Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 117

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“ஏங்க இப்படியெல்லாம் நினைச்சுட்டுக் குழப்பம் ஆகிட்டு இருக்கீங்க? யாராவது, ஏதாவது சொன்னாங்களா?” என்று அவனிடம் வினவியவளிடம்,

“அதெல்லாம் யாரும் எதுவும் சொல்லலை ம்மா” என்றான் ஸ்வரூபன்.

“அப்பறம் உங்களுக்கு என்னப் பிரச்சினை ங்க?” என்று பொறுமையிழந்து போய்க் கேட்டாள் ருத்ராக்ஷி.

“அது…” என்று தினறியவனுடைய உணர்வுகளை மதித்து,

“ஃபங்க்ஷனில் என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியும். அதை வச்சுத் தானே இப்படி தேவையில்லாமல் யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று கூறியவுடன்,

“என்னது? உங்க அண்ணா எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டாரா?” என்று அவளிடம் அதிர்ச்சியுடன் வினவினான் ஸ்வரூபன்.

அதைக் கேட்டதும் திடுக்கிட்டவளோ, அப்படியானால் உண்மையிலேயே அன்றைய தினம் என்னவோ நடந்திருக்கிறது! யாரோ, ஏதோ சொல்லி இவனுடைய மனதை உடைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டதும்,

“அப்படின்னா நம்ம நிச்சயம் அன்னைக்குத் தான் ஏதோ நடந்திருக்கு. உங்களை யார், என்ன சொன்னாங்க?” என்று அவனிடம் கறாராக கேட்ட பிறகு தான், முந்திரிக்கொட்டைத் தனமாக விஷயத்தை உடைத்துப் பேசிய தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி நொந்து போனவனோ,

“ஐயோ! யார், என்ன சொல்லிடப் போறாங்க? அதெல்லாம் எதுவும் இல்லை ம்மா” என்று சமாளிக்க முயன்றான்.

“நீங்கப் பேச்சை மாத்தாதீங்க! எங்கிட்ட அண்ணா எதுவும் சொல்லலை தான்! ஆனால், உங்க வாயாலேயே வெளியே வந்துருச்சு. அதை நீங்களே சொல்லிடுங்க. இந்தக் குழப்பத்தை இங்கேயே முடிச்சு வச்சிருவோம். அப்போ தான், நாம நிம்மதியாக கல்யாணம் செஞ்சுக்க முடியும்” என்று தன்னவனிடம் சொல்லிப் புரிய வைத்தாள் ருத்ராக்ஷி.

“ம்ஹ்ம். நான் சொல்றேன் ம்மா” என்றவனோ, தங்கள் நிச்சயத்தன்று தன்னுடைய உறவுக்கார ஆண்கள் சிலர் தன்னிடம் நேரடியாகவே சொன்ன விஷயங்கள் மற்றும் அனைவருக்கும் பரிசுப் பொருட்களைச் செய்து அள்ளி வழங்கிய அவளுடைய மனப்பாங்கைப் பற்றியும் கூறி முடித்தான் ஸ்வரூபன்.

அதைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ருத்ராக்ஷியோ,”இப்படி கேவலமாகப் பேசுறவங்க சொன்னதை நினைச்சா இவ்வளவு நாளாக குழப்பமாக அலைஞ்சிட்டு இருக்கீங்க? அப்பறம், என்னைப் பத்தி என்ன சொன்னீங்க? என்னோட இந்தக் குணத்துக்கு நீங்கத் தகுதியானவரான்னு யோசிச்சிட்டு இருந்து இருக்கீங்க! என்னங்க இதெல்லாம்?” என்று தன்னுடைய பொறுமை பறந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் அவனிடம் நியாயம் கேட்டாள்.

“அந்த நேரத்தில் அது எல்லாமே மனசைக் கஷ்டப்படுத்திருச்சு ம்மா. அதான்!” என்று அவளிடம் தன் பக்கத்தை விளக்கிக் கூறவும்,

“அதை நான் புரிஞ்சுக்கிட்டேன் ங்க. ஆனாலும், நீங்க இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணாதீங்க! எங்க அண்ணா சொன்னது உங்களுக்குப் புரிஞ்சது தானே?” என்றாள்.

“ஆமாம் மா. அவரோட அறிவுரையால் தான் அன்னைக்கு நான் எந்த சங்கடமும் இல்லாமல் மேடையில் நிற்த முடிஞ்சது!” என்று அவளிடம் ஒப்புக் கொண்டான் ஸ்வரூபன்.

“நீங்க இனிமேல் இதைச் சும்மா இருக்கிற நேரத்தில் கூட யோசிச்சுப் பார்க்கக் கூடாது!” என்று அவனுக்கு வலியுறுத்தினாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா!” என்கவும்,

“நீங்க உங்களோட திறமைகளைக் குறைச்சு எடை போட்டுட்டு இருக்கிறதால் தான் என்னைப் பத்தி ரொம்ப உயர்வாக நினைச்சிட்டு இருக்கீங்க! அதனால், நம்மக் கல்யாணம் முடிஞ்சதும் நான் உங்களுக்கு எல்லாத்தையும் புரிய வைக்கிறேன்! அது வரைக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் இருங்க. ப்ளீஸ்! இன்விடேஷன் அடிக்கிற வேலை வேற இருக்கு. அதில் உங்க பக்கத்தில் இருந்து, யார், யார் பேரை எல்லாம் போடனும்னு லிஸ்ட் எடுக்கிற வேலையைப் பாருங்க” என்று அவனுக்கு அறிவுறுத்தினாள் ருத்ராக்ஷி.

“அப்படியா? எப்போ இன்விடேஷன் அடிக்கக் கொடுக்கப் போறோம்?” என அவளிடம் வினவினான் ஸ்வரூபன்.

“இப்போதைக்கு யாரும் அதைப் பத்திப் பேசலைங்க. நீங்க எதுக்கும் லிஸ்ட் போட்டு வைங்க. நான் இங்கே எல்லார்கிட்டயும் கேட்டுட்டுச் சொல்றேன்” என்றுரைக்கவும்,

“ம்ம். சரி. நானும் அம்மாகிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றவனுக்கு,‌ இப்போது தான் மனம் நன்றாக தெளிவடைந்திருந்தது.

அந்த அழைப்பை வைத்து விட்டுத் தன் அண்ணி மற்றும் அவரது அன்னையிடம் சென்றாள் ருத்ராக்ஷி.

அவள் தங்களிடம் வந்ததும்,”இப்போ தான் ஞாபகம் வருது. கல்யாணப் பத்திரிக்கையை எப்போ பிரிண்ட் செய்யப் போறீங்க?” என்று தன் மகள் மற்றும் அவளது நாத்தனாரிடம் கேட்டார் கனகரூபிணி.

“அதானே! இதை நானும் யோசிக்கவே இல்லையே! இனிமேல் தான், மாமாகிட்டே கேட்கனும் ம்மா” என்று அவருக்குப் பதிலளித்தாள் மஹாபத்ரா.

“சீக்கிரம் அந்த வேலையை ஆரம்பிங்க”

அதே போலவே, சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டதும்,

அவர்களும் கூட,”ஆமாம். நாங்களும் இதைப் பக்திப் பேசத் தான் நினைச்சோம்” என்றவர்களோ,

மஹாபத்ராவின் பெற்றோரும் உடன் இருக்கும் போதே பத்திரிக்கையில் போடப் போகும் பெயர்கள் அடங்கிய குறிப்பைத் தயார் செய்ய முடிவெடுத்தனர்.

உடனே இதனைத் தங்களுடைய சம்பந்தி வீட்டாருக்கும் முறையாகச் சொல்ல வேண்டும் அல்லவா?

எனவே, தன் சம்பந்திக்கு அழைத்து இதைச் சொன்னார் சந்திரதேவ்.

“பத்திரிக்கையை அடிக்கக் கொடுக்கும் போது நாங்க நேரிலேயே வந்து எங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கிறோம் சம்பந்தி”என்று அவரிடம் கூறினார் கவிபாரதி.

“சரிங்க சம்பந்தி” என்று கூறி வைத்து விட்டார் ருத்ராக்ஷியின் தந்தை.

அதற்குப் பிறகு, கவிபாரதியும், ஸ்வரூபனும் சேர்ந்து பெயர்களின் குறித்து வைக்கத் தொடங்கி விட்டனர்.

அவர்களைப் போலவே, ருத்ராக்ஷியின் வீட்டாரும் செய்ய ஆரம்பிக்க, மஹாபத்ராவின் பெற்றோர் உடனிருந்ததால் அந்த வேலை விரைவாகவே நடந்து முடிந்தது.

இவ்வளவு நாட்களாகத் தங்களுடன் தங்கி வீட்டைக் கலகலவென்று வைத்திருந்த தங்கள் இரண்டு பிள்ளைகளையும் வழியனுப்பத் தயாராகினர் வித்யாதரன் மற்றும் மிருதுளா.

“ம்மா! ப்பா! நாங்க அடுத்து எப்போ இங்கே வருவோம்?” என்று ஆவலுடன் வினவியவர்களை வாஞ்சையுடன் பார்த்து,”இன்னும் கொஞ்ச நாளில் ருத்ரா அக்காவோட கல்யாண நாள் வந்துடும் டா. அதுக்கு ஒரு வார்த்துக்கு முன்னாடியே நாங்க உங்களை இங்கே கூட்டிட்டு வந்துருவோம். சரியா?” என்றார் அவர்களது தாய்.

“ஓகே ம்மா” என்று இருவரும் சமர்த்தாகப் பதில் சொன்னார்கள்.

அவர்களுக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொடுத்து அவர்களை ஊருக்கு அழைத்துச் சென்று அவர்கள் தங்கியிருக்கும்
விடுதியில் விட்டு விட்டு வந்தனர்.

ஒரு வழியாகத் பத்திரிக்கையில் போடத் தேவையானப் பெயர்களைக் குறிப்பெடுத்து முடித்திருந்தார்கள் இரு வீட்டாரும்.

மஹாபத்ராவின் பெற்றோரான கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனும் அவர்களது இல்லத்திற்குச் செல்ல வேண்டிய நாளும் வந்தது.

“கல்யாணப் பொண்ணுப் பத்திரமாக இரு. நீங்க மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்த்து உடம்பை ரொம்ப வருத்திக்காதீங்க! எதுவாக இருந்தாலும் எங்ககிட்டேயும் சொல்லுங்க. நாங்களும் கல்யாணத்துக்குத் தேவையானதை செய்யத் தயாராக இருக்கோம்” என்று தங்கள் மகளின் புகுந்த வீட்டாரிடம் சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டார்கள் இருவரும்.

அதற்கடுத்து வந்த நாட்களில், பத்திரிக்கையை அச்சடிக்கப் போவதால், கவிபாரதி மற்றும் ஸ்வரூபனை இந்த ஊருக்கு வருமாறு அழைத்தார் சந்திரதேவ்.

தங்களுடன் வித்யாதரன் மற்றும் மிருதுளாவை வரும் படியாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும், தனக்கு விடுப்பு கிடைக்காது என்று சொல்லி விட்டுத் தன் மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்தார் வித்யாதரன்.

அவர்கள் மூவரும் ருத்ராக்ஷியின் சொந்த ஊரை நோக்கிப் பயணம் செய்தனர்.

அந்தப் பயணத்தின் போது, தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், என்னக் குழப்பம் நடந்தது என்பதை தாயிடம் விவரித்துச் சொன்னான் ஸ்வரூபன்.

அவற்றைக் கேட்டு முடித்தவுடன், அளவுகடந்த கோபத்தில் கொந்தளித்துப் போனார் கவிபாரதி.

- தொடரும்
 
அடடா ஸ்வரூபா முடிஞ்சு போன விஷயத்தை எதுக்கு திரும்ப சொல்லிட்டு இருக்க அத அப்படியே விட்டு வேற வேலைய பாரு.

மிருதுளா இனியாவது குழந்தைகள ஹாஸ்டலில் இருந்து நிரந்தரமாக வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுங்க. ஏன்னா அவங்க படிக்கும் போது மட்டும் பெத்தவங்க கூட ஜாலியாக இருக்க முடியும். பிறகு வேலை வெளிநாடு, வெளியூருனு அப்படியே காலம் மாறிபோயிரும்.
 
அடடா ஸ்வரூபா முடிஞ்சு போன விஷயத்தை எதுக்கு திரும்ப சொல்லிட்டு இருக்க அத அப்படியே விட்டு வேற வேலைய பாரு.

மிருதுளா இனியாவது குழந்தைகள ஹாஸ்டலில் இருந்து நிரந்தரமாக வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுங்க. ஏன்னா அவங்க படிக்கும் போது மட்டும் பெத்தவங்க கூட ஜாலியாக இருக்க முடியும். பிறகு வேலை வெளிநாடு, வெளியூருனு அப்படியே காலம் மாறிபோயிரும்.
Avangale adha purinchukitu Inga kutitu varuvanga nu nambuvom sis. Thank you so much ❤️❤️❤️❤️
 
Top