை என்பது இருவருக்கும் வெள்ளி இரவு தான்.

இருவருக்கும் மிக பிடித்த கடற்கரையோரத்து கஃபே ஒன்றில் தான் சந்திப்பர் .. சூடான காஃபி அருந்தியபடி கைகோர்த்து அலைகளில் கால் நனைக்கும் சுகம் இருவரையும் வேறுலகத்திற்கு கொண்டு செல்லும் .

அதுவும் பௌர்ணமி நிலவும் சேர்ந்து கொண்டால் சொல்லவும் வேண்டுமா?

சிறு தீண்டல்களும் பட்டும் படாமல் ஒற்றும் இதழ்களும் அவ்வபோது இருவரும் போதை கொள்ள செய்தாலும் அம்ரு தன் எல்லையை எப்போதும் மீற மாட்டாள். அவள் தாயின் வளர்ப்பு அப்படி!


தன்னவனின் எல்லை மீற துடிக்கும் கரங்களின் தேடல் புரிந்தாலும் புரியாததுபோல் நடிப்பதிலும் ஒரு சுகம் தானே !

அதன் பின்னர் வரும் வார இறுதி .. வெறும் நாற்பத்தியெட்டு மணி நேரம் தானா? ஒரு ஜென்மமே கடப்பது போல் ஏன் கொல்லாமல் கொல்லுகின்றது என்று தோன்றும், ஒருவரை ஒருவர் காண முடியாத அந்த இரு நாட்களும்.

இவர்களது காதல் வளர வளர .. கம்பெனியும் நன்கு வளர்ந்தது. சமீபமாக இருவருக்குமே பதவி உயர்வு கிடைத்திருக்க .. அதே நேரம் தான் இவர்கள் திருமணமும் உறுதியானது.

முதலில் திருமண பேச்சை தொடங்கியது தனுஜாதான்!

ஒரு தாய்க்கே உரிய கவலை அவருக்கு ..பெண்ணிற்கு 24 ஆகிவிட்டது. நன்றாக படித்திருக்கிறாள். நல்ல வேலை.. அதிலும் பதவியுயர்வும் வந்தாகிவிட்டது. மூன்று வருடங்களாக சம்பாதிக்கிறாள் ...நிறையவே !

திருமணத்திற்கான நகை பணம் எல்லாம் தயாராக இருக்க.. இளைய மகளும் படிப்பை முடிக்க போகிறாள்.

மோகனுக்கும் தனுஜாவிற்கும் ஓய்வு பெற இன்னும் ஆறு வருடங்கள் இருக்க .. இப்போது பார்க்க தொடங்கினால் ஒரு வருடத்திற்குள் நிச்சயம் செய்யலாம் ..அதிலிருந்து சில மாதங்களில் திருமணம் , ஆடி , வளைகாப்பு , குழந்தை பிறப்பு , பிறகு சிறிய மகளுக்கு .. என்று அவர் கணக்கிட்டிருக்க ... மேலே தான் ஒருவன் இருக்கிறானே எல்லாவற்றையும் புரட்டி போட்டு பார்ப்பது தானே அவன் பொழுதுபோக்கு?

சரியாக அம்ருவையும் ரஞ்சித்தையும் கோர்த்துவிட்டான்.

இப்போது தாய் கல்யாண பேச்சை எடுக்க அம்ரு உடனே உடைத்து சொல்லிவிட்டாள், ரஞ்சித்தோடு தான் தன் வாழ்க்கை என்று.

தன் மகளுக்கு உலக விவரம் பத்தாது என்பது தனுஜாவின் அனுமானம்.. அதற்கேற்றாற்போல் அம்ருவிற்கு ரஞ்சித்தை தெரிந்த அளவிற்கு ..அவன் குடும்பத்தை பற்றியோ .. அவன் செல்வநிலையை பற்றியோ ..பிண்ணனியை பற்றியோ ..எதுவும் தெரியவில்லை .. அவளுக்கு அதெல்லாம் முக்கியம் என்றே தோன்றவில்லை .

காதலில் இது எதற்குமே இடமில்லை என்றாலும் ..திருமணம் என்று வரும் போது இது எல்லாமே முன் நிற்கும் என்று புரியவில்லை.

அதன் பின்னர் தான் ரஞ்சித்தை சென்று சந்தித்தனர் நால்வரும்

மோகனுக்கு மகிழ்ச்சிதான் ..அவரும் காதலித்து மணந்தவர் தானே ..அதனால் தன் பெண்ணின் காதலுக்கு தடை போட வில்லை!

அதிலும் ரஞ்சித்தை சந்தித்தபின்னர் அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை!

மூத்த மகள் மேல் அவருக்கு அளவு கடந்த பிரியம் உண்டு ..தங்கள் காதலின் பரிசாய் தன்னையே உரித்து வைத்து பிறந்த மகள் .. படிப்பு , கலை, விளையாட்டு அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் அமைதியும் பொறுமையும் மிக்க பூ போன்ற தன் மகள் அம்ரிதா மீது மிகுந்த பாசம் அவருக்கு. இளைய மகள் சம்யுவின் மீதும் பாசம் இருந்தாலும் .. எப்போதும் அம்ருவையே ஒரு படி மேலே வைப்பார்.

சம்யு சாயலில் தன் தாத்தா ..தனுஜாவின் தந்தை ராமானுஜத்தை கொண்டிருக்க ..தன்னை வெறுத்து பெண் தர மறுத்த தன் மாமனாரை கொண்டு தன் மகள் பிறந்துவிட்டாளே என்று அவர் வருந்தாத நாளில்லை!

ராமானுஜத்தை போலவே சம்யுவும் சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தபோதும் அவர் வெகுவாக எதிர்த்தார். தனுஜாவின் முயற்சியாலேயே சம்யுவின் கனவு நனவானது.

இப்போது மூத்த மகள் காதலிக்கும் ஆண்மகனை நேரில் சந்தித்தவருக்கு அவனது படிப்பிலும் ,பதவியிலும் , தோற்றத்திலும் , திறமைகளிலும், குடும்ப பின்னணியிலும் மிகுந்த திருப்தி!

ஆனால் தனுஜாவிற்கு அத்தனை மன திருப்தியில்லை ! வானுக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்த தந்தையையும் மகளையும் கவலையோடு நோக்கிய தனுஜாவை முதலில் கவனித்தது சம்யு தான் .

"என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?" இளைய மகளின் கேள்வி தந்தையை நனவுலகத்துக்கு கொண்டு வர .." ஏன் தனு ஒரு மாதிரி இருக்க?" என்றார் அப்போதுதான் மனைவியின் குழம்பிய முகத்தை கவனித்தவராய்.

சற்றே தயங்கி மகள் மற்றும் கணவரின் முகம் நோக்கிய தனுஜா "இல்லங்க .. பையன் நல்லவனா தான் தைரியறான். நம்ம அம்ருக்கு நல்ல மேட்ச் .." என்றவர் சற்றே இறங்கிய குரலில் "ஆனா குடும்பம் எப்படி இருக்குமோ ? ரொம்ப பெரிய இடமா இருக்கு ..அவங்க ஒத்துக்கலன்னா? அதோட நாம எளிமையான வாழ்க்கை முறை உள்ளவங்க. அவங்க பரம்பரை பணக்காரங்க ..அதிலும் அம்ரு தான் மூத்த மருமகளா போவா .இவளுக்கு பின்னாடி வர்ற மருமக பெரிய குடும்பத்தில இருந்து வந்தா கண்டிப்பா இவளுக்கு அங்க சரியான மரியாதை இருக்காது .நல்லா யோசித்து முடிவு பண்ணுங்க " என்றார்.


"எனக்கும் அம்மா சொல்றது தான் சரின்னு தோணுதுக்கா .. நல்லா யோசித்து முடிவு பண்ணு. "


"எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான்ம்மா தெரியும் அவங்க குடும்ப பின்னணி. நாங்க அதெல்லாம் பார்த்து லவ் பண்ணலம்மா" என்றாள் மகள்.

"அம்மா ..ரஞ்சித் ரொம்ப நல்லவர் மா .. அவங்க அப்பாம்மா பத்தி அவன் சொன்னதை பாக்கும்போது அவங்களும் நல்லவங்களா தான் இருக்கனும்மா."

"அக்கா ..எல்லாருக்கும் அவங்க அப்பாம்மாவை பிடிக்க தான் செய்யும் ..அப்போ அவங்கள விட்டுக் கொடுக்காம தான் பேசுவாங்க ..உனக்கும் அவங்களுக்கும் பொருந்தி போக வேண்டாமா ? அதுக்குதான் அம்மா யோசிக்கிறாங்க "

"நீ ஏன் சம்யு எப்பவும் நெகட்டீவ்வாவே பேசற ? நீ தான் எங்க போனாலும் சண்டைக்கு நிப்ப.. அம்ரு அப்படி கெடயாது" தந்தையின் கோப குரல் இடையிட..

"அவங்க கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும் சம்யு " இதற்கு மேல் பேச வேண்டாம் என்பது போல் அம்ரு தீர்க்கமாய் சொல்ல ..

மேற்கொண்டு சம்யு எதுவும் பேசவில்லை ..தமக்கை வெகு தீவிரமாக இருக்கிறாள் என்று புரிந்தது. மேலும் இது அவள் வாழ்க்கை..அவள் தான் முடிவெடுக்க வேண்டும்..அவள் தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும். சரிதான் என்று வாயை மூடிக் கொண்டாள்.

எப்படியும் அந்த குடும்பத்தை நேரில் சந்திக்க தானே போகிறோம் ..அப்போது தெரிந்து விட்டு போகிறது அவர்களை பற்றி ..அதற்குள் நாமும் குழம்பி இவளையும் ஏன் குழப்ப வேண்டும் என்று நினைத்தவளாய் அமைதி காத்தாள்..

அவர்களை சந்தித்தபின்னர் தன் எண்ணம் மேலும் வலுவாகும் என்றறியாமல் !
 
சம்யுவுக்கு ஏற்ற ப்ரித்திவிராஜன் அவங்க குடும்பத்திலயும் ஒருத்தன் இருக்கான்😍😍😍😍.
 
🥰🥰🥰🥰 அம்ரி அவ காதலில் ரொம்ப உறுதியா இருக்கா 🧐🧐🧐🧐🧐 அதுக்கு அவ அப்பா சப்போர்ட் 😲😲😲😲 தன் பொண்ணு நல்லா வசதியா வாழ போறா என்று சந்தோஷம் 🤩🤩🤩🤩

அம்மா மட்டும் தான் பொண்ணோட எதிர் காலத்தை பத்தியும் யோசிக்கிறாங்க 🤔🤔🤔🤔 இரண்டாவது மருமக வசதியான வீட்டில் இருந்து வந்தால் தன் பொண்ணோட நிலை என்ன என்று 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

அப்பாவுக்கு சம்யுக்தா மேல் பெருசா பிடித்தம் இல்லை 😡😡😡😡😡


இரண்டு பேரும் வக்கீல் 😝😝😝 அப்போ ஏற்கனவே அறிமுகம் இருக்குமோ 🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
Top