Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அறிமுகம்

Advertisement

Nagaveni A

Member
Member
அனைவருக்கும் வணக்கம் தோழர் தோழிகளே??? இத்தளத்தில், இப்போட்டியில் முதன் முதலாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். உங்களுடனான என்னுடைய இந்த சந்திப்பு என்றும் முடிவில்லாமல் நீள வேண்டும் என விரும்புகிறேன். மேலும் தங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து என்னுடைய படைப்பினை தங்களின் முன்பு சமர்ப்பிக்கிறேன் ?.




சொல்லா காதல் நீயே...

வாழ்க்கையில் எல்லா விசியங்களையும் நாம் எல்லோரும் எல்லோரிடமும் பகிர்வது கிடையாது. அது இழந்தவைகளாகட்டும், கவலைகளாகட்டும், வலிகளாகட்டும், துரோகங்களாகட்டும், அவமானங்களாகட்டும், சந்தோசங்களாகட்டும், எதுவாகினும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளமாட்டோம். அதில் மிக முக்கியமான ஒன்று காதல்.

காதல், காதலில் பலவகை உண்டு ஆனால் என் கண்ணோட்டத்தில் அது இருவகை மட்டுமே அதாவது சொல்லிய காதல், சொல்லா காதல் இவைகள் மட்டுமே.

சொல்லிய காதல் இதில் பலபேர் அறிந்த ஒன்று, பலபேரால் அறியபட்ட ஒன்று. அதாவது தான் காதலிக்கும் நபரிடம் தன் காதலை வெளிபடுத்திய காதல்களே சொல்லிய காதல். அவற்றில் பல வெற்றியை கண்டிருக்கிறது. சில தோல்வியை தழுவி இருக்கிறது.

ஆனால் சொல்லா காதலில் அவ்வாறு இல்லை. பலபேரால் அறியபடாதவை மட்டுமே. இவை மனதிற்க்குள் வைத்து புதைக்கபட்டவை. அவை தோல்விகள் மட்டுமே அதிகம் தழுவியிருக்கிறது. ஒரு சிலவே வெற்றியை கண்டிருக்கிறது. சொல்லா காதலில் சிறுசிறு சந்தோசங்களும் வானலாவியில் உயர்ந்து நிற்க்கும். அவை தரும் சந்தோசங்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவிற்க்கு வாழ்வில் மிகபெரிய இடத்தையும் பெற்றிருக்கும். வலிகளும் அவ்வாறே.

அப்பேற்பட்ட சொல்லா காதலைத் தான் இக்கதையில் காணப் போகிறோம். இக்கதையில் வரும் சொல்லாக் காதலானது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் அது தரும் வலிகளையும் மகிழ்ச்சிகளையும் மாறிமாறி அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனதின் கதையே என்னுடைய சொல்லா காதல் நீயே கதை.


விரைவில் கதை களம் துவங்கும்..
 
உங்களுடைய "சொல்லா
காதல் நீயே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நாகவேணி டியர்
 

Advertisement

Top