Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே கதைக்கு வந்த விமர்சனங்கள்

Advertisement

நேசமிட்ட மையலே கதைக்கு priyadharshini Palaniyandi sis கொடுத்த அழகான விமர்சனம்❤️❤️ நன்றி மா💜💜
#priyareviews

#நேசமிட்ட_மையலே

அனு ஜெய்

தீரஜ் கதையின் நாயகன் 🥰🥰🥰 எதிர்ப்பாராத விதமாக தன் காதலை இழக்கும் இவன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாயகி நக்ஷத்ராவை மணந்துக் கொள்ள நேரிடும் நிலையில் அவன் அந்த வாழ்வை எதிர் கொள்ள போவது எப்படி?

ஆண் இனத்தையே வெறுக்கும் நாயகி தன் வாழ்வில் திடீரென நுழையும் தீரஜை ஏற்றுக்கொள்வாளா? இவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் வாழ்வே கதைகளம் 🤗🤗🤗🤗

தீரஜ் வாவ் இப்படி ஒரு ஆண்மகனா என்று ஒவ்வொரு இடத்திலும் வியக்க வைக்கிறான் 😍😍😍 நல்ல மகனாக, நல்ல நண்பனாக, நல்ல குடும்ப தலைவனாக ஒவ்வொரு இடத்திலும் வியக்க வைத்து விடுகிறான் அதிகமாக பேசா விட்டாலும் மனதை கொள்ளை கொண்டு போகிறான் 😘😘😘😘😘 பேசும் இடங்கள் ஒவ்வொன்றும் 🔥🔥🔥 இவனின் காதல், தவிப்பு, வலி, வேதனனை அனைத்தும் அற்புதம் அதுவும் இவன் எப்படி அவளை காதலிக்கிறான் என்பதை காட்டும் இடங்கள் அவ்வளவு நெகிழ்ச்சி 💞💞💞 அதுவும் தன் காதலுக்காக அவன் எடுக்கும் முயற்சிகளும் உள்ளுக்குள்ளே வைத்து மருகி நிற்பதும் காதலின் காவிய தலைவன் தான் இவன் 💝💝💝

நக்ஷத்ரா ஆரம்பத்தில் இவள் மீது கோபம் வந்தாலும் இவள் இடத்தில் இருந்து பார்க்கும் போது அனைத்தும் சரி தான் இருந்தாலும் ஓவரா பேசுவது சில இடங்களில் கடுப்பு கத்தியை விட கூர்மையானது நாம் பேசும் வார்த்தைகள் 😷😷😷 பார்த்து பேசி இருக்கலாம் 😬😬😬 பேச வேண்டிய இடத்தில் பேசாமல் 🤐🤐🤐 எங்க வந்து யாரை பேசுற நீ 🥴🥴🥴🤧🤧🤧

ரூபா அருமையான சரவெடி தான் இவளின் பாசமும், காதலும், அதற்காக இவள் இறங்கி செய்யும் ஒவ்வொன்றும் 👌👌👌👌

மனோஜ் அருமையான தம்பி வினோத்தை ஓட்டும் இடமாக இருந்தாலும் சரி, தன் அண்ணையா வாழ்க்கைக்காக ரிஸ்க் எடுக்கும் இடங்களும் சரி 😎😎😎😎

வினோத் இவன் வரும் ஒவ்வொரு இடங்களும் சிரிப்புக்கு பஞ்சமில்லை 🤣🤣🤣🤣 அதுவும் பல்பு வாங்கும் மொமெண்ட் எல்லாம் செம 🙊🙊🙊 காதல் வந்தும் அதை சொல்ல முடியாமல் இவன் படும் அவஸ்தை 🤭🤭🤭 நட்புக்காக தாங்கி நிற்பதும் எது வேணாலும் செய்ய தயாராக இருப்பதும் வேற லெவல் 💪💪💪

பிரியா 🤗🤗🤗 அற்புதமான தோழி எங்கு எப்படி அட்வைஸ் செய்ய வேண்டுமோ செய்து தோழியாகவே இருந்தாலும் அவள் தவறு செய்யும் இடங்களில் சுட்டி காட்டி அவளை சரியான வழியில் கொண்டு செல்லும் நட்பு கிடைப்பது வரம் அவளுக்கு பிரியா கிடைத்தது வரமே 💞💞

கண்ணம்மா இவங்க மனசுக்குள்ள திட்டுவதும் பெண்கள் இருவருக்கும் துணை நிற்பதும் செம 🤩🤩

அருணாச்சலம் நீங்க நல்ல மகனாக இருக்கலாம் ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசியே ஆகணும் 😕😕 அப்புறமாவது மாறுனீங்களே சந்தோசம்

சில ஜென்மங்கள் அதுங்கள என்ன சொல்றது நோ கமெண்ட்ஸ் 🤬🤬🤬🤬🤮🤮🤮வேஸ்ட்

தீரஜ்ஜின் காதல், அதை தெரியப்படுத்தும் இடம், முத்து மாலை, அவளுக்காக அவன் செய்யும் பல விஷயங்கள் 🥰🥰🥰 ஒவ்வொரு காட்சியும் 😘😘😘 சில இடங்களில் கொடுக்கப்பட்ட உவமைகளும் 😍 வார்த்தை பிரயோகங்களும் அவ்வளவு அருமை 😘😘😘😘

ஆன்டி ஹீரோ எழுதிட்டு இருந்த பொண்ணு இவ்வளவு அருமையான காதல் கதை எழுதி இருக்கே அருமை டா 💗💗 உருகி உருகி இப்படி ஒரு லவ் ஸ்டோரி 😊😊😊

ஆத்மார்த்தமான ஆழமான அருமையான அழகான காதல் கதை படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம் ☺️☺️

போட்டியில் வெற்றி பெற இன்னும் நிறைய கதைகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா 🌹🌹🌹

லிங்க் 👇👇👇

 

Attachments

  • Screenshot_20240207-112738.png
    Screenshot_20240207-112738.png
    398.9 KB · Views: 1
நேசமிட்ட மையலே கதைக்கு நித்யா பிரதீப் அவர்கள் கொடுத்த விமர்சனம்... நன்றி மா
❤️❤️

கதை : நேசமிட்ட மையலே
ஆசிரியர் : அனு ஜெய்

அப்பாடி! என்ன மாதிரி ஒரு காதல் கதையை எழுதி இருக்கீங்க ஆசிரியரே...

முதல் திருமணத்தில் வாழ்க்கையை வெறுத்து தோல்வியுற்ற ஆண்களையே வெறுக்கும் கதாநாயகி ஒரு பக்கம்....

தன் காதலியை ஒரு விபத்தில் இழந்து அவளை மட்டுமே தன் உயிராய் நினைத்து கல்யாணத்தை வெறுக்கும், மறுக்கும் கதாநாயகன் இன்னொரு பக்கம்....

கதையில நீங்க வைச்சீங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்... அதை யாராலுமே கண்டுபிடிக்க முடியாது மை லாட்.

வினோத் மனோஜ் வர இடமெல்லாம் வாய் விட்டு சிரிப்பு.... 😘😘😘

இன்னும் கதையில நிறைய கதாப்பாத்திரங்கள் இருக்கு.... எல்லாமே வேற லெவல்....

ஆழமான காதல், குடும்பம் கலந்த காமெடி கதை படிக்க நினைக்குறங்களுக்கு ஒரு டிரிட் தான் நேசமிட்ட மையலே....

போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் Anu Jey 😘😘🥳🥳🥳
 

Attachments

  • Screenshot_20240207-112926.png
    Screenshot_20240207-112926.png
    328.3 KB · Views: 1
நேசமிட்ட மையலே கதைக்கு Haseena அவர்கள் கொடுத்த அழகான விமர்சனம்❤️❤️❤️🙏🙏

நேசமிட்ட மையலே
செம சூப்பர் டூப்பர் கதையை நன்றி பல Anu Jey பட்டு குட்டி

தீரஜ்
என்ன ஒரு மனிதன் இவன் மாதிரி உலகில் யாரும் இருக்க முடியாது காதல் மேல் எவ்வளவு நம்பிக்கை அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் அருமை கணவன் அப்பா அண்ணன் மகன் பேரன் மருமகன் நண்பன் அனைத்து இடத்தில் இவன் வேறு மாதிரி ஆக மொத்த இவன் ஒரு குடும்ப அசுரன்😍😍😘😘😘😘

பொம்மயி
இந்த பெயர் ஏற்ற குழந்தை இந்த குழந்தை முதல் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் அந்த பிள்ளைக்கு பயம் வாழ்க்கை என்று நினைத்து இரண்டாம் வாழ்க்கை ஒன்றை முடியாமல் படும் வேதனை கொஞ்சம் கஷ்டம் ஆனால் அந்த வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிறப்பு❤️❤️❤️❤️❤️❤️❤️

மனோஜ் ரூபா
இவர்கள் இருவரும் சேர்ந்து அண்ணன் அக்கா வாழ்க்கை அக்கறை எடுத்து செயல் பட்டது சூப்பர் டூப்பர் தங்கள் காதல் வாழ்க்கை இருவரும் காத்து இருந்து செம சூப்பர் டூப்பர்

வினோத் பிரியா
இவர்கள் இருவரும் நட்புக்கு நல்ல எடுத்து காட்டு எந்த இடத்தில் இவர்கள் இருவரும் அந்த இடத்தில் சிறப்பாக செய்து வந்தால்
தீரஜ் உம்மி வாழ்க்கை சிறப்பாக இருந்தது கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து அருமை🤝🤝🤝👍👍👍👌👌👌👌

மற்ற அனைத்து கதாபாத்திரம் அவர் அவர் இடத்தில் நன்றாக செய்து அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

AnuJey novels அவர்கள் மேலும் மேலும் நிறைய கதையை எழுதி வாழ்க்கை முன்னேற்றம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள் சகி செல்லம்👍👍👌👌❤️❤️❤️🤝🤝🤝😘😘😍😍😍🙏🙏🙏😍😍😍😘😘😘😘😘
 

Attachments

  • Screenshot_20240207-113227.png
    Screenshot_20240207-113227.png
    367.8 KB · Views: 1
நேசமிட்ட மையலே கதைக்கு Viji அவர்கள் கொடுத்த விமர்சனம்❤️❤️❤️💜🙏 நன்றி மா💙💙

நேசமிட்ட மையலே...

ஒரு விபத்தினால் தன் பொம்மாயியை இழந்து மீண்டும் ஒரு விபத்தினால் அவனிடம் மையம் கொள்கிறது அவனின் நேசம்.

இதுதான் கதையோட நாட். அதில பல விஷயங்கள் மூலமா கதையை அழகா நகர்த்தி கொண்டு போனீங்க.

தந்தை இருந்தும் இல்லாம, தாயோட கண்ணீரையும் சொர்ணத்தோட பேச்சையும் கவனிச்சு வளர்ற அம்மாயி, நாலு வயசில அவ்ளோ மெச்சூர்டா நடந்துக்கிறது உண்மையிலே கவலையான விஷயம் தான்.

ரூபாவோட அட்ராசிட்டியைப் பாத்து அவதான் ஹீரோயினினு நினைச்சேன். ஆனா தீரஜ் வந்ததுக்கு அப்புறம் பல்புதான்...

ஒரு நல்ல நட்பா பிரியா அண்ட் வினோத் இரண்டு பேரும் மனசில நின்னுட்டாங்க.

ஆனா கடைசில அவங்க இரண்டு பேரும் என்ன ஆனாங்கனு ஒத்த வரில சொல்லிருக்கலாம். முடிந்தால் சேர்த்துக் கொள்ளவும்.

கார்த்திகேயன் அண்ட் சிவகாமி நோ வேர்ட்ஸ் டூ ஸே...

எனக்கு தெரிஞ்சு இது உங்களுக்கு புதுசுனு நினைக்கிறேன். ஐ மீன் லவ்வர் பாயை ஹீரோவா இறக்குனது.

இல்லைனா இறக்குறது எல்லாமே ஆன்ட்டி ஹீரோ...😤😤😤😤😤

எனக்கு தெரிஞ்ச உங்களோட புது முயற்சிக்கும் அண்ட் போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்....
 

Attachments

  • Screenshot_20240207-113634.png
    Screenshot_20240207-113634.png
    352.2 KB · Views: 0
நேசமிட்ட மையலே கதைக்கு Maheswari அவர்கள் கொடுத்த அழகான விமர்சனம்❤️❤️💙 நன்றி மா💜💜

Anu Jey. what a story pa நேசமிட்ட மையலே. chance e illa. reddy gaaru mathiri ellorukkum vazhkaila kidaichita nammala kai kondu pudikka mudiyathu. aathmarthamana love. rupa, manoj m athurku kuraintharvagal illai. dheeraj oda bommayi miga arumai. ithuku mela enakku ezutha varala. thanks for sharing link
 

Attachments

  • Screenshot_20240207-113849.png
    Screenshot_20240207-113849.png
    310 KB · Views: 0
நேசமட்ட மையலே கதைக்கு பிரியா சிஸ் அவர்கள் கொடுத்த விமர்சனம்💜💜❤️

Nesamitta maiyyale...💕💕💕💕💕Ungaloda story ipo than 1st time padikara sis.....
Spr spr spr spr spruuuuu....
Love and love only......
Dheeraj wow😍😍😍 intha mathiri characters lam nijama enakku therinju yarum illa... Ipti oru husband kidaikanum nu ellaraium yenga vaikaringa....
Ovvoru character um arumaiya solli irukinga sis..... Spruuuuuuu💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 

Attachments

  • Screenshot_20240207-114040.png
    Screenshot_20240207-114040.png
    354.8 KB · Views: 0

Advertisement

Top