Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 1

Advertisement

கடல் நீ கரையும் நீ !



அத்தியாயம் - 1


சமீபமாக வண்ணம் பூசியதில் எழில் பொங்க நின்றது அந்த வீடு.. நவநீத கிருஷ்ணனின் ' கோகுலம்' இல்லம் !


"சொற்றுணை வேதியன் சோதி வானவன்


பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்


கற்றூணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்


நற்றுணை ஆவது நமச்சிவாயவே!"


உருக்கமான குரலில் பாடி தொழுதபடி நெற்றியில் பட்டையாய் விபூதியை இட்டுக் கொண்ட நவநீத கிருஷ்ணன் வெள்ளை பட்டுவேட்டி சட்டையில் மரியாதையும் கம்பீரமுமான தோற்றத்தில் இருந்தார்.

கோகுலம் குரூப்ஸின் நிரவாக இயக்குனர் .. அவருக்கும் அவரது நிறுவனத்துக்கும் தலைவி, அவரது மனைவி சத்யபாமா தான்.. அவர் சொல் என்றாலும் செயல் என்னவோ நவநீ தான்!

இன்று அவரது வாழ்வில் மிக சந்தோசமான நாள் ..அவரது செல்ல மகன் மணமகனாக போகிறான் .


இந்த நாளுக்காக அவர் ஆவலாக காத்திருந்த தருணம் வந்தே விட்டது. அவரது சீமந்தபுத்திரன் ரஞ்சித் கிருஷ்ணன் தன் வாழ்வில் தன் மனம் கவர்ந்த காரிகையுடன் என் வாழ்வின் கடைசி தருணம் வரை துணை இவள் தான் என்று நிச்சயிக்கும் நாள்.


வீடே பரபரப்பாக இருக்க .. "மாமா.. குட் மார்னிங் " என்றபடி மாடியில் இருந்து இறங்கி வந்தாள் உமையாள்.. அவரது தங்கை மகள்!

"குட் மார்னிங் செல்லம்.. வா வா " என்று தன் தங்கை மகளின் கரம் பற்றி அழைத்தவர் அவளை மேலும் கீழுமாய் நோக்கினார்.

மென்மையான அழகு மிளிர இளம் நீல நிற புடவையில் பொருத்தமான நகைகள் அணிந்து அன்றைய விழாவிற்கு தயாராகியிருந்தாள்..

நவனீக்கு தன் தங்கையை இளம் வயதில் கண்டது போலவே இருக்க ..சற்றே உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

அதனை கண்டு கொண்டு விட்ட உமையாள் ..அவரை மாற்றும் விதமாக "என்ன மாமா ..உங்க வீடு 'கோகுலம்'..நீங்க நவநீத கிருஷ்ணன் ..உங்க பிள்ளைகள் ரஞ்சித் கிருஷ்ணன் ..பிரித்விராஜ் கிருஷ்ணன் .. ஆனால் தினம் ஒலிப்பதோ தேவாரம்.." என்று வழக்கமாக கேட்கும் கேள்வியை கேட்க ..

" உமை குட்டி .. சின்ன வயசுல இருந்தே எங்கப்பா சிவபக்தியை ஊட்டி வளத்துருக்கார் .. அதை மாத்த முடியுமா .. ஆனால் உன் அத்தைக்கும் அவளோட அத்தைக்கும் கண்ணன் என்றால் ரொம்ப பிரியம் ..அதுதான் எனக்கும் உன் அத்தான்களுக்கும் கிருஷ்ணன் பெயர் ..அதுதான் என் ஆசை தீர உனக்கு உமையாள்னு பேர் வச்சிட்டேனே" என்றார் பூரிப்பாக!


"ஹேய் ..உமை ..பொன்னியின் செல்வனில் வருமே அதுபோல் 'அரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில் மண்ணு 'னு நீ கேட்டதில்லையா?" என்றபடி தன் அறையில் இருந்து வெளியே வந்த ரஞ்சித் கிருஷ்ணன் .. தன் கையில் இருந்ததை அவள் வாயில் அடைக்க ..தன் வாய்க்குள் விழுந்த மிக பிடித்தமான ' டைரி மில்க் 'கை சுவைத்தபடி .."நீங்க சொன்னா சரிதான் ரஞ்சு அத்தான்.." என்று தலையாட்டினாள் உமை .


அன்றைய நாயகனான ரஞ்சித் ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறான் ..

அதில் அவனது தாய்க்கு மனத்தாங்கல் தான் .. தன் மகன் இன்னொருவரிடம் வேலை செய்வதா என்று! ஆனால் எல்லாவற்றிலும் விட்டுக் கொடுப்பவன் கண்டிப்பாக சொல்லிவிட்டான் ...சில வருடங்களாவது வேறு நிறுவனத்தில் வேலை செய்யாமல் சொந்த நிறுவனத்தில் நிர்வாகம் செய்வது அவன் திறமையை வளர்த்துக் கொள்ள உதவாது என்று. மகனின் பிடிவாதத்தால் தாயும் விட்டு கொடுத்துவிட்டார்..


ரஞ்சித் அப்படிதான்.. சில விஷயங்களில் பிடித்தால் உடும்புப்பிடி தான்! ரஞ்சித் படித்த படிப்பிற்கும் ஏற்ற பதவிக்கும் உரிய மிடுக்குமாக எப்போதும் பார்வைக்கு பாந்தமாகவே இருப்பான் . இன்று பட்டு வேட்டி சட்டையில் மிளிர பெர்ஃபியூமின் மனம் கமழ்ந்தது. ஏற்கனவே நல்ல முகவெட்டு உடையவன் முந்தைய தினம் செய்த அழகு நிலைய மெருகேற்றுதலில் இன்னமும் அழகும் கம்பீரமும் மிளிர நின்றவனை பார்க்க நவனீக்கு கண்ணிரண்டு போதவில்லை !


"என் கண்ணே பட்டுடும்போலடா ரஞ்சு கண்ணா " என்று நெற்றியை வழித்து திரிஷ்டி கழித்தபடி வந்தார் அந்த குடும்பத்தின் தலைவி சத்யபாமா.

"அரியாவது..சிவனாவது ..இந்த மண்ணு தான் எல்லாம் அதை மதித்தால் போதும் " என்றபடி வந்தான் பிரித்விராஜ் கிருஷ்ணன் ..அந்த வீட்டின் செல்லப்பிள்ளை!

அண்ணன் 'சாக்லேட் பாய்' என்றால் தம்பியோ' ரக்கட் பாய் ' லுக்கில் இருப்பான் ..முகத்தில் எப்போதும் இரண்டு நாள் தாடி இருக்கும். முரட்டு ஜீன்சும் டெனிம் ஷர்ட்டும் தான் அவன் உடை .. பணி நேரத்தில் கருப்பு வெள்ளை உடை . இன்று விழாவிற்காக ஒரு படாடோபமில்லாத ஃபார்மல் உடையில் இருக்கவும் .. அவன் கோலத்தை பார்த்ததும் தாயின் முகம் சுணங்கியது.


"என்ன கண்ணா ..இன்னிக்காவது நல்லா டிரஸ் பண்ண கூடாதா ?" என்ற தாய்க்கு "எனக்கு இதுதாம்மா பிடிச்சிருக்கு ..கல்யாணம் எனக்கில்லையே " எப்போதும் போல் விட்டேற்றியாய் தோள் குலுக்கி சட்டையின் கைகளை முழங்கை வரை மடக்கி விட்டு கொண்டு சொன்னான்.


அதுவே அவனுக்கு ஒரு தோரணையை தந்தது என்னவோ நிஜம்.


விட்டேற்றியான குணம் கொண்டவன் ..யாரையும் சுலபமாக எடுத்தெறிந்து பேசிவிடுவான் .. காயப்படுத்தியும் விடுவான் .. அந்த விஷயத்தில் தாயைக் கொண்டு பிறந்தவன் ..ஆனாலும் எப்போதும் ஒரு நேர்மையும் உண்மையும் இருக்கும் அவனிடம் ! நான் சொல்வதும் செய்வதும் சரி இதில் மற்றவர்களை பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் என்று நினைப்பவன்.


"வாடா மச்சான் ..ஆரம்பிச்சிட்டியா உன் வக்கீல் வேலையை ?" என்று கேட்ட உமையாளின் தலையில் எப்போதும் போல் வலிக்காமல் குட்டியவன் தனது விருப்பப்படி சட்டம் படித்து இப்போது ஒரு புகழ்பெற்ற வக்கீலிடம் பணிபுரிகிறான். "ஏய் குள்ள வாத்து ..நீ தான் எப்பவும் எங்கப்பாவுக்கும் அண்ணனுக்கும் ஒத்து ஊதுவ ..நானும் உனக்கு ஜின்க் சக் போடணுமா ? எனக்கு எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்வேன் சொல்வேன் ..புரியுதா?" என்று மீண்டும் அவள் தலையில் குட்ட ..


" பாருங்க மாமா ..இவன் குட்டி குட்டியே நான் குள்ளமாயிட்டேன் " என்று முறையிட்டாள் உமை. அவளுக்கும் ப்ரித்விக்கும் சில மாதங்களே வயது வித்தியாசம் என்பதால் நண்பர்களாகவே பேசி பழகுவர்.


"ஓஹ்.. இல்லன்னா நீ அமிதாப் பச்சனுக்கு அக்கா மாதிரி இருந்திருப்ப ..நான் குட்டி தான் வளராம போயிட்ட பாரு.." என்று நக்கலடிக்க ..


"அப்படி சொல்லுடா ப்ரித்வி கண்ணா .. இவங்க பரம்பரைல எந்த பொண்ணுமே அஞ்சடிய தாண்டுனதில்லை .. நீ என் பையன் குட்டுனதால குள்ளமாயிட்டியா ..நல்ல கத தான் "என்றார் சத்யா .


தன் தங்கைகள் அப்படி ஒன்றும் குள்ளம் இல்லை என்று எப்போதும் போல் மனதோடு சொல்லிக் கொண்டாலும் மௌனம் சாதித்தார் நவநீ ..பேசினால் பிரச்னை தான் என்று அனுபவத்தில் அறிந்தவராய்!


உடல் முழுதும் ஜரிகை மின்னும் இளம் பச்சை நிற பட்டுபுடவையில் கம்பீரமாக இருந்தார் சத்யா.. அளவாக அணிந்திருந்தாலும் அனைத்துமே 'நான் மண்ணுக்குள் பலகாலம் புதைந்து கிடந்து பட்டை தீட்டப்பட்ட கிடைத்தற்கரிய வைரம் ' என்று பறைசாற்றக்கூடிய பாரம்பரியம் மிக்க வைர நகைகள்!


அவரது பாட்டனார்கள் நிலக்கிழார்களாகவும்.. அவரது தந்தை ஒரு பெரிய தொழிலதிபராகவும் இருந்ததால் பணத்தின் செருக்கு அவரிடம் எப்போதும் இருக்கும் ..அதைக்கொண்டு புதிதாக செல்வந்தரான நவனீயின் குடும்பத்தினரை எப்போதும் சற்றே கீழாக தான் பார்ப்பார்.. அந்த எள்ளல் இப்போது உமையாளின் சற்றே சிறிய உருவத்தை மேலிருந்து கீழாக பார்த்ததில் தெரிந்தது.


அதிலும் உமையின் தந்தை அரசு அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிய செல்வ செழிப்பு அதிகம் இல்லாத நிலைதான். ஆனால் இருமடங்காக அறிவும் குணமும் அழகும் கொட்டிக் கிடந்தது உமையிடம்.


உமையாள்.. நவநீத கிருஷ்ணனின் தங்கை மங்கையர்க்கரசியின் மகள் ..தற்போது கோவை மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கிறாள்.அவளுக்கும் ப்ரித்விக்கும் சில மாதங்களே வயது வித்தியாசம் . சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் ..ஒரே பள்ளியும் கூட !


அதனால் இருவரும் மிக நெருங்கிய தோழர்கள் ..சிறு வயதில் இருந்தே ! அவனுக்காக எதையும் செய்வாள்..அவன் செய்யும் குறும்புகளையும் வால்தனங்களையும் ரசித்து பழகியவள்.. ஆனால் யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டாள் . அத்தனைபாசம் அவன் மேல் .. ப்ரித்வியும் அப்படியே!


ரஞ்சித்தின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவள் தான் ..ஆனால் அத்தான் என்ற மரியாதையும் இருக்கும்!


'மூத்தது மோழை இளையது காளை' என்பதற்கேற்றாற்போல் அமைதியும் தயக்கமும் இருக்கும் ரஞ்சித்திடம்! ப்ரித்வியோ அதிரடி தான் எதிலும் !


கல்லூரி காலத்தில் ப்ரித்வி , தான் சட்டம் படிக்க வேண்டும் என்று கூற .. உமை மருத்துவத்தை தேர்ந்தெடுக்க .. அப்போதுதான் இருவரும் பிரிந்தனர்.


அப்போதும் சத்யபாமா ரொம்ப கலாட்டா செய்தார் ..அவருக்கு அவன் வக்கீலுக்கு படிப்பதில் பிடித்தமில்லை .ஏதாவது தொழில் கல்வியோ நிர்வாக கல்வியோ பயில்வான் என்றிருக்கையில் சட்டம் படித்தது அவருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.. இருந்தும் மகனது மனம் கோண சகிக்காமல் ஒத்துக் கொண்டார்..


அதிலிருந்துதான் உமையும் ப்ரித்வியும் பிரிந்தனர் .. இருந்தாலும் மனதளவில் அதே நட்பு தான் இன்னமும்.


சத்யபாமாவை தொடர்ந்து பின்னோடு வந்த ஸ்ரீஜா பிறப்பில் ப்ரித்வியின் இரட்டையாய் இருந்தாலும் ..உண்மையில் அவள் தாயின் பிரதிபிம்பம் ....அழகிலும் ..அறிவிலும் ..குணத்திலும் ..செருக்கிலும்.. எல்லாவற்றிலும் ! அதனாலே ப்ரித்வியிடம் உமைக்கு எவ்வளவு நெருக்கம் இருந்ததோ அவ்வளவு விலகல் உண்டு ஸ்ரீயிடமிருந்து!


இன்று ஒரு இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் மணப்பெண் போன்ற அலங்காரத்தில் தேவதையாய் நிற்பவளை காணும் போது..எப்போதும் போல் 'என் உடன் பிறப்பு' என்று பெருமையாய் தோன்றினாலும் ..அந்த புடவை எடுத்த தினம் தான் கசப்பாக மனதில் நின்றது அண்ணன் தம்பி இருவருக்கும்!


"ஸ்ரீ ..உனக்கு கல்யாணமாயிடுச்சி..இப்போ கல்யாணப்பொண்ணு நீயில்லை. நிச்சயத்தன்னைக்கு ஸ்டேஜில அவங்க தான் தனியா தெரியணும். நீ எவ்வளவு விலையில வேணும்னாலும் வாங்கிக்கோ ..அனால் வேறு நிறத்தில் வாங்கு " என்று ப்ரித்வி சொன்னதை அவள் கேட்பதாக இல்லை. வேண்டுமென்றே அதே போன்ற புடவையை எடுக்க, தாயும் அதற்கு ஒத்து ஊத ..சற்றே மனக்கசப்பு தான் ரஞ்சித்திற்கு.




ரஞ்சித் தன்னவளுக்கென தன் மனம் கவர்ந்த நிறத்தில் அழகான புடவை ஒன்றை தேர்வு செய்ய ..அதே நிறத்தில் அதைவிட விலை உயர்ந்ததை தான் வாங்குவேன் என்று ஸ்ரீ அடம் பிடித்ததும் அப்படியே வாங்கி வீடு திரும்பியதும் ..இன்று அந்த புடவையை கண்டதும் நினைவு வந்தது.
Enna amma ponnu than romba panuthunga
 
Top