Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 5

Advertisement

Vinto

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே!!!

தாமதத்திற்கு மன்னிக்கவும் !!!

இதோ வந்துட்டேன்...

எனக்கு ஊக்கம் அளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் ....:D:D:D:D

என்னைப் போன்ற சைலண்ட் ரீடர்ஸ்களுக்கும் எனது நன்றிகள்...:D:D:D:D

Thank you everyone for your support ...

Share your valuable comments... :love::love::love::love:

Last edited:
ஆதியின் அத்தைப் பெண்....நந்தினி....?
 
ஆதியின் அத்தைப் பெண்....நந்தினி....?
??? இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களில் வந்துவிடும் Mam . கதையின் தொடக்கத்தில் இருந்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி ☺️☺️☺️
 
பரபரப்பான அத்தியாயம்... ??

சில கருத்துகள்:
1.
ஒளிவேகத்தில் செல்ல வேண்டுமானால் சூனிய நிறை வேண்டும் (ஒளித்துகளின் நிறை = 0)

ஆனால், நிறையுள்ள ஒரு பொருளால் ஒளியின் வேகத்திற்குச் செல்ல இயலாது என்பதே ஐன்சுடீனின் சார்பியல் கோட்பாடு. வேகம் ஏற ஏற பொருளின் நிறையும் கூடிக்கொண்டே போகும்... ஒளிவேகத்தை எட்டினால் நிறை முடிவிலி (infinite) ஆகும்!

நீங்கள் சூனியமாகும் என்று மாற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்!

2.
அத்தனை பாதுகாப்புகளோடு கடலுக்கடியில் உள்ள கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் எழுவர் மரபு சிற்றரசர்கள் 'நான் கேள்விப்பட்டேன்...', 'உனக்கு விஷயமே தெரியாதா?' என்று டீக்கடை பெஞ்சு அரட்டை போல பேசிக்கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை...

வேற்றுகிரக விலங்குகளை அடைக்க வந்த வீரர் மூலம் செய்திகளைத் தெரிந்து கொண்டனர் என்று நீங்கள் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், ஆனால்:

2அ.
காட்சி அமைப்பைப் பார்க்கையில் இவர்கள் எழுவரும் ஒரே சிறையில் / ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக் கூடிய அருகாமை சிறைகளில் உள்ளனர், அப்படியானால் வீரர்கள் பேசியது அனைவருக்குமே கேட்டிருக்குமே? எழுவரில் ஒருவருக்குத் தெரிந்து மற்றவருக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்?!

2ஆ.
ப்ரொமித்தியஸ் போன்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியின் படை வீரர்கள் முக்கிய விஷயங்களை கசியவிடும் அளவிற்கா இருப்பார்கள்?

ஒன்று அவர்களுக்குத் தீவிர பயிற்சி இருக்கும், அல்லது அரசனிடம் தீவிர அச்சம் இருக்கும்... அரசாங்க விஷயங்களை வெளியில், அதுவும் கட்டுக்காவல் மிகுந்த சிறைக்குள் அவர்கள் பேசுவார்கள் என்பது பொருந்தவில்லை!

???
 
1. நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. அங்கு Gamma infinity ஆவதால், நிறையும் Infinity ஆகும். இது Theory of Special Relativity படி சரியானதே. Typing mistake...
And, the special theory of relativity has many objections. But, I will change it accordingly.

ஆனால் இந்த கதையில் ஒளியின் வேகத்தை விட அதிகமாக சென்றனர் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஒருவேளை நம்மை விட அதிக பரிமாணங்களில் பார்ப்பவர்களுக்கு அது சாத்தியப்பட கூடும்.

2. மனிதன் எவ்வளவு உயர்ந்தாலும் அவனிடம் கர்வமும் உணர்ச்சிகளும் குறையாது என்பதைதான் அங்கு குறிப்பிட்டு உள்ளேன். ( தனக்கு ஒரு விஷயம் தெரிந்து அது மற்றவருக்கு தெரியவில்லை என்றால் நமது எண்ணங்கள் ??? ) But point noted. ☺☺☺

2.அ) , ஆ) இது இரண்டுக்கும் சொல்லக்கூடிய பதில் ஒன்றே ஒன்றுதான்.நீங்கள் சொன்னது போல, ப்ரொமேத்தியஸ் ஒரு கொடுங்கோல் அரசன். தங்களது முன்னாள் அரசனையும் அரசியையும் கொன்றவனை பற்றிய செய்திகளை சிற்றரசர்களுக்கு மறைமுகமாக கூற முயன்றிருக்கலாம் அல்லவா ?

நீங்கள் கூறியது போல ப்ரொமேத்தியஸ் போன்ற அரசனிடம் பணி செய்துகொண்டு அவனைப் பற்றிய செய்திகளை சத்தமாக சொல்வது சிறிது அறிவீனமாக உள்ளது. அதனால் அவர்கள் மெல்ல பேசும்போது அந்த அறையில் உள்ள அனைவருக்கும் அந்த செய்தி கேட்பது சாத்திய குறைவுதான்.

அதனால் அந்த வீரர்கள் ஒருவருக்கு மட்டும் கேட்பதுபோல தாங்கள் சொல்ல வேண்டிய செய்தியை மறைமுகமாக மெதுவாக கூறியிருக்கலாம் அல்லவா ?

மேலும் தாங்கள் கூறும் செய்தியை யாராவது அறிந்து அரசனிடம் கூறும் சாத்தியங்கள் இருக்கும்போது எவ்வாறு அனைவருக்கும் கேட்பது போல கூறமுடியும் ?

இவ்வாறு ஒரு வாசகருடன் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ???
 
Last edited:
Top