Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW CONTEST VOTING PHASE 2 - TILL 28.07.2023 ( MIDNIGHT TILL 12 O CLOCK )

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ் ,



இதனால சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் அடுத்த கட்ட வோட்டிங் க்கு வந்துட்டோம். கதைகளை படித்தவர்கள் என்று பார்த்தால் அதிகபட்சமாக ஒரு கதையை ஒன்பதாயிரம் பேர் வரை படித்திருக்கிறார்கள், குறைந்த பட்சமாக ஒரு கதையை ஆயிரம் பேர் படித்திருக்கிறார்கள்.

ஆனால் வாக்குகள் வந்திருப்பது வெறும் 557 மட்டுமே பிரண்ட்ஸ்...

என்ன சொல்ல?

இதோ அடுத்த கட்ட வோட்டிங், கதைகளை படித்தவர்களின் விகிதம், வாக்குகளின் எண்ணிக்கை என்று கலந்து கட்டி தான் தேர்வு, இரண்டிற்கும் பதிவான சதவிகிதத்தை கொண்டு தேர்வு...

இந்த முறை கதைகளுக்கு கொடுக்கப்பட்ட எண் கொண்டு மட்டுமே வரிசை அமைக்கப்பட்டுள்ளது. கதைகள் பெற்ற வாக்குகளின் விகிதத்தின் அடிப்படையிலோ, அதிகம் படித்தவர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையோலோ, முன்பே கதை முடித்தவர்கள் என்ற அடிப்படையிலோ இல்லை.

இப்போது அடுத்த கட்டத்திற்கு இருபத்தியாறு கதைகள் இருக்கின்றன... ஏன் இப்படி என்றால் கடைசி இரண்டு கதைகள் மிக மிக சொற்பமான வித்தியாசம் அதனால் இரண்டு இருக்கட்டும் என்று வைத்துவிட்டோம்.

இதில் ஒருவர் போட்டியில் இருந்து விலகுகிறார்... அவர் முன்பே நான் கொடுப்பது ஒரு கெஸ்ட் பெர்பார்மன்ஸ் ( சிறப்பு எழுத்தாளர், போட்டியில் இல்லை ) என்று சொல்லியிருந்தார். நான் தான் முதல் கட்ட வாக்கில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இதோ இரண்டாம் கட்டத்தில் அந்த கதை இல்லை. அந்த கதை இல்லாமல் அதற்கு அடுத்து இருபத்தி ஆறு கதைகள் வரிசையில் இருக்கின்றன.

முன்பே தூக்கியிருந்தால் வேறு யாரும் வந்திருப்பாரோ என்று நினைக்க முடியாமல் இருக்கத்தான் அடுத்து இருபத்தி ஆறு கொடுத்து விட்டோம்.

விலகி விட்ட அந்த எழுத்தாளர், ஆத்விகா பொம்மு... 029' உன் மௌனமே என் இசையாக.... கதையை எழுதியவர்...

வாக்கு பதிவானதில் நான்காவது இடத்திலும், படித்தவர்களில் முதல் இடத்திலும்(ஜூன் 30 அன்று) இருந்தார். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள் பொம்மு... உங்களின் எழுத்துப் பணி சிறக்க எங்களின் சிறப்பு வணக்கங்கள்.

இது அல்லாமல் இன்னும் எட்டு கதைகள்... அடுத்த கட்ட வாக்கிற்கு தேர்வாகவில்லை... அதற்காக அந்த கதைகள் சரியில்லை என்று கிடையாது... அதைவிட சிறப்பாக சில கதைகள் முந்திக் கொண்டன என்று தான் சொல்ல வேண்டும்.

எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் என்றும் உங்களோடு பிரண்ட்ஸ்... உங்களுக்கும் பங்கேற்ப்பு சான்றிதழ்கள் இருக்கின்றன பிரண்ட்ஸ், அதனோடு பங்கேற்ப்பு பரிசுகளும் கொடுக்கலாமா என்ற எண்ணமும் இருக்கின்றது, போட்டியின் முடிவுகள் வெளி வரும் போது அதுவும் அறிவிக்கப்படும் பிரண்ட்ஸ்.

எங்களோடு துணை நிற்கும் அத்தனை பேருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...

வாக்குப் பதிவு ஐந்து நாட்களுக்கு மட்டுமே பிரண்ட்ஸ்... இன்று திங்கள் 00:00:00 am (24.07.2023) ஆரம்பித்து... வெள்ளி இரவு 11:59:59 pm (28.07.2023) பன்னிரண்டு மணிக்கு முடிந்து விடும்.

உங்களின் பொன்னான வாக்குகளை பதிந்து... எழுத்தாளர்களுக்கு உங்களின் ஆதரவை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....



என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி... 🙏

நாங்கள்....




Nirmala vandhachu 😍😍😍
Wishes to all writer's 💐💐💐
 

Advertisement

Latest Posts

Top