Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 20 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 20 ❤️‍🔥

"இரு கரம் கொண்டே
கொண்டணைக்கும் அரிமா
இவனோ.....................................!?"


"அம்மா நீங்க வந்துட்டீங்களா!?" என்றவாறு ரிதம் முன்பு வந்து நின்றான் அகரன்.

அரும்பின் அருஞ்சொல்லில் அகமகிழ்ந்து... கிள்ளை மொழியானை எடுத்து மாரோடு சேர்த்தணைத்து, மணிநாடி பிடித்து ஆழமாய் உச்சிய முகர்ந்தாள் அன்னை.

பிள்ளை அவனோ வான் நிலவை பிடித்த பாலகனை போல வெற்றி வாகையனாய் அன்னையுள் தஞ்சம் புக.

இக்காட்சி ஏகன் கைபேசியில் புகைப்படமாக கிலுக்கபட்டு பொக்கிஷமானது.

மகனை கொஞ்சி கொண்டாடி அறையை விட்டு வெளியில் வர.கீழே பேச்சு குரல் கேட்க "யாரது!?" என்று ரிதம் கீழிறங்க.

அங்கே அமர்ந்திருந்தார் ஏகன் மருத்துவமனையின் டீன் பாலசுப்ரமணியன்.

அவருடன் அவர் மனைவி லதா,மகன் கதிர் அவன் தான் வேல் தாத்தாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மூவரும் குடும்பமாக வந்திருக்க.

"வாங்க! வாங்க!" என்ற அழைப்புடன் இவள் செல்வதற்கு முன்பே

பாலு தாத்தா,லதா பாட்டி, கதிர் சித் என்று ஓடினான் அகரன்.

அன்பாய் அழைத்துக் கொண்டு ஒடும் மகனை பார்த்தவள்

"மெதுவா ஓடுடா ஜாமுன்!" அக்கறையாக கூற

"அம்மா நான் கவனமா ஓடுவேன்மா நோ வொரி!"

அன்னையின் பதறலுக்கு பதனமாய் ஆறுதல் கூறினான் பிள்ளை.இருவரின் சம்பாசனையைக் கேட்ட மூவருக்கும் உள்ளமே குளிர்ந்தது.

ஒடிவந்தவன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, "சித் அன்னைக்கு நீங்க வேல் தாத்தாக்கு ஊசி போட்ட உடனே கிளம்பிட்டாங்கடீங்களா... அப்பா சொன்னாங்க!" என்றான்.


அகரம் பேச்சு எல்லாம் மூவருடன் நன்கு பழகியது போல இருக்க.ரிதம் ஒன்றும் புரியாது விழித்து நின்றாள்.


"என்னம்மா ஒன்னும் புரியலையா!?" என்றார் பாலு.

"ஆமாங்க டீன் எனக்கு ஒன்னும் புரில.உங்களுக்கு என் பையனை முதலயே தெரியுமா!?" என்க.

அவள் கூறிய 'என் பையன்' எனும் வார்த்தை அவர்களுக்கு வயிற்றில் வெண்ணெய் இட்ட குளுமையை கொடுத்தது.

பாலுவை ரிதம் பார்த்திருந்தாள்.

'எங்கெனில் !?'

அவள் முதன்முறை நேர்காணல் சென்ற போது அங்கே நடுவர் குழுவில் நடுவாக இருந்தவர் அவர்தான்.

அவளுக்கு 'முன் அனுபவம்' இல்லை என்று அவர் தான் கூறி அனுப்பினார் என்பதால் அவரை அவளுக்கு தெரியும்.

"உன் வீட்டுக்காரன் எங்கம்மா!?"

ஏகனை பற்றி இப்படி உரிமையாக அழைப்பது என்னவோ சிதம்பரம் தாத்தாவும், அவ்வப்பொழுது வீட்டிற்கு வரும் நவநீயும் தான் என்பதால் மருத்துவமனை டீன் அவனை அவ்வாறு அழைக்க கேட்பது யோசனைக்குள் ஆழ்த்தியது.இருந்தும்,வயதில் மூத்தவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக
"அவங்க ஆபீஸ் வேலையா இருக்காங்க இதோ அவங்களை வரசொல்றேன்!" என்றாள்.

அவரை காணும் போது இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு போல தோன்றியது.

இவள் அழைப்பதற்கு முன்பே வீட்டு வாயிலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டதால் தன் அலுவலக பேச்சு முடிந்ததும் தானாகவே கீழே வந்தான் ஏகன்.

ஏகன் வரும் போதே தாத்தாவும் வெளியே வர,

காதில் விழுகும் பேச்சு குரலில் புரிந்து கொண்டனர்.

'தங்கள் தகிடுதத்தோம் எல்லாம் வெளிவரும் நேரம் வந்துவிட்டது!'

ரிதமை சமாளிக்கும் உத்திகளை உணர்ந்து அதற்கும் தயாராகவே வந்தனர் தாத்தாவும், பேரனும்.


"தாத்தா ஹாஸ்பிடல் டீன் வந்திருக்காங்க!" என்று பெரியவரிடம் முதலில் அறிமுகம் செய்திட.

அவரோ ஒன்றும் பேசாது பாலுவின் முகம் பார்க்க.

லதா,கதிர் இருவரின் முகமும் கோபமாக இருக்க.

"அம்மாடி ரிதம் நான் உன் வீட்டுக்காரனை பெத்தவன்.என்னை டீன்னு சொல்லாம மாமான்னு கூப்பிடு!" பாலுவே முன்வந்து அறிமுகமானார்.

"இவங்க என் மனைவி லதா உன் அத்தை.அப்பறம் அவரு கதிர் சிதம்பரம் உன் கொழுந்தன்!" என்று குடும்பத்தை அறிமுகம் செய்ய.

'அடப்பாவி எல்லாரும் சோத்துல பூசணிக்காயை மறைப்பாங்க நீ பூசணிக்காய் தோட்டத்தையே மறைச்சு வச்சிட்டியேடா!' கணவனை பார்க்க.

"ஆமாம்! இவனே இவ்வளவு பெரிய புளுகு மூட்டை... இவன் வந்து என்னை சொன்னானே..'என்ன பொய் சொல்லி ஏமாத்த வந்தியான்னு...! அப்போ இவன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு பேரு என்னவாம் திருட்டு பய....!"

மனதிற்குள் வசைபாடிய வானம்பாடி அவன் முகம் பார்க்க...

அந்த கள்வனோ," எனக்கும் சம்பவத்திற்கும் யாதொரு சமந்தமும் இல்லை!" என்பதாய் அமர்ந்திருக்க.

லதா தான் தொடங்கினார்...

"ஏன் கண்ணா நாங்க ஊருல இல்லதப்போ கல்யாணம் பண்ணின.நாங்க பண்ணின தப்புக்கு தண்டனையா உன் சந்தோசத்தை எங்ககிட்ட பகிர கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியாடா!?" என்க.

தாயின் கவலை தோய்ந்த கரகரகுரல் அவனை ஏதோ செய்ய..

"அம்மா இவ சிதம்பரம் தாத்தா பிரெண்ட் வேல் தாத்தாவோட பேத்தி.அப்போதைக்கு எனக்கு அவளை இங்க இருக்க வைக்க வேற வழி தெரியலை அதுதான் நீங்க அமெரிக்கா போனப்போ இந்த வேலையை பார்க்க வேண்டியதா போய்டுச்சு! சரி கதிர்கிட்ட சொல்லலாம் அப்படின்னு பார்த்தா அவன் இந்த ஆப்ரேஷன் முடிஞ்ச கையோட திரும்ப எமர்ஜென்சி சொல்லி அமெரிக்கா வந்துட்டான்.அதுக்கப்பறம் நீங்க பிஸி.... சோ நீங்க இங்க வந்த அப்பறம் பொறுமையா சொல்லிக்கலாம் நினைச்சேன் பார்த்தா நீங்களா வந்து தெரிஞ்சுகிட்டீங்க!" என்றான் சாதாரணமாக.

"வேல் மாமாவா வந்திருக்காரு!? அப்பா இவன் என்ன சொல்றான்!?" என்று ஆர்வமானார் பாலு.

அவருக்கு தெரியும் சிதம்பரம் தாத்தாவிற்கு வேல் தாத்தா மீது எவ்வளவு அன்பு என்பது.

இத்தனை ஆண்டுகள் தேடிய நட்பு கிடைத்ததை அறிந்த 'ஆனந்தம்' அவரது பேச்சில்.

ரிதம் தான் கூறத் தொடங்கினாள்.இங்கு வந்தது தொடங்கி;தாத்தாவை மருத்துவமனை அழைத்து சென்றது என்று
ஏகன் தன்னிடம் இட்ட கட்டளைகளை மறைத்து தன் புறம் சொல்ல வேண்டியவை மற்றும் தாத்தாவின் வாக்கு பற்றியும் கூற.
அறைக்குள் உறக்கத்தில் இருந்த வேல் தாத்தாவை சென்று பார்த்துவிட்டு தான் வந்தார் பாலு.

"டேய் ஏகா இப்படியா பண்ணுவ.எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஜாம்ஜாம்னு நடத்தி இருப்போம் இல்ல!?" லதா விசனப்பட.

"அம்மா எனக்கு அவளை இங்க இருக்கவைக்கணும்.அதனால தான் சீக்கிரம் கல்யாணம் வச்சது.அதுமட்டும் இல்ல எங்க கல்யாணத்தை பார்த்தா வேல் தாத்தா மனசு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் இல்ல அதுனால தான் முன்னாடியே வைக்க வேண்டிய சூழல்!" என்றான் அவன்.

அவன் சொல்லில் பொய் இருப்பதாக தெரியவில்லை.

'தன் தாத்தாவிற்காக யோசித்தானா!?' என்று அவன் மீது மரியாதை பிறக்க.

"எப்படியோ நல்லா இருந்தா சரிடா!" என்றவர் மருமகளை அருகே இருத்தி பேசிட.

அகரன் ரிதம் மடியில் உரிமையாக வந்து அமர்ந்தது கண்டு பெரும் அதிர்வு பாலு, லதா,கதிர் மூவருக்கும்.

இன்பமாய் அதிர்ந்து ஏகன் முகம் பார்க்க அவனோ ரிதம் பார்க்காத போது 'ஆமாம்' என்று தலை அசைத்தான்.

அப்போது தான் மகன் தாத்தாவை மட்டுமல்ல;தன் மகனையும் மனதில் வைத்தே இந்த முடிவிற்கு வந்துள்ளான் என்பது அவர்களுக்கு புரிந்தது.

ரிதம் எவ்வளவு தடுத்தும் கேட்காது இரவு உணவை நிறைவாக முடித்தகையோடு மருத்துவமனை அருகில் இருக்கும் தங்கள் இல்லம் சென்று சேந்தனர் மூவரும்.

"என்னடி ரிதம் சொல்ற!?"

"ஆமாம் நிவே!"

"ஆத்தி உன் ஆளு பெரிய அழுகுணி புழுகுணியா இருப்பான் போலடி!"

"அதை ஏன்டி கேட்கற...? நான் கூட வீட்டுக்கு வந்த விருந்தாளி போல நினச்சு 'வாங்க..! வாங்கன்னு...!!' அவங்க வீட்டுக்குள்ள நின்று அவங்களுக்கே வரவேற்பு குடுத்துட்டு இருக்கேன்!" ரிதம் புலம்ப....

நிவேதா தோழியின் நிலையை எண்ணி 'கெக்க...கெக்க...' கெக்களித்து சிரிக்க....

ரேணுவோ,"பலே கேடியா இருக்காங்கடி குடும்பமே.அதும் அந்த சிதம்பரம் தாத்தா இருக்காரு பாரு அவருக்கு என்னா அழுத்தம் பாருடி ஆத்தி...!"

மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஏகன் திருட்டு தனத்திற்கு புகழாரம் பாட.


"இந்த குடுமி பையன் கூட சொல்லலை பாருடி!" என்றாள் நிவேதா.

தன்னை அறியாது தன் கள்ளத்தனம் உரைத்துவிட்டாள் ஊர்த்துவை.

"அவன் ஏன்டி உனக்கு சொல்லணும்!?" என்றதும் நிவேதாவின் 'நூதன திருகு' வேலை வெளியே வந்தது.

தான் பேருந்து நிலையத்தில் அவன் எண்ணை பெற்று; தன் எண்ணை அவசரம் என்றால் அழைக்க கொடுத்ததாக கூறி எல்லாம் ரிதமிற்காக என்று ஒரு 'க்'கை வைக்க.

"அடியேய் உங்க மாமா ஊரூரா அலஞ்சு ஒரு மாப்பிள்ளை பார்த்தாரே அவன் என்னடி ஆனான்!?"

கேள்வி எழுப்பிய ரேணுவோடு,ரிதமும் ஆர்வமுற...

"அதை ஏன்டி ரேணு கேட்கற அவனுக்கு பொண்ணு பார்க்க வர்ற அன்னைக்கு முக்கிய வேலை வந்துட்டுன்னு சொல்லி அவனோட அப்பாவும்,அம்மாவும்,இன்னும் கொஞ்சம் கும்பலும் மட்டும் வந்து பஜ்ஜி,பலகாரம் முக்கிட்டு போனானுங்க. அடுத்து ஃபோன் நம்பர் கேட்டா அவங்க குடும்பத்துல கல்யாணத்துக்கு முன்ன பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்க கூடாதுன்னு சொன்னானுங்க ஒரே ரூல்ஸ்ஸா போட்டு தள்ரானுங்க
என்னைக்கு நான் 'மேக் த ரூல்; ப்ரேக் த ரூல்'னு இவனுங்களை விரட்ட போறேன்னு தெரியலை.எல்லாம் மாமா முகத்துக்காக பார்க்கறேன்!"

மனபுழுக்கம் உரைத்தாள் நிவேதா.

"மாப்பிள்ளை ஃபோட்டோ பாத்தியாடி?"
ரிதம் கேட்க.

"அது மாமா பிரிண்ட் போட்டு தாரேன்னு சொன்னாரு தந்தா பார்ப்போம்!"

'யாருக்கு வந்த விருந்தோ!' எனும் பாவனை நிவேயிடம் கொடிகட்டி பறக்க...

"இல்லைன்னா என்னடி பண்ணபோற!?" ரேணு பதறிப்போக

"வேற என்னா!? மாப்பிள்ளையை தூக்கிட வேண்டியது தான்!" என்றாள் நிவேதா சாதாரணமாக.

தோழியரின் நேரம் நிவேதாவின் திருமணப்பேச்சில் அழகாய் கடக்க.... இரவு வரவும் தான் அரட்டை முடிவிற்கு வந்தது.


புலர்ந்த பொழுது புத்துணர்வை கொடுக்க..
ஏகன் அறையில் இருந்து வெளியில் வந்தான்.

மனைவியின் மெத்தையில் அவளுடன் இணைந்து...அவள் கழுத்தில் முகம் புதைத்து உறங்கும் அழகை கண்டு 'அன்றைய நாள் நல்ல நாள்' என்ற எண்ணத்தோடு தன் அன்றாட பயிற்சிக்கு செல்ல.

அவன் மனதை கவ்வி கருத்தை கவர்ந்தது 'மகனா!?' அல்லது 'மனையாளா!?' என்பது தான் தெரியாது போனது.


யோக நிலை சென்றால் எதுவந்த போதும் விழிதிறக்காத ஆழ்நிலைக்கு செல்லும் பேரன் இன்று 'இரண்டொரு நொடியில் விழிப்பது' அவருக்கு விளையாட்டாக இருந்தது.

என்றும் இல்லாத திருநாளாய் பேரன் பலமுறை யோகத்தில் அமர்வதும் பின்பு விழிப்பு வந்து உச்சி கொட்டுவதும் தொடர.

அதனை கவனித்திருந்த சிதம்பரம் தாத்தவோ, "புதுமாப்பிள்ளை தோரணைக்குள் பேரன் வந்துவிட்டானா!?" என்று பேரனை சந்தேகமாக பார்த்தார்.



அவனையும் ஓரிடத்தில் நிறுத்தும் அங்குசம் ரிதம் எனும் பெண்ணுருவில் உள்ளதை இன்று கண்கூடாக கண்டு நடை பயிற்சி செல்வதாக நகர்ந்திருந்தார் நாகரிகம் அறிந்த பெரியவர்.

ஆழமாக செல்ல விடாது அவனை தன் புறம் இழுத்தது,'காலை அவன் கண்ணை பறித்து, கருத்தை கவர்ந்த இருவாச்சி!'

'என்ன இது!?' அதற்கு மேல் யோகநிலை 'எங்கே செல்வது!?' என்று உடற்பயிற்சி செய்ய தயாராக.

அதற்கும் சூனியம் வைக்கவே காலை பூஜைக்கு மலர் பறிக்க மலர்வன மகளாக காதோர முடியை பின்னுக்குள் அடக்கி.
கூந்தலின் நுனியை முடியிட்டு.ஆரஞ்சும் பச்சையும் கலந்த கிரேப் சில்க் சேலையில்
புதுவகை பூவையளாய் பூக்கூடையுடன் வந்தாள் ஏகனின் மனையாள்.


அவனை தொல்லை செய்யாது மெட்டியின் ஓசை கூட கேட்காது மென்பாதம் தரை பட்டும் படாது நடந்து சென்று மல்லி, முல்லை,பிச்சியுடன்,செம்பருத்தி, பவளமல்லி செவ்வரளி பூவும் பறித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் தன்னை கடக்கும் பொழுது அவளின் மீதிருந்து வந்த பாலில் குழைத்த சந்தன மணமும்,அத்துடன் அவளுக்கே உரித்தான மணமும் அவன் நாசிக்குள் நுழைந்து நுரையீரலை நிரப்ப.

இப்பொழுது அவள் மீது எழுந்த மணம் "அவளுக்கே உரித்தானதா!? அல்லது அவள் குளிகை கட்டிகளுக்கு உரித்தானதா!?" என்று பட்டிமன்றம் நடத்த.

உள்ள சோதனை தீராத நிலையில் மகனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு காலை பயிற்சிக்கு அழைத்து வர.

இடை விலகி காட்சி தந்த சுகந்த சொரூபத்தை கண்டபின்,

'இதற்கு மேல் இங்கிருந்தால் செண்பகப் பாண்டியன் அவையில் நக்கீரன் முன்பு தருமி நின்றதை போல தானும் உணர்ந்த உணர்வின் பொருள் அறியாது நிற்கும் நிலை வரும்!'


தன் நிலைபுரிய...

'உடற்பயிற்சியே வேண்டாம்!'

இன்று பயிற்சிக்கு விடுமுறை அளித்து வீட்டிற்குள் செல்லாது நீச்சல் குளம் நோக்கி சென்றுவிட்டான் புதிதாய் வந்துதித்த வர்ணம் கொள் உணர்வு குவியலில் சிக்கிய சீராளன்.
 
ஆழமாக செல்ல விடாது அவனை தன் புறம் இழுத்தது,'காலை அவன் கண்ணை பறித்து, கருத்தை கவர்ந்த இருவாச்சி!'

'என்ன இது!?' அதற்கு மேல் யோகநிலை 'எங்கே செல்வது!?' என்று உடற்பயிற்சி செய்ய தயாராக.

ஆஹா... மாட்டிக்கிட்டானே ஏகன் !!!!


இப்போ அவனோட தவமும் கர்வமும் என்னாகுதுன்னு பார்க்கலாம்.....

:p:p:p:p:p:p:p:p:p:p
 
ஆஹா... மாட்டிக்கிட்டானே ஏகன் !!!!

இப்போ அவனோட தவமும் கர்வமும் என்னாகுதுன்னு பார்க்கலாம்.....

:p:p:p:p:p:p:p:p:p:p
முற்பகல் பார்க்காவிடின் மனம் பிற்பகல் கூர்ந்து நோக்கும் இணையை🤣🤣🤣🤣
 
ஏன்டா ஏகா ஏதேதோ ரூல்ஸ் பேசின் இப்ப இப்படி யோசிக்கிற.......🤔 ஒன்னும் சரியில்லை......😄😜
பேசின பேச்சுக்கு எல்லாம் தெருமுக்குல நின்னு ரிதம் ரிதம்னு ராகம் பாடாம இருந்தா சரிதான்..🤓🤓🤓🤓என்ன நான் சொல்றது🤔🤔🤔🤔
 
யோக நிலை சென்றால் எதுவந்த போதும் விழிதிறக்காத ஆழ்நிலைக்கு செல்லும் பேரன் இன்று 'இரண்டொரு நொடியில் விழிப்பது' அவருக்கு விளையாட்டாக இருந்தது.

என்றும் இல்லாத திருநாளாய் பேரன் பலமுறை யோகத்தில் அமர்வதும் பின்பு விழிப்பு வந்து உச்சி கொட்டுவதும் தொடர.

வைஷுமா, நீங்க சொன்ன டண்டணக்கா ஏகனுக்கு ஆரம்பிருச்சோ....
😜😜😜😜😜😜😜😜😜😜
 
வைஷுமா, நீங்க சொன்ன டண்டணக்கா ஏகனுக்கு ஆரம்பிருச்சோ....
😜😜😜😜😜😜😜😜😜😜
முதலில் மெட்டி போட வைக்கும் பிறகு முட்டி போட வைக்கும்... ஆனா ஏகன் மெட்டி போடாததால இரண்டு மடங்காக முட்டி போட வைப்பாரோ காதல் தேவன் 🤣🤣🤔🤔
 
வைஷுமா, நீங்க சொன்ன டண்டணக்கா ஏகனுக்கு ஆரம்பிருச்சோ....
😜😜😜😜😜😜😜😜😜😜
🙌🙌🙌🤣🤣🤣🤣🤣அதே அதே தான்.
ரொம்ப தான் சீனைப் போட்டான்.
ரூமுக்கு இப்பதான் புல்பில் ஆனமாதிரி இருக்காம்.
பால்கனி நோக்கி இவன் போகலையாம். இவனோட காலு தானா போகுதாம் 🤭🤭🤭🤭🤭🤭
பாருங்க இப்ப நோ யோகா நோ உடற்பயிற்சி ன்னு ஓடிப்போய் சும்மிங்பூல்ல கூல் பண்ணப் போயிட்டான்.
 
அடப்பாவிகளா முழுசா அப்பா அம்மா தம்பின்னு மூனு பேத்தையும் ஒரு பருக்கை சோத்துல மறைச்சிருக்காங்களே இந்த கேடி பில்லாஸ் கில்லாடி ரங்காஸ்.😬😬😬😬😬😬😬😬😬
ஏன்டா இன்னும் ஏதாவது பொட்டு பொடிசுக எங்கியாச்சும் சந்துபொந்துல இருந்தா வாங்கடா நாங்க தெரிஞ்சிக்கிறோம் .🧐🧐🧐🧐🧐.
நாங்க கூட அந்த
சினிமாக்காரியாக்கும்னு நெனைச்சேன்.
 
நாங்க கூட அந்த
சினிமாக்காரியாக்கும்னு நெனைச்சேன்.

வைஷுமா,

அந்த சினிமாக்காரி தான் குட்டி ஜாமூனோட அம்மான்னு ஆத்தர்ஜி ஏற்கனவே லீக் பண்ணியாச்சு......
 
Last edited:

Advertisement

Latest Posts

Top