Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 40

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் 40​

"ரேகா நீயா?"​

முரளி ரேகாவை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் வார்த்தைகளிலேயே தெரிந்தது. ஆனாலும் தன் ஸ்பாவப்படி சட்டென்று தன்னியல்பாய் கண் சிமிட்டினான்.​

"நீ என்னைத் தேடி வருவாய்னு எனக்குத் தெரியும் ரேகா. அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய உறவா நம்முடைய உறவு?​

கமான் ஹனி! லெட்ஸ் செலிப்ரேட் திஸ் டே"​

இடையை வளைத்து அருகில் இழுத்தவனை ஆத்திரமிகுதியில் நெட்டித் தள்ளினாள் ரேகா.​

"தூ! உங்களை மாதிரியே மத்தவங்களும் அலைவாங்கன்னா நெனைக்கறிங்க? நான் இங்கே வந்தது ஒரு உண்மையைச் சொல்ல.."​

"எந்த உண்மை தீபக் என் பிள்ளைங்கற உண்மையா?"​

புருவம் உயர்த்தி கேட்ட முரளியை கண்ணீரோடு பார்த்தாள் ரேகா.​

"தீபக் உங்க பிள்ளைனு இப்பவாவது நம்பறிங்களே முரளி .அந்த மட்டும் சந்தோஷம்…"₹​

பெண்மைக்கே உரிய பலகீனத்தில் ரேகா சற்றே நெகிழவும், அதை வாகாய் பற்றிக் கொண்டான் முரளி.​

"என் மகனை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்டுமா ரேகா? இன்பேக்ட் அன்னிக்கு சினிமா தியேட்டர்ல உங்க ரெண்டு பேரையும் பார்த்த வினாடியிலிருந்து உங்க நெனப்பாகவே தானிருக்கு தெரியுமா? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போய்டல இட்ஸ் பெட்டர் லேட் தென் நெவர் ..நீ மோகனை விட்டு என்கிட்ட வந்துடு…நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்…"​

முரளி தன் பேச்சை முடிக்கும் முன் சீறினாள் ரேகா.​

"சீ ! வாயை மூடு. மோகனைப் பற்றி பேச கூட உனக்கெல்லாம் அருகதை இல்லை .அவர் உன்னை நம்பி சீரழிஞ்ச என்னையே பெருந்தன்மையா ஏத்துகிட்டு இன்னிக்கு வரை ஒரு நல்ல கணவரா கண்ணியமா என்னோட வாழ்க்கை நடத்திட்டிருக்கார்.ஆனால் நீ அழகிலும் குணத்திலும் பத்தறை மாற்று தங்கமா இருக்கற ராதாக்காவை படாத பாடு படுத்திட்டிருக்கே என்ன பாக்கற? ராதாக்காவை எனக்கெப்படி தெரியும்னா?​

மகாபலிபுரம் ரிசார்டில உன் மனைவியை வெச்சு ஒரு பிஸினஸ் டீல் பண்ணியே ஞாபகமிருக்கா? அங்கே அவங்க மானம் போகாமல் காப்பாத்தி கூட்டிட்டு வந்தது நான் தான். கட்டின பொண்டாட்டியையே கூட்டிக் கொடுத்து மாமா வேலை பாக்கற​

கேவலமான ஆள் நீயெல்லாம் என் கணவரோட கால்தூசிக்கு கூட சமமாக மாட்டே. தூ ! நீயெல்லாம் ஒரு மனுஷன்? வெட்கமாயில்லை?..."​

நிஜமாகவே காறித் துப்பி விட்டாள் ரேகா.​

ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டதை முரளி அப்பொழுது தான் உணர்ந்தான். ரேகாவின் பதிலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை தாமதமாய் புரிந்து கொண்டவன் "ஸ்டாப் இட்" என்று கோபமாய் கத்தினான்.பின் ஆவேசமாய் பாய்ந்து அவள் தோளைப் பற்றி உலுக்கினான்.​

"ஆசை தீர பேசி முடிச்சுட்டியா? இனி நான் பேசலாமா?"​

கன்னங்களை பலமாக அழுத்திப் பிடித்தவனை பயத்துடன் ஏறிட்டாள் ரேகா.​

"லுக்! நான் ராதாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல. ஒரு காலத்தில் அவள் அழகை ரசிச்சது என்னவோ உண்மை. ஆனால் ஒரு ரசிகனா அவளை சுத்தி சுத்தி வந்தப்போ அவ என்னை மனுஷனா கூட மதிக்கல.அவளை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணினேன்.இட்ஸ் எ மியர் வென்ஜென்ஸ். தெட்ஸ் ஆல். உன்னை விரும்பிய அளவு கூட நான் ராதாவை விரும்பல. அது தான் உண்மை."​

"அப்படியா?....."​

ரேகாவின் பார்வையிலும் பேச்சிலும் ஏளனம் எள்ளி நகையாடியது.​

"உங்க வார்த்தைய அப்படியே வேதவாக்கா நம்ப நான் என்ன பழைய ரேகானு நெனச்சிங்களா? இப்போ நான் மிஸஸ் மோகன்."​

ரேகாவின் நிமிர்வான தோரணையில் முரளி கேலியாகச் சிரித்தான்.​

"மிஸஸ் மோகனா நீ?.....ம்……."​

கேலியாகச் சிரித்தவன் விஷமமாக கேட்டான்.​

"ரேகா….! …..ஓ ! ஐ ஆம் சாரி. மிஸஸ் மோகன். தீபக் ஒருத்தனே போதும்னு முடிவு பண்ணிட்டிங்களா? மோகன் டூப்ளிகெட் தகப்பனாயிருக்கறதை விட உண்மையான தகப்பனா இருக்கனும்னு கொஞ்சம் கூடவா ஆசைப்படலை? ஒரு வேளை அவனால அது முடியலையோ?..."​

"ஷட் அப்!......"​

குரலை உயர்த்தி கண்ணீருடன் கத்தினாள் ரேகா.​

"இந்த களங்கப்பட்ட உடலை அந்த உன்னதமானவருக்கு அர்ப்பணிக்க எனக்கு மனசு வராத காரணத்தால் தான் நான் அவரை விட்டு விலகியிருக்கேனே தவிர நீங்க நினைக்கற மாதிரி அவர் ஒண்ணும்….."​

குரல் கம்ம பேசிக் கொண்டு வந்தவள் அதற்கு மேல் வாய் வராமல் திணறினாலும் முரளியின் வதனத்திலிருந்த அப்பட்டமான கேலியில் மனம் நொந்து போனாள்.​

ஆனால் அடுத்த நிமிடமே, மூளையில் பளீரென்று மின்னலாய் வந்த விஷயம் நினைவிற்கு வர, சட்டென்று நிமிர்ந்த ரேகா கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள்.​

"ஏய்!....ஏன் சிரிக்கறே?..."​

முரளியின் குரலில் எரிச்சல் தெரிந்தது.​

"சிரிக்காமல் என்ன பண்றது? நாலு மாசத்துக்கு முன்னால நடந்த விபத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையாகற தகுதியையே இழந்துட்ட நீங்க என் கணவரை கேலி பண்றிங்க.. ஆண்டவன் இருக்கான் குமாரூ….."​

சினிமா வசனம் பேசி கேலி செய்தவளைப் பார்த்து ரேகா என்று ஆங்காரத்துடன் கத்தினான் முரளி. ரேகாவோ அவனை சிறிதும் லட்சியம் செய்யவில்லை.​

"ராதாக்காவுக்கு குழந்தை பிறக்கலேன்னு உங்களுக்கு மறுமணம் செய்ய உங்கம்மா முடிவு பண்ணியிருக்காங்களாமே. கேள்விப்பட்டேன். குறை அவங்க மருமகளிடம் இல்ல. மகனிடம் தானிருக்குன்ற உண்மையை சொல்லிட்டுப் போகத் தான் வந்திருக்கேன்.​

கூப்பிடுங்க உங்கம்மாவை….ஆனால் வீட்ல யாரும் இருக்கற மாதிரி தெரியலையே. எல்லாரும் எங்கே போயிருக்காங்க? சீக்கிரம் திரும்பிடுவாங்க தானே. அவங்க வந்ததும் சொல்லிட்டு நான் கிளம்பனும். இருட்டும் முன்னே வீடு திரும்பலேன்னா பாவம் என் கணவர் கவலைப்படுவார்."​

கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் என்னவோ ரொம்ப நாள் பழகிய நண்பருடன் பேசுவது போல் என் கணவர் என்ற வார்த்தையில் மட்டும் அதிக அழுத்தம் கொடுத்து ரேகா வெறுப்பேற்றவும் முரளியின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது.​

'ப்ளடி பிச்! எவ்வளவு ஆணவமும் தெனாவெட்டும் இருந்தால் என்னிடம் குறையிருப்பதாகச் சொல்வாள்? அந்த திமிரை அடக்கறேன் பார்! '​

கோபத்தில் கொந்தளித்தவன் அதற்கு மாறாக இயல்பாக சிரித்துக் கொண்டே ரேகாவை நெருங்கி அவளை அசுர வேகத்தில் அள்ளி படுக்கையறை கதவை காலால் எட்டி உதைத்து திறந்து அவளை படுக்கையில் கிடத்திய கையோடு கதவை தாழிட்டு விட்டு திரும்பினான்.​

கண்சிமிட்டும் நேரத்தில் இத்தனையும் நடந்துவிட, அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போன ரேகா அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து நின்று அவனை கோபத்துடன் முறைத்தாள்.​

"என்ன இதெல்லாம்?...."​

"புரியலையா? என்னிடம் குறையிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் உனக்கு நான் குறையில்லாதவன்னு நிரூபிக்க வேண்டாம்? …ம்…."​

"ஸ்டுபிட்!....உனக்கென்ன மூளை பிரண்டு போச்சா?"​

"மூளை மட்டுமில்லை உடம்பும் ஆரோக்கியமாத் தானிருக்குனு இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிஞ்சுக்குவே ரேகா டார்லிங்! "​

அவன் பார்வையும் பேச்சும் விபரீதத்திற்கு வழி வகுப்பதை உணர்ந்த ரேகா அவனிடமிருந்து விலகி ஒட எத்தனிக்க, முரளி அவளை விடாமல் வளைத்துக் கொண்டான்.​

"கமான் ரேகா! நமக்குள்ளே இதெல்லாம் என்ன புதுசா? ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறே?"​

"புதுசாயில்லாமலிருக்கலாம்.ஆனால் நான்​

…..ப்ளீஸ் முரளி என்னை விட்டுடுங்க. ஐ டோன்ட் வான்ட் டூ லூஸ் மைசெல்ஃப் அகெய்ன்…"​

"லூஸ் யுவர்செல்ஃப்? ….."​

கேலியாகச் சிரித்தான் முரளி.​

"இழக்கறதுக்கு உங்கிட்ட எதுவும் இருக்கா என்ன?"​

சாட்டையால் அடிபட்டாற் போல துடித்துப் போனாள் ரேகா. விழிகளில் கண்ணீர் அருவியாய் பெருகியது.​

"எஸ்.எங்கிட்ட இப்போ இழக்கறதுக்கு ஒண்ணுமில்லே தான்.எல்லாவற்றையும் உங்களிடம் ஏற்கெனவே இழந்துட்டேன் தான். ஆனால் அறிவில்லாமல் பண்ணிய தப்பை மறுபடியும் பண்ண நான் முட்டாள் இல்லை. அதோட நான் இப்போ மோகனுடைய மனைவி. அவருக்கு துரோகம் பண்ண என்னால முடியாது. ப்ளீஸ் முரளி! உங்களை கெஞ்சிக் கேட்டுக்கறேன். என்னை விட்ருங்க…."​

"விடறதுக்கா உன்னோட அத்தனை பேச்சையும் பொறுத்துட்டிருந்தேன். கமான் ஹனி! டோன்ட் போர்ஸ் மீ டூ ரேப்பிங். தீபக்கிற்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டாம்? …..ம்…."​

ரேகாவை இழுத்து தன்மீது சரித்துக் கொண்டான் முரளி. ஆடவனின் பலத்திற்கு முன் பெண்ணின் பூவுடல் எம்மாத்திரம்?​

போராட்டத்தில் உடல் சலித்து உள்ளம் சோர்ந்து கொண்டிருந்த பொழுது தான் கட்டிலருகே சைட் டேபிளில் இருந்த அந்த பழம் நறுக்கும் கத்தி கண்களில் தென்பட்டது.​

அதை பார்த்த கணம் எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ ரேகாவிற்கு?​

மானாக மயங்கியவள் ஆயுதத்தை கண்டவுடன் வேங்கையாக சிலிர்த்து பாய்ந்து கத்தியை கையிலெடுத்தாள்.​

அருகில் நெருங்கி வந்த முரளியை கத்தியை காட்டி பயமுறுத்தினாள். கெஞ்சினாள்.​

"ப்ளீஸ் முரளி….வேண்டாம்….என்னை கொலைகாரியாக்காதிங்க…."​

கெஞ்சிக் கொண்டே ரேகா கதவை நோக்கி நகர தொடங்க, முரளி பாய்ந்து முன்னால் வந்து அவள் கையிலிருந்த கத்தியை பிடுங்க முயற்சி செய்ய,அந்த போராட்டத்தின் முடிவில் எது நிச்சயமாக நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது.​

ஆம்! நியாயம் கேட்க வந்தவள் குற்றவாளியாக மாறி நின்றாள்.​

நெஞ்சிலிருந்து குருதி வெள்ளமாக வடிய மயங்கிக் கீழே சாய்ந்த முரளி நிரந்தரமாய் அடங்கிப் போனான்.​

ரேகா முதலில் தான் செய்து விட்ட காரியத்தை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றாள். பின் சப்தமின்றி அழுதாள். கொஞ்ச நேரத்தில் அழுகை குறைந்து தான் செய்தது கொலை என்ற உண்மை மனதில் உறைக்க, பயமும் கலவரமும் முகத்தில் முரசு கொட்ட, கதவைத் திறந்து வெளியே வந்த பொழுது, ஹாலில் வெளிச்சம் பரவியது.​

ஸ்விட்சை தட்டிவிட்டுத் திரும்பிய ராதாவைக் கண்டவுடன், மறந்திருந்த அழுகை கேவலாக அடிவயிற்றிலிருந்து கிளம்பியது.​

ரேகாவை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்த்திராத ராதா, அவளுடைய கலைந்த தலையையும்,அலங்கோல நிலையையும் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தவளாக அருகில் வந்து​

"என்னாச்சு ரேகா? ஏன் இப்படி இருக்கே? "​

என்று தோளைப் பற்றி உலுக்க, பதிலேதும் சொல்லாமல் ரேகா இன்னும் பலமாக அழுது கொண்டே உள்ளே கை காட்ட, அவசரமாய் அறைக்குள் நுழைந்த ராதா அங்கே கண்ட காட்சி!​

ஓ….! அந்த சில நிமிடங்கள் மிகவும் பயங்கரமானவை.ரேகாவும் ராதாவும் செய்வதறியாமல் தவித்த நிமிடங்கள்.தங்களைத் தாங்களே வெறுத்த நிமிடங்கள்.பயமும் பதட்டமுமாய் பதறிய நிமிடங்கள்.​

முதலில் தெளிந்தவள் ராதா தான்.​

"என்னை மன்னிச்சிருங்கக்கா.நான் வேணும்னு பண்ணலே.ஆனால் என் மானத்தை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலே."​

கதறி அழுத ரேகாவின் கண்ணீர் துடைத்து நிதானமாக அதே சமயம் மெதுவாக கேட்டாள் ராதா.​

"நீ இங்கே வந்ததை யாரும் பார்க்கலையே?"​

"இல்லை…".என்று தலையசைத்த ரேகாவின் பாவனையில் ராதாவின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.​

"நைட் வாட்ச்மேன் இன்னும் வரலை.மாமாவும் அத்தையும் ஒரு விஷேசத்துக்கு போயிருக்காங்க.அவங்க யாரும் இங்கே வர்றதுக்கு முன்னால நீ போயிடு ரேகா. ப்ளீஸ்….சீக்கிரமா கிளம்பு"​

"எ…எப்படிக்கா? நா…நான் போலீஸ்…"​

"ஷ்! ரேகா! அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ இங்கேயிருக்கற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து. சீக்கிரம் கிளம்பும்மா…"​

"அதெப்படிக்கா? நா…நான் கொலை பண்ணிட்டு எப்படி….?"​

ரேகா பயத்தில் தடுமாற, ராதா விரைப்புடன் தன் கையை அவள் முன் நீட்டினாள்.​

"சத்தியம் செய்து கொடு ரேகா! இங்கே நடந்ததை வெளியே யார் கிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு…ம்"​

"ஐயோ! ….என்னக்கா இதெல்லாம்? நானே கொலை பண்ணிட்டோமேன்னு குற்ற உணர்ச்சியில இருக்கறப்போ….."​

"ஷட் அப் ரேகா! நீ கொலை பண்ணல. இது ஆக்ஸிடென்ட்..கணவன் மனைவி தகராறுல எதேச்சையா நடந்த விபத்து. அப்படித் தான் எல்லாரையும் நம்ப வைக்கனும்…அதுக்காகத் தான் உன்னை சத்தியம் செய்து கொடுக்கச் சொல்றேன்."​

"அக்கா!....."அலறி விட்டாள் ரேகா.​

"பழியை உங்க மேல போட்டுக்கப் போறிங்களா? நோ! நான் சத்தியம் செய்து கொடுக்க மாட்டேன்.ஒரு உயிரைக் கொன்ன பாவம் போதாதா எனக்கு? ஒரு பாவமும் அறியாத உங்க மேல பழியை சுமத்தி அந்த பாவத்தை வேற நான் செய்யனுமா? வேண்டாங்கா….பண்ணாத தப்புக்கு நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கனும்?"​

"ஐயோ! என் பதட்டமும் அவசரமும் புரியாமல் பேசறியே ரேகா. உனக்காக இல்லேன்னாலும் உன் குழந்தைக்காகவாவது நீ தப்பிக்கனும்மா. ப்ளீஸ்! என்னைப் புரிஞ்சுக்கயேன்.நான் இனி வாழ்ந்து சாதிக்கப் போறது ஒண்ணுமில்ல. ஆனால் நீ? தீபக்கை நெனச்சுப் பாரும்மா.மோகனை நெனச்சுப் பாரும்மா. தாயில்லாக் குழந்தையாய் தீபக்கை தவிக்க விடப் போறியா? உனக்காகவும் குழந்தைக்காகவுமே வாழ்ந்துட்டிருக்க மோகனுக்கு கொலைகாரி புருஷன்னு அவமானத்தைத் தேடித் தரப போறியா? கொலைகாரி பெத்த புள்ளைனு நாளைக்கு தீபக்குக்கு ஒரு அவச்சொல் வர்றதுக்கு நீயே காரணமாயிருக்கப் போறியா? சொல்லு ரேகா…முரளி தான் போய்ட்டார்.அவர் வாரிசா தீபக்காவது நல்லாயிருக்கனும்னு நான் ஆசைப்படறதை புரிஞ்சுக்கயேன் ரேகா..எங்க வம்சம் அவனால தான்மா தழைக்கனும். அதுக்கு அவனுக்கு துணையா அவன் தாய் நீ வேணும். ப்ளீஸ் ரேகா! குழந்தை நீயில்லாமல் ஏங்கிப் போய்டுவான்னு உனக்குத் தெரியாதா?​

அவனுக்காகவாவது சத்தியம் பண்ணிக் கொடும்மா. ப்ளீஸ்….."​

ராதாவின் அத்தனை கெஞ்சலுக்கும் மசியாத ரேகா இறுதியில் ராதாவின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து அழுது கொண்டே சத்தியம் செய்து கொடுத்தாள். ரேகாவை யார் கண்ணிலும் படாமல் கவனமாக அனுப்பி விட்டு, அவள் கைரேகை எங்கெங்கு பட்டிருக்குமோ என்று ஊகித்து சுத்தமாக தரையை மாப் செய்து படுக்கைவிரிப்பை மாற்றி கத்தியின் கைப்பிடியை அழுந்த துடைத்து தன் கைரேகையை அதில் பதிய வைத்து, ரேகாவின் பொருள் ஏதும் கிடக்கிறதா என்று பார்வையால் துழாவி, தன்னால் முடிந்தவரை தனக்குத் தெரிந்தவரை தடயங்களை அழித்து விட்ட திருப்தியுடன் கணவனைப் பார்த்தவளுக்கு, முதல்முறையாக எதிர்காலம் சுனாமியாக சூன்யமாக மிரட்ட சரிந்து உட்கார்ந்து சப்தமின்றி அழுதாள் ராதா..​

 
Top