Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Advertisement

venba

New member
Member
ஹாய் ப்ரோஸ்...
இதோ என்னோட "நீ நான் வாழவே....." கதையின் முதல் அத்தியாயம். படிச்சிட்டு ரிவ்யூ சொல்லுங்க ப்ரோ...
நீ நான் வாழவே

அத்தியாயம் ஒன்று:



மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் தன்மீது முழுவதுமாய் பூசிக்கொண்டது போல் செக்கச்சிவந்திருந்த காலைப் பொழுதில் நீளமாக இருந்த காரிடாரில் வேகமாக ஓடி வந்தான் குகன் மித்ரன். அவனை வெகுவாய் எதிர்பார்த்து காத்திருந்த லக்ஷ்மி அவனிடம் வர, ““என்ன என்னாச்சு லட்சிம்மா… இன்னும் இன்னும் நாள் இருக்குல்ல…..” என்று படபடத்தான்.

“அது தம்பி பாப்பாக்கு பனிக்குடம் விடியக்காத்தால இரண்டு மணிக்கு ஒடஞ்சிட்டு. அதான் ஹாஸ்பிடல் வந்ததும் உங்களுக்கு தகவல் சொன்னேன். டாக்டர் பார்த்திட்டு இருக்காங்க. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க குழந்தைய பார்த்திடலாம்” என்றவருக்கு அந்த வேதனையிலும் சிறு புன்னகை வரத்தான் செய்தது. பின்ன இந்த குழந்தையை எதிர்பார்த்து கணவனும் மனைவியும் காத்திருந்தது அவர்கள் வீட்டில் லக்ஷ்மி அம்மாவிற்கு தான் தெரியுமே…



ஆனால் அந்த புன்னகையோ மகிழ்ச்சியோ குகன் மித்ரன் முகத்தில் இல்லை. அவனது முகத்தில் இருந்தது பயம் பதற்றம் படபடப்பு மட்டுமே… எப்படி எப்படி இதழ் இந்த வலியை தாங்குவா.... ம்மா என மித்ரன் தன்னுடைய நெஞ்சை நீவிக்கொண்டான்......

“இங்க இனியா மேம் அட்டென்டர், வாங்கமா” என்ற குரலில் விரைவாக மித்ரன் அவர்முன் நின்றான். அவனைப் பார்த்ததும் நர்சின் முகத்தில் மரியாதை தானாக வந்து அமர்ந்தது. “சார் வந்துடிங்களா… உங்களதான் எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருந்தோம். உள்ள வாங்க “ என்று நர்ஸ் உள்ளே திரும்பி நடக்க,

லக்ஷ்மி அம்மாவை ஒரு பார்வைப் பார்த்து தலை அசைத்தவன் டெலிவெரி வார்டு உள் மனம் தடதடக்க நுழைந்தான் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் குகன் மித்ரன் ஐ.ஏ.எஸ்.

பிரசவ வார்டின் உள் சிறிய நடைபாதை ஒன்று அமைத்திருந்தார்கள். அதன் ஓரத்தில் கர்பிணி பெண்கள் பிடித்து நடப்பதற்கென கம்பிகளும் இருந்தது, அந்த நடைப்பாதையின் மறு முனையில் இரண்டு அறைகள் இருக்க பார்ப்போருக்கு அது பிரசவ அறை என்று எளிதாக அறிய முடிந்தது.

குகன் மித்ரன் படப்படப்புடன் உள்ளே நுழைய கர்பிணி பெண்கள் அணியும் அங்கியுடன் கம்பியைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் அவனது மனைவி.

“இதழ்....” என காய்ந்து போயிருந்த குகனின் உதடுகள் அசைய,

அவனது சத்தமோ இல்லை அவனது வாசமோ அல்லது உணர்வோ எதுவோ ஒன்று இனியாவை நிமிர்ந்துப் பார்க்க செய்தது.

தன்னவனைக் கண்டதும் தன் மன்னவனைக் கண்டதும் இனியாவின் இதழ்கள் பிதுங்கியது.

“மி.... மித்.... மித்து.... “ ஒரு கை நீட்டி கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு அவள் அழைக்க,

அவ்வளவு தான் தன் இடம் மறந்து தன்னுடைய பொசிஷன் மறந்து அருகில் யார் இருக்கிறார் என்பது மறந்து குகன் அவளிடம் பறந்தான்.

“என்ன என்னடாம்மா.... இதழ்... வன்டேன் தங்கம்மா... வந்துட்டேன்.... “ என்று ஒரு கையில் இதழின் கைகளைப் பிடித்துக்கொண்டு மறுகையால் அவளை சுற்றிப் பிடித்துக்கொண்டான்.

வஞ்சனை இல்லாமல் இனியாவின் தலையில் முத்தம் பதித்தான்.

“வலிக்குது மித்து.... ரொம்ப...”

“ம்ம்ம்... மா... அப்படி தான இருக்கும்... என்னோட இதழ் ரொம்ப ஸ்ட்ராங்ல.... “

குகன் இனியாவை சமாதானம் செய்துகொன்றுந்த வேளையில் குகனுடன் வந்த நர்ஸ் பிரசவ அறையுள் இருந்த டாக்டரை அழைத்து வந்திருந்தார்.

இவர்களிடம் வந்த டாக்டர்,” சார்” என அழைக்க

டாக்டரை திரும்பி பார்த்த குகன்,”டாக்டர்..”

“ம்ம்ம் குகன் சார் இனியாவை கொஞ்ச நேரம் நடக்க சொல்லுங்க... நாம நார்மல் டிரை செய்லாம். அதுக்கு வாய்ப்பு அதிகம் நமக்கு இருக்கு. சோ நல்லா நடக்க வைங்க.. முடிஞ்சா இந்த கம்பி பிடிச்சு உட்கார்ந்து உட்கார்ந்து எழ சொல்லுங்க”

சரி என தலை அசைத்தவன்

“டாக்டர் அது பனிக்குடம் உடைச்சுடுச்சுல அதுனால எதாவது பிராப்ளம்....”

“இல்ல இல்ல சார் . ப்ராப்ளம் இருக்காது.நார்மல் டிரை பண்ணலாம். முடிலனா சி செக் பார்க்கலாம்”

“ஹோ ஓகே மேம்”

“ம்ம் “ என்று டாக்டர் இடத்தைவிட்டு நகர்ந்துவிட குகனும் இனியாவும் மட்டுமே இருந்தனர்.

“இதழ்மா....” என உயிரை உருக்கும் குரலில் குகன் அழைக்க

“இப்படி உருகி உருகி கூப்ட்டுதான் இங்க வந்து நிற்கிறோம்” சிறு முறைப்புடன் இதழனியா வலியில் பல்லைக் கடித்தப்படி கோறினாள்.

“டேய் இதழ்.... எங்க வச்சு.. எத பேசுற??” என்றவனின் முகம் வெக்கத்தில் செம்மை பூசியது.

“ம்ம் ம் இந்த வெக்கம்லாம் இங்க வந்து படலாமா கலெக்டரே....”

“இதழ்... அடி வாங்கப்போற.... வாய் பேசாம நட... இப்படியே என்ன டைவர்ட் பண்ணிட்டு நடக்க வேணாம் நினைக்கிறீயா...”

“ம்ம்ம் “ இதழ் முகம் கசக்க,

“ச்சு வா” குகன் இதழின் கைகளைப் பிடிக்க இருவரும் நடந்தனர்.

அறை மணி நேரம் கழித்து இனியாவின் வலி அதிகமாக நடக்க முடியாமல் போக “ம்கூம்... முடில முடில... என்னால முடில மித்து...” என்று அங்கையே இதழனியா அமர்ந்துவிட நர்ஸ் ஒருவர் வந்தவர் அவளை மெதுவாக ரூமுள்ளே அழைத்துச் சென்றார்.

அவள் குடுத்த கையி்ன் அழுத்தம் குகனின் கைகளில் இருக்க சிறிது நேரத்தில் “அம்மா.....” என்ற அலறலும் “ங்கா....” என்ற குழந்தையின் குரலும் கேட்க குகனின் மயிர்க்கால்கள் புல்லரித்து நின்றன.

ரோஜா பூக்குவியலைப் போல துணியால் சுற்றி இருந்த குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து குகனின் கைகளில் தர,

கண்கள் கலங்க கை நீட்டி வாங்கினான் அந்த மாவட்டத்தை ஆட்சி செய்யும் குகன் மித்ரன்.

“நர்ஸ் இனியா.”என்று குழந்தையிடம் ஒரு கண்ணும் நர்ஸிடம் ஒரு கண்ணும் வைத்துக்கேட்க,

“அவங்க நல்லா இருக்காங்க சார். மயக்கத்தில இருக்காங்க. கொஞ்ச நேர்த்தில நார்மல் ரூம் மாத்திடுவோம்... அப்போ போய் நீங்க கூட இருக்கலாம் என்று சென்று விட

குகனின் கவனம் கையில் இருக்கும் தேவதையின் மேல் பதிந்தது.

சிறு சிறு கண்களும் இனியா போல இருக்க கை விரல்கள் கால் விரல்கள் அவனை போல் நீட்ட நீட்டமாக இருந்தன.... குகனின் கண்களுக்கு அவ்வாறே தோன்றியது. குட்டி தேவதையாக அழகு கொஞ்சும் அழகியாக இருந்த பேபியைக் காண காண,”அச்சோ இதழ்.... உன்னோட அப்படியே ஜெராக்ஸ் “ என்று மனதினுள் கூறியவன் குழந்தையை கொஞ்ச தொடங்கினான்.

“தங்கமே... தங்கக்குட்டியா நீங்க… என் செல்லமா… அச்சோ உங்க கன்னம் ஸ்கின்லாம் எவ்ளோ சாப்ட்டா பாப்பா…. உங்க அம்மாக்கு இப்படி தான் இருக்கும். வைர குட்டிடா என் அம்மு” என்று குழந்தையின் நெற்றியில் பட்டும் படாமல் முத்தத்தை வைத்தவன் ,” லக்ஷ்மி பாட்டிய பார்க்கலாமா” என டெலிவரி வார்டின் கதவை ஒரு கையால் திறந்து வெளியே காரிடார் வந்தவன் நேராக லக்ஷ்மி முன்னாடி நின்று ,”இங்க பாருங்க… உங்க பாப்பாக்கே ஒரு குட்டிப்பாப்பா… பிடிங்க பிடிங்க” என்று ஆர்ப்பரித்தான். மகிழ்ச்சியுடன் பார்த்தவர் ,”தம்பி அது நான்…. “ என்ற தயக்கம் மேலிட,

“எங்க அப்பா அம்மா இல்லாதபோது அவளை அம்மாவா தாங்கியது நீங்கதான் ம்மா… உங்க பேத்திய பிடிங்க” என்றான் சிரிப்புடன்.

அதே மகிழுவுடன்,” ராஜாத்தி” என்று அவர் வாங்க குகனின் கைகள் தன்னைப்போல் பேண்ட் பேக்கட்டில் வைத்த செல்போனை எடுத்தான்.

அடுத்த கணம் அவனது மொபைல் அடிக்க, சந்தோசத்துடன் அதன் எடுத்தான் குகன்.

“ன்னா… குகண்ணா இருக்கியா… என்ன மெசேஜ் அனுப்பிட்டு திருப்பி ஒண்ணுமே அனுப்பல… கூப்பிட்டாலும் எடுக்கல. அண்ணி நல்லா இருக்காங்களா… “

“டேய் கோபி…” என்று சிரிப்பு முழங்க… “நீ சித்தப்பா ஆயிட்டடா….. உனக்கு மக வந்திருக்கா… எங்களுக்கு நாங்க எதிர்ப்பார்த்த மாறி பொண்ணு”

“வாவ் வாவ் செமசெம குகன்ணா…. நாங்க இதோ நாங்க கிளம்பறோம்“

ஆர்ப்பரித்து ஆடிக்கொண்டிருந்த குகனின் மனது கோபியின் வருகிறோம் என்ற வார்த்தையில் அடங்கி அமுங்கியது…

“அது…. கோபி…. அம்மா…. “ என்று சோர்வாக இழுக்க…

“ண்ணா… அதான் நான் தான் இருக்கேன்ல” எனக் குரல் மாற்றி கிண்டலடிக்க சட்டென்று சிரித்து விட்டான் குகன்.

“தட்ஸ் மை ப்ரோ… பி ஹேப்பி மேன். பார்ப்போம்” என்று கோபி கால் கட் செய்ய புன்னகையுடன் குகன் நிமிர்ந்தான். நர்ஸ் ஒருவர் குழந்தையை உள்ளே தூக்கிச் செல்வது தெரிய,

லக்ஷ்மி அவனைப் பார்த்து வந்தார்.

“தம்பி அது…. “ அன்று அவர் கைப்பிசைந்து நிற்பதிலியே அவரது தயக்கம் புரிய , குகனின் புருவங்கள் சுருங்கியது.

“அது வந்து தம்பி… பாப்பா அம்மா அப்பாக்கும் நாம சொல்லனும்ல…” என்றவர் மெதுவாக அவனது கண்களை பார்க்க , அவ்வளவு தான் எங்கிருந்து அவ்வளவு ஆத்திரம் வந்ததோ குகனிற்கு..

“லக்ஷிம்மா… என்ன சொல்றீங்க…” என்று குரல் ஊயர்த்தினான். பொதுவாகவே குகன் மிகவும் மென்மையானவன். நிதானமானவன் . அவனது நிதானம் கூட ஒரு சில இடத்தில் தொலைத்துவிட்டான் என்பது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.

எப்பொழுதும் அவன் குரல் அருகில் இருப்போருக்கு மட்டுமே கேட்கும். ஆனால் கோபம் வந்துவிட்டால் குரல் தானாக உயர்ந்துவிடும். அது அவன் வேலை செய்யும் இடத்திலும் அனைவரும் அறிந்ததே...

பல முறை லக்ஷிம்மா இனியாவிடம்,”எப்படி கண்ணு தம்பி பேசுறது உனக்கு மட்டும் புரியுது. எனக்கு கேட்கவே இல்லியே…” என்று கேட்பதுண்டு.

இனியாவோ முகிழும் சிரிப்புடன் “அது பரம ரகசியம் லக்ஷிம்மா…… “ என்று கிண்டலடித்து செல்வாள்.

அவனது இந்த திடீர் சத்தத்தில் பயந்தவர்“ தம்பி… மெதுவா… கொஞ்சம் நிதானமா யோசிங்களேன்… பாப்பாக்கும் ஆசை இருக்கும்ல… அதோட அம்மா அப்பா பாக்கனும்னு… சீமந்ததுக்கே கூப்பிட முடியல.”

லக்ஷ்மி அம்மாவின் சொற்கள் கேட்க கேட்க குகனின் ரத்தம் சூடேறியது.

ஆனால் அவரது வார்த்தைகளை உதறி தள்ளிவிட முடியாதே...” தனது உயிரை பணயம் வைத்து படுத்திருப்பவளின் குரல் அவனது காதில் மெல்ல” மித்து… அது என் அம்மா அப்பா மித்து… பிளிஸ் பிளீஸ் எனக்காக…” என்ற கெஞ்சல் குரல் ஒலிப்பது போல் இருக்க… அவனது கோபம் மட்டுப்பட்டது.....

அவளுக்காக… தன்னவுளுக்காக…. தன் உயிரின் மறு பாதிக்காக…

முடியும் என்ற குரல் அவனது மனதில் இருந்து கேட்க அந்த ஆளிடம் பேசுவதா என்று அறிவு முரண்டியது. இரண்டும் முட்டி மோத குழப்பத்துடன் லக்ஷ்மி அம்மாவைப் பார்த்தான். அவனது குழப்பம் அவர் புரிந்துகொண்டாரோ என்னவோ“ தம்பி அவங்ககிட்ட நாம பேச வேணாம். ஆனா பாப்பாவுடைய அண்ணன் ஒருத்தர் இருக்கார்ல. அவருக்கிட்ட விஷயம் சொல்வோம். மீதி அவங்களோடப்பாடு” என்று முடித்தார்.

உண்மை தானே… அந்த ஆள் ஜாதி மதம் பிடிச்ச வெறியன் அவரிடம் பேசுவதா… முடியவே முடியாது என்று மனமும் மூளையும் முட்டிக்கொண்டு சொல்ல மெதுவாக இதழியாவின் அண்ணன் இந்தருக்கு கால் செய்தான்.

குகனின் பொறுமையை சோதித்துவிட்டே கால் முடியும் தருவாயில் கால் எடுத்தான் இந்தர்.

“ஹலோ…. “ என்று தயக்கம் எதுவுமின்றி குரல் வர,

குகனிற்கு புரிந்தது அவனிடம் தன் நம்பர் இல்லை என.

“ஹலோ… யாருங்க… யாரு வேணும். நான் இந்தர்… நீங்க..?”

என்று மீண்டும் கேட்க…. தயக்கம் கொண்ட குகன் சத்தம் வராமல் முரண்டிய குரலை இதழுக்காக என இழுத்து “ நான் குகன் மித்ரன்” என்று முடித்தான்.

அதுவரை பொறுமை இல்லாமல் கத்திக்கொண்டிருந்த இந்தருக்கு இப்பொழுது தயக்கம் வந்திட எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“ம் அது இத…. இனியாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. உங்க கிட்ட சொல்லலனா இனியா வருத்தப்படுவா.. அதான்.. அவளுக்காக… “ , என்று கடமைக்காக சொல்ல,

“என்ன என் பாப்பாவுக்கு ஒரு பேபி ஆ… அவளே ஒரு பேபி… கடவுளே… “ என்று ஆர்ப்பரித்தான் இந்தர்.

குகனின் உதடுகள் இந்த அக்கறை இந்த இரண்டு வருஷம் எங்க போச்ச்சோ என ஏளனமாக வளைய ,”ஹேய்… ஸ்டாப் ஸ்டாப் இட்…. உங்க டிராமவ என்னால காது குடுத்து கேட்க முடியல“

குகனின் வார்த்தைகளில் தெரிந்த ஏளனம் நக்கல் இந்தரை வெகுவாய் காயப்படுத்த ,”பிளீஸ் குகன்… பிளீஸ்… “ என்றவனின் வருத்தம் அவன் வார்த்தைகளில் தெரிந்தது .

ஆனால் அவனது அந்த வருத்தம் தோய்ந்த குரல் குகனின் நக்கல்களை குறையாமல் கூட்டிவிட்டே சென்றது.

“வாவ் வாட் a டிராமா… எனக்கு தெரியும் இதழுக்கு உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்னு. அவ மனசில எப்போதும் நீங்க ஸ்பெஷல் தான். ஆனா ஏன் உங்களுக்கு அவ ஸ்பெஷல் இல்ல???? அவ உங்ககிட்ட தான எங்களோட லவ் சொன்னா… அப்போ நீங்க தான ஒரு அண்ணனா பிரென்டா கூட நின்னுருக்கணும்….. ஆனா நீங்க என்ன என்ன பண்ணீங்க…. என்ன ஏதாவது பணிருந்தா கூட நான் பொறுத்து போயிருப்பேன்… ஆனா நீங்க தொட்டது என்னோட என்னோட இதழ…. “ என்று வெறி பிடித்தவன் போல் கத்தியவன் அதனை முடிக்காமல் ,”இதுலாம் ரொம்ப வருஷமா உங்ககிட்ட கேட்கனும் நினைச்சது... இன்னும் இருக்கு... ஆனா வேணாம் வேணாவே வ்வேணாம் பழசை பத்தி பேசுனா இன்னும் இன்னும் சீழ் புடிச்சு செப்டிக் ஆகும். நான் உங்களுக்கு கூப்பிட்டது எங்களுக்கு மக பிறந்திருக்கா சொல்லத்தான். அத சொல்லிட்டேன். வைக்கிறேன் “ என்று வைத்தவனுக்கு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

அன்று நடந்ததை நினைத்து பார்க்க பார்க்க வெறி ஏறியது . சட்டென்று தலையை உலுக்கி சமம் செய்தவன் கண்முன் கண்ணீருடன் இதழ் தோன்றினாள். “வ்வேணாம் மித்து… நமக்கு இது வேணாம். வா போலாம் என்று அவள் கூறிய வார்த்தைகள் தோன்ற நெஞ்சை நீவிக்கொண்டு இலைப்பாற முயன்றான் அந்த கலெக்டர்.

அவனைப் பார்த்து நின்றுக்கொண்டு இருந்த லக்ஷ்மி “தம்பி… “ என்றழைக்க, “மா… நீங்க கிளம்புங்க… மார்னிங் சீக்கிரம் வந்தது… நான் பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று கிளப்ப,

“அது எப்படிப்பா இனியாவை பார்க்காமல் செல்ல மாட்டேன் “ என்று கூறியவரை வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்து விட்டு தன்னவளுக்காக அந்த காரிடாரில் சுவற்றில் சாய்ந்து காத்திருக்க தொடங்கினான் குகன் மித்ரன்.

வாழவே....
 
Top