Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 7

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----7

அதை பார்த்த ஆதித்யா தன் பதவி மறந்தான் தான் இருக்கும் இடத்தை மறந்தான் ஏன் மொத்ததில் சொல்வது என்றால் தன்னையே மறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். கண்கள் சிவக்க அவர்களை பார்த்தவன்.

விடு விடு என்று அவர்கள் அருகில் சென்றவன் குடிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த தாமரையிடம் கையில் காபியை திணித்து குடிக்க கட்டயப்படுத்திய சுரேந்தருக்காக அவள் வாயில் வைக்க போன காபி கப்பை தட்டி விட்டவன்.

தாமரையை முறைத்துக் கொண்டே சுரேந்தரை பார்த்து “இங்கே என்ன பேச்சி நடக்குது.” என்று ஆவேசத்துடன் கேட்டான்.

ஆதித்யாவின் இச்செயலை எதிர் பார்க்கதா தாமரையும்,சுரேந்தரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க.

அவர்களின் இந்த பார்வை பறிமாற்றத்தை பார்த்து இன்னும் கோபம் தான் அதிகமாயிற்று.மிக நெருக்கமானவர்களுடன் தான் இந்த பார்வை பரிமாற்றம் ஏற்படும் என்று எங்கோ படித்த செய்தி அப்போது அவனின் நியாபகத்தில் வந்து தொலைத்தது.

அதற்க்கும் சேர்த்து சுரேந்தரை வாட்டி எடுத்து விட்டான்.”நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் அங்கே என்ன பார்வை வேண்டியிருக்கு.” என்று அவனிடம் காச்சியவன். அவன் பார்த்தால் நீயும் பார்ப்பாயா….?என்று மனதில் நினைத்துக் கொண்டே தமாரையை முறைத்தான்.

ஆதித்யாவின் செயல் எதுவும் தாமரைக்கு சுத்தமாக விளங்க வில்லை.தன் பாட்டியின் உடல் நிலை காரணமாக சாப்பாடு,தூக்கம் என்று மறந்து இருந்தவளாள் வேறு எதை பற்றியும் சிந்திக்காத நிலையில் இருந்தாள்.

தன் பாட்டியின் உடல் நிலை நன்றாக இருந்து தன் மனநிலையும் நன்றாக இருந்தாலும் கூட நூத்துக்கு ஒரு சதவீதமாக ஆதித்யாவுக்கு தன் மேல் விருப்பம் இருக்கும் என்று யோசித்து இருக்க மாட்டாள்.

ஏன் என்றால் தாமரை ஆதித்யாவை தாய்,தந்தை ஆசான்,தெய்வம்,என்ற அனைத்திற்க்கும் மேலாக உயர்ந்த இடத்தில் அவனை வைத்திருந்தாள். தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து தான் உடுத்தும் உடையில் இருந்து தான் படிக்கு படிப்பு, தான் சாப்பிடும் சாப்பாடு, மட்டும் அல்லாது தன் பாதுக்காப்புக்கும் அவனே காரணம் என்று அவளுக்கு தெரியும்.

தான் இருக்கும் இடம் எப்படி பட்டது என்று பதினைந்து வயதிலிருந்தே அவளும் அறிந்து தான் வைத்திருந்தாள்.அங்கு இருக்கும் பொறுக்கிகள் வரும் போகும் பெண்களை எல்லாம் ஆபாசமாக பேசுவதை அவளே கேட்டு இருக்கிறாள்.

ஆனால் இவள் வரும் போது மட்டும் அனைவரும் வாய் மூடி விடுவர். முதலில் நான் கிண்டல் செய்யும் அளவுக்கு கூட அழகாக இல்லையா….? என்று நினைத்து கண்ணாடியில் ஒரு முறை இப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டவள்.

இல்லையே நமக்கு முன்னே போன பெண்ணை விட நன்றாக தானே இருக்கிறேன் என்ற அவளின் சந்தேகத்துக்கு அந்த பொறுக்கி பசங்களே ஒரு நாள் விளக்கம் அளித்தார்கள். ஆம் அவர்களின் வாயில் இருந்தே தான் அவர்கள் ஏன் தன்னை மட்டும் கிண்டல் செய்யவில்லை என்பதை அறிந்துக் கொண்டாள்.

அந்த பொறுக்கியின் டீமில் புதிதாக உறுப்பினன் ஒருவன் சேர இவள் போகும் போது அவன் ஏதோ பேச வர அவன் செய்ய போகும் செயலை அறிந்த மற்றவன் அவன் வாயை பொத்தி “ஏன்டா எழரையை கூட்டிடுவே போலவே….” என்றதற்க்கு.

அந்த புதிய உறுப்பினன் “ஏன்டா அப்படி சொல்ற பாக்க பொண்ணு சும்மா சோக்கா இருக்கு. ஆய் அப்பனும் இல்லை.கூட இருப்பதோ இன்றோ நாளையோ கட்டையை சாய்க்கும் கேசு.சும்மா வலைச்சி போடுவதை விட்டுட்டு. இப்படி பம்மிறிங்களே….? என்ற அவனின் அறிவு பூர்வமான கேள்விக்கு மற்றொருவன்.

“ஏன்டா அந்த பொண்ணை பத்தி இவ்வளவு விவரம் தெரிஞ்சி வைச்ச நீ.அந்த கிழவி எங்கே வேலை பார்க்குது என்று விசாரிச்சியா….?”

“எங்கே….?” என்று தெனவட்டான கேள்விக்கு.

“***கட்சி தலைவர் ஆதித்ய நாரயணன் வீட்டில்.” அவ்வளவு தான் ஏன் அவன் மேற்கொண்டு பேசுபோகிறான். அந்த ஏரியாவுக்கு தான் அவன் புதுசு ஊருக்கு இல்லையே ...அவனும் ஆதித்யாவை பற்றி தெரிந்து தான் வைத்திருந்தான்.

அந்த பேச்சால் தான் அவர்கள் ஏன் தன்னை தொந்தரவு செய்யவில்லை என்ற காரணமே அவளுக்கு விளங்கியது.அன்றிலிருந்து ஆதியாவின் பேனர் எங்காவது சுவற்றில் பார்த்தால் போதும் அந்த தெரு திரும்பும் வரை அந்த பேனரையே தான் பார்த்திருப்பாள். அப்படி உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் ஆதித்யா தன்னை விரும்புவான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ஆதித்யாவின் முறைப்பை ஏன் என்று தெரியாது பார்த்திருந்தாள்.

ஆனால் தாமரைக்கு தான் ஆதித்யா ஏன் இப்படி தன்னை முறைக்கிறான் என்ற காரணம் தெரியாது இருந்தது. படிப்பு முடிந்து இந்த ஐந்தாண்டாக மருத்துவனாக இருக்கும் சுரேந்தருக்கு ஆதித்யாவின் இப்பேச்சி முறைப்புக்கான காரணம் விளங்கி விட்டது.

அதுவும் ஆதித்யா தாமரையை பார்த்த பார்வையில் இருந்த உரிமை ஆண்மகனான சுரேந்தருக்கு விளங்கி விட்டது.இன்னும் ஒன்றையும் கவனித்து கொண்டு தான் இருந்தான். அது தாமரைக்கு ஆதித்யாவின் பார்வையைய் புரிந்துக் கொள்ளவில்லை என்று.

ஆதித்யா கேட்டதுக்கு பதில் அளிக்காது இவர்களையே பார்த்திருந்த சுரேந்தரை பார்த்த சத்யா. “என்ன தலைவா வள்ளியம்மாவின் பேத்தி என்ற முறையில் நீங்க பேசும் போது. டாக்டராய் ஒரு பேஷண்டின் அட்டண்டர் என்று அவர் பேச கூடாதா….?” என்று அந்த சூழ்நிலையை சாமளித்து எப்படியாவது ஆதித்யாவை அந்த இடத்தில் இருந்து கூட்டி விட எண்ணினான்.

சத்யாவின் சாமளிப்பை புரிந்துக் கொண்ட சுரேந்தர் “இல்லை நான் தாமரையுடன் ஒரு பேஷண்டின் அட்டண்டர் என்ற முறையில் மட்டும் பேசவில்லை.” என்று சொல்லி ஆதித்யாவை பார்க்க.

ஆதித்யா சுரேந்தர் சொன்னதை காதில் வாங்கி கொண்டே தாமரையை தான் பார்த்திருந்தான். தாமரை சுரேந்தர் சொன்னதுக்கு என்ன சொல்வாள் என்று. பாவம் அவனுக்கு தெரியாது நேற்று சுரேந்தர் தாமரையிடம் என்னை டாக்டராய் பார்க்காதே ஒரு நண்பனாய் நினைத்துக் கொள் என்று சொன்னது.

அதனால் தாமரைக்கு சுரேந்தர் சொன்ன நாங்கள் பேஷண்டின் அட்டண்டர், டாக்டார் என்ற உறவில் மட்டும் பேசவில்லை என்று சொன்னது தப்பாக தெரியவில்லை. அதனால் சுரேந்தரின் இந்த பேச்சிக்கு ஆட்சேபிக்காது மவுனமாக சுரேந்தரை பார்த்தாள். அதோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லை சுரேந்தரை பார்த்து சிறியதாக சிறித்தும் வைத்து விட்டாள்.

அதை பார்த்த ஆதித்யாவுக்கு கண் முன் தெரியாமல் கோபம் வந்து விட்டது. எங்கு இருக்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் “நீங்கள் ஜாலியாக பேசுவதற்க்கு நான் ஹாஸ்பிட்டல் கட்டவில்லை.ஹாஸ்பிட்டல் என்பது ஒரு புனிதமான இடம்.” என்று மேல என்ன சொல்லியிருப்பானோ….

அந்த இடத்துக்கு வந்த சீப் டாக்டர் சுரேந்தரின் அப்பா தீனதயாளன் ஆதித்யாவிடம் “என்ன சார் என்ன ஆச்சி ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிங்க.” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது.

சுரேந்தரையும் தாமரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த அந்த டாக்டருக்கு விஷயம் விளங்கி விட்டது. நேற்றே முதலில் அவர் சந்தேகப்பட்டார் தானே….பின் சத்யாவின் சாதுர்யத்தால் அவர் சந்தேகம் முறியடிக்க பட்டாலும் இப்போது பார்க்கும் போது.

என்ற அவரின் எண்ண போக்கை ஆதித்யாவின் பேச்சி தடை செய்தது. “என்னவா...அதை உங்கள் மகனிடம் கேளுங்க.”

“என்ன சுரேந்தர் என்ன பிரச்சனை.” என்ற கேள்விக்கு.

“ஒன்னும் இல்லேப்பா தாமரை காலையில் இருந்து எதுவும் சாப்பிடலை.அதனால் காபியாவது குடி என்று கட்டாயப்படுத்தி கொடுத்தேன்.அவள் குடிக்க வாய் வைக்க போகும் போது இவர் தட்டி விட்டு விட்டார்.” என்ற பேச்சிலேயே அந்த அனுபவம் வாய்ந்த டாக்டருக்கு விளங்கி விட்டது.

“சுரேந்தர் தாமரையை கவனித்து கொள்ள சாருக்கு தெரியும். நீ பேஷண்டை மட்டும் பார்த்தால் போதும்.” என்று சொல்லி விட்டு வா என்று அழைக்க.

“இல்லேப்பா தாமரையின் பாட்டியை டிச்சார்ஜ் செய்து விட்டு வருகிறேன்.” என்றது தான்.

ஆதித்யாவுக்கு வந்ததே கோபம் “இங்கு வரும் அனைவரையும் நீங்க தான் முன்னே இருந்து டிச்சார்ஜ் செய்விங்களா….?”

“அனைவருக்கும் இல்லை. ஆனால் தாமரைக்கு செய்வேன்.” என்று அவனும் விடாமல் அவனிடம் வழக்காடினான்.

அங்கு இருவரும் தாமரையை ஒரு பொருளாக நினைத்து உரிமை போராட்டம் நடத்தினார்களே தவிர. அவளின் இப்போது இருக்கும் மனவேதனையை அறிய மறந்து விட்டனர்.

இருக்கும் ஒரே உறவும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் வேளையில் ஒரு பெண்ணின் மனதை அறிய தவறி விட்டனர்.தொடர்ந்து மூன்று நாட்களாய் ஆழ்ந்த உறக்கமும், தேவையான அளவு உணவு உட்கொள்ளா காரணத்தாலும், பாட்டிக்கு என்ன ஆகுமோ….என்ற கவலையாலும் ஆதித்யாவும் சுரேந்தரும் தனக்காக தான் வாதடுகிறார்கள் என்று அறியாது ஆழ்ந்த மயக்கத்துக்கு ஆளானாள்.

இவர்கள் இப்படி வாதடிக் கொண்டு இருக்கும் வேளையில் தாமரை மயங்கி விழுவது போல் இருப்பதை பார்த்த சத்யா “தலைவா தாமரை” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தாமரை விழுவதை பார்த்த சுரேந்தர் கீழே விழாமல் தாங்கி பிடித்து விட்டான்.

ஆதித்யாவுக்கு தாமரை கீழே விழாது நிம்மதி கொடுத்தாலும்,பிடித்தது சுரேந்தர் என்னும் போது அந்த நிம்மதி காணமல் போனது.சட்டென்று சுரேந்தர் கையில் இருந்து தாமரை பறித்தவன் சீப் டாக்டர் தீனதாயளனை பார்த்து “என்ன என்று பாருங்க.” என்று அவரையே தாமரைக்கு சிகிச்சை பார்க்க சொன்னான்.

ஆதித்யாவுக்கு சிகிச்சைக்கு என்றாலும் கூட சுரேந்தர் தாமரையை தொடுவது பிடிக்கவில்லை.அதனால் தான் தீனதயாளனை பார்க்க சொன்னான்.

உடனே சுரேந்தர் “ஏன் நானே அவளை பார்க்கிறேன்.” என்றது தான்.

ஆதித்யா தீனதாயனை பார்த்து “நான் யார் என்று உங்கள் மகனுக்கு சொல்லி வைங்க. அப்புறம் நான் தான் தாமரையின் பாட்டியை இங்கு சேர்த்தேன். அது மட்டும் அல்லாமல் இந்த மருத்துவமனை யாருது என்று தெரியும் என்று நினைக்கிறேன்.” என்று சொன்னவன்.

தாமரையை அங்கு இருக்கும் ஒரு அறையில் படுக்கையில் கிடத்தியவன் தீனதாயளனை பார்க்க. தீனதாயளன் “ சாரி அவனுக்கு ஒன்றும் தெரியாது.ஒரு மாதமாக தானே இங்கு வேலை பார்க்கிறான். அதனால் தான் உங்களை பற்றி தெரியவில்லை.” என்று சொன்னவர்.

பின் “நான் பார்க்கிறேன் சார். சின்ன பையன் தானே அவனுக்கு விவரம் பத்தாது.” என்று சொல்லியவர். தன் மகனை பார்த்து கோபத்துடன் “எங்கு என்ன பேசுவது என்று தெரியாதா….?” என்றதற்க்கு.

“அப்பா அவர் இந்த தொகுதி எம்.எல்.ஏவா இருக்கலாம். அதற்க்காக ஹாஸ்பிட்டலில் எல்லாம் இவர் யாருக்கு யார் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று அவரே முடிவு எடுப்பாரா…..?”

“ஏன்டா அவர் தான் இந்த ஹாஸ்பிட்டலின் முதலாளி.” என்றதும்.

சந்தேகத்துடன் சுரேந்தர் தன் தந்தை ஆதித்யாவை மாறி மாறி பார்த்தான். இந்த விஷயம் அவனுக்கு புதியது. ஆம் அந்த ஹாஸ்பிட்டல் வேறு ஒருவரின் பெயரில் தான் இருந்தது. அது வேறு யாரும் இல்லை ஆதித்யாவின் பினாமி தான் அது.

இந்த விவரம் புதியதாக இருந்தாலும் “இப்போ அதற்க்கு என்ன…..?” என்று தான் கேட்டு வைத்தான்.

அந்த அளவுக்கு சுரேந்தருக்கு தாமரையை பிடித்து இருந்தது. இந்த சமயத்தில் அவளை தனியே விட கூடாது. தானே அவளின் உடலை பரிசோதித்து பார்த்து அவளுக்கு தேவையான ஊட்டசத்து கொடுக்க வேண்டும் என்று எண்ணினான்.

மேலும் ஆதித்யாவுக்கும் தாமரை மீது இருக்கும் விருப்பதை பார்த்து அவன் பயந்தும் போனான். எங்கே இந்த சமயத்தில் அவளை ஆதித்யாவின் அரவணைப்பில் விட்டால் அவளை விரும்ப வைத்து விடுவானோ….என்ற பயத்திலும் தாமரையையும் அவள் பாட்டியையும் தான் பராமரிக்க எண்ணினான்.

அவனின் அந்த காதல் மயக்கத்தால் தான்.ஆதித்யாவின் பதவியும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை. அவன் செல்வாக்கையும் கண்டுக் கொள்ளவில்லை.சுரேந்தரின் அந்த தெனவெட்டான பேச்சை கேட்ட ஆதித்யாவுக்கு அடித்து விடலாமா...என்று கூட ஆத்திரம் வந்தது.

இது கோபம் படும் நேரம் இல்லை என்று தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்தவன். தீனதாயளனை பார்த்தான். அவரோ இவர்களின் பேச்சை காதில் வாங்கினாலும் தாமரைக்கு தன் சிகிச்சையை கொடுத்துக் கொண்டு இருந்தார். ஏன் என்றால் தாமரைக்கு சுரேந்தர் சிகிச்சை அளித்தால் என்ன ஆகும் என்று அவருக்கு தெரிந்து இருந்ததால் அவர் கட கட வென்று தாமரையை செக்கப் செய்தார்.

அவரின் செக்கப்பின் முடிவில் பெரியதாக ஒன்றும் இல்லை என்று தெரிந்துக் கொண்டவர் தன்னை பார்த்த ஆதித்யாவை “பார்த்து பயப்பட ஒன்றும் இல்லை. சரியாக சாப்பிடாது, தூங்காது தான் காரணம்.” என்று அவர் சொல்லி முடிப்பதற்க்குள்ளாகவே….

சுரேந்தர் “அது தான் குடிக்க நினைத்த காபியையும் தட்டி விட்டு விட்டாரே….”

அவன் பேச்சில் சத்யாவுக்கே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன சும்மா இவன் ஆடுறான் என்று தான் நினைக்க தோன்றியது. அந்த வெருப்பில் சத்யா சுரேந்தரை கொலை வெறியோடு பார்க்க.

அதை பார்த்த தீனதாயளனுக்கு பயமே வந்து விட்டது. அவருக்கு தெரியும் ஆதித்யாவுக்கு அனைத்துமாய் இருப்பது சத்யா என்று. ஆதித்யா ஒரு விஷயத்தை நினைத்து முடிப்பதற்க்குள் அதை நடத்தியே முடித்து விடுவான் சத்யா என்று.

அவன் பார்வையை பார்த்த தீனதாயளன் சுரேந்தரிடம் வேறு ஒரு பேஷண்டை பார்க்க போக சொல்ல. அதற்க்கு அவன் மறுக்க “இது தான் நீ மருத்துவம் பார்க்கும் அழகா….” என்று கூறி அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டார்.

ஆதித்யாவிடம் “சார் அவனை விடுங்க சின்ன பையன். நீங்க வள்ளியம்மாவை கூட்டிட்டு போகலாம்.” என்று தீனதயாளன் கூறியதற்க்கு ஒன்றும் சொல்லாமல் சரி என்றாலும், மனம் முழுவதும் அந்த சுரேந்தர் தாமரையிடம் எப்படி உரிமை பாராட்டாலாம் என்பதிலேயே இருந்தது.

அதன் விளைவாக வள்ளியம்மாவையும், தாமரையையும் தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் வைத்துக் கொண்டான். தாமரை மறுத்ததுக்கு “உன் பாட்டி உடம்பு இப்படி இருக்கும் போது நீ எப்படி தனியாக அங்கு இருப்பாய். அதுவும் இல்லாமல் அந்த ஏரியா சுகாதரமாக கூட இல்லை.” என்ற அவன் பேச்சி ஒத்துக் கொள்ளும் படி உள்ளதால் அவனின் திட்டத்துக்கு அவள் சம்மதித்தாள்.
 
:love::love::love:

ஜாதி முக்கியம்.........
ஜாதியால் பதவி முக்கியம்.........
பொண்ணுன்னு வரப்போ ஜாதியும் வேணும் அதனால் கிடைத்த பதவியும் வேணும் பொண்ணும் வேணும் என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை.......
 
Last edited:
Top