Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -25

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 25

காலையில் குளுமையும் இனிமையாய் இருந்த வானிலை மாறி இத்தனை நேரத்தில் மெல்ல மெல்ல வானம் கருத்திருந்தது. லேசான தூறலும் ஆரம்பித்திருந்தது.

இப்போது வேலை முடிந்துவிட ..மனம் இயற்கையோடு இணைய .. சற்று பக்கத்தில் தெரிந்த மலை முகடுகளை பார்க்கையில் ஆசை துளிர்த்தது சம்யுவுக்கு.

"ப்ரித்வி.. அந்த இடத்துக்கு போக முடியுமா ?" என்று சிறு பிள்ளையாய் கேட்க ..அதற்குமேல் யோசிப்பானா நம் ப்ரித்விராஜன்?

"ஒய் நாட் ?" என்றவன் காரை எடுக்க ஏறி அமர்ந்த சம்யுவுக்குள் துளி துளியாய் உற்சாகம் ஊறிக்கொண்டிருக்க ..ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி.

கைகளை நீட்டி மழை துளிகளை உணரும் ஆவல் அவளிடம் இருப்பதை உணர்ந்தவனாய்.. ஜன்னல்களை இறக்கி விட.. லேசான சாரல் இருவரையும் நனைத்தது.

"கார் நனைஞ்சிடுமே பரவாயில்லையா ?" என்ற சம்யுவின் கேள்விக்கு புன்னகையே பதிலாக தர ..
"ஹே.." என்று குதூகலித்தாள் சிறு பிள்ளையாய்.

"கார்ல போகும்போது இப்படி சாரலை அனுபவிச்சிட்டே போனா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா ? ஆனா எங்கப்பா விடவே மாட்டாரு." என்று முகம் சுருக்கி குறைபட்டுக்கொள்ள ..ஏனோ அந்த நொடி அவள் மேல் அளவில்லாத நேசம் பொங்கியது.

சிணுங்கும் அவ்வதனத்தை கைகளில் ஏந்தி படபடக்கும் அந்த இமைகளில் அழுத்தமாய் முத்தம் வைக்கும் உந்துதல் அவனை தள்ள ..'இது வேலைக்காகாதுடா ' என்று மனதுக்குள் சொல்லியவனாய் சாலையில் பார்வை பதித்தான்.

அவள் சிறு பிள்ளையாய் குதூகலித்திருக்க அதை ரசித்தபடி அவன் மெல்ல காரை செலுத்திக் கொண்டிருக்க .."காலைலேருந்தே மெல்ல போகுது உன் கார் . நீ ஆளே சரியில்லை ஊட்டி வந்ததில் இருந்து .என்ன ஆச்சு?"என்றாள் சம்யு. அவன் சென்னையில் ஓட்டும் வேகம் அவள் அறிவாள் அல்லவா ?

அவளது வக்கீல் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதை அறிந்து கொண்டவன் , அவளது கவனத்தை திருப்பும் விதமாக
"வேகமா போகணும் அவ்வளவுதானே?" என்றபடி காரின் வேகத்தை மிக அதிகமாக்க .. வளைவுகளில் கூட வேகம் குறையாமல் திரும்பியது.

முதலில் பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் சற்று நேரத்தில் பயம் கூடியது சம்யுவுக்கு. அவ்வளவு வேகம்.

அதுவும் மலைப்பாதை வேறு ..அவுட்டர் ஏரியா என்பதால் சாலைகளும் செப்பனில்லாமல் இருக்க ... இவளுக்கு தலையே சுற்றும் போல் இருக்க..அவ்வழியில் பலமுறை வந்து பழகியிருந்தவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போல .. நால்வழிச்சாலையில் போவது போல் ஆடாமல் அசையாமல் இருக்க .. சீட் பெல்டின் இறுக்கத்தையும் மீறி அப்புறமும் இப்புறமுமாக காற்றில் ஆடும் கொடியாய் அசைந்தாடிக் கொண்டிருந்தாள் சம்யு .

"ஒரு கட்டத்தில் ..கண்களை இறுக மூடிக் கொண்டு ..அவன் புஜத்தை இறுக்கப் பற்றியவள் "ஐயோ ப்ரித்வி மெதுவா போ.. தலை சுத்துது " என கத்தவும் அவளது தீண்டலை ரசித்தபடி "அத்தான்னு கூப்பிடு ..மெதுவா போறேன் " என்றான் வம்பாய் .

கண்களை திறக்காமலே "அதெல்லாம் முடியாது ..மெல்ல போடா " எனவும் அந்நேரம் ஒரு வளைவு வர வேண்டுமென்றே ஒடித்து திருப்பினான்.

பயம் கழுத்து வரை நிற்க "சரி சரி ..அத்தான் அத்தான் அத்தான் ..போதுமா.. கொஞ்சம் நிறுத்து..ப்ளீஸ் " என்று விழிகளை மூடியபடியே கெஞ்சினாள் . கண் திறந்து பார்த்திருந்தால் அவனது கள்ள சிரிப்பை கண்டிருப்பாள்.

சட்டென கார் சரக்கென்று ப்ரேக்கடித்து நிற்க ..ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டவாறு கண்களை திறந்தவள் கண் முன் தெரிந்த அழகில் முற்றிலும் மயங்கினாள்.

பசுமையான புல்வெளியில் ஒற்றை மரம் மட்டும் காற்றில் அசைந்தபடி நிற்க .. மேகக் கூட்டங்கள் காற்றின் வீச்சில் வேகமாய் நகர்ந்து செல்ல .. குளிர் பனி உடலை நனைக்க .. ஏகாந்தமாய் இருந்தது. சுற்றிலும் இருந்த மலை குன்றுகளும் புல் வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஜெர்சி பசுக்களும் ..படிப்படியாக ஸ்டெப் கல்டிவேஷன் செய்யப்பட்டிருந்த உருளை மற்றும் காலிபிளவர் செடிகளும் பார்வையை நிறைக்க .. தன்னை மறந்து நின்றிருந்தாள் சம்யு.

காரில் இருந்து அந்த சிறிய குன்றின் மீது ஏறியவள் சூழலின் அழகிலும் குளுமையிலும் மனம் மயங்கி நிற்க பாவையவளின் எழிலில் மனம் மயங்கி நின்றான் ஆடவன்.

அவள் எப்போதும் ஒரு காட்டன் குர்தாவும் ,ஜீன்சும் தான் அணிவாள் . பணி நேரத்தில் கருப்பு வெள்ளை உடை தான்.

இன்று வெளியூர் வந்ததால் ஒரு கருப்பு ஜீன்சும் , சிவப்பில் வெள்ளை பூக்கள் போட்ட ஷர்ட் ஒன்றும் அணிந்திருந்தாள்.. லேசாக மை தீட்டப்பட்ட விழிகள் இந்த சூழலிலும் தீட்சண்யம் குறையாமல் இருந்தன . மாநிறத்துக்கு சற்றே கூடிய நிறமென்றாலும் இந்த பனியில் சிவந்து இருந்தன கன்னங்கள்.

குளிருக்கு ஏற்றாற்போல் சற்றே அழுத்தமாய் இடப்பட்ட சிகப்பு நிற உதட்டு சாயம் 'வா வா 'என்றழைக்க தன்னை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியபடி கார் மீது சாய்ந்து கைககளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ப்ரித்வி.

சிறிது நேரம் அவள் இயற்கையையும் ,இவன் அவளையும் ரசித்திருக்க .. அதை குலைப்பது போல் மழை தூறல் வலுக்க ஆரம்பித்தது.

அதில் சம்யுவோ மேலும் சந்தோஷம் கொள்ள .. மலைப்பகுதியில் பெய்யும் மழை பற்றி நன்கு அறிந்திருந்த ப்ரித்விக்கு அவளுக்கு ஒத்துக் கொள்ளாதோ என்ற கவலை ஏற்பட.. காரில் இருந்து ஒரு குடையை எடுத்தவன் அவளை நோக்கி நடக்கலானான்.

சடசடவென விழும் மழை துளிகள் உச்சியை குளிர செய்ய ... அதை தடுப்பதுபோல் நீண்ட குடையை கண்டதும் அவள் முகம் சுணங்கியது.

அவன் நீட்டிய குடையை தள்ளி விட்டாள் "என்ன ப்ரித்வி ? நனைய விடமாட்டேங்கிற ? இந்த மாதிரி ஒரு மழை கிடைக்கிறது எவ்வளவு ரேர் தெரியுமா ?" .

"உனக்கு ஒத்துக்கலைன்னா என்ன செய்ய ?" என்று விடாமல் அவள் பின்னால் சென்றான்.

"எங்கப்பா மாதிரியே சொல்றியே! சென்னைல மழை பெய்யறதே எப்போவோ தான் அப்பவும் நனைய விடமாட்டார்.. அனால் அவருக்கு தெரியாம நனைஞ்சிட்டு வந்துருவேன் தெரியுமா ?" என்றால் சிறு பிள்ளையாய்.
"நீதான் கேடின்னு தெரியுமே !"

"ஹலோ ..நான் ஒன்னும் கேடியில்லை" முறுக்கிக் கொண்டாள்." வேற எதுக்குமே நான் பொய் சொன்னதில்லை தெரியுமா? சொல்லவும் மாட்டேன் "
"அப்படியா ..நேரம் வரும்போது செக் பண்ணி பாக்கிறேன். இப்போ ஒழுங்கா குடைக்குள்ள நில்லு" என்றவன் அந்த சிறு குடைக்குள் அவளை உரசியபடி நிற்க .. அவனது வாசம் அவளை என்னவோ செய்வது போல் இருந்தது.

சற்றே விலகி நிற்க .. ஏற்கனவே நல்ல சாரல். இப்போது பாதி உடை நனைந்துவிட்டது.

"மழை கூடிக்கிட்டே போகுது சம்யு.. வீட்டுக்கு போயிடுவோம் " என்று சொல்ல ஆமோதிப்பாய் தலையசைத்தபடி குன்றில் இருந்து கீழே இறங்க தொடங்கினாள்.

ஏறும்போது சுலபமாக இருந்தது. இப்போது மழையின் உபயத்தில் சற்றே வழுக்கலான பாறைகளில் நடக்க பயமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல ப்ரித்வியின் கை பிடித்து கீழே இறங்கியவள் காரில் ஏறி அமர ..இருவருமே கிட்டத்தட்ட பாதி நனைந்திருந்தனர்.
காரை கிளப்பி வீடு நோக்கி செலுத்தினான் ப்ரித்வி.

காரின் கதவுகள் அவ்வளவு நேரம் திறந்திருந்ததில் காருக்குள் நல்ல குளிர்ச்சி. அதோடு கிட்டத்தட்ட நனைந்துவிட்ட ஆடைகள் மேலும் குளிரூட்ட ..அதற்கு பழக்கப்படாத உடல் மெல்ல விறைத்து நடுங்க தொடங்கியது. மெல்ல கைகளை தேய்த்து கன்னத்தில் தேய்த்துக் கொள்ள தொடங்கியவள் ப்ரித்வியை பார்க்க சாலையில் கவனம் பதித்திருந்தவன் அவளை கவனிக்கவில்லை.

சிறிது நேரம் சமாளிக்க பார்த்தவளால் அதற்கு மேல் முடியவில்லை .."பிரித்..வி ."என்றாள் நடுக்கமாய்.
அப்போதுதான் அவளை கவனித்தவன் அவள் நடுங்கி கொண்டிருப்பதை காணவும் ..அவளுக்கு பழக்கமில்லாத குளிர் என்று புரிந்து கொண்டான். உடையும் மெலிதாக இருக்க இரு கைகளையும் கட்டி கொண்டு கதவோடு ஒட்டி அமர்ந்திருந்தவளை பார்த்தவன் ..ஹீட்டரை ஆன் செய்து வைக்க அப்படியும் அவளது நடுக்கம் நீங்கவில்லை.

காரை ஓரமாக நிறுத்தி சட்டென்று அவளது கைகளை பற்றியவன் பரபரவென்று தேய்த்து விட்டான் .காலணிகளை பார்க்க ..ஷூ தான் அணிந்திருந்தாள் ஆனால் சாக்ஸ் நனைத்திருக்க அதுவே மேலும் குளிர்ச்சியை தந்தது.

காலணி மற்றும் காலுறைகளை கழட்டியவன் அவள் பாதங்களை தன் மடி மீது வைத்து தேய்த்து விட ..கூச்சமாக இருந்தபோதும் தடுக்கவில்லை சம்யுக்தா.

செய்யும் வேலையிலேயே கவனம் பதித்திருந்த ப்ரித்வியை மேல் பார்வையாக பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு ..இது சரிதானா ? அவன் காட்டும் அக்கறை வெறும் உறவுக்கார பெண் என்பதாலா? இல்லை அதையும் தாண்டிய ஏதோ ஒன்றா? என்று விளங்கவில்லை.

ஒரு கணம் ரொம்பவே அக்கறை எடுத்துக் கொள்கிறான்.
அடுத்த கணம் சண்டை வளர்க்கிறான். பின் எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாகி விடுகிறான்.
இவளுக்கு தான் தலையை சுற்றுகிறது.

பாதங்களில் வெப்பம் கூடி உணர்வு திரும்பியதும் லேசாக கூச்சம் எழ ..காலை பின்னிழுத்துக் கொண்டாள் சம்யு.
நிமிர்ந்து என்ன ? என்பதுபோல் கேள்வியாய் நோக்கியவனுக்கு " கால் கூசுது" என்றாள் மெல்ல.

அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தை கணித்தவனாய் ..மேலும் இவளை குழப்ப மனமின்றி விலகி அமர்ந்தான் ப்ரித்வி. தொண்டை வறண்டிருக்க அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பார்க்க ..அது காலியாகி விட்டிருந்தது.

தன் பக்கத்து கதவில் இருந்து ஒரு கோக் பாட்டிலை எடுத்து தந்தவன் "இதை கொஞ்சம் குடிச்சிக்கோ .. பக்கத்தில் ஏதாவது கடை இருக்கான்னு பாக்கிறேன். சூடாக ஏதாவது குடித்தால் நல்லா இருக்கும் " என்றபடி காரை செலுத்தினான்.

மதியம் வரும்போதே கவனித்திருந்தாள் .. சுற்றுலா பயணிகள் வராத பகுதி என்பதால் எங்கோ ஒரு கடை தான் இருந்தது.

சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை தெரிய ...அங்கு காரை நிறுத்தினான். இவள் காரைவிட்டு இறங்க போக .." வேணாம் சம்யு ..மறுபடியும் குளிர ஆரம்பிச்சிடும். டிரஸ் எல்லாம் ஈரம் காயலை . நீ உள்ளேயே இரு" என்றபடி கீழே இறங்கினான்.

"உன்னோட உடையும் தான் நனைஞ்சிருக்கு.உனக்கு குளிரலயா? " எனவும் அவள் காதருகில் வந்து "நீ குன்றுமேல் நின்னுக்கிட்டிருந்தப்போ ஒரு சின்ன கட்டிங் போட்டேன் " என்றான்
" என்னது ? குடிச்சியா? கார்ல வச்சிருக்கியா ?"
" இவ்வளவு குளிர் இருக்க எடத்துல கொஞ்சம் குடிச்சா குளிருக்கு இதமா இருக்கும்ல " என்றான் சாவதானமாக.
"என்ன சொல்றே ?" என்று அதிர்ந்து பார்த்தவளை பொருட்படுத்தாமல் இறங்கி கடையினுள் சென்றான்.

இவன் குடித்திருக்கிறானா ? மதுவின் தாக்கத்தில் தான் தன்னிடம் உரிமை எடுத்து நடந்து கொள்கிறானா? அதில் உள்ளார்ந்த அன்பும் பிரியமும் இல்லையா ? அதன் தாக்கம் குறைந்ததும் பழையபடி மாறிவிடுவானோ? என்று யோசித்தபடி இருந்தாள்.
ப்ரித்வி இருவருக்கும் தேநீர் வாங்கி வர ..மழையோ பெய்தபடியே இருந்தது.

சூடான தேநீர் கோப்பையை கையில் ஏந்தும்போதே குளிருக்கு இதமாய் இருந்தது.அந்த பகுதியிலேயே விளைந்த தேயிலை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் ஏலக்காய் மணத்தோடு அந்த குளிருக்கு வெகு சுவையாய் இருந்தது.
அந்த சுவையையும் மீறி மனம் ப்ரித்வியிடமே உழன்றது. அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. மனம் நம்ப மறுத்தது.
அருகே தானே இருக்கிறோம் ..நமக்கு தெரியாமல் எப்போது குடித்தான்? உண்மை தான் சொல்கிறானா ? வாசனை எதுவும் வரவில்லையே! இவன் குடிக்க மாட்டான் என்று ஜஸ்டின் ஒருமுறை சொன்னானே என்று சந்தேகமாக பார்க்க ..
"என்ன பாக்கிற ?
"ஆமாம்.குடிச்சேன்னு சொன்ன .. எங்கே மது பாட்டிலை காட்டு "என்று பக்கா வழக்கறிஞராக சம்யு கேட்கவும் "இதில தான் மிக்ஸ் பண்ணியிருக்கேன் " என்று டேஷ் போர்டில் இருந்த கோக் பாட்டிலை எடுத்து காண்பிக்க .. தூக்கி வாரி போட்டது சம்யுவுக்கு.

சற்று முன் இதைத்தானே குடிக்க குடுத்தான்.
அப்படியென்றால் தானும் மது அருந்தியிருக்கிறோமா ..? மதி மயங்கிவிட்டதோ? அதனால் தான் சோர்வாக இருக்கிறதா? இல்லை களைப்பினாலா? முன்ன பின்ன செத்திருந்தால் தானே தெரியும் சுடுகாடு எப்படியிருக்கும் என்று!

"எனக்கெதுக்கு இதை குடுத்த? இடியட் ? " என்றாள் கோபமாய் .

"தாகமா இருக்குன்னு சொன்ன ..குளிர்ல நடுங்கிட்டிருந்த.. இதை குடிச்சா குளிர் போகும் இல்லையா அதனால குடுத்தேன்." என்றான் இது ஒரு விஷயமா என்பதுபோல்.

இவன் மேல் முளைக்க பார்க்கும் பிரியம் உண்மையிலயே தோன்றுகிறதா .. இல்லை மதுவின் ஆதிக்கத்தால் அப்படி தோன்றுகிறதா? இந்த நிலையை இவன் சாதகமாக்கிக் கொள்ள பார்ப்பானோ ? தன்னை மேலும் நெருங்கினால் என்ன செய்வது? என்று குழம்பியவளது மனக்கண்ணில் அவன் வெகு அருகே வந்து இதழ்களில் முத்தமிட போவது போல் ஒரு தோற்றம் எழ .. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.
 
Nice 🙂
 
Top