Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! 12

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
இல்லறம் 12,

சோர்வாக அமர்ந்திருந்த கங்காவின் அருகில் அமர்ந்தாள் யமுனா… .

“என்னாச்சி க்கா?”

“ஒன்னுமில்லை டா. இதோ கிளம்பிட்டேன்” என்றவளின் மனம் லேசாக தடுமாற ஆரம்பித்தது…

பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் தன்னையும் அறியாமல் மனம் தணலனை பற்றியே நினைத்தது..

அன்று ஏனோ தவிப்புடன் தன்னை பார்த்த பார்வை இதயம் வரை ஊடூருவி சென்றதை போல் உணர்ந்தாள்..

“ஏன் இந்த தடுமாற்றம்? இது நல்லதற்கல்ல” என புத்தியில் உரைத்தாலும் பேதையின் மனமோ தடுமாறியது…

“அவனை இனி நினைக்கவே கூடாது” என நினைத்துக கொண்டே காலேஜ் வாசலில் கால் வைத்தவளுக்கு பேரதிர்ச்சி தணலன் அவளுக்காக காலேஜின் வாசலிலேயே காத்திருந்தான்…

அவனை நிச்சயமாக அவள் வாசலில் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் அதிர்ந்த விழிகள் காட்டிக் கொடுத்தது.. சட்டென தன் விழிகளை தாழ்த்தியவாறே அவனை கடந்து செல்ல முற்பட்டாள்..

“கங்கா” என மெல்லிய குரலில் அழைத்ததும், தன் நடையை நிறுத்தி மெல்ல திரும்பி பார்த்தாள் கங்கா..

அவனை எதிர்கொள்ளவே சிறு பய உணர்வு ஆட்கொள்ள.. இதயத்துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.. காதலை சொல்லும் போது ‘முடியாது’ என தடுமாறாமல் உதிர்த்த அதே இதழ்கள், இன்று அவனிடம் சாதாரணமாக பேசக்கூட தடுமாறிப் போனது..

தன் இதழ்களை நாவால் ஈரப்படுத்தியவாறே, அவனின் முன்பாக வந்து நின்றாள் கங்கா. தணலனின் பார்வையோ, முழுக்க முழுக்க அவள் மீது மட்டுமே இருந்தது..

அவளின் ஒவ்வொரு விழியசைவையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டவனின் பார்வையோ, அவளின் பூவுடலை தான் ஆராய்ச்சியாய் பார்த்தது…

அதில் தப்பான பார்வையில்லை. அவளின் உடல்நிலை குறித்த கவலையும், அவள் மீது கொண்ட காதலும் மட்டுமே வெளிப்பட்டது…

“இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?” என்றவனின் அக்கறையான குரலில் உள்ளத்தில் ஏதோ ஒன்று தடுமாறிய உணர்வு..

மெல்ல விழிகளை உயர்த்தி அவனை தான் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் காதலுடன்..

சில நிமிடங்கள் மௌனங்களில் கழிந்ததே தவிர இருவருமே ஒரு வார்த்தை பேசவில்லை..

“டேய்ய்ய்.. மச்சான்” என்ற ஸ்ரீராமின் குரலில் சட்டென திரும்பி பார்த்தான் தணலன். கங்காவிற்கு அப்பொழுது தான் சுயமே வந்தது..

“இவ்வளவு நேரம் தானா அப்படி அசைவின்றி நின்றது?” என தன்னைத் தானே கடிந்தவள், அவனை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டு செல்ல முயன்றாள்..

இரண்டடி கூட எடுத்து வைத்திருக்கமாட்டாள்.. “கங்கா” என்ற குரலில் மறுபடியும் சட்டென நின்றாளே தவிர, அவனை திரும்பி பார்க்கவில்லை.‌ திரும்பி பார்க்க மனதிலும் தெம்பில்லை..

“உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்டேனே?” என அவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கேட்டதை திரும்ப கேட்க,

“ம்ம்ம்.. நல்லா இருக்கு” என பட்டும் படாமலும் சொல்லிவிட்டு சென்றவளின் உள்ளமோ, கல் எறிந்த குளத்தைப் போல கலங்க ஆரம்பித்தது..

“இது சரிவராது” என உள்ளம் பதில் சொன்னாலும், பதுமையவளின் நெஞ்சில் சிறு ஏக்கமும் பிறந்தது..

காதல் கண்ணாடி மாளிகை போன்றது தானே. பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் விதத்திலும் இருக்கும்.. ஆனால் அந்த மாளிகைக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. எந்நேரத்திலும் அது சில்லுசில்லாய் உடையக்கூடிய தன்மையுடையது என்று..

கங்காவின் மனதில் காதல் என்ற மாயை புகுந்து கண்ணாடி மாளிகையை எழுப்ப ஆரம்பித்தது..

****************
சட்டென கண்களை இறுக்க மூடி நின்றவளை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் தணலன்.

கதவு திறக்கும் சத்தத்திலே திரும்பி நின்றவனுக்கு யமுனாவின் சிறு செய்கையை கூட புன்னகையை தான் வரவழைத்தது..

“கண்ணை திற” என்ற குரலில் மெதுவாக கண்களை திறந்தவளுக்கு, இப்பொழுதும் அவளின் பார்வை அவனின் வெற்றுமேனியில் தான் பதிந்தது.

ஆம். ஹார்ட் ஆப்ரேஷன் செய்திருந்ததால் வேஷ்டியும், பார்மல் சட்டையும் தான் தணலன் அணிந்திருந்தான். அதிக நேரம் அவனால் சட்டையில் இருக்க முடியாத காரணத்தால் தான் சட்டையை கழற்றியிருந்தான்..

யமுனா உள்ளே நுழையும் போது கண்டதும் சட்டையில்லாத அவனைத்தான். பெண்கள் மட்டுமே புழங்கும் வீட்டினுள் தணலனனின் செய்கை சற்று சங்கடத்தை தான் கொடுத்தது.

இதற்கு முன்பாக கங்காவோடு அவன் பல நாட்கள் தங்கியிருக்கிறான். ஆனால் எப்பொழுதுமே சட்டை அணிந்திருப்பான். ஆனால் இன்று இவனின் புதிய தோற்றம் அவளுக்கு கூச்சத்தை தாண்டி ஒரு வித தயக்கத்தையும் கொடுத்தது..

அவளின் சங்கடத்தை உணர்ந்தவன், “கையில என்னது?” என பேச்சை திசைமாற்றி திருப்பிட,

“காஃபி” என்றபின்பு தான் சட்டென அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததே நியாபகத்திற்கு வந்தது..

சட்டென தன் நாக்கை கடித்தவாறே அவனை திரும்பி பார்த்தவளின் பார்வையில் இதயத்தில் மெல்லிய மழைச்சாரல் அடித்தது.. அவளின் சிறு செய்கையை கூட உள்ளம் ரசிக்க ஆரம்பித்தது…

“சாரி. நீங்க வந்த சந்தோஷத்துல அம்மா தப்பா கொடுத்துட்டாங்க” என சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றிட,

“நான் வந்ததுல உனக்கு சந்தோஷமில்லையா?” என்றவனின் கேள்வியில் சட்டென அவளின் நடையும் நின்றது.. அதுவரை இருந்த இயல்பு தன்மையும் மாறியது..

முகமோ ஒரு வித கடினத்தன்மையுடன் இறுகிட, “நான் உங்களை எதிர்பார்க்கலையே” என்றவளின் பதிலில் விக்கித்து நிற்பது தணலன் முறையானது..

“என்ன பதில் இது?” என்ற எண்ணம் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 'தன் மேல் கோபத்தில் இருக்கின்றாளா?’ என்ற எண்ணம் மேலோங்கிட, அதே சமயம் இவளை சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்தால் வருவாளா? என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்தது..

இதயத்தில் ஒரு வித தடுமாற்றமும், குழப்பமும் தான் தோன்றியது. எதுவாக இருந்தாலும் இன்று யமுனாவிடம் தான் பேச வேண்டும் என்பதையும் நினைத்துக் கொண்டான்..

‘அவனிடம் தன் மனதில் இருப்பதை எடுத்துரைத்து விட்டு வந்தவளுக்கு, மனதில் எந்தவித குழப்பமும் இல்லை. தான் நினைத்ததை தான் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்' என உள்ளுக்குள் தோன்றியபடி, அடுப்படிக்குள் நுழைய, அவரின் அம்மாவோ சொன்னது போல், ஒரு தட்டில் மிக்சர், ஒரு தட்டில் இனிப்பு வகை பனியாரம் என அடுக்கிக் கொண்டிருந்தார்…

“அம்மா. அவருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணியிருக்குன்னு நியாபகம் இருக்கா?” என்றதும் தான் தாமதம்.. மோகனா ஒரு நிமிடம் முழுதாக அதிர்ந்து நின்றார்..

“ஆமாண்டி. மடச்சி மாதிரி என்ன வேலை பார்த்துருக்கேன் நானு.. அச்சோ என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாரு. எனக்குத்தான் கூறு இல்லை. காஃபி கொண்டு போறீயே உனக்கு கூறு இருக்கா?” என எதிரில் இருந்தவளை சாடிட..

“ம்ம்ம்மாஆஆ.. தப்பை உன் பேர்ல வச்சிக்கிட்டு பழியை என்மேல் தூக்கிப் போடுறீயா?” என்றவளின் கைகளோ அங்கிருந்த ஒரு டம்ளரில் பால் ஊற்றிக் கொண்டிருந்தது..

“யமுனா?”

“ம்ம்.. சொல்லும்மா”

“அவர் இங்கேயே தங்குறாரா.. அப்படி தங்குறதா இருந்தா நைட்டுக்கு என்ன செய்யட்டும்னு கேட்டு சொல்றீயா?”

“இட்லியும், சட்னியும் போதும் அத்தை. இன்னைக்கு இங்கே தான் தங்கப்போறேன்” என்றவன் இயல்பாக யமுனாவின் கையில் இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்…

வெற்றுமேனியை மறைப்பது போல் மேல்துண்டு ஒன்றினை விரித்தாற் போன்று போட்டிருந்தான். யாருக்கும் சங்கடம் அளிக்காத விதத்தில்…

ஹாலில் இருந்த சோபாவில் மெதுவாக அமர்ந்தவர், அங்கிருந்த டிவியினை ஆன் பண்ணியவன், நியூஸ் சேனலை வைத்து பார்க்க ஆரம்பித்தான்.. அவன் இயல்பாக இருப்பதை போல் முயற்சி செய்ய ஆரம்பித்து இருந்தான்.

அவனின் நடிப்பு யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்றாலும் யமுனாவின் கண்களுக்கு நன்றாக புலப்பட்டது. காதலில்லாமல் கடமையாக தன்னைப் பார்க்கும் கண்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறு பெண்ணில்லையே.

ஆனாலும் இந்த நடிப்பு? யாருக்காக? எதற்காக? என்ற கேள்வி அவளுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது.. இரவு சமையலை தடல்புடலாக செய்யவில்லை என்றாலும், ருசியாகவே செய்து முடித்திருந்தார் மோகனா…

இரண்டு வகை சட்னியோடு, சிறிது சாம்பார் வைத்து, தொட்டுக் கொள்ள பொடியும் செய்தவரை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள் யமுனா..

“அம்மா. நைட்டுக்கு இவ்வளவு செய்யணுமா? சாம்பாரோ இல்லை சட்னியோ மட்டும் வச்சா போதாதா?”

“ப்ச்ச்.. உனக்கென்னடி தெரியும். ஹாஸ்பிடல்ல இருந்து உன்னை விரட்டாத குறையா அவரோட சொந்தக்காரங்க விரட்டிவிட்டதும், நான் தவிச்ச தவிப்பு என்னன்னு” என கண்களில் கண்ணீர் வழிய பேசியவரை கண்டு யமுனாவின் கண்களும் கலங்க ஆரம்பித்தது..

“அம்மா. ப்ளீஸ் மா” என்றவளின் கையை அழுத்தமாக பற்றியவர்,

“நான் உன்னை எப்பேற்பட்ட சிக்கல்ல மாட்டிவிட்ருக்கேன்னு எனக்குப் புரியுது. என் பொண்ணு நல்லா இருப்பான்னு நினைச்சித்தான்மா இரண்டாந்தாரமா கட்டிக் கொடுத்தேன்” என்றவரின் விழிகளோ வெகுவாக கலங்கியிருந்தது.

“இப்போ ஏன்மா இந்தப் பேச்சு?” என்றவளுக்கு தன் தாயின் நிலைமை நன்றாக புரிந்தது..

“உன்கிட்ட இந்த வாழ்க்கை புடிச்சிருக்கான்னு கேட்காம விட்டுட்டேன். அதை நினைச்சி இப்போ ஒவ்வொரு நாளும் தவிச்சிட்டு இருக்கேன் யமுனா” என்றவருக்கு கண்ணீர்க்கோடாய் கன்னத்தில் இறங்க ஆரம்பித்தது..

“ம்ம்மா.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்கு முழுக்காரணம் நிறை மட்டுந்தான் மா.. ஏற்கனவே நிறையோட நம்ம உறவு காற்றில் ஆடுற பட்டமா தள்ளாடுது.. இதுல வேறொருத்தி அம்மாங்கிற ஸ்தானத்துல வந்துட்டா நம்ம நிறையை மறந்திட வேண்டியதுதான்மா. அதுக்காகத்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்” என தீர்க்கமாக சொல்லிவிட்டு திரும்பிட, அங்கு சுவரோரம் சாய்ந்தபடி தணலன் அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது..
************
நிறைக்கு அழுகையாக வந்தது. தணலன் தன்னை எடுத்தெறிந்தாற் போன்று பேசுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துப் போனாள்..

“அப்பா” என்ற ஈனஸ்வரத்தில் முனகியவளின் இதயமெல்லாம் நிறைந்த ஒரே உறவு தணலன் மட்டுமே. தந்தை - மகளுக்கான உறவு கருவறையில் ஈன்று வருவதில்லை என்றாலும், அந்த அன்பிற்கு ஈடில்லை என்பதை மூவுலகும் அறியும்…

இதயத்தில் சுரீரென்ற வலி தாக்கிட கண்களில் வழியும் கண்ணீருடன், நீண்ட நேரம் கங்காவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள்..

கதவு தட்டும் சத்தத்தில் மெல்ல சுயம் உணர்ந்தவள், “யாரு?” என கரகரத்த குரலில் கேட்டிட,

“நான்தான் நிறை” என்ற தேவாவின் குரலில் வேகமாக சென்று கதவை திறந்தாள் நிறை.

தட்டில் சப்பாத்தி மற்றும் குருமாவுடன் நின்றிருந்த தேவாவை பார்த்தவள், “எனக்கு சாப்பாடு வேண்டாம் அத்தை” என அழுகுரலில் சொன்னவளின் முகமே வெகுவாக கலங்கியிருந்தது..

அவளின் முகத்தை உற்றுக் கவனித்தவள், “அழுதுட்டு இருந்தீயா நிறை?”

“என்னை வேற என்ன பண்ணனும்னு சொல்றீங்க?. நீங்கதானே சொன்னீங்க. அப்பாவுக்கு ஏதோ கண்டம் இருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு” என கோபத்துடன் கேட்டவளின் எரிச்சல் மிகுந்த குரலிலேயே தெரிந்தது.. அவள் இந்த திருமணத்தை எந்தளவு வெறுக்கிறாள் என்று..

“ஆமா நிறை நான் சொன்னது உண்மைதான்.. இப்பவும் நான் பொய் சொல்லலையே”

“ப்ச்ச்… நீங்க பொய் சொல்லலை. ஆனா என்னை ஏமாத்திட்டீங்க.. எங்கம்மாவோட தங்கச்சியை தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு ஏன் என்கிட்ட யாருமே சொல்லலை”

“ப்ச்ச்… புரிஞ்சுக்காம பேசாதே நிறை. ஜோசியர் சொன்னதை நம்பித்தான் நான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கவே சம்மதிச்சேன்.. இல்லைன்னா எனக்கு மட்டும் இந்த திருமணத்துல விருப்பமா என்ன?”

“உங்களோட விருப்பம் இங்கே முக்கியமில்லை. என்னோட விருப்பமும், அப்பாவோட விருப்பமும் தான் இங்கே முக்கியம். அவுங்களோட உறவு எங்களோட தானே.. அதை ஏன் நீங்க புரிஞ்சிக்கலை” என நெற்றிக்கண் திறக்காத குறையாக குற்றஞ்சாட்டியவளை கண்டு தேவாவே ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்…

தினை விதைப்பவன் தினை அறுப்பான். வினை விதைப்பவன் வினையை தான் அறுப்பான்' என்பது தேவாவிற்கு புரியவில்லை.. விரைவிலேயே வினை அறுப்பாள் என்று

“பார்த்துப்பேசு நிறை. இது கூட்டுக்குடும்பம். நீயும் உன் அப்பாவும் மட்டுந்தான் இங்கே இருக்கிற மாதிரி பேசாதே” என எச்சரிக்கும் குரலில் சொல்லிய, தேவாவை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் நிறை..

“அத்தை இது கூட்டுக்குடும்பம்ங்கிறது எனக்குத் தெரியும்.. ஆனா இங்கே எல்லா முடிவுகளையும் நீங்க மட்டுந்தானே எடுக்கிறீங்க” என சத்தமாக கத்தியவளின் குரலில் வீட்டிலிருந்த அனைவரும் மாடியேறி வர ஆரம்பித்தனர்..
 
Last edited:
நிறை நெத்தியடியா கேட்கிறத பார்க்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு.
சின்னதேவா கிட்ட பெரிய தேவா மூக்கு உடையுது 😍😍😍😍😍
 
Last edited:
Top