Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -28

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -28

அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஆகிய நிலையில் வார இறுதியோடு சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறை வர இந்தியாவில் இருந்து வந்த எல்லாரும் சேர்ந்து சுற்றுலா செல்ல முடிவெடுத்து சென்றனர்.

எல். ஏ என்ற லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம். புகழ்பெற்ற ஹாலிவுட் இருக்கும் இடம்.

இவர்கள் இருக்கும் சான் ப்ரான்சிஸ்க்கோவில் இருந்து நான்கே மணி நேர பயணத்தில் இருக்கும் அந்த கனவு நகரத்தை காண அனைவரும் கிளம்ப ..அம்ருவுக்கோ ரஞ்சித்தை விட்டு தனியாக எதையும் ரசிக்கும் மனநிலை இல்லை.

இருந்தும் அபார்ட்மெண்டில் தனியே இருக்க பயமாக இருக்க இவளும் கிளம்பத்தான் வேண்டியிருந்தது.

எல்லோரும் சேர்ந்து சுற்றி பார்க்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு இடத்தில் இவர்கள் ஒரு ரயில் விட்டு இன்னொரு ரயில் மாற வேண்டியிருந்தது.
டிக்கட் எல்லாமே யஷ்வந்த் தான் ஏற்பாடு.

எல்லோரும் ரயில் நிலையம் அருகிலேயே உணவுண்டுவிட்டு ரயில் ஏறிவிட அம்ருதா தன் போனில் இருந்து ரஞ்சித்திற்கு முயன்று பார்க்க ஸ்விட்ச் ஆப் என்று காலை முதலே வந்தது.

காலை தங்கையிடம் பேசியதில் இருந்தே ரஞ்சித் நினைவு தான். அவன் தான் பேசவில்லை..நாமாவது போன் செய்யலாம் என்று நினைத்தவளாய் அவனுக்கு முயன்று பார்க்க ... பலனில்லை. தொடர்பு எல்லையில் இல்லை என்றே வரவும் அவளது கோபம் மேலும் அதிகரித்தது.

வழக்கமாக ரிங் போனாலும் பதிலே இருக்காது. இப்போது எதற்குத் தொல்லையென்று அணைத்தே விட்டானா?

உணவகத்திலிருந்து எல்லோரும் கிளம்பிவிட சந்தோஷ் வந்து அழைத்தான். "அம்ரிதா நீ வரலையா ?" எனவும் யஷ்வந்தின் பார்வை இவன் மீது வெறுப்பாய் படிந்தது.

"வருவாங்க ..நீங்க போங்க சந்தோஷ் " என்று அவனை வெட்டி விட்டவன் ..அம்ரிதா உங்க போன் சரியில்லைன்னு நெனைக்கிறேன் . வேணும்னா இங்கே பப்ளிக் போன் இருக்கும் பேசிட்டு வரீங்களா? " என்றான் ரொம்பவும் அக்கறை உள்ளவன் போல !

சந்தோஷ் சென்று ரயிலில் ஏறிவிட " ட்ரெயின் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கு . அதுக்குள்ள வந்திருங்க ." என்று நல்ல பிள்ளை போல் சென்று ரயிலில் ஏறிக் கொள்ள .. அம்ருவும் அவன் சூது அறியாதவளாய் அருகில் இருந்த பப்ளிக் போனில் ரஞ்சித்தின் எண்ணை அழைக்க முயல .. மறுபடியும் அதே பதில் தான்.
ரயில் கிளம்ப இரண்டே நிமிடங்கள் இருக்க ..வேண்டுமென்றே பத்து நிமிடம் என்று கூறியிருந்தான் யஷ்வந்த். எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்துவிட ..அம்ருவுக்காக காத்திருப்பவனை போல வாயில் அருகே நின்றிருந்தவன்..ரயிலின் அறிவிப்பு கேட்டு அம்ரிதா திகைத்து, பின் ரயிலை நோக்கி ஓடி வர.. அதற்கெனவே காத்திருந்தவனை போல ரயிலில் இருந்து இறங்கி விட்டான். அடுத்த வினாடியே ரயிலின் கதவுகள் பூட்டிக்கொள்ள ரயில் வேகமெடுத்து நகர்ந்து விட்டது.

தலையில் அடித்துக் கொண்டாள் அம்ரிதா. இப்படி முட்டாள்தனமாக ரயிலை விட்டுவிட்டோமே.. பத்து நிமிடங்கள் ஆகும் என்று கூறினானே.. அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டதே என்று யோசிக்கையிலேயே அவளருகில் வந்துவிட்டான் யஷ்வந்த்.

வந்தவன் அவளை பேசவே விடவில்லை. "என்ன அம்ரிதா இது ..சீக்கிரம் வாங்கன்னு சொல்லிட்டு தானே வந்தேன் . இப்படி லேட் பண்ணிட்டீங்க . தனியா மாட்டிக்குவீங்களேன்னு நானும் இறங்கிட்டேன்."

"சாரி யஷ்வந்த். டைம் பாத்துட்டே தான் இருந்தேன் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை." என்று வருந்தியவள் "இப்போ என்ன செய்றது?" என்று அவனிடமே கேட்க ..இதற்குத்தானே காத்திருந்தான்.

"இதுதான் இன்னிக்கு லாஸ்ட் ட்ரெயின். இனி நாளைக்குதான். பஸ் ஏதாவது போகலாம்..ஆனா அதெல்லாம் சேப் இல்லை. உங்களுக்காக வேணா ரிஸ்க் எடுத்து கூட்டி போறேன்.. நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா ..உங்க வருங்கால கணவருக்கு யாரு பதில் சொல்ல ?"

இப்படியும் அப்படியுமாய் அவளை குழப்ப ..ஏற்கனவே கலங்கிய குட்டையாய் இருந்த மனது ..எதையும் யோசிக்க முடியவில்லை.

"நீங்களே சொல்லுங்க . என்ன செய்யலாம்?"

"இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு காலையில முதல் ரயிலில் கிளம்பலாம். " என்று கூறவும் ஒத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை அம்ரிதாவுக்கு.

"இங்கே நல்ல ஹோட்டல் எங்கேன்னு விசாரிக்கிறேன். நம்ம கூட வந்தவங்களுக்கு சொல்லிடறேன் " என்றபடி போனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச்சென்றான்.
சந்தோஷ் இவளுக்கு லைனில் வந்தவன் "என்ன அம்ரிதா ? எங்கே இருக்கீங்க ?" என்றான் பதட்டமாய்.

இவர்கள் இருவரும் காணோம் என்றதும் மும்பை ஜோடிகள் நக்கலாக சிரித்துக்கொண்டு "தனியா போகணும்னா சொல்லிட்டே போயிருக்கலாம் . யே டிராமா கியூன் ?" என்று நக்கலடித்துக் கொண்டிருக்க, இவனுக்கு ஏதோ சரியில்லை என்று பட்டதும் அம்ரிதாவை அழைத்துவிட்டான்.

அவளோ ஒன்றும் அறியாதவளாய்.. "இல்லை சந்தோஷ்..பத்து நிமிஷம் இருக்கு ட்ரெயின் கிளம்புன்னு நெனச்சேன் .நான் வர்றதுக்குள்ள மூவ் ஆயிடுச்சி . யஷ்வந்த் எனக்காக ரயிலில் இருந்து இறங்கிட்டார். நாங்க எப்படியாவது பார்த்து வந்திடறோம் " என்று கூற ..யஷ்வந்த் தான் ஏதோ தில்லுமுல்லு செய்கிறான் என்று புரிந்தது.

இனி பார்த்து கொண்டிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவனாய் அவன் ரஞ்சித்தை அழைக்க ..அவனது மொபைலோ நாட் ரீச்சபிளிலிருக்க .. அடுத்து சித்துவுக்கு அழைத்தான் .சித்து சொன்ன செய்தி அவனுக்கு கொஞ்சம் தைரியம் தர.. யஷ்வந்தின் கையில் அம்ரு சிக்கிவிட கூடாதே என்று நினைத்தவனாய்.. அமருவிடம் பத்து நிமிடங்களுக்கொருமுறை பேசி எங்கிருக்கிறார்கள் என்று அறிந்தபடி இருந்தான்.

ஒரு டாக்ஸி பிடித்த யஷ்வந்த் தங்கும் விடுதி எதற்காவது போகும்படி ஓட்டுனரை பணிக்க வண்டி அந்த சிறு நகரத்தின் விடுதிகளை குறி வைத்து நகர்ந்தது.

இவள் காரின் உள்ளேயே அமர்ந்திருக்க ..முதலில் ஒரு ஹோட்டலில் இறங்கியவன் ..உள்ளே சென்று விசாரித்து வந்தான்.
வந்தவன் முகம் சுருங்கியிருக்க .." என்ன யஷ்சார் ?"

"இங்கே ரூம் எதுவும் இல்லை அம்ரு." என்றவன் உள்ளே ஏறி அமர்ந்து அடுத்த விடுதிக்கு செல்லும்படி ஓட்டுனரை பணித்தான் .

மேலும் மூன்று விடுதிகளிலும் இவ்வாறே பதில் வர .."ஆன்லைன்ல பாக்கலாம்ல சார் ?" என்று அம்ரிதா கேட்கவும் சுருக்கென்றது யஷ்வந்திற்கு.

உண்மையில் ஒன்றை தவிர அனைத்து இடங்களிலும் அறை காலியாக இருக்க ..வேண்டுமென்றே இல்லை என்பதாக சொல்லி அவளது பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தான் .

இதில் இவள் வேறு தெளிவாக யோசிக்கிறாளே என்றிருந்தது அவனுக்கு.

"நெட்ல பார்த்து போனால் எப்படியிருக்குமோ? ஒருவேளை குற்றங்கள் அதிகம் நடக்கும் இடமாக இருந்தால்? அதுதான் நேரில் பார்த்து அழைத்து போகிறேன். நீங்க என்னவோ என்னை சந்தேகப் படுவது போல் இருக்கே " என்று கேட்கவும் இவளுக்கு ஒரே குற்ற உணர்ச்சியாகிவிட்டது.

"அப்படியெல்லாம் இல்லை யஷ்வந்த். நீங்க பாருங்க " என்று அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

அடுத்து வந்த விடுதிக்குள் சென்று வந்தவனின் முகம் யோசனையாய் இருக்க .. வந்தவன் சற்று நேரம் அமைதிகாத்தான்.

இவள் இருமுறை அழுத்தி கேட்டபின்.."இல்லை இங்கே வேண்டாம் " என்றான்.
"ஏன்? அறை இருக்கு தானே?"
"இருக்கு. ஆனால் வேறு இடம் பார்ப்போம் அம்ரிதா ." என்று காரில் எற முயல .."என்ன பிரச்சனைன்னு சொல்லுங்களேன் "

அவள் வற்புறுத்துவதாலேயே சொல்பவன் போல .."ஒரு ரூம் தான் இருக்குங்க அம்ரிதா." என்றான் தயக்கமாய்.

சற்று நேரம் யோசித்தவளுக்கு.. இப்படியே ஒவ்வொரு இடமாக பார்த்து அறை ஏதும் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட "சரி .. இங்கேயே இருக்கலாம் ..யஷ்வந்த். இன்னிக்கு ஒருநைட் தானே ..அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்." எனவும் உள்ளுக்குள் வெற்றிக் களிப்பு ஏற்பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் .. "உங்களுக்கு ஓகேன்னா ..எனக்கும் ஓகே தான்" என்று உள்ளே சென்று அறை பதிவு செய்ய... அம்ரிதா தாங்கள் தங்கும் இடம் குறித்து சந்தோஷிற்கு விவரம் அனுப்பி விட்டு உள்ளே சென்றாள்.
அறைக்குள் சென்று பார்த்தவளுக்கு இவ்வளவு சிறிய அறையா என்றிருந்தது. கட்டிலும் சிறிதாக இருக்க ..கவுச் எதுவும் கூட இல்லை.

ஒத்துக் கொண்டிருக்க கூடாதோ என்று தோன்றும் போதே ..கையில் உணவு பொட்டலத்தோடு குளிர் பானமுமாய் உள்ளே நுழைந்தான் யஷ்வந்த். அது லேசான அளவில் ஆல்கஹால் கலந்த பானம்..அதை அம்ரு அறியவில்லை.

அவளை எப்படி தன் வயப்படுத்துவது என்று யோசித்தவன்.. குழைந்து குழைந்து பேச ..அம்ரிதா எப்போதும் சுலபமாக எல்லாரையும் நம்ப கூடியவள்.. தனக்கு இவன் நல்லது நினைப்பவனா என்று கூட அறியாமல் அவனிடம் ரஞ்சித்திற்கும் தனக்கும் உள்ள ஊடல் குறித்து பேச அவனுக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அம்ரிதாவை உயர்த்தியும் ..ரஞ்சித்தை தாழ்த்தியும் அவன் பேச பேச அவளுக்கே அப்படித்தானோ என்று தோன்றிவிட ..உணவை முடித்தவர்கள் உறங்கும் நேரம் வந்தது.. அதற்காகவே காத்திருந்தவன் .. நல்லவன் போல் நான் தரையில் படுக்கிறேன் என்று சொல்ல இவளுக்கு குற்ற உணர்வாகிவிட்டது.

தனக்காக இவ்வளவு அலைந்து பாடுபட்டவன் குளிரில் நடுங்கி கொண்டு தரையில் படுக்க வேண்டுமா என்று நினைத்தவளாய்.. "மேலே படுங்க " என்று அனுமதித்துவிட ..இருவருமே உறக்கத்தில் ஆழ்ந்தனர்..

அப்படிதான் அம்ரு நினைத்துக் கொண்டிருந்தாள்!
இவள் எப்போது உறங்குவாள் என்று காத்திருந்தவனாய்..மெல்ல அவள் மீது கால் போடுவதும் கை போடுவதுமாய்..இருக்க அவளுக்கோ குடித்திருந்த பானத்தின் விளைவாக மதி மயங்கியிருந்தது.

அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் செல்ல அவனுக்கோ வெகுவாக குஷியாகிவிட்டது . மெல்ல அவளது உடைகளை களைய இவன் முயல சரியாக அந்நேரம் கதவு விடாமல் தட்டப்பட்டது .

இது யாரடா பூஜை வேளை கரடி என்று சலித்தவனாய் ..சென்று கதவை திறக்க ..வெளியே நின்றிருந்தவனை அந்த நேரம் இவன் எதிர்பார்க்கவில்லை.

வாசலில் நின்றிருந்தவன் ரஞ்சித்.

உள்ளே எட்டி பார்த்தவனுக்கு கலைந்த உடைகளுடன் படுத்த்திருந்த அம்ரு தென்பட .. தன் கோபமெல்லாம் திரட்டி யஷ்வந்தின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து வைத்தான்.

ரஞ்சித்தின் வாட்டசாட்டமான தேகத்தின் பலமெல்லாம் சேர்த்து வாங்கிய அடியில் ஒரு ஓரமாய் சென்று அவன் விழ ..உள்ளே சென்று அம்ரிதாவை தூக்கியவன் ..அவளது கைப்பையையும் எடுத்துக் கொண்டு வெளியேற ... அதை தடுக்கும் வழியின்றி பார்த்து கொண்டு நின்றான் யஷ்வந்த்.

தலை சுற்றிக்கொண்டுவர ..எதுவும் பேச இயலாதநிலையில் இருந்த அம்ருவுக்கு.. எதுவும் புரிவதாகவும் இல்லை. அவளை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சிலந்தி வலையை அறியாமல் அதில் சந்தோசமாய் போய் சிக்கிய சிறு பூச்சியின் நிலைதான் அவளுக்கு . சிலந்தி அவளை விழுங்க வரும்முன்னே காப்பாற்றப்பட்டது கூட அறியாமல் ..வலை அறுந்து கீழே விழுந்துவிட்டோமே என்று வருத்தப்படும் அறியாமையோடு இருந்தாள்.

இக்னோரன்ஸ் ஐஸ் ப்ளிஸ் தான்..ஆனால் இது முழுமுட்டாள்தனமல்லவா ?

அவள் தூங்கி எழும்வரை அமைதியாக இருந்தவன் எழுந்ததும் ஒரு கோப்பையில் பால் கலக்காத காபியை கலந்து கொடுக்க ..அவன் முகம் பார்க்காமல் வாங்கி அருந்தினாள் அம்ரு.

"நீ எப்படி ரஞ்சு அங்க வந்தே ?"

"ஏன் வந்தேன்னு கேக்கிறியா ரித்து ?"

"ஒரு போன் பண்ணி நீ வருவதை சொல்லலாம்ல ?"

"நான் போன் பண்ணா நீ எடுக்கமாட்டே . மெசேஜ் போட்டாலும் ரிப்லை இல்லை. நீ நல்லா இருக்கியான்னு கூட நான் வேற யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. யாரோ மாதிரி ஆபிஸ் மன்த்லி மீட்டிங்கில் உன்னை பாக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா ?"

"பொய் மேல பொய் சொல்லாதே ரஞ்சித். நீ எனக்கு கால் மேல கால் பண்ணியா ? இவதான் யு எஸ் போய்ட்டாளே, நாம நிம்மதியா இருக்கலாம்னு இருந்திட்டு ..என்னை மிஸ் பண்ண மாதிரி பேசற ?'

"அஃப் கோர்ஸ் ..மிஸ் பண்ணதால தான் இப்படி அவசரமா கிளம்பி உன்னை பாக்க வந்திருக்கேன். ரெண்டு மாசமா உன்னை பக்கத்துல பார்க்க முடியாம எவ்வளவு தவிச்சிட்டேன் தெரியுமா ?"

"நான் மட்டும் இங்கே சுகமா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு நினைச்சியா ரஞ்சி. உன்னை.. வீட்டில எல்லாரையும் பிரிந்து எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமா ? "

"கஷ்டப்படுறவதான். டூர் கிளம்பியிருக்கியா ?"

"எல்லாரும் போகும்போது நான் மட்டும் எப்படி அங்க தனியா இருக்க முடியும்? அவாய்ட் பண்ண முடியலை "

"நான் வர்றேன்னு தெரிஞ்சும் நீ கிளம்பியிருக்கியே ..உன்னை பாக்க இத்தனை மைல் தூரம் கடந்து வர்ற நான் முக்கியம் இல்லை .. சுற்றுலா முக்கியமா போயிடுச்சி..இல்லையா ?"

"நீ வர்றது எனக்கெப்படி தெரியும்?"

"அப்போ நான் அனுப்பின மெசேஜல்லாம் படிக்காம எதோ ஒரு எமோஜியை அனுப்புகிறாயா ? நானும் இதுக்கென்ன அர்த்தம் அதுக்கென்ன அர்த்தம்னு குழம்பிக்கிட்டு இருக்கேன்."

"என்ன சொல்றே ரஞ்சி ?சத்தியமா நீ வருவேன்னு எனக்கு தெரியாது."

"ஓ ..தெரிஞ்சிருந்தா அவன் கூட சேர்ந்து ஊரை சுத்தியிருக்க மாட்டேல்ல? ரொம்ப அடக்கஒடுக்கமா வேலை பாக்கிற மாதிரி நடிச்சிருப்ப"

"ரஞ்சி ..நீ ஓவரா பேசுகிற ! நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை"

"நடிக்க வேண்டிய அவசியம் இல்லைதான்..அதுதான் எல்லாம் வெட்டவெளிச்சமாயிடுச்சே"

"நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா ..நான் இல்லாதப்போ அங்க வேற பொண்ணுங்களோட நல்லா என்ஜாய் பண்ணிக்கிட்டிருக்க ? அந்த ஷாலினியோட நீ கூத்தடிச்சதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ?"

"வாவ் ..இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.. யுவர் சீப் டாக்டிக்ஸ் ..ஷாலினி ஒரு ஃபாமிலி பிரென்ட் அவ்வளவுதான்..பரவாயில்லை ..உலகத்தோடு இந்த மூலையில உக்காந்துக்கிட்டே அந்த மூலையில இருந்த என்னை வேவு பார்த்திருக்க . பரவாயில்லை கில்லாடிதான் நீ. இல்லைன்னா இந்த சின்ன வயசில இவ்வளவு முன்னேற முடியுமா ? நான் லாம் உன் முன்னாடி ‘பச்சா’ தாண்டி."

"உன்மேல ஆயிரம் அழுக்கை வச்சிக்கிட்டு என்னை குறை சொல்றியா ? உன்னைத்தவிர வேற யாரையும் என் மனசால் கூட நெனைச்சதில்லை ரஞ்சித் . உனக்கது கூட புரியலை இல்லை?"

"உனக்கு நான் முக்கியமேயில்லடி . இந்த வேலை.. கோல் ..ஆம்பிஷன்..காசு பணம்.. பதவி.. இதெல்லாம் தான் முக்கியமாயிடுச்சி உனக்கு. நானோ என் காதலோ முக்கியம் இல்லை. இது மற்றவங்க சொல்லும்போது எனக்கு புரியலை ..இப்போ நல்லா புரியுது."

"போதும் ரஞ்சி ..எனஃப் !" காதுகளை இறுக்க மூடிக் கொண்டாள் அம்ரிதா.

"எது போதும் ? " அவளை கூர்ந்து நோக்கியபடி அவன் கேட்க .."எல்லாமேதான் !" தீர்க்கமாக அவனை நோக்கியபடி கூறினாள் அம்ரிதா.
 
Top