Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 27 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 27 ❤️‍🔥


"கொடி படரா
மதுநிறை மலரோ..........!?"



உச்சி வெயில் உள்ளே வராத அளவிற்கு சாளரங்கள் கூட அழுத்தமான திரையினால் அடைக்கபட்டிருக்க.


அந்த அறையே குளிரூட்டியின் உதவியால் குட்டி காஷ்மீராக மாறும் அளவிற்கு நிலை மாறி இருந்தது. அறையை தீக்க்ஷிதா அவ்வாறு மாற்றி இருந்தாள் என்று கூறினால் சரியாக இருக்கும்.

கைபேசியின் அழைப்பில் தான் அவளுக்கு உறக்கம் கலைய எழுந்தவள் சடைவாய் தோளில் விரவிய கூந்தலை அள்ளி கொண்டையிட்டு அருகில் இருந்த மேசை மீதிருந்த கிளிப்பால் அதனை அடக்க முயன்றும்,முடியாது; ஒன்றிரண்டாக வெளியே வந்து விழுந்தது அவளின் 'பெதர் கட்' செய்யப்பட்ட மொழுமொழு கேசம்.

அழைப்பு துண்டிக்கப்பட அழைத்தது 'யார்!?' என்று பார்க்க; ஏகன் பற்றிய தகவலை சேகரிக்கும் பொறுப்பை ஏற்ற நபர் தான் அழைத்திருந்தார்.


அவளுக்கு சற்று இறுக்கமான சூழல். அதனை,'சரி செய்ய அவள் முயன்றே ஆக வேண்டிய கட்டாயம்!' அவளுடையது.

அதனால் முகத்துதி,முன்கதை,பின்கதை என்று எதுவும் இல்லாத நேரிடையாக விசயம் பற்றி பேசத் தொடங்கிவிட்டாள்.

"சொல்லுங்க ராபின்!" என்று தன் வேலையில் மட்டுமே குறியாய் இருந்தாள்.


"மேடம் நீங்க கேட்ட டீட்டைல் பாதி இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க மெய்ல்கு வந்திடும்.நீங்க பாலன்ஸ் அம்மௌண்ட்டை செட்டில் பண்ண பின்னாடி மீதி டீட்டைல் வந்திடும்!" என்றிட.

"என்ன ராபின் என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு!?"

காரியம் என்றால் காலை பிடிக்கும் வர்க்கத்தின் வாரிசாக அவள் மாற.

ராபினோ, "சாரி மேம் நாங்க யாரையும் நம்பறது கிடையாது.சோ நீங்க எப்போ மீதி பணத்தை செட்டில் பண்றீங்களோ அப்ப தான் உங்களோட அடுத்த பாதி இன்பர்மேஷன் மெய்ல்கு சென்ட் பண்ணுவேன்!" என்றவன் வெடுக்கென்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

எல்லா துறையிலும் எத்தனுக்கு எத்தன் ஒருவன் இருக்க அவனுக்கும் ஜித்தனாக வேறொருவன் இருப்பது இயற்கை தானே.
அதுபோல் தீக்க்ஷிதா எனும் எத்தைக்கு 'ஜித்தன்' தான் இந்த ராபின் போல.

எத்தனை நபர்களை இதே போல் அவன் பார்த்திருப்பான்.அதனால் தான் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு முக்கிய தகவல்களை தன்னிடமே வைத்துகொண்டு மீண்டும் பணம் கொடுத்தால் மட்டுமே கொடுப்பேன் பேரம் பேசுகிறான்.

அவனை பற்றி முழுதாக அறியாத தீக்க்ஷி தன் வேலையை அவனிடம் ஒப்படைத்து இருந்தாள்.

நடிகை எனும் பெயருக்கும், தோரணைக்கும் மயங்கி அவளுக்காக வேலை செய்ய பல பிரபலங்கள் முன்வர. அதே வரிசையில் இவனையும் நிறுத்தி "என் மேல் நம்பிக்கை இல்லையா ராபின்!?" என்றிவள் வலைவிரிக்க.

அவனோ, "உன் வரிசை எனக்கு எதற்கு என் வழி தனிவழி!" என்று

உனக்கும் 'பேபே' உன் குடும்பத்துக்கும் 'பேபே' என்று என் கைபேசியில் காசு வந்தால்,உன் கைபேசியில் மெயில் வரும் கறாராக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவளிடம் இருந்த பணத்தை வைத்து தான் கோயம்புத்தூர் வந்த இந்த இரண்டு நாட்களை ஓட்டி இருக்கிறாள்.

அதுவும் கையில் இருந்த பணத்தை வலித்து எடுத்து தான் ராபின் கேட்ட முன்பணம் செலுத்தினாள்.இப்போது வந்து "கைல காசு வாயில சோறு!" என்று கையை பிடித்தாள் 'என்ன செய்வாள்?'

அவள் பிடித்திருப்பதோ புலி வால்.

அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தான் இங்கு வந்து தலைமறைவாக பதுங்கியதோடு இல்லாமல் இந்த விடுதியின் உரிமையாளன் இவளது தீவிர ரசிகனாக இருப்பதால் இலவச சலுகைகள் கிடைக்க.'வந்த வரை லாபம்!' என்று சொகுசாக இங்கேயே அமைந்தது அவளின் ஜாகை.

இல்லை என்றால் ஏகன் விரட்டிய போதே போக்கிடம் இல்லாது அலையும் நிலையில் தான் இருந்தாள்.


வெளியே தெரியாத அளவிற்கு அனைத்தையும் பார்த்து கவனமாக காய் நகர்த்தும் அவளுக்கே ஒருவன் கடுக்காய் கொடுத்து கிளம்பிவிட்டான்.


'அடுத்து என்ன செய்யவது!?' யோசனை அவளுக்கு.

இப்பொழுது வெளியில் சென்று விளம்பர படத்தில் கூட நடிக்க முடியாத நிலை அவளுக்கு.


இருந்தும் அவளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஏகன் தான் என்பதால் எப்படியும் ராபினுக்கு பணம் கொடுத்துவிட்டு ஏகன் பற்றிய தகவலை பெற்றே தீரவேண்டும் உறுதியாய் எண்ணிக்கொண்டு சிப்பந்தி வைத்து சென்ற உணவை உண்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

மதுரையில் இருந்து சௌந்தர் மாயன் மூலமாக அனுப்பிய ஆட்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் நட்பு வலை மூலம் இணையதள வாயிலாக சௌந்தர் கொடுத்திருந்த ஒரு நடுத்தர வயது ஆணின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையில் இருந்தனர்.

அவர்களின் தேடுதல் வேட்டைக்கு சொந்தக்காரரான நம் வேல் தாத்தாவோ பேத்தி செய்த உணவை உண்டு மருத்துவர் கொடுத்த மருந்தின் வீரியத்தில் ஏகனின் கோட்டைக்குள் பாதுகாப்பாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.


சோஃபாவில் அமர்ந்து அன்னையும் மகனும் திருக்குறள் படித்திருக்க. மகன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை அழகாய் கூறி கொண்டிருந்தாள் ரிதம்.

"திருக்குறளை எழுதியவர் யார்!?" தாயின் கேள்விக்கு

"திருவள்ளுவர்!" என்றான் பிள்ளை

"ஐயோ என் தங்கம் எவ்வளவு அறிவு!" பெருமையாய் மகன் கன்னம் வழித்து முத்தமிட.

"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் -துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை"
குறளை அன்னையவள் தெள்ளு தமிழில் தெளிவாய் கூற.

ரிதம் தவமின்றி பெற்ற வரமோ "அம்மா இந்த தாத்தா அப்போவே துப்பாக்கியால சுட்டாரா!?" என்றது.

"தம்பி அது துப்பாக்கி இல்ல கண்ணா!" என்று குரலின் விளக்கம் கூற கண்களில் ஒளிமின்ன அன்னையின் வாய்பார்த்து ஆர்வமாக கேட்டிருந்தான் சிறான்.

"அப்போ அவர் துப்பாக்கி சுடலையா மழை பத்தி சொல்றாரு ஏன்மா!?" என்றான்

மகனும்,மனைவியும் திருக்குறள் ஆய்வினை தொடங்கிய போதே அறைக்குள் வந்தவன் அமைதியாக அவற்றை வேடிக்கை பார்க்க.

இப்போது மகன் எழுப்பிய கேள்வியில் சிரித்துவிட்டான்.

தாயும் பிள்ளையும் ஒரே போல் திரும்பி வாயிலைக் கண்டு முறைக்க.

"என்னடா ரெண்டு பேரும் ஒரே மாதிரி முறைக்கிறீங்க!?"

கேள்வியோடு வேறோரு சோஃபாவில் அமர.

அவன் அருகே மகனுடன் சென்று அமர ரிதமின் இளமனம் தூண்ட அவனை நோக்கி மகனோடு அவள் இரண்டடி எடுத்து வைக்க.

வராத அழைப்பை வந்ததாக ஏற்று பதில் கூற சென்றுவிட்டான் ஏகன்.

கணவன் கண்களில் அன்பும் நேசமும் நிறைந்து பல்கி பெருகி வழிவதை நன்கு உணர்ந்த பெண் மனம் 'அவன் விலகல் எதனால்!?' என்பதை புரியாது தவிக்க.

"சாரி! ஃபோன் சைலண்ட்ல இருந்தது அதான் வைப்ரேட் ஆகவும் எழுந்து போய்ட்டேன்" என்றவாறு பால்கனியில் இருந்து வந்தவன் குளிக்க செல்வதாக கூறி சென்றுவிட்டான்.

தான்தான் அவனை தவறாக புரிந்து கொண்டது தெரிந்ததும் அவனிடம் சிறு மன்னிப்பு கேட்க மனம் தூண்ட மகனை தூங்க வைத்துவிட்டு அவனுக்காக காத்திருக்க.

அவனின் சொர்க்கவாசல் கதவு மூடி இருந்தது.

தேவன் சயணிக்கும் பள்ளியறை காணா பாவை அவளோ அவன் மீதான காதல் நோயில் மெதுமெதுவாக காயத் தொடங்கி இருந்தாள்.


"ஏன் நெருங்கி வருகிறான்!?"


"ஏன் விலகி செல்கிறான்!?"


"அவன் மனதில் என்ன தான் உள்ளது!?"

வெளிப்படையாக கேட்க அவன் இடம் கொடுத்தது கிடையாதே.'மகன்','தாத்தா' என்று உறவுகளுக்காக நடந்த திருமணத்தில்...

'உரிமை எங்கிருந்து வரும்!?'

அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து,"இனி அவன் நெருங்கும் வாய்ப்பினை வழங்குதல் கூடாது!" எனும் முடிவுக்கே வந்துவிட்டாள்.

காலை கதிர் காட்சிக்கு வருமுன்பே எழுந்தவள் அமைதியாக குளித்து சாமி அறை சென்று அடைந்து கொண்டாள்.

மகனை கவனிப்பதும்,இரண்டு தாத்தாக்களை கவனிப்பதும் காலை உணவு பரிமாறுவதும் என்று வலையவந்தவள் மன்னன் தட்டை பார்த்து பரிமாறினாளே தவிர அவன் முகம் பார்த்து எதுவும் செய்யவில்லை.


காலை உணவின் போது எப்பொழுதும் கிடைக்கும் அவளின் அன்பான

"அது வைக்கட்டா!?"

"இது வைக்கட்டா!?"

அன்பான வார்த்தைகள் எல்லாம் இன்று திடீர் என்று '144 தடை' உத்தரவின் பேரில் மங்கையால் தடை செய்யப்பட.

"தான் நேற்று எழுந்து சென்றதை மனைவி கவனித்து தான் இருக்கிறாள்!"

அவளின் கவனம் மகன் அருகே இருந்தாலும் தன் மீது படிவதில் மனம் மகிழ்ந்தாலும்,அவளின் விலகல் தான் சற்று வருத்தமாய் இருந்தது.

"ஏன்!?" என்று அவளிடம் கேட்க 'நா' துடிக்க.

"எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் கேள்வி கேட்பாய்!?"

அவனுக்குள் இருந்து பங்கம் பண்ணியது அவனது நியாய மனது.


ஆசைக்கும்,மனதுக்கும் இடையே அவன் அல்லாட என்றைக்கும் உண்பதை விட அவன் குறைவான உணவை எடுத்துக் கொள்ள ஒன்றுமே கேட்காது சமையலறை சென்றுவிட்டாள் ஏகனின் துணை.

அவள் அவ்வாறு செல்லவும் கோபம் துளிர்விட கைகளை கழுவி கொண்டு வருவதற்குள்; அவன் முன் பாதாம்,முந்திரி, பிஸ்தா கலந்த பாலை சூடாக நீட்டினாள் ரிதம்.

"அன்பெனும் கயிற்றில் ஆடும் ஊஞ்சல் அல்லவா குடும்பம்!"

"பெண்மையின் அன்பில் நனையாத ஆண்மை உண்டா என்ன!?"


அவளை நோக்கி ஓர் ஆசை பார்வை வீசியவன் பார்வையை மாற்றாது பால் டம்ளரை எடுத்து கண்களால் கனல்மூட்டி பாலை பருகினான்.


"எங்கிருந்தோ தன்னை காண்பவரையும் உணரும் பெண்மையின் நூதன அறிவு! எதிரில் நின்று தலைவன் காண்பதை அறியாது போகுமா என்ன!? இருந்தும் நேற்று இரவு எடுத்த உறுதியை பூக்கட்டும் நூலால் அல்லவா கட்டி இருந்தாள்.

அதனால்! எங்கெங்கோ தாவிய கருவிழி இரண்டும் தன்னவன் புறம் திரும்பாது இருக்க பிரம்ம பிரயத்தனம் செய்து கட்டி வைக்க"

விழியாலே விழுங்கும் வித்தகன் அவளை கடைசி துளி பால் குடித்து முடியும் வரை பார்வையால் அள்ளிப் பருகினான்.

"க்கும்...!"

எங்கிருந்தோ கேட்ட கணைப்பில் நிகழ் உலகம் வந்த வஞ்சி வாசலில் நின்ற மாமனார், மாமியார் இருவரையும் பார்த்து

"வாங்க மாமா!","வாங்க அத்தை!" வரவேற்றவள் "வாங்க கதிர்!" என்று கணவனின் தம்பியையும் வரவேற்க.

உள்ளே நுழைந்த மூவருக்கும் மனதிற்குள் நிறைவு ஏகன் முகத்தில் விரவிய காதல் ஒளியின் தாக்கம் தான் மூவரையும் கண்கள் கூசச் செய்கிறதே.

ஆனால் நம் தாத்தாக்கள் இருவருக்கும் அந்த ஒளியின் தாக்கம் பழகிய ஒன்றாகி போனது போல கண்டும் காணாது அமர்ந்து 'கமுக்கமாய்' சிரித்துக் கொண்டனர்.

ஒரு மருத்துவ கூட்டத்திற்காக துபாய் வரை சென்றிருந்த மூவரும் நேற்று மாலை வீடு திரும்பி இருக்க.

திரும்பியதும் முதல் வேலையாக மருத்துவமனை சென்று சில வேலைகளை முடித்துக் கொண்டு காலை கிளம்பி இங்கே வந்திருக்க.



கணவனிடம் மகனை கண்ஜாடை காண்பித்த லதாவிற்கு சென்றமுறை வந்த போது இருந்த மனகிலேசம் எல்லாம் இருந்த இடம் அறியாது விலகி போனது.



எல்லாம் மகனின் வாழ்வு துளிர்விடும் 'அதிசயம்!' கண்டதால் தான்.
 
அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து,"இனி அவன் நெருங்கும் வாய்ப்பினை வழங்குதல் கூடாது!" எனும் முடிவுக்கே வந்துவிட்டாள்.

அப்டி போடு, ரிதம்.....


நீதான் நம்ம பெண்குலத்தின் கௌரவத்தை காக்கும் கவரிமான்......

அவன் பூரணமாக உன்னிடம் சரணடையும் வரை நீ கண்டுகொள்ள கூடாது.....ஹி... ஹி... 😜😜😜😜😜😜😜😜
 
அப்டி போடு, ரிதம்.....

நீதான் நம்ம பெண்குலத்தின் கௌரவத்தை காக்கும் கவரிமான்......

அவன் பூரணமாக உன்னிடம் சரணடையும் வரை நீ கண்டுகொள்ள கூடாது.....ஹி... ஹி... 😜😜😜😜😜😜😜😜
ஆத்தி என்னா வில்லத்தனம்😳😳😳
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டைம் கேக்கறவனுக்கு (இப்போதைக்கு நமுத்து போன பட்டாசுக்கு ) ( உபயம் கோ வாணிலா டயலாக்) எதுக்கு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு போட்டு பாலுன்னு கேக்கறேன்😏😏😏😏.
எல்லாருக்குமே தெரியுது அவனோட மூஞ்சில ஒளிவட்டம் வந்துருச்சுன்னு.🤭🤭🤭🤭.

ஓ ஓ ஓஹோ இந்த நாடகம் ஏற்கனவே புடிங்கிட்டு போன பணம் பத்தாதுன்னு மறுபடியும் பணம் புடுங்க வந்திருக்காளா😤😤😤😤
ஆஹா இந்த மதுரை விருமாண்டி வேலு தாத்தா ஃபோட்டோவ வச்சுகிட்டு தேடறானே. ரிதம்க்கு பிரச்சினையை உண்டு பண்ணுவானோ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டைம் கேக்கறவனுக்கு (இப்போதைக்கு நமுத்து போன பட்டாசுக்கு ) ( உபயம் கோ வாணிலா டயலாக்) எதுக்கு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு போட்டு பாலுன்னு கேக்கறேன்😏😏😏😏.
எல்லாருக்குமே தெரியுது அவனோட மூஞ்சில ஒளிவட்டம் வந்துருச்சுன்னு.🤭🤭🤭🤭.

ஓ ஓ ஓஹோ இந்த நாடகம் ஏற்கனவே புடிங்கிட்டு போன பணம் பத்தாதுன்னு மறுபடியும் பணம் புடுங்க வந்திருக்காளா😤😤😤😤
ஆஹா இந்த மதுரை விருமாண்டி வேலு தாத்தா ஃபோட்டோவ வச்சுகிட்டு தேடறானே. ரிதம்க்கு பிரச்சினையை உண்டு பண்ணுவானோ?
அவன் ஒரு நாயகன்... இத்தனை பலமான சாணி அடி கொடுக்க வேண்டுமா🤣🤣😂😂 பரவாயில்ல அவன்தானே தாங்கிப்பான்😁😁😁
 
Top