Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 20

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -20

சென்னையில் ..
மகன் சுணங்கிய முகத்துடன் வேலைக்கு செல்வதும் பின் சோர்ந்து தொய்ந்து வீடு திரும்புவதுமாக இருக்க .. காண காண சத்யாவிற்கு மனம் தாளவில்லை.

மகளிடம் புலம்பினார் "பாரு ஸ்ரீ. என் பிள்ளையை இப்படி ஆக்கிட்டா. இப்போ வெளிநாடு போகாட்டி என்ன இவளுக்கு? வருங்கால புருஷனை விட வேலை முக்கியமா போய்டுச்சு இவர்களுக்கெல்லாம் " என்று நொடித்து கொள்ள..

"அம்மா ..இவ நம்ம அண்ணனுக்கு வேண்டான்னு எவ்வளவோ சொன்னேன். நீங்க தான் கேக்கலை"

"அவன் தான் ஒத்த கால்ல நிக்கிறான் டி . உங்கப்பாவும் ப்ரித்வியும் வேற சேர்ந்துக்கிட்டாங்களே . என்னால் எதுவும் செய்ய முடியாமல் போச்சு "

"இதுவரைக்கும் எதுவும் செய்ய முடியலை. இனி கட்டாயம் செய்வோம்மா. இன்னிக்கு என் சின்ன மாமியார் வீட்டு விஷேஷம் இருக்கு. எப்படியாவது ரஞ்சித் அண்ணாவை கூட்டிக்கிட்டு வாங்க. அவங்க பொண்ணுக்கு அறிமுகம் செஞ்சி வைப்போம் . கட்டாயம் பலன் இருக்கும். அது மட்டும் இல்லை இப்போ அந்த அம்ரிதாவுக்கும் அண்ணனுக்கும் நடுவுல ஏதோ ஒன்னு சரியில்லைன்னு நல்லா தெரியுது. இதை யுட்டிலைஸ் பண்ணிக்கனும்மா " என்று குயுக்தியாய் திட்டம் போட தொடங்கினர் தாயும் மகளும்.

அதன்படியே ரஞ்சித்தை வற்புறுத்தி விழாவிற்கு அழைத்து செல்ல தாய்க்காக சென்றவன் அங்கு சென்றபின் அவரை யாரும் கேள்வி கேட்டுவிடாத வண்ணம் சிரித்த முகத்துடன் விழாவில் கலந்து கொண்டான்.

ன் தங்கையின் ஒன்று விட்ட நாத்தனார் ஹரிணி இவனிடம் வந்து பேசியதும் இவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவளது அண்ணனுக்கு தான் திருமணம் !

தனக்கு நிச்சயம் ஆகிவிட்டது தான் அனைத்து உறவினருக்கும் தெரியுமே என்ற நினைப்பில் அவன் இருக்க.. அவனுக்கே தெரியாமல் மணமகளை மாற்றும் திட்டங்கள் ஓடிக் கொண்டிருப்பதை அறியாமல், அப்பெண்ணிடம் சாதாரணமாக சிரித்து பேச அவன் அறியாமல் அக்காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன.

அன்று சங்கீத் நடந்து கொண்டிருக்க .. ஸ்ரீஜா இவனை வலுக்கட்டாயமாய் அழைத்து சென்று ஆட வைக்க ..ரஞ்சித்தும் சற்று நேரம் கவலை மறந்து ஆடினான்.

அவனது புண்ணான மனதிற்கு அந்த மாற்றம் தேவையாய் இருந்தது.

மறுநாள் காலை கோவிலில் பூஜை இருக்க .. அப்பெண்ணின் குடும்பம் சார்பாக அபிஷேகம் ஏற்பாடாகியிருந்தது.

அர்ச்சனை முடிந்ததும் அனைவர் கழுத்திலும் சாமிக்கு சாற்றியிருந்த மாலையை அர்ச்சகர் அணிவிக்க ..அதை அணிந்து ரஞ்சித்தும் ஹரிணியும் அருகருகே நிற்பதையும் ஒரு அலைபேசி தன்னுள் பதித்துக் கொள்ள ..அது சத்தமில்லாமல் அம்ரிதாவின் அலைபேசிக்கு அனுப்பப்பட்டது.

அந்த புகைப்படங்களை பார்க்க பார்க்க அம்ரிதாவிற்கு துக்கம் பொங்கியது. இது ரஞ்சித் தானா?
மார்ஃபிங் எதுவும் இருக்குமோ என்று யோசித்தவளுக்கு அதை தெளிவு படுத்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!

அவளும் கணினி துறையில் நிபுணன் தானே.

அது அவன் தான் என்பதை ஏற்க மறுத்தது மனம். எப்படி இன்னொரு பெண்ணிடம் இப்படி சிரித்து பேசுகிறான். அவளோடு உற்சாகமாக நடனம் ஆடுகிறான். ஒன்றாக உணவுண்ணுகிறான் . நான் இங்கு அவனை பிரிந்த கவலையில் இருக்க அவனிடம் அதற்கான எதிரொலி ஒன்றும் இல்லையே என்று அவளது பேதை மனம் தவிக்க ..அது உள்ளார்ந்த சிரிப்பில்லை என்பதனை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

அதுவும் இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் காட்சியை அவளால் கண் கொண்டு காண முடியவில்லை.. ரகசியமாய் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்க பட்டுவிட்டது என்ற செய்தியோடு அப்புகைப்படம் அவளுக்கு அனுப்பப்பட்டிருக்க ..அது கோயிலில் எடுத்ததுதான்.. சாமி மாலைதான் என்று நன்றாக தெரிந்தாலும்.. மனம் கேட்கவில்லை..

இதை யார் அனுப்பியிருப்பார்கள் என்ற கேள்வி மனதில் வியாபித்திருக்க ..
' ரஞ்சித்திடமே கேட்டுவிட்டால் என்ன ? அவனை சந்தேகப்படுவதாகுமே! என்னை நம்பவில்லையா என்று கோபம் கொண்டுவிட்டால் என்ன செய்வது ?'

இப்படி பலவாறு யோசித்தபடி அதனை மனதின் மூலையில் ஒதுக்கியவளால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.

தன்னையே வேலையில் மூழ்கடித்துக் கொண்டுவிட்டாள்.


அம்ரிதா அறியாமலே யஷ்வந்த் மெல்ல காய்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.

அவளுக்கு அதிகப்படியான வேலைகள் தந்தான்.

சோகத்தில் மூழ்கியிருந்த அவளுக்கு அது தேவையாக இருக்க அவளும் ஆட்சேபிக்கவில்லை..அதன் காரணமாக தினமும் நேரம் சென்று வீடு திரும்ப வேண்டிய நிலை.

சரியாக ஐந்து மணிக்கு இருக்கையை விட்டு எழுந்துவிடும் வெள்ளையர்களுக்கும், இவளோடு வேலை செய்யும் குழுவினருக்கும் அது வித்தியாசமாய் தெரிந்தபோது, அவளுக்கு மட்டும் அப்படி தெரியவில்லை.

வேலை வேலை என்று தன்னை அமிழ்த்தி கொண்டாள்.
யஷ்வந்த்தும் கூடவே பின் தங்கினான்.

அவளோடு சேர்ந்தே வீட்டிலிருந்து கிளம்புவதும் சேர்ந்தே திரும்புவதுமாக இருக்க ..உணவருந்தும் நேரம் கூட அவளை தனியே விடவில்லை.

அமெரிக்க கலாச்சாரத்திற்கு அது பெரிதாக வித்தியாசப்பட்டு தெரியவில்லை..அனால் மும்பை அலுவலகத்தில் இருந்து வந்த மற்றவர்களுக்கு அவனும் அம்ருவும் 'கபிள்ஸ் ' என்பதாகவே தோன்ற ..அதில் ஒருவன் ரஞ்சித்தின் கல்லூரி நண்பன்..இப்போது பெரிதாக தொடர்பு இல்லை என்றாலும் ..இந்த முகநூல் தான் இருக்கிறதே.. ரஞ்சித்தின் நிச்சய புகைப்படங்களை பார்த்தவனுக்கு அம்ருவை நன்றாகவே தெரிந்தது.

ஏற்கனவே அவனுக்கு ரஞ்சித்தை அத்தனை பிடிக்காது..இப்போது அவனை வெறுப்பேற்ற நல்ல உபாயம் கிடைத்துவிட ..இவர்கள் அலுவலகம் உணவகம் என்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டான்..அனைத்திலும் மும்பையை சேர்ந்தவர்கள் இரு ஜோடிகளாக நிற்க அடுத்து அம்ருவும் யஷ்வந்த்தும் அருகருகே நிற்க ..ஓரமாய் நின்றிருந்த சந்தோஷையும் மற்றோருவனையும் கட் செய்துவிட்டு .. 'தி கப்பிள்ஸ் டே அவுட் ' என்று தலைப்பிட்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது .
மெல்ல அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வார இறுதியிலும் அம்ருவோடு வெளியே செல்ல தொடங்கினான் யஷ்வந்த்.

அவள் எங்கு சென்றாலும் ஒட்டிக் கொண்டான் . அம்ரு மறுத்து பார்த்தும் பயனில்லை.

உண்மையில் ஒரு சிறையில் இருப்பது போல் தான் அவளது நிலை.

ஆனால் அதையும் அறியாமலே தன்னை சுற்றி பின்னப்பட்ட வலையில் சிக்கியிருந்தாள்.






 
இரண்டு பேருக்கும் சந்தேகத்தை உருவாக்க ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு 🤔🤔🤔🤔🤔

இரண்டு பேரும் நிதானமா யோசித்து பிரச்சினைய‌ சரி பண்ணுவாங்களா 🧐🧐🧐 இல்லை சண்டை போடுவாங்களா 🤧🤧🤧🤧
 
Top